
!
�ஏர் ஹோஸ்டல் பிகரை கரெக்ட் பண்ணியே என்ன ஆச்சு?
அவள் பறந்து போயிட்டா!
� டி.வி காம்பியரை லவ் பண்றது தப்பா போச்சு!
ஏன்?
அடிக்கடி ப்ரேக் விட்டுட்டே இருக்கா!
�
லவ்வர்ஸ் டே அன்னிக்கு உன் லவ்வர் உனக்கு சர்ப்ப்ரைஸ் கொடுக்கபோறதா சொன்னியே என்னாச்சுடி?
ஓட்டலுக்கு கூட்டிப்போய் ஃப்ரைட் ரைஸ் வாங்கி கொடுத்து ஏமாத்திட்டாண்டி!
�செல்போன் கம்பெனியிலே வேலை பார்க்கிற பொண்ணை லவ் பண்ணது தப்பா போச்சு!
அடிக்கடி “ப்ளானை” சேஞ்ச் பண்ணிகிட்டே இருக்கா!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,
�கண்ணே காலம் பூராவும் நாம இப்படியே காதலிச்சிட்டு இருக்கலாம்னு தோணுது!
சாரி டியர்! எனக்கு கல்யாணமான பிறகு புருஷனுக்குத்துரோகம் செய்ய என் மனசு ஒத்து வரலை!
�
மன்னா! எதிரி நாட்டு இளவரசியை நம் இளவரசர் காதலிக்கிறாராம்!
அப்போது “கோட்டையை விடத் தயாராக” இருக்கவேண்டும் என்று சொல்லுங்கள்!
�
ஒரு பொண்ணை உருகி உருகி காதலிச்சியே என்னாச்சு!
அந்த காதல் கரைஞ்சுப்போச்சு!
�
டியர்! லவ்வர்ஸ் டே முழுக்க நீ என் கூடத்தான் இருக்கணும்!
சாரி டியர்! நான் ஏற்கனவே முகேஷ் கூட இருக்கிறதா ப்ராமிஸ் பண்ணிட்டேன்!
�ஒவ்வொரு காதலர் தினத்தன்னிக்கும் நான் உன் கூட இந்த பார்க்குக்கு வரணும்னு விரும்பறேன்!
அடுத்த வருஷம் அதுக்கு என் ஹஸ்பெண்ட் ஒத்துக்கணுமே டியர்!