பாம்பு வைரஸ் (கொரோனா வைரஸ்)

பாம்பு வைரஸ்

(CORONA VIRUS)

என்ன டாக்டர்…. சீனா ல ஏதோ கொரோனா வைரஸ் ன்னு வந்து எல்லாரையும் கொன்னுட்டு இருக்காமே. நல்ல வேளை நம்ம ஊருக்கு இன்னமும் வரல !! நாம தப்பிச்சோம் !!

சீனா க்கு வேலை விஷயமா போய்ட்டு ஊர் திரும்புற நம்ம ஊர் ஆள் கூடவே அந்த வைரஸ கூப்டுட்டு வந்தா என்ன சார் பண்ணுவீங்க ??

~டாக்டர்ர்ர்ர்ர் !!

ஹாஹா…பதற வேணாம் சார். வாங்க இந்த கொரோனா வைரஸ் பத்தி தெளிவா பாக்கலாம்.

*முதல் உலகப்போர் அப்போ INFLUENZA.

*இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் SARS

*கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளால NIPHA

*இப்போ இந்த CORONA

~இந்த வைரஸ் கிருமித்தொற்று ஏன் டாக்டர் இவ்ளோ கொடூரமா இருக்கு ?

சூப்பர் கேள்வி சார் !!

மனிதனுக்கு பெரும்பாலான கிருமித்தொற்றுகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலமா பரவுது !!

இந்த பாக்டீரியா இருக்குல… இது உயிருள்ள (Life) ஒரு கிருமி. தானாகவே வேதிவினைகளை(Biochemical Changes) மேற்கொண்டு இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தன்மை உடையது.

ஆனா, இந்த வைரஸ் உயிரற்ற (No Life) கிருமி. தன்னுடைய வேதிவினை மற்றும் இனப்பெருக்கம் செய்ய கண்டிப்பா வேறு ஒரு உயிரை சார்ந்து இருக்கும்.

எல்லா வைரஸ்களும் பாதிப்பு தரக்கூடியவை.

ஆனா, எல்லா பாக்டீரியாக்களும் அப்டி இல்லை.

இன்னும் புரியுற மாதிரி சொல்லணும் ன்னா, நம்ம குடல் பகுதியை நல்லா வெச்சுக்க நம்ம குடல் ல LACTOBACILLI மாதிரி சில நல்ல GUT பாக்டீரியாக்கள் உண்டு. இவை ஆபத்தற்றவை.

~ஒஹ்ஹ்…அப்படியா டாக்டர் ?? சரி. இந்த வைரஸ் எல்லாம் கெட்டது ன்னு வெச்சிக்குவோம். அதுக்காக ஒரு நாட்டையே உலுக்கிப் போடுற அளவுக்கு வீரியம் இருக்கா ?? பாக்டீரியா தொற்று வந்தா மருந்து மாத்திரை கொடுக்குற மாதிரி இதுக்கும் குடுத்து சுலபமா சரி செஞ்சிடலாம் ல.

மறுபடி சூப்பர் கேள்வி சார்.

இந்த வைரஸ் இருக்கு ல்ல. இது மனித உடலை ஊடுருவி தாக்கியதும் தன்னுள் உள்ள ஜீன்களில் சில மாற்றங்களை (Mutation) செஞ்சிக்கும். இதற்கு பெயர் ANTIGENIC SHIFT & ANTIGENIC DRIFT.

இதெல்லாம் செஞ்சிட்டு அடுத்த முறை தாக்கும் பொழுது அதனோட அமைப்பு, தன்மை, வீரியம் எல்லாமே வேற மாதிரி இருக்கும். அதாவது ஒரு வைரஸ் தாக்கும் முன்பு இருந்த தன்மை, அது மனித உடலில் இனப்பெருக்கம் செய்து அடுத்தவரை தாக்கும் பொழுதோ அல்லது அடுத்த ஆண்டு தாக்கும் பொழுதோ வேறு தன்மையும் வீரியமும் கொண்டிருக்கும்.

