
வேலூர் ஆபிசர்ஸ் லைன் ப்யூட்டி பார்லரில் தோழிகள் இருவர்)
“என்னடி அவன்கிட்டே ‘லவ்’ பண்றதைச் சொல்லிட்டியா?”
“இல்லடி!”
“ஏன்?”
“அவனே சொல்லலடி, நா எப்படிச் சொல்வேன்?”
“என்னடி சொல்றே? அவன் உன்னை ‘லவ்’ பண்ணாதானே சொல்வான்!?”
“அதனாலதான்டி நா தயங்கறேன்! பயப்படறேன்! சரி, நீ ஏன் அதையே திரும்பத் திரும்பக் கேக்கறே?!”
“இல்லே, நீ சொல்லலைன்னா அவன்கிட்டே ‘நா ஐ லவ் யூ’ சொல்லலாம்ன்னுதான்!”
(கேட்ட தோழி அதிர்ச்சியாகிறார்!)
முத்து ஆனந்த், வேலூர்
சீர்காழி
( சைக்கிகள் ஸ்டாண்டில் இருவர் )
” காலேஜ்க்கு பத்து நாள் லீவு ஊருக்கு போய் என்ன பண்ணறதுன்னு புரியலைடா ….”
” இங்கே மட்டும் இருந்தா என்ன , ஜிம்முக்கு போவே, ஃபிகர் பின்னாடி சுத்துவ அரியருக்கு மேல அரியர் வெச்சி இருக்குறவன் உயிரை எடுப்ப வேறென்ன கிழிச்சுடுவ …?.” ” பின்ன பத்து நாள்ல பணக்காரனா ஆவது எப்படின்னு தெரிஞ்சுகிட்டா வர முடியும் ….?”
” மண்வாசம் , குடும்ப பாசம் , வீட்டு சோறுன்னு அனுபவிச்சுட்டு வாடா … “ ” அரியருக்கு எங்கப்பன் கிட்ட செருப்படியும் , எங்க ஆத்தா கிட்ட நார பேச்சும் வாங்கிகிட்டு சொங்கி போய் வரச் சொல்றே அதுல உனக்கு ஒரு சுகம் அது தானே ….?”
( தலையை குனிந்து நகருகிறார் )
– பி.கே . ராதா . சீர்காழி .
பொன்னேரி நியுஸ் பேப்பர் கடையில் இரு நண்பர்கள்!
சார்! “துக்ளக்” இருக்குங்களா?
அதெல்லாம் விற்கிறது இல்லீங்க?
உடன் வந்த நண்பர் நக்கலாக, ஏங்க தமிழ்நாட்டுல எங்களப் போல இளைஞர்கள் “அறிவாளி”களா மாறறது உங்களுக்கு பிடிக்க மாட்டேங்குது?
கடைக்காரர் மெர்சலாகி, தம்பி! போனவாரம் வரைக்கும் “வண்ணத்திரை” தான் வாங்கி புரட்டி புரட்டி பார்த்தாரு இப்போ…
உலக நிலவரம் தெரியாத ஆளா இருக்கேய்யா? தலைவர் சொல்லிட்டாருல்ல “துக்ளக்” கையில இருந்தா அறிவாளின்னு நம்ம பய தீவிர ரஜினி ரசிகர் தெரியுமில்லே!
கடைக்காரர் இப்போது காண்டாகி, நீங்க அறிவாளி ஆகறது இருக்கட்டும்! பேலன்ஸை சீக்கிரம் கொடுத்து கடனாளி ஆகாம பாத்துக்கங்க!
சரி சரி! கோச்சுக்காதேன்னே! இருவரும் நகர்கின்றனர்.
ராதாமணாளன், பொன்னேரி.
சீர்காழி
( டீக்கடை ஒன்றில் இருவர் )
” எங்க தலைவரை ஜால்ரான்னு சொன்னா கடுப்பாயிடுவேன் ..”
” பின்னென்ன டெல்லி போனா அவங்க பக்கம் பேசறாரு தமிழகம் வந்தா நம்ம பக்கம் பேசறாரு … “
” தமிழன்னா அப்படி தான்ய்யா காரியத்துல மட்டும் தான் கண்ணு இருக்கும் … “
” அப்படியே நம்ம சரக்குக்கு ஆர்டர் கொடுத்துடேன்…”
” நீயும் தமிழன்னு நிரூபிச்சுட்ட பாரு … “
( தலை குனிந்து சிரிக்கிறார் )
– பி.கே .ராதா .சீர்காழி . 9842371679 .
வேலூர் ஓட்டேரி பூங்காவில் ஒரு காதல் ஜோடி)
“டார்லிங், நாளைக்குக் கொஞ்சம் சீக்கிரம் வந்துடுங்க!”
“ஏன் டியர்?”
“உங்களுக்குப் ‘புது டிரஸ்’ எடுக்கப் போறேன்!”
“நாளைக்கு உனக்குதானே பர்த்டே! எனக்கெதுக்குப் புது டிரெஸ்?”
“இல்ல, எப்பவுமே நீங்களே செலவு பண்றீங்க! நீங்களே எல்லாம் வாங்கித் தரீங்க! அதனாலதான் இந்த முறை என்னோட ட்ரீட்!”
“நீ ஆயிரத்தில் ஒருத்தி டியர்!”
“நோ நோ!”
“பின்னே?!”
“லட்சத்தில் ஒருத்தின்னு சொல்லுங்க!”
முத்து ஆனந்த், வேலூர்