
சீர்காழி
( டீக்கடை ஒன்றில் இருவர் )
” எங்க தலைவரை ஜால்ரான்னு சொன்னா கடுப்பாயிடுவேன் ..”
” பின்னென்ன டெல்லி போனா அவங்க பக்கம் பேசறாரு தமிழகம் வந்தா நம்ம பக்கம் பேசறாரு … “
” தமிழன்னா அப்படி தான்ய்யா காரியத்துல மட்டும் தான் கண்ணு இருக்கும் … “
” அப்படியே நம்ம சரக்குக்கு ஆர்டர் கொடுத்துடேன்…”
” நீயும் தமிழன்னு நிரூபிச்சுட்ட பாரு … “
( தலை குனிந்து சிரிக்கிறார் )
– பி.கே .ராதா .சீர்காழி .
9842371679 .
(காது கொஞ்சம் நீளம்)
வேலூர் ரங்காபுரம் புலவர் தெருவில் தோழிகள் இரண்டு பேர்)
“ஏன்டி அவ்வளவு சின்சியரா உன்னைக் காதலிச்சிக்கிட்டிருந்தீன்! எப்படிடி ‘திடீர்’ன்னு உனக்குப் ‘பிரேக்அப்’ சொல்லிட்டுப் போயிட்டான்?என்னாச்சுடி?”
“அதுக்கு நான்தான்டி காரணம்!”
“என்னடி சொல்றே? ஏன்?”
“தினம்’பத்து குடம் தண்ணி’ எடுத்துட்டு வரணும்ன்னு சொன்னேன்டி! அடுத்த நிமிஷமே ‘பிரேக்அப்’ கொடுத்துட்டான்டி!”
“அடிப்பாவி, நீயே ‘ஒரு நல்ல காதலை’க் கெடுத்துக்கிட்டியேடி!”
முத்து ஆனந்த், வேலூர்
காது கொஞ்சம் நீளம்
(வேலூர் பாகாயம் கோவிந்தராஜ் நகர் காமராஜர் தெருவில் தோழிகள் இரண்டு பேர்)
“கல்யாணமாகும்போது என் வீட்டுக்காரருக்கு ‘குடி, பாக்கு, சீட்டாட்டம்’ இப்படி ‘எல்லாப் பழக்கமும்’ இருந்துச்சுடி!”
“ஐய்யய்யோ, அப்ப எப்படிடி ‘கல்யாணம்’ பண்ணிக்கிட்டே?!”
“என்னை ‘ஏமாத்திக் கல்யாணம்’ பண்ணிட்டாங்கடி!”
“அப்புறம், எப்படிச் சரியாச்சு?”
“எனக்கு எதுக்கெடுத்தாலும் ‘அடிக்கிற பழக்கம்’ இருந்ததால அவரை ரொம்ப சீக்கிரமாவே சரி பண்ணிட்டேன்!”
(கேட்ட தோழி திகைக்கிறார்)
முத்து ஆனந்த், வேலூர்
பஞ்செட்டி டீக்கடை ஒன்றில் இரு நண்பர்கள்!
என்னடா வார்டு மெம்பரா நிக்கப்போறியாமே?
ஆமாம்டா! கொஞ்சம்நாள் பொதுச்சேவை செய்யலாம்னு தோணுச்சு!
யாரு நீயா? பொதுச்சேவையா?
ஏண்டா? எனக்கு பொதுச்சேவை செய்யற அறுகதை இல்லையா? நான் வார்டு மெம்பர் ஆகக்கூடாதா?
பொதுச்சேவைன்னா என்னான்னு தெரியுமாடா? மக்களுக்காக உழைக்கணும்! மக்களுக்கு ஒரு பிரச்சனைன்னா முன்னே நிற்கணும்! நீ எங்க சுண்டல் கொடுத்தாலும் முன்னே நிப்பே! நீயெல்லாம் பொதுச்சேவைக்கு வந்து….!
ஏண்டா! ஒருத்தன் முன்னேறி அரசியலுக்கு வந்துடக்கூடாதே… உடனே பொறாமைப்பட ஆரம்பிச்சிருவீங்களே….!
எனக்கா! பொறாமையா? வேண்டாம்பா! வருங்கால வார்டுமெம்பர் அவர்களே உங்க பொதுச்சேவையை தடை பண்ணலை! முதல்ல எனக்கு ஒரு டீ வாங்கி கொடுத்து சேவையாற்று…!
(நண்பர் தலையில் அடித்துக்கொண்டு மாஸ்டர் ரெண்டு டீ! என்கிறார்)
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,