குமுதம், ஆனந்தவிகடன், கல்கி, குங்குமம் என்று ஒவ்வொரு பத்திரிகையும் ஒவ்வொருவித தனித்தன்மையில் இருப்பதை அதன் வாசகர்கள் உணருவார்கள்.அதுபோல தேன்சிட்டு பத்திரிகைக்கும் ஒரு தனித்தன்மை ஏற்பட்டு விட்டது.
‘தேன்சிட்டு’ என்றாலே இந்தந்தவகையில் சிறப்பாக இருக்கும் என்று மனதிற்கு ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிட்டது.
நான் இந்த தடவை வாழ்க்கையில் எவ்வளவோ இன்னல்களுக்கிடையே தேன்சிட்டு இதழை இருபதாம் தேதிவரை படிக்கவில்லை. புரட்டிக்கூட பார்க்கவில்லை. தேன்சிட்டை மட்டுமல்ல; கலைமகள், மஞ்சரியில் தொடங்கி, அந்திமழை, காமதேனு வரை சாதாரணமாக புரட்டக்கூட இல்லை.
இந்த நிலையிலும்கூட எப்போதும், தேன்சிட்டை இன்னும் பார்க்கவில்லை, படிக்கவில்லை என்று மனதின் ஒரு ஓரத்தில் ஒரு எண்ணம் இருந்துக்கொண்டே இருந்தது என்றால், அது தேன்சிட்டு பத்திரிகையின் வெற்றிதான்.
குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற பத்திரிகைகள் ஒரு பெரிய நிறுவனங்கள். ஏராளமான பேர்களின் உழைப்பில், பெரிய பொருளாதார பின்னனியுடன் உருவாவது.
ஆனால் தேன்சிட்டோ இதுபோலில்லாமல், நத்தம் எஸ்.சுரேஷ்பாபு என்ற தனித்துவம் மிகுந்த ஒரே ஒரு திறமைசாலியின் முயற்சியால் உருவாகி வெளிவருகிறது. இது ஒரு சாதனை மட்டுமல்ல : ஒரு வியப்பான அற்புதமும் கூட!
தேன்சிட்டு ஜனவரி 2020 மாதத்தின் பொங்கல் மலரையும் முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை முழுமையாக படித்தேன். படித்து முடித்ததும், ஒரு திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டது. இதுவே தேன்சிட்டு பத்திரிகையின் பெருமை. இதுவே தேன்சிட்டு பத்திரிகையின் வெற்றி.
இந்த அற்புதமான பத்திரிகை மேன்மேலும் சாதனைகள் புரிய என்னுடைய மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்கிறேன்.
-சின்னஞ்சிறுகோபு, சென்னை-73.
தேன்சிட்டு பொங்கல்மலரில் வெளிவந்த அத்தனை கதைகளும் அருமையாக இருந்தது. எழுத்தாளர்களுக்கு பாராட்டுக்கள்!
எஸ்.பத்மாவதி, சென்னை.
முத்து ஆனந்த் அவர்களின் கவிதைக்காதலி கவிதையின் வரிகள் அனைத்தும் இனிமை! படிக்க படிக்க அருமை! பாராட்டுக்கள்!
எஸ். சதிஷ்குமார், பொன்னேரி.
நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு எழுதிய அனாமிகா சிறுகதை சுவாரஸ்ய நடையில் ஆரம்பித்து இறுதியில் பயங்கரத்தை காட்டியது!
ராஜேந்திர குமார், நத்தம்.
பிசாசு எழுதும் பேய்கள் ஓய்வதில்லை! பயம் ஏற்படுத்துகிறது! இரவில் தனியாக நடந்து செல்லவே பயமாக இருக்கிறது இத்தொடரை படித்துவிட்டு. கொஞ்சம் பயப்படுத்துவதை குறைத்துக்கொள்ள சொல்லுங்கள்!
எஸ்.அனுராதா, நத்தம்.
கவிதைச்சாரல் பகுதியில் வெளிவந்த கவிதைகள் அனைத்தும் அட்டகாசம்! கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
எம். தினேஷ், பெங்களூரு.
ஆருத்ரா தரிசனம் குறித்த ஆன்மிகத்தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. நன்றி
எஸ்.பிரேமாவதி, நத்தம்.
மருத்துவகுறிப்புக்களும் பிள்ளைகளை கவனமாக பார்த்துக்கொள்ள சொன்ன குறிப்புக்களும் உபயோகமாக இருந்தது. இவற்றை தொடரவும். நன்றி!
எஸ்.எழில்வாணி, மந்தைவெளி.
கொஞ்சம் சிரியுங்க பாஸ்! என்று சொல்லி நிறைய சிரிக்க வைத்துவிட்டீர்கள்! பாராட்டுக்கள்! என்,வில்வமணி, பொன்னேரி.