தித்திக்கும் தமிழ்! யானையை இழுத்த எலி!


உருவத்தில் பெரியதும் கரியதும், வலிமை மிகுந்ததுமான யானையை எங்காவது எலி இழுத்து போகுமா? எலி இழுத்துக்கொண்டு போகிறது என்கிறார் புலவர். எலி எதையெல்லாம் இழுத்துச் செல்லும். வீட்டில் ஏதாவது பழங்கள் தேங்காய், இல்லை மசால்வடை, பூரி போன்ற ஏதாவது தின்பண்டங்கள் இருந்தால் எடுத்துச் செல்லும். அதுவும் இல்லாவிடில் ஏதாவது ரப்பர் சாதனங்கள் இருந்தால் அதன் வாசனை எலிக்கு மிகவும் பிடிக்கும். மோப்பம் பிடித்து இழுத்துச்செல்லும். அது உங்கள் குழந்தை விளையாடும் பார்பி பொம்மையாக கூட இருக்கலாம். அல்லது உங்கள் செருப்பாகவும் இருக்கலாம். இதையெல்லாம் இழுத்துச் சென்றால் எலிக்கு உபயோகம் இருக்கிறது. தின்பண்டமோ, பழமோ என்றால் அதற்கு உணவாகின்றது. ரப்பர் பொருளோ செருப்போ அல்லது ஏதாவது புத்தகமோ எனில் அதை வைத்து எலி ஒன்றும் சாதிக்க போவது இல்லை. உங்களின் கம்பராமாயண புத்தகத்தையோ, கல்கியின் பொன்னியின் செல்வனையோ அது படித்து ஒன்றும் பெரிதாக சாதிக்க போவதில்லை. அதேபோல ரப்பர் செருப்பை அதனால் போட்டுக்கொண்டு உலாவரவோ அல்லது பொம்மையை வைத்து விளையாடவோ எலிக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் வீட்டில் உள்ள புத்தகம், மரச்சாமான் ஏதாவது இருந்தால் அதை கடித்து வைக்கும். ஏன். அதனுடைய பற்களின் விசேஷம் அப்படி. அதன் முன் பற்கள் வளர்ந்து கொண்டே இருக்குமாம். அதை தேய்க்கவே இந்த கடி! அப்படி கொஞ்சநாள் எதையும் கடிக்காமல் விட்டுவிட்டால் அந்த பற்களே எலிக்கு எமனாக அமைந்து விடுமாம். எப்போதோ எதிலோ இதைப் படித்தேன். சரி விஷயத்துக்கு வருவோம். இந்த எலியானது எதையாவது தின்றுவிட்டு இப்படி புத்தகத்தையும் அலமாரியும் கடித்து வைப்பதோடு இன்னொன்றையும் செய்கிறது. விவேக் ஒரு படத்தில் சொல்வார். இருந்து சாப்பிட்டு போங்கோ! என்று. வயிறு சரியில்லை என்று அவர் மறுக்க அப்போ சாப்பிட்டு இருந்துட்டு போங்கோ! என்பார். இதை அப்படியே செய்கிறது எலி. பரணிலோ புத்தக அலமாரியிலோ எலி சேர்ந்து விட்டால் அவ்வளவுதான். சாப்பிட்டுவிட்டு இருந்துவிட்டு அந்த இடமே ஓர் எலி வாசம் அடிக்கும். இதனால் நோயும் நம்மை தாக்கும். எங்கோ ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன்! இதையெல்லாம் இழுத்துச் செல்கின்ற எலி ஓர் யானையை இழுத்து செல்லுமோ? இழுத்து செல்கிறதாம்? ஏன்? இதோ புலவர் பாடுகிறார் பாருங்கள்!
மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறிபோச்சோ?- மாப்பார்வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை, ஐயோ!எலி இழுத்துப் போகின்றது, ஏன்?
மாப்பார் வலி மிகுந்த மும்மதத்து வாரணத்தை எலி இழுத்துப் போகின்றது ஏன்? என்று வினவும் புலவர் இதையும் சொல்லி ஏளனம் செய்கின்றார். மூப்பானிடமிருந்து (சிவபெருமான்)பெற்ற மழுவும், முராரியாகிய திருமாலிடம் இருந்து பெற்ற சக்கரமும் பார்ப்பானாகிய பரசுராமனிடம் இருந்து பெற்ற கதை என்ற ஆயுதமும் பறிபோய்விட்டதோ? இப்படி யானையை எலி இழுத்துப் போகின்றதே என்கிறார்.
இன்னும் கொஞ்சம் புரியவேண்டும் என்றால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காஞ்சி மாநகரில் நடக்கிறது. மூஷிகமாகிய பெருச்சாளி வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி அருள் பாலிக்கின்றார். இதைத்தான் நமது புலவர் இகழ்வது போல புகழ்கின்றார். என்ன ஒரு அருமையான பாடல்! கவி காளமேகம் உண்மையிலேயே பெருங்கவிஞர்தான்!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: