
*”இதோ போறாரே அவர் …..ஜமீன்…. வாக்கிங் போயிட்டு இருப்பார்”*
*”இப்போ என்ன பண்றார்?”*
*”ஜாமீன் வாங்க போய் இருக்கார்”*
********************
*உமா புருஷோத்தமன்* *1.30.அக்ரஹாரம்* *ஆதிச்சபுரம்.614717.*
இனிமேல் எங்க வீட்டுல என்னை யாரும் தண்ட சோறுன்னு திட்ட முடியாது..!

ஏண்டா?
இனிமே மூணு வேளையும் ‘சப்பாத்தி’ சாப்பிட போறேன் ‘
ஏன் மந்திரி ஈர உடையோடு மேடையில் பேசுறார்?

எதிர் கட்சிக் காரன் ‘கொஞ்மாவது உனக்கு நெஞ்சில் ஈரம் இருந்தா மேடை ஏறி பேசுன்னு சொன்னானாம்.!
——————————————————————-
இந்து குமரப்பன் விழுப்புரம்
இது மாதிரியான கூட்டம் நம்மோடு இருக்கிற வரைக்கும் நம்மை யாரும் அசச்சுக்க முடியாதுன்னு எத வச்சு சொல்றீங்க தலைவரே?

“ரிசல்ட் வருவதுக்கு முன்னாடியே ” தோல்வி கண்டு துவளாத நாயகன்” னு பட்டம் கொடுத்துட்டாங்களே!
பா.சக்திவேல், கோவை.
” எங்கள் தலைவரை சக்கை சக்கையாக திட்டும் போதே தெரிகிறது …”
” பொங்கல் நெருங்கி விட்டது என்பது ….”
சீர்காழி,ஆர்.சீதாராமன்
“தலைவருக்குக் ‘கம்ப்யூட்டரைப் பத்தி’ எதுவுமே தெரியாது! ஆனா, எப்பப் பாரு அது எதிர்லயே உட்கார்ந்திருக்காரே, ஏன்?”
“பிசியா இருக்கிற மாதிரி காட்டிக்க அவருக்கு வேற வழி தெரியலையாம்!”
முத்து ஆனந்த், வேலூர்

“

தலைவர் பேச்சைக் கேட்டாலே தலை சுத்துதுய்யா!”
“நாம கேக்கலன்னா அவருக்குத் தலை சுத்துமேய்யா!”
****
முத்து ஆனந்த், வேலூர்
” தலைவர் படு விளையாட்டு பேர் வழியா எப்படி ?”
” பொங்கல் குவாரி ஒதுக்கனும்ன்னு கேட்கறாரே ….”
சீர்காழி.ஆர். சீதாராமன்.

” மன்னர் மாடு மிரட்டும் போது ஏன் பயப்படலை ?”
” அதை விட அதிகமா மகாராணி அவரை மிரட்டி இருக்காங்களாம் …”
சீர்காழி,ஆர்.சீதாராமன்.