அதனால தான் பாக்டீரியா தொற்றை விட வைரஸ் கொஞ்சம் சவாலான ஒன்று சார்.

அதனால தான் INFLUENZA FLU போன்ற வைரஸ் கிருமிகளுக்கு சில வருட இடைவெளியில் மறக்காம தடுப்பூசி போடுவாங்க. வைரஸின் ஜீன்களில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் நம்மை மீண்டும் தாக்காமல் இருக்க இந்த BOOSTER தடுப்பூசி.

சரி…இப்போ இந்த கொரோனா வைரஸ் க்கு வருவோம்.

சீனாவின் பகுதியான வூஹான் மாநகரில் தான் இது இப்போ பரவ ஆரம்பிச்சிருக்கு.

இங்க ஒரு விஷயம் நல்லா கவனிங்க.

INFLUENZA

SARS

NIPHA

CORONA

இந்த வைரஸ் எல்லாத்துக்கும் ரொம்ப பிடிச்ச பகுதி நம்ம நுரையீரல் இருக்க சுவாசப் பகுதி.

இதனால தான் சளி, இருமல், ஜுரம்,வாந்தி ன்னு ஆரம்பிக்கும் கிருமித்தொற்று படிப்படியா மூச்சுக்குழாயை பாதித்து, நுரையீரலில் நிமோனியா காய்ச்சல் என்னும் ஊறு விளைவித்து, மூச்சுத்திணறல் ஏற்பட செய்து கடைசியா உயிரைப் பறிக்கும் !!

சளி இருமல் மூலம் அடுத்தவர்களுக்கு எளிதில் பரவும் நோய் இது.

அதனால தான் இந்த மாதிரியான வைரஸ் கிருமி தாக்குதலுக்கு உண்டானவர்களை எல்லாம் QUARANTINE ன்னு சொல்லப்படும் தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு பரவ விடாமல் பார்த்துக்கொள்வாங்க சார்.

~சரி டாக்டர்… இந்த நோய்க்கு மருந்தே இல்லையா ??

நிரந்தர தீர்வு இன்னும் கண்டுபிடிக்கல சார். ஆனா, இதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மருந்துகள் இருக்கு. இந்த கொரோனா வைரஸ் காரணமா நுரையீரலில் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு வைரஸை கொல்லும் Anti Viral மருந்துகள் தரப்படுகின்றன.

சுவாசக்கோளாறு ஏற்பட்டால் செயற்கை சுவாசம் என்னும் Ventillator பொருத்தப்படும்.

உடலில் உள்ள நீர் வீணாய் போவதை தடுக்க, நமது ரத்த நாளங்கள் வழியே தேவைப்படும் அளவு குளுக்கோஸ் செலுத்தப்படும்.

உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க இதெல்லாம் ரொம்பவே உதவியா இருக்கு.

~இதுக்கு இன்னும் தடுப்பூசி வரலையா டாக்டர் ??

சார்… உலகத்தை கட்டி ஆண்ட வைரஸ் கிருமித்தொற்றுகளான பெரியம்மை, போலியோ, இது எல்லாமே இப்போ இல்லாம இருக்க காரணம் அவற்றை மனிதர்களுக்கு பரவாமல் இருக்க ஆண்டாண்டு கால ஆராய்ச்சிக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் தான்.

நான் ஆரம்பத்துல சொன்னேன் ல, இந்த வைரஸ்கள் தங்கள் தன்மையையும் வீரியத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சக்தி கொண்டவை ன்னு. அதனால தடுப்பூசியை கண்டுபிடிப்பது சற்று சவால்.

ஆனா, இந்த கிருமிகளால் ஏற்படும் பாதிப்பை சரி செய்து மக்கள் உயிரை காப்பாற்ற போதுமான மருத்துவ வசதிகள் நம்ம கிட்ட இருக்கறதால யாரும் பெருசா பீதி அடைய வேண்டாம்.

