அவர் :என் மனைவி எனக்கு தெரியாமல் வாசற்படி தாண்ட மாட்டாள்..,!
இவர் :அப்புறம் எப்படி வெளியே சுத்துறாங்க?
அவர் : பின் வாசல் வழியாக வெளியே போயிட்டு வருவாள்..!
இந்து குமரப்பன்
விழுப்புரம்

அவன் :எதுக்கு போட்டோ ஸ்டூடியோக்காரனை அடிச்சே?
இவன் : கருப்பு வெள்ளையில் போட்டோ எடுத்துட்டு ‘நீங்க ரொம்ப கலரா இருக்கீங்க’ ன்னு சொல்றான் டா..!
*இந்து குமரப்பன்*
விழுப்புரம்
ஏரிய தூர் வார்றதை வேணாம்னு தடுத்தீங்களா!
பின்ன… அந்த ஏரிக்குள்ள நாங்க குடியிருக்கிற ஏரியாவே இருக்குதே!
……………………………………………
பா.சக்திவேல்,கோவை.
என்னங்க அவர் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தறதுக்கு பதிலா முப்பத்திரண்டும் பெற்று பெருவாழ்வு வாழ்கன்னு வாழ்த்தறாரே…?
அவர் பல் டாக்டராம்!
உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

தோழி:
“எதாச்சும் ஒரு ரோல் கொடுக்கச்சொல்லி கேட்டியே ..அந்த டைரக்டர் என்ன சொன்னார்?”
நடிகை:
” அதை ஏன் கேக்கறே…’சிக்கன் ரோல்’ ஒன்னை என் கையில் கொடுத்து அனுப்பி வச்சிட்டார்”
புது வண்டி ரவீந்திரன்
“செருப்புக்கடை வச்சிருந்தவர்தான் படத்தை எடுக்கிறாரா?”
” ஆமாம்.எப்டி கண்டுபுடிச்சீங்க!”
” என்னை நோக்கி பாயும் பேட்டா” னு படத்துக்கு பேர் வச்சிருக்காரே!”
புது வண்டி ரவீந்திரன்
தலை இருக்க வால் ஆடக்கூடாதா? என்ன சொல்கிறீர்கள் மந்திரியாரே?
உங்கள் உடலில் தலை இருக்க வேண்டுமெனில் உங்கள் வாள் ஆடக்கூடாது என்று எதிரி மிரட்டி ஓலை அனுப்பியுள்ளான் மன்னா!
எஸ்.வேதா, நத்தம்.

என் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா!”
“ஏன்டா என்னாச்சு? லவ்வுக்கு ஓக்கே சொல்லலியா?”
“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா!”
முத்து ஆனந்த், வேலூர்.
யுத்த சத்தம் கேட்டதும் மன்னரை காணவில்லையே…!
சத்தம் போடாமல் பதுங்கு குழியில் போய் மறைந்து கொண்டுவிட்டாராம்!
எஸ். வேதா, நத்தம்.
அந்த டாக்டர் ஒரு போலி டாக்டரா இருப்பார்னு எப்படி சொல்றே?
பிளட் டெஸ்ட், யூரின் டெஸ்ட், ஸ்கேன் டெஸ்ட் எல்லாத்திலேயும் நீங்க ஃபெயில் ஆயிட்டீங்கன்னு சொல்றாரே…!
சின்ன சாமி, நத்தம்.
காதலுக்காக நீ நிறைய விட்டுக்கொடுத்து இருக்கேன்னு சொல்றியே என்ன அது?
வெக்கம், மானம் ரோஷத்தைத்தான்!
சின்னசாமி, நத்தம்.
புலவரே…! என் புஜபல பாரக்கிரமத்தை போற்றும் பாடலை இயற்றிவிட்டீரா?
அதற்கான நேரம் “கைவர” மாட்டேங்கிறது மன்னா!
எஸ்.எஸ்.பாபு.
