1
தனிமை தேடி நடக்க/
பின் தொடர்ந்தே வருகிறது/
நிழல்/
2
மிருதங்கம் வாசிக்க/
நினைவில் வந்து போகிறது/
முயலின் குதியல்/
3
சிரிக்கும் குழந்தை/
அடம்பிடித்து வாங்குகிறது/
அழும் பொம்மையை/
4
கண்ணாடி காட்ட/
நெருங்கி வந்து மோதுகிறது/
தொட்டி மீன்கள்/
5
சிறுமியின் உழைப்பு/
கானல் நீராய் போகிறது/
பெண் கல்வி/
6
உடையும் கல்/
தூள் தூளாய் சிதறுகிறது/
சிறுமியின் எதிர்காலம் /
7
குழந்தை தொழிளாளர்கள்/
குறைந்து கொண்டே வருகிறது/
பள்ளியின் வருகைப்பதிவு/
8
எழுந்து செல்ல/
இறந்து கிடக்கிறது எறும்பு/
அமர்ந்த இடத்தில்/
9
மழலையின் சிரிப்பு/
மாறி விடுகிறது/
வாடிய முகம்/
10
சோம்பேறி இளைஞன் /
சுறுசுறுப்புப்பாய் மாறுகிறான்/
தொடுதிரையில் விளையாடுகையில்/
ஜீவா
கோயம்புத்தூர்
தவிச்ச வாய்க்கு
தண்ணி இருந்தும்
மீனை தேடும் கொக்கு !
நெருங்கி படம் பிடித்தேன்
சுருங்கிப் போனது
தொட்டாச் சிணுங்கி
எந்த ராஜா
வீட்டுத் தோட்டத்திலும் பூப்பதில்லை
தங்கத்தில் பூ !
கல்லறையில்
காலியாக தெரிகிறது
நினைவுப் பரிசு …!
தள்ளாடும் ஏழை
வாழ வழி காட்டியது
தள்ளு வண்டி வியாபாரம்
வீட்டுச் சுவற்றில்
மின்னும் மின்னொளியில்
வறட்டி சின்னம் …!
மூக்கு பொடி டப்பா
திறந்து மூடுகையில்
நச்சு நச்சுவென்று தும்மல் ..!
—
ஹிஷாலி, சென்னை.
தெரியாமலா ஒட்டியிருப்பான்
தலைவனின் படத்தை
குப்பைத்தொட்டியில்
புது வண்டி ரவீந்திரன்
ஒரு படம் இரு சிந்தனைகள்
——————————————–
இரு வயல்களையும்
சேரவிடாமல் செய்கிறது
ஒத்தையடிப்பாதை
இரு வயல்கள்
உருவாக்கின இணைந்து
ஒத்தையடிப்பாதையை
புதுவண்டி ரவீந்திரன்
(நேர்மறை..சிந்தனை)

கால்கள் நனைக்காமலேயே
திரும்பின அலைகள்
யாருமற்ற கடற்கரை
புது வண்டி ரவீந்திரன்
ஓட்டைகளை
அடைக்க முயல்கிறார்
புல்லாங்குழல் வாசிப்பவர்.
புது வண்டி ரவீந்திரன்
ஓய்வெடுத்த பின்
பறவை சிறகடிக்க
தண்ணீரில் சலனம்
கரிச்சான் அலகுக்கு
வண்ணம் தீட்டும்
இரையாகும் பட்டாம்பூச்சி.
புணர்ச்சிக்குப் பின்
தண்ணீரில் வால் நனைத்தபடி
குளத்தைச் சுற்றும் தும்பி.
உச்சி வெயில்
மரத்தினடியில் ஓய்வெடுக்கிறது
மரநிழல்.
வீடு கட்ட
மணல் மட்டும் போதும்
குழந்தைக்கு.
மகிழ்நன் மறைக்காடு.
அகல் செய்யும்
குயவர் எண்ணமெல்லாம்
வெளிச்சம் தேடி.
ஜோதி.
துரத்தி ஓடும் குழந்தையின்
வார்த்தைகளில் அப்பியிருக்கிறது
வண்ணத்தியின் நிறங்கள்!
★
தேங்கிய மழை நீரில்
விழுந்து கிடந்தது
வானம்!
தக்ஷன், தஞ்சை.