உடனே ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை, நாட்டு வைத்தியம் மூலம் சரி பண்ணுறேன் ன்னு யாராவது சொன்னா, தயவு செஞ்சு நம்ப வேண்டாம். உங்களுடைய பயம் தான் அவர்களோட மூலதனம்.

~சரி டாக்டர்… இப்போ இந்த கொரோனா வைரஸ் நம்ம ஊர்ல வரல. வராம இருக்க என்ன செய்யணும் !!

அரசாங்கம் இதை ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிடுச்சு சார்.

கடல் வழியாக கப்பல் மூலம் வரும் நபர்களை தனிமைப்படுத்தி அவர்களை முழு பரிசோதை செய்வது.

இங்கு வரும் வெளிநாட்டவரையோ, அல்லது அங்கிருந்து மீண்டும் நம்ம ஊருக்கு வரும் இந்தியர்களை சல்லடை போட்டு கிருமித்தொற்று இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு தான் இருக்காங்க.

வருமுன் காப்பதே சிறந்தது !!

அதனால நாம நம்ம பங்குக்கு

1. சுத்தமாக கை கழுவுவது

2. கைக்குட்டை வைத்து கொண்டு இருமலாம்.

3. சளி, இருமல் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்தல்.

4.சுத்தமான உணவு மற்றும் குடிநீர் பழக்கம்.

5.மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் பொழுது மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுதல். வீட்டிற்கு வந்தவுடன் குளித்தல்.

இப்படி சில முறைகளை கையாண்டாலே போதும். பல கிருமித்தொற்று நம்ம நாட்டில் பரவாது.

~டாக்டர்… எனக்கு காலைல வாட்சப் ல ஒரு மெசேஜ் வந்துச்சு.

-சுடுதண்ணி குடித்தால் கோரோனா வராது.

-நிலவேம்பு குடித்தால் கோரோனா வராது.

-ரசத்தில் மஞ்சள் சேர்த்து குடித்தால் கோரோனா வராது.

இதெல்லாம் உண்மையா டாக்டர் ??

சார்…. இவ்ளோ தெளிவா வைரஸ் எவ்ளோ மோசமானது, உலகமே பல்லாயிரம் கோடி செலவு செஞ்சு மருந்துகளை உற்பத்தி பண்ணி, மக்களை காப்பாத்திட்டு இருக்கு ன்னு சொல்றேன். நீங்க சுடுதண்ணி கதையை எல்லாம் நம்பிட்டு இருக்கீங்களே சார்..!

~அப்போ இந்த மஞ்சள் க்கு லாம் எந்த பவர் உம் இல்லையா டாக்டர் !

இருக்கு சார். நம்ம சாப்பிடும் பல வகை உணவுப்பொருட்களுக்கு மருத்துவ குணம் உண்டு.

ஆனா, அதை சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தும் போது தான் சிக்கல்.

மஞ்சள் ஒரு கிருமிநாசினி. அவ்வளவு தான்…இதை நானும் நம்புறேன்.

ஆனா, மஞ்சள் கேன்சரை குணப்படுத்தும் ன்னு சொன்னா, நம்ம அறிவை கொண்டு யோசிக்கணும்.

அதனால நல்ல சுத்தமும் நல்ல சுகாதாரமும் நல்ல வாழ்வியலை தரும்.

அதையும் மீறி, சில கிருமித்தொற்றுகள் வரும் பொழுது மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கோங்க.

அரசாங்கம் அறிவுறுத்தும் எல்லா தடுப்பூசிகளையும் போட்டுக்கோங்க. நோய் எதிர்ப்பு சக்தி நல்லா இருக்கும். சுலபமா நோய்க்கிருமி தாக்குதல் ஏற்படாது.

கொரோனா நம்ம ஊருக்கு வராது ன்னு நம்புவோம். அதிகமா இருக்க சீனாவும் சீக்கிரமே அந்த பிடியில் இருந்து பழைய நிலைக்கு வரும் ன்னு நல்லதையே நினைப்போம் சார்.

நன்றி

Dr.அரவிந்த்ராஜ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: