
கேள்வி-பதில்
கேட்ட கேள்விக்கு எல்லாம் உடனுக்கு உடன் பதில் கொடுத்தேன்
“உனக்கு சமைக்க தெரியுமா”
“தெரியும்”
“சைவம் அசைவம்”
“இரண்டும்”
“துணி அயர்ன் பண்ண தெரியுமா”
“தெரியும்”
கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் டாண் டாண் என வந்தது
மன மகிழ்வுடன் இந்த மாப்ள ஓகே என்றேன்.
விடிந்ததும்தான் தெரிந்தது எல்லாம் கனவே
சமையல் அறையில் அம்மா கத்திக் கொண்டிருந்தாள் இன்னும் என்னடீ தூக்கம் போ வீட்டுல சமைக்க தெரியாட்டி என்னையதான் காரி துப்புவாங்க
கனவில் சந்தோஷப்பட்டள் இப்பொழுது வெறுப்போடு போர்வையை உதரினாள்.
சங்கீதா சுரேஷ்
தருமபுரி
கவலை!

“ஐயா, இப்பல்லாம் நீங்க முன்ன மாதிரி ‘கலகலப்பாவே’ இல்லையே! எப்பவும் ஒரு மாதிரி ‘டல்’ லாவே இருக்கீங்க! ஏன் ஐயா? ‘ரிட்டயர்ட்’ ஆகிட்டோங்கிற ‘கவலை’யா உங்களுக்கு?!”
“அதெல்லாம் இல்லடா!”
“பின்ன, வேறென்னங்கய்யா?”
“என் பேரனுக்குப் ‘பத்து வயசுதான்’ ஆகுது! இந்த வயசுலயே திருடறான், பொய் சொல்றான்டா! ஆனா, நா ‘நெருப்பு’ மாதிரி எதுக்கும் பயப்படாம இருந்தவன்டா! என் ‘கவலை’யெல்லாம் அவனைப்பத்தி தான்டா! எப்படி அவனைத் திருத்தறதுன்னே தெரியலியே!” என்றார் ஜட்ஜ் வேதநாயகம்!
முத்து ஆனந்த், வேலூர்
துக்கம்!

துக்கம் பீறிட்டெழுந்தது. ஒற்றைப் பிள்ளை. அவனுக்கும் தெளிவு இல்லை. தந்தை இறந்துபோக அதுகூடத் தெரியாமல் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தது. கணவனை இழந்தவள் கதறிக் கொண்டிருக்க துக்க வீடே அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தது.
அவளது கதறல் விண்ணை பிளக்க பார்க்கவே மிகவும் பரிதாபமாக இருந்தது.பத்மாவால் கண்ணீரை அடக்க முடியவில்லை! இது மாதிரி நிலை யாருக்கும் வரக்கூடாது பகவானே! என்று சொல்லிக்கொண்டே கண்ணீரைத் துடைத்தவாறு எழுந்து சீரியல் ஓடிக்கொண்டிருந்த
டீவியை அணைத்தாள் பத்மா.
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,
குறைந்தது கோபம்

அவனுக்காக காத்திருந்த நிமிடங்கள் தொலைந்து போயிற்று
இனியும் அவனை நம்பி பிரயோஜனம் இல்லை கூட்டம் கலைந்து கொண்டே இருந்தது
பொறுத்தது போதும் என நினைத்தேன் இரண்டு மணி நேரம் அவனுக்காக காத்திருக்கிறேன்
” இப்ப வந்துடுறேன்” சொல்லிக்கொண்டே இருக்கிறான்
இன்னும் வந்தபாடில்லை காத்திருத்தல் என்பது எட்டிக்காய் போல கசக்கிறது
அதுவும் நண்பர்களுக்காக தெரிந்தவர்களுக்காக காத்திருப்பதில் ஆரம்பம் அலாதி என்றாலும் போகப்போக கசப்பாகி வெறுப்பாகி விடுகிறது சகிப்புத்தன்மை அதிகம் தேவைப்படுகிறது
“டேய் வரியா இல்லையாடா சொல்லு டா” என கோபமாய் வாங்கி திட்ட தோணுது
கடைசியாக அவன் பல சாக்குப்போக்குகளை சொல்லிக் கொண்டிருந்தான் வருவதாகத் தெரியவில்லை
முதலாவது ட்ராபிக் ஜாம் என்று சொன்னான்
இரண்டாவது தெரிந்த உறவினரை சந்திக்க வேண்டியதாயிற்று என்றான்
மூன்றாவது செல்போன் சுவிட்ச் ஆப் என்றான்
பொறுத்தது போதும் என என் வயிறு கிள்ளியது பசி வந்தால் பத்தும் பறக்கும் கோபம் ஒரு பக்கம் இருந்தாலும் கடைசியாக மிச்சம் மீதி இருந்த சாப்பாட்டை அரையும் குறையுமாக முடித்துவிட்டு இடத்தை காலி செய்தேன்
கோபத்தின் உக்கிரம் இன்னும் குறையவில்லை
திடீரென ஐஸ்கிரீம் பார்லர் பக்கம் பார்க்கையில் என் காதலி அங்கே நின்றுகொண்டிருந்தாள் இப்போது என் கோபத்தின் உக்கிரம் குறைய தொடங்கியது
நண்பனை மறந்து போனேன்
கவிமுகில் சி.சுரேஷ்
தருமபுரி