திரைப்பக்கம்!

சைக்கோ! திரை விமர்சனம்!

கண் பார்வையற்ற காதலனின் கண் எதிரே அவரது காதலி, சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படுகிறார். காதலியை மீட்க நாயகன் போராடி எழுவது தான் இப்படத்தின் கதை.

படத்தின் முதல் ஜீவன் இளையராஜா தான். அவரின் இசை இன்றி இப்படத்தோடு நிச்சயம் ஒன்ற முடியாது என்பது உறுதி. அடுத்து ரன்வீரின் அட்டகாசமான ஒளிப்பதிவு. இவை இரண்டும் தான் சைக்கோவின் கடவுள்கள். பெண்களின் தலையை வெட்டும் வித்தியாச சைக்கோ, கண்பார்வையற்ற ஹீரோ, வீல்சேரில் அமர்ந்தும் சிங்கமாக கர்ஜிக்கும் கதையின் நாயகி, ஒரே ஆடையில் ஒரே அறையில் தேங்கிக்கிடக்கும் கதாநாயகி, எந்தத் துக்கத்திலும் பாட்டுப் பாடும் காவல் அதிகாரி என ஒவ்வொரு கதாபாத்திரங்களும் மிஷ்கினின் தனித்துவ வார்ப்பு. ஆனால் யாருடைய கதாபாத்திரமும் வலிமையாக எழுதப்படவில்லை. அதனால் அவர்களுக்கு நேரும் சுக துக்கங்களில் நம்மால் பங்கெடுக்க முடியவில்லை. இது, சைக்கோவில் உள்ள ஆகப்பெரும் பிரச்சனை.

முன்பாதி மெதுவாகச் சென்றாலும் ஏதோ பெரிதாக இருக்கு என்ற எதிர்பார்ப்போடு தான் செல்கிறது. படத்தின் மேக்கிங் படத்தில் உள்ள எல்லா லாஜிக் ஓட்டைகளையும் ஒட்டடை அடித்துத் துடைத்து விடுகிறது. என்றாலும் கோயம்புத்தூரில் சி.சி டிவி கேமராவே இருக்காதா என்ற கேள்வியைத் தவிர்த்துவிட்டுப் படத்தில் மூழ்கவே முடியவில்லை?

சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கிறேன் பேர்வழி என சிங்கம்புலி சீறி எழும் காட்சிகள் எல்லாம் காலக்கொடுமையில் சேர்க்க வேண்டிய காட்சிகள்.

சிறுவயதில் அன்பு மறுக்கப்பட்டாலோ, சிறுவயதில் தனது நியாயத்தைச் சொல்லவிடாமல் தடுத்தாலோ, அவர்கள் மனம் பிறழ்வுக்கு உள்ளாகி மனித வெறுப்பு வந்துவிடும் என்பதை க்ளைமாக்ஸில் மிஷ்கின் நிறுவுகிறார். அதற்காக அத்தனை கொலைகளைச் செய்தவரை நியாயப்படுத்துவது எவ்வகை நியாயம் என்ற கேள்வியும் எழுகிறது.

உதயநிதி க்ளீஷே இல்லாமல் நடித்துள்ளது ஆறுதல். க்ளீன் ஷேவ் செய்து போலிஸ் அதிகாரியாக வரும் ராம் தரமான தேர்வு. நித்யாமேனன் மிஷ்கினைப் பிரதிபலிக்கிறார். குரல் தான் செட்டாக மறுக்கிறது. கண நேரத்திற்குள் மனதிற்குச் செட்டாகி விடுகிறார் அதிதீ ராவ்.

லாஜிக் குறைகள் தாண்டி, ஒலி – ஒளி நுட்பத்தைப் பயன்படுத்திய விதத்தில் மட்டும், நிச்சயம் இப்படம் மாற்று சினிமா நோக்கிய தமிழ் சினிமாவின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சி.

– ஜெகன் சேட்

நன்றி: http://ithutamil.com

தெலுங்கில் களம்புகுந்துள்ள விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கு படத்தில் பிரபல நடிகரின் மகனுக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இன்றைய தேதியில் பிசி நடிகர் விஜய் சேதுபதிதான். ஒவ்வொரு படத்துக்கும் கொஞ்சம் கொஞ்சமாக கால்ஷீட் கொடுத்து நடித்துவருகிறார்.

இப்போது, விஜய்யின் மாஸ்டர், ஜனநாதனின் லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களில் நடித்து வருகிறா

ஆமிர்கான் விஜய் சேதுபதியிடம் கதை சொல்ல புதிய இயக்குனர்கள் முதல், ஒன்றிரண்டு படங்கள் பண்ணிய இயக்குனர்கள் வரை காத்திருக்கிறார்கள். கதை சொன்னவர்களும் ஏராளம். இதனால் வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து அவர் நடித்துவருகிறார். இந்தியில் ஆமிர்கான் நடிக்கும் லால் சிங் சத்தா என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அல்லு அர்ஜுன் தெலுங்கில் சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்திருந்தார் விஜய் சேதுபதி. இதையடுத்து மேலும் சில தெலுங்கு படங்களில் நடிக்க அவருக்கு அழைப்பு வந்துள்ளது. அதன்படி உப்பென்னா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து பிரபல தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திலும் வில்லனாக நடிக்கிறார். இதை நடிகர் அல்லு அர்ஜுன் ஒரு நிகழ்ச்சியில் உறுதிப்படுத்தினார்

நாகபாபுவின் மகன் சுகுமார் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இதையடுத்து அவர் மேலும் ஒரு தெலுங்கு படத்தில் வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்தப் படத்துக்கு பாக்ஸர் என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் வருண் தேஜ் ஹீரோவாக நடிக்கிறார். இவர் பிரபல நடிகரும் சிரஞ்சீவின் சகோதரருமான நாகபாபுவின் மகன்.

பாக்ஸர் நாகபாபு தமிழில் லிங்குசாமி இயக்கிய வேட்டை, மீராகதிரவன் இயக்கிய விழித்திரு, கலாபிரபு இயக்கிய இந்திரஜித் ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பாக்ஸர் படத்தை கிரண் கொர்ரபட்டி என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். அவர், விஜய் சேதுபதி நடித்தால் அந்த கேரக்டர் வலுவாக இருக்கும் என்று கூறியதை அடுத்து அவரிடம் பேசிவருவதாகப் படக்குழு கூறியுள்ளது. ஆனால், உறுதிப்படுத்தவில்லை.
நன்றி: https://tamil.filmibeat.com/ச்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: