அ னு ம தி

கல்லூரிச் சாலையில்
ஓர் இனிய தென்றலாய்
நீ நகர்ந்து கொண்டிருக்கையில்
உன்னைத் தொடர்கிறது
என் காதல்!
என்னாலேயே
உனக்கு வந்துவிட்டது
அடிக்கடி பின்னோக்கிப் பார்க்கும் பழக்கம்!
அருகே வந்து என் பக்கத்தில்
என்னுடன் சேர்ந்து
நீயும் நடக்க மாட்டாயா?
என்ற கோணத்தில் உன் ஆசை!
இந்த ஓர் உத்தரவிற்காகத்தானே
தொடர்ந்து உன்னைத்
தொடர்ந்து கொண்டிருக்கிறேன் நான்!
கையில் வைத்தபடி
நீ அணைத்திருக்கும்
புத்தகங்களின் மீது
அப்படியொரு பொறாமை எனக்கு!
துப்பட்டா இல்லாத
உன் மேலுள்ள நெருக்கம்
அவைகளுக்குப் பேரதிர்ஷ்டம்!
உன் அனுமதியுடன்தான்
எதுவுமே நடக்க வேண்டும் என்ற
ஒரே காரணத்திற்காகதான்
நான்காத்திருக்கிறேன்
ஒவ்வொரு நொடியும்!
முத்து ஆனந்த்
வேலூர்
வ ர வே ற் பு
புரட்டாசித் திங்கள் கடந்து
நிறைய நாட்கள் நகர்ந்த பின்னும்
நீ இன்னமும்
சைவ முத்தங்களையே
வழங்கிக் கொண்டிருப்பது
தட்டிக் கேட்பாரற்ற அநியாயம்!
முற்றும் துறந்த முனிவனா நான்?!
முழுவதுமாய் ஆசைகளை விழுங்கும்
கவி (தை) ப் பித்தன்தானே!
சேட்டிங்கில் நீ
** அனுப்பும் **ஒவ்வொரு
மு த் த மு ம் கவிதைக்கு வேண்டுமானால்
உதவி செய்யலாம்!
ஆனால் –
நம் இதழ்கள் நேருக்கு நேராக சந்திப்பதைதானே
காதல் எப்பொழுதும் வரவேற்கும்!
என்னைப் பார்த்தால்
அழகாய் விலகி
வேடிக்கை பார்க்கத் தயாராகும்
உன் முந்தானைக்கு இருக்கும்
புரிதல்கூட உனக்கு ஏன்
இல்லாமல் போயிற்று?!
ஒவ்வொரு நொடியும்
எல்லாம் தெரியவும்
புரியவும் செய்கிறேன் வா!
முத்து ஆனந்த்
வேலூர்
அ ழ கு!
என் மௌனத்தைக்கூட
மிக அழகாக மொழி பெயர்த்து
அதை உன் விழிகளால்
என்னிடம்
நீ சொன்னபோதுதான்
எனக்குத் தெரிந்தது
மிக சத்தியமாய்
இது காதல்தான் என்று!
சந்தித்துவிட்டுச் செல்லும்போதெல்லாம்
உன்னுடனேயே வந்துவிடும்
என் மனசின்பழக்கத்தை
எப்படி எப்பொழுது
மாற்றப் போகிறேன் என்றே
தெரியவில்லை!
விழிகளுக்குக்கூட
முத்தமிடத் தெரியும்என்று நீ
என்னைக் காணும்போதெல்லாம்
உண்கிறேன்!
எவ்வளவு க வி தை க ள்
எழுதினாலும் என்னால்
சொல்லவே முடியாது
நீ காதல் செய்யும் அழகை!
முத்து ஆனந்த்
வேலூர்
நீ
வாழ்வில் நான் விரும்பிய
காதல்மதி நீ!
என் புன்னகையை வரவேற்றுப்
புரவலரான அன்புமதி நீ!
கொஞ்சும்போதெல்லாம்
நான் கெஞ்சாமலே வள்ளலாய்
முத்தங்கள் வழங்கும்
நிறைமதி நீ!
உன்னைப் பற்றிய கவிதைகளில்
நான் கரையும்போது
என்னையே மறக்க வைக்கும்
மலர்மதி நீ!
என் இதயம் முழுக்க
பாசமழையால் நிரப்பும்
வான்மதி நீ!
ப்ரியங்களுடன் நான்
உன்னைநினைக்கும்போதெல்லாம்
என் நேசத்திற்குப்புத்துயிர் வழங்கும்
வெண்மதி நீ!
என் உயிரில் கலந்து உறவாகிவிட்ட
கவிமதி நீ!
எப்பொழுதும் என் உலகின்
சந்திரமதி நீ!
முத்து ஆனந்த்
ம ல ர் சூ ர் யா
நீயும் நானும்
ஒரே வீதியில் வசிப்பதால்தான்
எவரிடம் சொன்னாலும்
உன்னைப் பற்றிப்பெருமையாகச் சொல்கிறேன்
இது தென்றல் வரும் தெரு என்று!
காலம் மாறி எல்லாம் மாறிப் போனாலும்
உன்னைத் தரிசிக்கும்போதெல்லாம்
ஒரு நந்தவனத் தேரைக் கண்டு
மகிழும் பரவசம் எனக்குள்
ஒவ்வொரு முறையும் நிலவுகிறது!
ஒரு வினாடியையும் வீணாக்காமல்
உன்னையே நினைத்து
எப்பொழுதும் உருகும்
மாணிக்கவாசகம் நான்!
என்னைப் பார்க்கும்போதெல்லாம்
நீ புறமுதுகு காட்டி விலகுவது
எந்த விதத்தில் நியாயம்?!
கலிங்கத்துப் போரை நிகழ்த்திய மன்னன்
*அசோகச் சக்ரவர்த்தியைப் போலவே
என்னையும் நினைக்கிறாய்!
உன்னை என் மனசுக்குள் அமர வைத்த பின்தான்
இந்த *ஆறுமுகத்திற்கு
ஒவ்வொரு நாளும் ஏறுமுகமானது!
கண்மணி நீ வரக் காத்திருக்கும் நிமிடங்களில்கூட
காதல் கவிதைகளால் உன்னை அலங்கரித்து
அழகு பார்க்கிறது என் இதயம்!
என் வாழ்வில் பூத்த *மலர் நீதான்
ஒளியை வழங்கும் *சூரியனும் நீதான்!
முத்து ஆனந்த்
வேலூர்