அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!

அனுமனை துதிப்போம்! அல்லல்கள் அகற்றுவோம்!

ராம நாமம் ஒலிக்கும் இடங்களில் எல்லாம் வசிக்கும் ஸ்ரீ ராமதூதன் அனுமன் அவதரித்த நாள் மார்கழி மாதம் மூல நட்சத்திரம் ஆகும். இது ஸ்ரீ அனுமன் ஜெயந்தியாக அனுசரிக்கப்படுகிறது. அனுமனுக்கு நாடெங்கும் பல கோயில்கள் உள்ளன. வாயுதேவனுக்கும் அஞ்ஜனா தேவிக்கும் மகனாக உதித்த அனுமனுக்கு பவனசுதன், மருத்சுதன், பவனகுமார், பஜ்ரங்பலி, மகாவீரர் என்ற பலபெயர்கள் உண்டு. சீதையை வனத்தில் கண்ட செய்தியை இராமனுக்கு சமயோசிதமாக கண்டேன் சீதையை என்று சொல்லியதால் சொல்லின் செல்வன் என்ற பெயரும் அனுமனுக்கு உண்டு.ராமனுக்கு பணிவிடை செய்து இராமநாபஜெபம் செய்து தன்னடக்கத்துடன் வாழ்ந்தவர் அனுமன். எத்தனையோ பராக்கிரமங்கள் செய்யினும் அடக்கத்தின் திருவுருவாக திகழ்ந்தவர் அனுமன். அனுமன் கடலைதாண்டியது பற்றி ராமன் ஓரிடத்தில் கேட்கிறார் அனுமா! நீ எப்படி கடலைத் தாண்டினாய்? அனுமன் அடக்கத்துடன் பதில் அளித்தார். எம்பெருமானே! எல்லாம் உமது நாம மகிமையால் தான்! என்று.இதைவிட அனுமனின் பணிவான குணத்திற்கு எடுத்துக்காட்டு தேவையில்லை. ராமனுக்கு தொண்டு செய்த சுக்ரீவன், விபீஷணன், அங்கதன் முதலானோருக்கு ராஜ்யங்கள் கிடைத்தது. ஆனால் அனுமன் எதையும் கேட்டுப்பெறவில்லை! பயன்கருதாது உதவினார். இதனால்தான் இராமன் சொல்கிறார் அனுமனே நான் உனக்கு கடன் பட்டிருக்கிறேன்! இந்தக்கடனை எப்படி திருப்பிச் செலுத்துவேன்! எப்போதும் நான் உனக்கு கடன் பட்டவனாகவே இருப்பேன். என்னை வணங்குவோர் உன்னையும் வணங்குவர். என் ஆலயம் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கு உனக்கும் சன்னதி இருக்கும். என்னை வணங்க வரும் முன் உன்னை வணங்கியே என்னை வழிபடுவர் என வரம் அளித்தார்
.
“புத்திர்பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம் அரோகதா! அஜாட்யம் வாக்படுத்வம்ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத
!
இந்த சுலோகம், எதையும் அறிந்துகொள்கிற ஆற்றல் சூட்சும புத்தி, பலவீனம் விலகி உடல்பலம்விருத்தி, புகழ், கௌரவம் அடைதல், அஞ்சாநெஞ்சம், வாக்குவன்மை, ஆகியவற்றினை ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கும் என்கிறத
.
ஆஞ்சநேயரின் அனுக்கிரகம் கிடைத்தால் தூணும் துரும்பாகும்.துரும்பும் தூணாகும். வாயுபுத்திரனை வழிபட்டால் பஞ்சபூதங்களாகிய நிலம்,நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம், ஆகியவற்றினால் கூட உபாதைகள் ஏற்படாது. மந்திரம், தந்திரம், யந்திரம், அஸ்திரம், சஸ்திரம் என்னும் உபாயங்களுக்கு கட்டுப்படாதவர் அனுமன்.ஸ்ரீராம நாம கீர்த்தனையாலும் உண்மையான பக்தியாலும் மட்டுமே ஸ்ரீ ஆஞ்சநேயரை உபாசிக்கமுடியும்.மலையளவு துன்பங்களும் கடுகளவாய் அவரை வழிபட சிறுத்துப்போகும

📷
மார்கழிமாதம் மூல நட்சத்திரத்தோடு வரும் அமாவாசை அவர் அவதரித்த தினமாகும். அன்றைய தினத்தின் அஞ்சனை மகனை அனுமனை வழிபடுதல் சிறப்பாகும். ஸ்ரீ அனுமன் படத்தினில் வால் துவங்கும் இடத்தில் இருந்து வால் நுனிவரை 48 நாட்கல் சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து வழிபாடு செய்தால் நவகிரகபீட தோஷங்கள் விலகும். நினைத்தவை கைகூடும். காரியங்கள் சித்தியாகு
்.
ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு சார்த்தி வழிபடுதலும் வடைமாலை சார்த்தி வழிபடுதலும் நற்பலன்களை கொடுக்கும். வெண்ணெய் உருகுதல் போல அவர்ர் மனம் நம்பால் உருகி நம் பிரச்சனைகள் விலகி நற்பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகு
்.
அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத் தாவிஅஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக்கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்எம்மை அளித்துக் காப்பா
்.
இந்தப்பாடலை பாடி வழிபட கல்வி, மனநிம்மதி, செல்வவளம் கிடைக்கு
.
📷
திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழக்கிழமைகளில் வெற்றிலைமாலை சார்த்தி வழிபடுதல் சிறப்பாக
ம்.
அனைத்து கிரக தோஷங்களும் அனுமனை வழிபட விலகும்.அனுமனுக்கு பிடித்த ராமநாம ஜெபம் செய்தால் நம் அல்லல்கள் அனுமன் அருளால் அகல
ும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: