50 வார்த்தை கதைகள்!

பயம்!

“ஆள் நடமாட்டம் இல்லாத இடமா பார்த்து ஒதுங்கணும்!”

“அதற்கு அந்த காலத்து பாழடைந்த பங்களா மாதிரி இடங்கதான் லாயக்கு!”

“இப்ப அந்த மாதிரி எங்கே இருக்கு?”

“எங்க பாரு ஒரே மனுஷங்க நடமாட்டம் பேய் இரைச்சல்!”

யார் தொந்தரவும் இல்லாத ஒரு இடமும் கிடையாதா?

முன்னே மாதிரி புளிய மரமும் முருங்கை மரம் கூட கிடைக்க மாட்டேங்குது..! ஒரே மனுஷங்க குவியலா இருக்கா பயமா இருக்குது!

ரெண்டு பேய்கள் பேசிக்கொண்டன.

ஜீவகாருண்யம்!

“எங்க அப்பா ரொம்பவே ஜீவகாருண்யம் பார்ப்பாரு”

“. ஒரு ஈ எறும்பு கொசுவைக் கூட கொல்ல மாட்டாரு. ஏன்? வீட்டுக்குள்ளே கொசுவர்த்தி கொளுத்த கூட விடமாட்டாரு அவளோ ஜீவ காருண்யம்.”என்றான் அரவிந்த்.

“இண்ட்ரஸ்டிங்க் பெர்சனா இருப்பார் போலிருக்கே!” என்ற ஆகாஷிடம் பெருமிதமாய் தலையாட்டி வீட்டின் உள்ளே நுழைகையில்

“ ஏண்டி ஒரு காபியைக் கூட ஒழுங்கா போட மாட்டியா?’ என்று பளாரென்று மனைவியை கன்னத்தில் அறைந்து கொண்டிருந்தார் அவன் அப்பா.

பேச்சு!

கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு தன் வசீகர பேச்சினால் கட்டிப்போட்டு வகுப்பெடுத்து வாழ்க்கை முன்னேற்ற பாடம் சொல்லி கைதட்டல் பெற்ற பேச்சாளர் இளம்வழுதி பெருமிதத்தோடு வீடு திரும்பினார்.

வீடு முழுக்க இரைச்சல்! குழந்தைகள் ஹாலில் விளையாடிக்கொண்டிருந்தன. தொலைக்காட்சி சத்தம் போட்டுக்கொண்டிருந்தது.

”ஏம்மா இத்தனை சத்தம்?” “கொஞ்சம் குறைச்சு வைக்கக் கூடாதா?” பிள்ளைகளா வெளியேப் போய் விளையாடுங்க! என்று பலமுறை சொல்லிப் பார்த்தார்.

ஒருவரும் அவர் பேச்சை காதுகொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை!

பங்கு!

அப்பா இருந்தவரை நன்றாகத்தான் இருந்தது.

பேசிக்கொண்டே இருந்தவர் இப்படி புசுக்கென்று சொல்லிக்கொள்ளாமல் போய்விடுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

அதுவரை ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பிகளுக்குள் சண்டை வந்துவிட்டது, பாகப்பிரிவினை.

பெரியவன் எனக்கு கொஞ்சம் அதிகம் வேண்டும் என்று அடம்பிடிக்க சின்னவனோ இளையவனான எனக்கு நீ விட்டுத் தரக்கூடாதா? என்கிறான்.

யார் சமாதானம் சொல்லியும் அடங்காமல் அடிதடி.

கட்டிப் புரள்கிறார்கள். அப்பா கொடுத்துப் போன காட்பரீஸ் சாக்லெட் பாரை பிரித்துக் கொள்ள…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s