
திரு ரேகா ராகவன்,
குமுதம், குங்குமம், வாரமலர் போன்ற இதழ்களில் இவரது ஒருபக்க கதைகளும் நகைச்சுவை துணுக்குகளும் ஏராளமாய் இடம்பிடித்து வாசகர் உள்ளங்களை கட்டிப்போட்டுள்ளது. எனது இனிய நண்பர். முதன் முதலில் எனது பஞ்ச் இந்துவில் வெளியான போதும் குமுதத்தில் எனது ஒருபக்க கதை பிரசுரம் ஆனபோதும் முதல் நபராய் போன் செய்து வாழ்த்தியவர்.
இரண்டு ஆண்டுகள் முன் என் இல்லம் வந்து சென்ற இனிய நண்பர். இரு வாரங்களுக்கு முன் திங்களன்று அதிகாலையில் மாரடைப்பால் மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியுற்றேன்!
கை மற்றும் கால்களில் ஆர்த்ரைடீஸ் பிரச்சனை அவருக்கு இருப்பது தெரியும். மற்றபடி ஆரோக்கியமாக இருந்தார். சமீப காலமாக பத்திரிக்கைகளுக்கு எழுதுவதை குறைத்துக் கொண்டார். தேன்சிட்டு தீபாவளி மலரில் காது கொஞ்சம் நீளம் பகுதிக்கு ஒரு துணுக்கு அனுப்பி இருந்தார். அப்புறம் எதுவும் அவர் எழுதி நான் வாசிக்கவில்லை.
என் மகள் வேத ஜனனியின் பெயரில் ஆன்மிக மலர் போட்டிக்கு விடை எழுதி அனுப்பிக் கொண்டிருந்தார். இதுவரை பரிசு விழவில்லை. எழுத்தார்வம் மிக்கவர். தோட்டக்கலையில் ஆர்வலர்.
அவரது மறைவு எனக்கும் பத்திரிக்கை உலகிற்கும் அவரது குடும்பத்தாருக்கும் பேரிழப்புத்தான்!
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கு என் இரங்கல்களை தெரிவித்து திரு ரேகா ராகவன் அவர்களின் ஆன்மா சாந்தியடைய ப்ரார்த்திக்கிறேன்!
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.