ரத ஸப்தமி ஸ்னான,அர்க்ய மந்த்ரம்.

ரத ஸப்தமி ஸ்னான,அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்

ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்க்யம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக

திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.

சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினம் ரத சப்தமி: மறுநாள் பீஷ்மாஷ்டமி

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப் படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத் தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.

ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின் மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு!

ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

தன்னுடய சுழற்சிப் பாதையில் ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதனை முறையே தட்சிணாயணம், உத்திராயணம், என்று அழைக்கிறோம்.

சப்தமி என்றால் ஏழாவது நாள் எனப்பொருள் .தை மாதம் வளர்பிறையின் ஏழாம் நாள் பூமி, சூரியனை நெருங்க ஆரம்பிக்கும் முதல் நாள். இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனிடமிருந்து ஒரு விசேஷ ஒளிஆற்றல் வெளிப்படுகிறது.. இந்த விசேஷ ஒளிஆற்றலை நாம் கிரகித்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய கோடைகாலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து நமது உடலைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

இந்த விசேஷ ஒளி ஆற்றலை எப்படி கிரகிப்பது?

அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து உடலில் யோகச்சக்கரங்கள் இருக்கும் இடங்களில் எருக்கம் இலைகளை வைத்து நீராடவேண்டும். காரணம் சூரியனுடைய விசேஷ ஒளிஆற்றலைக் கிரகிப்பதற்கான நாடிகளில் இருக்கும் தடைகளை எருக்கம் இலை வெளியேற்றிவிடும். சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாக எருக்கம் இலைக்கு toxin ஐ வெளியேற்றக்கூடிய சக்தி உண்டு.(இந்த ரகசியம், பீஷ்மருக்கு வேத வியாசரால் உபதேசிக்கப்பட்டது) ரத சப்தமியில் உத்திராயணம் பிறந்த பிறகே, பீஷ்மர் தன் உயிரை விட்டதாக மகாபாரதம் கூறுகிறது. உலக நலனுக்காக பீஷ்மர் பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர்.

அவருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லை. அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் மக்கள் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். அந்த நாளை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவார்கள்.

ஒரு வரலாறு ,காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது.

அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் “அருணோதயம்’ என வழங்குவர் என்றும்

அருள் செய்தார்.(காச்யபர் யாருன்னு கேட்கக் கூடாது)

மற்றும் ஒரு வரலாறு ,ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன். இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை. அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள்.

அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது. யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால் மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன் அதையெடுத்துக் குடித்து விட்டான்.

மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது. அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.

அதனால் மன்னன் மாண்டு விட்டான். அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது. இந்தக் குழந்தை ‘மாந்ததாதா’ என்ற பெயரில் உலைக ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.

குளித்தபின்பு, ஆதித்ய முத்திரையுடன் கூடிய சில விசேஷப் பிராணயாமப் பயிற்சிகளைச் செய்யலாம். ஜுவாலா முத்திரையுடன் கூடிய சுரக்ஷா(ஒளி) த்யானம் செய்யலாம்.

ராவணனை வெற்றிபெற அகஸ்திய மகரிஷி ராமருக்கு ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல வெற்றியையும் பெறுவார்கள் என்பது நிச்சயம். சூரிய நமஸ்காரம் செய்யலாம்.ஆதித்ய கிருதயம், சூரிய சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யலாம். காயத்ரீமந்திரம் ஜெபம் செய்யலாம்.

ஓம் தத் சத்

நன்றி: வேதாகம ப்ராம்மண சமூகம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: