
Dr.A.S.கதிரேசன் BSMS.,
நலம்வாழ் SK சித்தா & வர்மா மருத்துவமனை
கோபிச்செட்டிபாளையம்
Contact: 9488568949
நோய்களை அறிவோம்:
யூரிக் அமிலம்: Uric Acid
யூரிக் ஆசிட் ( Uric Acid) இந்த வார்த்தையை எங்காவது யாரவது சொல்லி கண்டிப்பாக கேள்விப்பட்டு இருப்போம். ஏன் நம்மில் பலருக்கும் இந்த யூரிக் ஆசிட் பிரச்னை இருக்கலாம்.
அது என்ன யூரிக் ஆசிட்?
புரதங்கள் உடைக்கப்பட்ட பிறகு, உடலில் உருவாகும் ஒரு பொருளே யூரிக் அமிலம். புரதங்கள் உடைக்கப்படும் பொழுது, அவற்றுள் இருக்கும் ப்யூரின்கள் எனப்படும் வேதிப்பொருள் யூரிக் அமிலமாக உடைக்கப்படுகிறது.
இது பொதுவாக உடலில் உருவாக்கப்படும் அல்லது நாம் சாப்பிடும் உணவின் உடலில் உருவாக்கப்படும்.
யூரிக் அமிலத்தின் அளவு :
இரத்தத்தில் யூரிக் ஆசிட் அதிகரித்துள்ளதை Hyperuricemia என்பர். இது பொதுவாக
பெண்களுக்கு 2.4-6.0 mg/dL
ஆண்களுக்கு 3.4-7.0 mg/dL என்ற அளவில் இருக்கலாம். இதற்கு மேல் அதிகரிக்கும் போது அவை உடலில் பிரச்சனைகளை உண்டாக்கும்.
யூரிக் ஆசிட் அதிகரிப்பதற்கான காரணங்கள்:
பொதுவாக உடலில் உருவாகும் யூரிக் ஆசிட் சிறுநீரில் மூலமாக வெளியேற்றப்பட்டு விடும். சிறுநீரகத்தில் எதாவது கோளாறுகள் ஏற்படும் போது யூரிக் ஆசிட் இரத்தத்தில் அதிகரிக்கும்.
ü அதிக அளவு வலி மாத்திரைகள், ஸ்டெராய்டு மாத்திரைகள் எடுத்து கொள்பவர்கள்,
ü தினமும் அசைவ உணவு உண்பவர்கள்
( குறிப்பாக பிராய்லர் சிக்கன்)
ü நாட்பட்ட சர்க்கரை வியாதி, குருதி அழுத்தம் உள்ளவர்கள்,
ü சனி, ஞாயிறுல ( Weekend Days) மது (Alcohol) குடிக்கவில்லை என்றால் என் குலதெய்வம் என் கண்ணை குத்திவிடும் என்று சொல்லும் மதுப்பிரியர்களுக்கு கண்டிப்பாக ஏற்படும்.
ü ஒரே மாதத்தில் என்னுடைய pant சைஸினை குறைக்க போகிறேன் என்று, கண்ட மருந்துகளையும், ப்ரோட்டீன் பவுடர்களையும் (Protein powders) உண்பவர்களுக்கு ஏற்படும். உடல் எடையினை தக்க உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு மூலமே குறைக்க வேண்டும்.
யூரிக் ஆசிட் அதிகரித்தால் ஏற்படும் பிரச்சனைகள்:
இரத்தத்தில் அதிகரித்த யூரிக் அமிலம் மூட்டுகளில் உப்புகளாக படிவதால் மூட்டுகளில் வலி, வீக்கம் எரிச்சல் போன்றவை ஏற்படும். ( பொதுவாக கால் பெருவிரல் & கால் மூட்டு)
இதனை கவுட் ( Gout ) என்று கூறுவார்கள்.
மேலும், இதை கண்டுகொள்ளாமல் விட்டால் அது சிறுநீரகத்தையும் பாதிக்கலாம். அது சிறுநீரகத்தில் யூரிக் ஆசிட் கற்கள் உண்டாக வழிவகுக்கும். ( Kidney Stones)
தவிர்க்க வேண்டியவை :
ü அசைவத்தினை சிறிது நாட்கள் ஒதுக்கி வைக்க வேண்டும். கடல் உணவுகளை (Sea Foods) கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
ü அதிக கொழுப்புள்ள பால் பொருட்களை தவிர்க்க வேண்டும்.
ü அதிக இனிப்பு, உப்பு நிறைந்த பேக்கரி உணவுகள், துரித உணவு ( Fast Food) என்னும் குப்பை உணவுகள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
ü காளான், காலிபிளவர், பரோட்டா, போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும்.
ü மது அருந்துதல், புகை பிடித்தல் போன்றவற்றை அறவே கைவிட வேண்டும்.
உணவில் சேர்க்க வேண்டியவை:
ü மோர் போன்ற கொழுப்பில்லாத பொருட்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
ü தினமும் தேவையான அளவு நீர் அருந்த வேண்டும். (குறைந்தது 5 லிட்டர்)
ü வைட்டமின் சி உணவுகளை அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும். வைட்டமின் சி என்றதும் உடனே மருந்து கடையினை தேடி பிடித்து வைட்டமின் சி மாத்திரை உள்ளதா என்றோ அல்லது ஏதோ ஒரு நாட்டில் விளைவிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு ஒரு வாரத்திற்கு பின் நம் ஊரு சந்தைகளுக்கு வரும் கிவி போன்ற பழங்களையோ தேடி அலைய தேவை இல்லை. உங்களில் வீட்டின் அருகிலோ அல்லது உங்க ஊரு சந்தையிலோ மலிவான விலையில் கிடைக்கும் நெல்லிக்காய், நாட்டு பப்பாளி, கமலா ஆரஞ்சு, பன்னீர் திராட்சை இவைகளை வாங்கி சாப்பிட்டாலே உடலுக்கு வைட்டமின் சி கிடைப்பதுடன் ஒரு விவசாயியும் நன்மை அடைவார்.
மருத்துவம் :
யூரிக் ஆசிட் அதிகரிப்பினால் ஏற்படும் கால், மூட்டு வலிக்கு வலி மாத்திரைகள் நிரந்தர தீர்வாக அமையாது.
வலி மாத்திரைகள் ( Pain Killers) மற்றும் ஸ்டீராய்டு (Steroids) மாத்திரைகளை வருடக்கணக்கில் சாப்பிட்டாலும் குணம் கிடைக்காது.
சித்த மறுத்துவத்தை பொறுத்தவரை யூரிக் ஆசிட் அதிகரித்தல் என்பது பித்தம் மிகுதியினால் ஏற்படும் நோயாகும். உடலில் யூரிக் ஆசிட் அதிகரிப்பதால் மூட்டுகளில் எரிச்சல், சிவத்தல் போன்ற பித்தம் சார்ந்த குறிகுணங்கள் ஏற்படுகின்றன.
எனவே குளிர்ச்சி வீரியம் உடைய கீழாநெல்லி, நீர்முள்ளி, நெருஞ்சில், போன்ற மூலிகைகள் தீர்வாக அமையும்.
சித்த மருத்துவத்தில் யூரிக் ஆசிட் குறைப்பதற்கான சிறந்த மருந்துகள் உள்ளன. இவை எந்த பக்கவிளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை. எனவே அருகில் உள்ள நல்ல சித்த மருத்துவரை நாடினால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.
இயற்கையை விரும்புவோம்! இயற்கைக்கு திரும்புவோம்!!