தேன்சிட்டு ஏப்ரல் 2019

அன்பார்ந்த வாசகப்பெருமக்களுக்கு வணக்கங்கள்!
அன்பார்ந்த வாசகப்பெருமக்களுக்கு வணக்கம்! இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கொளுத்தும் கோடையில் உங்களை மகிழ்விக்கும் தென்றல் காற்றாய் வீச தேன்சிட்டு இந்த மாதம் புதிய பொலிவுடம் மலர்ந்து இருக்கிறது.
வஸந்த ருது எனும் இந்த சித்திரை வைகாசியில் செடி கொடிகள் மரங்கள் புதிய இலைகளுடன் பூத்து குலுங்கி மகிழ்விக்கும். தேன்சிட்டிலும் பல புதிய பகுதிகள் வரும் இதழ்களில் அலங்கரிக்க உள்ளது.
தேன்சிட்டில் வாசகர்களாகிய உங்களது பங்களிப்பும் தேவை. நீங்கள் படிப்பதோடு மட்டும் நில்லாது படைப்புக்களையும் அனுப்பி வையுங்கள். சிறந்த படைப்புக்கள் பிரசுரமாகும். நல்ல நல்ல திறமையான படைப்பாளிகளை அடையாளப்படுத்துவதில் தேன்சிட்டு தன் பங்களிப்பை அளிக்க தயாராக உள்ளது. நீங்கள் படைப்புக் களத்தில் குதித்து எங்களை திக்கு முக்காடச்செய்யுங்கள்.
இந்த மாதத்தில் பழைய ஆட்சியின் பதவிக்காலம் முடிந்து புது ஆட்சியை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. நம் விரலில் மைக்கறையை பூசிக்கொள்ளும் நேரத்தில் நாடு நலம்பெற நல்ல தலைவர்களை தேர்ந்தெடுக்கும் அக்கறை நம்மிடம் இருக்க வேண்டும். பணத்திற்கும் பொருளுக்கும் மயங்காது நல்ல வேட்பாளர்களை தலைவர்களாக அங்கீகரித்து தேர்ந்தெடுப்போம். நல்லாட்சிக்கு வழி வகுப்போம். தேன்சிட்டு பற்றிய உங்கள் விமர்சனங்களை தயங்காது அனுப்பி வையுங்கள். இதழ் வடிவாக்கம் குறித்த கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள். அன்புடன்.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
கூடு- 1 சிட்டுக்கள்- 8 ஏப்ரல் -2019
ஆசிரியர்: நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.
கௌரவ ஆசிரியர்கள்: வைகை.ஆறுமுகம்
பெ.பாண்டியன்.
சிறப்பு ஆலோசகர்: திருமாளம்.எஸ்.பழனிவேல்.
வெளியிடுவோர்: தமிழக எழுத்தாளர் வாட்சப் குழுமம்.
படைப்புக்களை அனுப்பவேண்டிய இ-மெயில் முகவரி:
thalir.ssb@gmail.com

%d bloggers like this: