புதிதாக தொழில் தொடங்க போறீங்களா? இந்த டிப்ஸ் உங்களுக்குத்தான்!

வேலையை விடுத்து தொழில் தொடங்க இந்த 20 உத்திகளை தெரிந்துகொள்ளுங்கள் !

1.வேலையை விடுக்கின்ற போது , உங்களுக்கான மாதந்த வருமானம் நின்றுபோகும். இதனால் உங்கள் வீட்டுச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு, வீட்டுக்கடன் போன்றவற்றைச் சமாளிக்க குறைந்தபட்சம் 6-12 மாதங்களுக்காவது பணம் தேவை. இந்த தொகையை ஏற்பட்டு செய்து கொண்டு தொழிலில் இறங்க வேண்டும்.

2.இதுமட்டுமில்லாமல், கூடுதலாக இரண்டு வகையான முதலீடுகளுக்கும்(Capital) உங்களுக்கு பணம் தேவைப்படும் . ஒன்று , தொழில் தொடங்குவதற்காக -ஒரு முறை செய்யப்பட வேண்டிய நிரந்திர முதலீடு( Fixed Capital) (அலுவலக வாடகை முன்பணம்(Office advance) , எந்திரங்கள் (Machinery) , கணினி(Computer) போன்ற மின் மற்றும் மின்னணு சாதனங்கள்(Electric & Electronics Goods), மேசை-நாற்காலிகள்(Furniture’s) , வாகனம்(Vehicles) போன்ற பல ).

இரண்டாவது, ஆறு மாதங்களுக்குத் தேவையான நடைமுறை மூலதனம்(Working Capital) (வாடகை(Rent) , ஊழியர் சம்பளம்(Salaries), மின் மற்றும் தொலைபேசி கட்டணம்(Electric & Telephone Charges), பயணச் செலவு (Travel Expenditures), விளம்பர செலவு(Advertisement Cost), பொருள் கொள்முதல்(Raw Material Cost) போன்றவை ), இந்த இரண்டு தேவைகளுக்கும் பணம் இருந்தால் மட்டுமே நீங்கள் தொழில் தொடங்க வேண்டும்.

3.தொழில் தொடங்க விரும்புவோர் , வேலையில் இருந்து கொண்டே அதற்கான தொடக்ககட்ட பணிகளை முடித்துவிட வேண்டும். அதாவது தொழிலுக்கான Project Report தயாரித்தல், இடத்தை தேர்வு செய்தல் , TIN(Tax-Payer Identification Number), VAT(Value Added Tax Registration),PAN (Permanent Account Number),CST (Central sales Tax ), IEC (Import & Export Code), Company Registration போன்ற அரசு நடைமுறைகளை நிறைவு செய்தல் , தொழிலுக்கு தேவைப்படும் அரசு அனுமதிகளை (License ) பெறுதல் , வங்கி கணக்கு (Bank Account) தொடங்குதல், அலுவலக உள் மற்றும் வெளி அலங்கார வேலைகளை மேற்கொள்ளுதல், Business Card, Letter Pad, Brochure, Palm let போன்றவற்றை முன்கூட்டியே தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டால், முதல் நாளில் இருந்தே வருமானத்தில் கவனம் செலுத்தலாம்.

4.வேலையை விடுத்தவுடன் வீணாக்குகிற ஒவ்வொரு நாளும் உங்களுக்கு வருமான இழப்பாகும். அதுமட்டுமல்ல அன்றிலிருந்தே தொழிலை நடத்துவதந்கான செலவும் தொடங்கிவிடும்.

5.எல்லாவற்றையும்விட , வாடிக்கையாளரையும்(Customers) கண்டறிந்து விட்டால் வேலை எளிதாகி விடும். உங்களுடைய தொழிலில், நீங்கள் முதலில் கவனம் செலுத்த வேண்டியது, வருமானம் தரக்கூடிய வாடிக்கையாளர்களைத்தான்(Revenue Customers) .

6.வருமான உத்தரவாதம் இல்லாதவரை , தொழில்முனைவர் தொழிலை தள்ளிப் போடுவது நல்லது.

7.தொழில் தொடங்குவதற்கு முன்பே நீங்கள் பலரிடம் தொழில் தொடங்கப் போகின்ற செய்தியைச் சொல்லி அதைப் பரவலாக்க வேண்டும் .அப்போதுதான் வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடிவருவார்கள் .

8.உங்கள் தொழிலில் பிற வருமானம் தரக்கூடிய ( Other Revenue Sources) வழிகளை முடிந்தவரை அதிகரிக்கச் செய்யுங்கள் .

9.கல்லாவில் பணம் புழங்குகிற தொழிலாக இருந்தால் ,தொழிலை கணினிமயம் ஆக்குகிற வரை நீங்கள்தான் கல்லாவில் அமரவேண்டும்.

10.தொழிலை தொடங்கத் திட்டமிடுகிறபோது, நீங்கள் உருவாக்குகிற திட்டம் இழப்பைத் தருமானால், அடுத்து மாற்று வழி (Alternative Planning) என்ன என்பதையும் முன்கூட்டியே திட்டமிட வேண்டும் .

11.உங்களைவிட அறிவாளிகளை உடன் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு நிறுவனத்திற்கு தொழில் ஆலோசகர்களும், வழிகாட்டிகளும் மிக,மிக முக்கியம். குறிப்பாக திறமையான Auditor , Business Advisor, Business analyst, Advocate, Human Resource Advisor போன்றோரை எப்போதும் கலந்து ஆலோசித்த பிறகே முடிவுகளை எடுங்கள்.

12.எந்த பொருளையும் கொள்முதல் செய்கின்றபோது குறைந்தபட்சம் மூன்று Supplier களிடமாவது விலைப்பட்டியலைப் (Price Quotation) பெறுங்கள். இணையதளத்தில் உலவி (Search in Internet) கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

13.உங்கள் தொழில் வளர்ச்சி அடைகிற வரை ,குடும்பத்தினரில் யாரவது ஒருவருடைய உதவி உங்களுக்கு அவசியம் தேவை .

14.தொழில் வளர்கிற வரை பிடிவாதம் வேண்டாம். வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி, நெகிழ்வுத் தன்மையோடு நடந்து கொள்ளுங்கள். உங்கள் திறமையை நிரூபித்தபின் உங்கள் ஆலோசனைகளை கேட்க அவர்கள் முன் வருவார்கள் .

15.முடிந்த வரை வாடகை ,சம்பளம் போன்ற நிரந்தரச் செலவுகளை குறைத்துக் கொண்டு , கொள்முதல் ,விளம்பரம் போன்ற மாறிக் கொண்டிருக்கும் செலவுகளை அதிகரித்துக் கொள்வது நல்லது . இதனால், பணத்தேவையை ஓரளவு கட்டுப்படுத்த முடியும்.

16.தொழிலில் எவ்வளவு முதலீடு, அதை விட இரண்டு மடங்கு வரை நீங்கள் கடன் வாங்கலாம். அதற்கு மேல் வாங்கினால், இடர்கள் அதிகம்.

17.வாங்குகிற கடன்களுக்கெல்லாம் மாதந்தோறும் வட்டியை மட்டுமே செலுத்தாமல், அசலில் ஒரு பகுதியையும் திருப்பிச் செலுத்தப்பழகுங்கள்.

18.முடிந்தவரை Supplier-களிடம் பணத்தைத் திரும்பச் செலுத்துவதற்கான காலக்கட்டத்தை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

19.எளிதில் பணம் கிடைக்கிறது என்பதற்காக, பல தொழில்களில் கவனம் செலுத்தாதீர்கள்( Don’t Focus Many-things). நீங்கள் பணத்தை தேடி ஓடுவதை விட , பணம் உங்களைத் தேடி வரும் வகையில், உங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ளுங்கள் .

20. மாதந்தோறும் உறுதியாக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டால் மட்டுமே, ஒரு ஆளை வேலைக்கு அமர்த்திக் கொள்ளுங்கள். அதுவரை நீங்கள் தனி ஆளாக ஓடிக்கொண்டே இருங்கள் .

* நண்பர்களே! இப்பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.### படித்ததில் பிடித்தது.

தனிமரம் நேசன் அவர்களின் முகநூல் பகிர்வு.

தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி

தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி:

முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு ‘தாந்த்ரீகம்’ என்று பெயர்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.

“காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ

மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ

கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி

அனகாதேவீ நமோஸ்துதே.’

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே ‘மாதங்கி’ என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், ‘பேச்சி’, ‘பேச்சாயி’ ‘பேச்சியம்மன்’ என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, ‘கர்ணமாதங்கி’ என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக‌ உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.

தொகுத்து அளித்தவர்.

ஸ்ரீலஸ்ரீ ஆனந்தகுமார் சுவாமிகள். குடியாத்தம்.

குடிமல்லம்” பழமையான “சிவன்” கோயில்

*”குடிமல்லம்” பழமையான “சிவன்” கோயில்.*எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள “குடிமல்லம்” எனும் கிராமத்தில் உள்ள “பரசு ராமேஸ்வர” ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) ” இக்கோவில் கலை காணப்படுகிறது.


பழமையான சிவலிங்கம் :-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில் உள்ளது.
அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. ‘குடிமல்லம்’ என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். 

உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்
2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
 நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.


குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
 தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
📷கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
 இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
*ஓம் சர்வம் சிவார்ப்பணம்*

நன்றி:

நியுசிலாந்து தொடரில் இனி இல்லை ரோஹித்…?

பே ஓவல் : இந்திய அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, நியூசிலாந்து நாட்டில் இந்தியா அடுத்து ஆட உள்ள ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தொடரில் ஆட வாய்ப்பில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. டி20 தொடரின் கடைசிப் போட்டியில் ரோஹித் சர்மா காலில் காயம் அடைந்தார். அவரது காயம் குணமாகவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் ஒருநாள் தொடர் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்படுவார் என்றும், அந்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பிசிசிஐ-யில் இருந்து அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. நியூசிலாந்து தொடர் நியூசிலாந்து நாட்டில் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் முடிவடைந்துள்ளது. ரோஹித் சர்மா ஆட்டம் டி20 தொடரில் இந்திய அணி 5 – 0 என்றார் கணக்கில் வெற்றி பெற்றது. இந்த தொடரில் ரோஹித் சர்மா முதல் இரண்டு போட்டிகளில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். மூன்றாவது போட்டியில் சிறப்பாக ஆடி 65 ரன்கள் குவித்தார். ஓய்வு எடுத்தார் நான்காவது டி20 போட்டியில் ஓய்வு எடுத்துக் கொண்டார் ரோஹித் சர்மா. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டி இந்த முடிவை எடுத்தார் அவர். இந்திய அணியும் 3 – 0 என தொடரை கைப்பற்றி இருந்ததால், இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. காயம் ஐந்தாவது போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளித்து கேப்டன் விராட் கோலி, ஓய்வு எடுத்துக் கொண்டார். அதனால், ரோஹித் சர்மா ஐந்தாவது போட்டிக்கு கேப்டனாக இருந்தார். அந்தப் போட்டியில் சிறப்பாக பேட்டிங் செய்து மீண்டும் அரைசதம் அடித்த ரோஹித், பேட்டிங் செய்த போது காயம் அடைந்தார். ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார் கணுக்காலில் காயம் அடைந்த ரோஹித் சர்மாவால் நடக்க முடியாத நிலையிலும், தொடர்ந்து பேட்டிங் செய்தார். ஒரு சிக்ஸ் அடித்த பின், ரன் ஓட முடியாததால் ரிட்டயர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார். அதன் பின் அவர் பீல்டிங் செய்த போது களத்துக்கு வரவில்லை. ராகுல் தான் கேப்டனாக இருந்தார். முன்னேற்றம் இல்லை இந்த நிலையில், போட்டி முடிந்த பின்பும் ரோஹித் சர்மாவுக்கு வலி குறையவில்லை என கூறப்படுகிறது. முதற்கட்ட சிகிச்சைகளின் முடிவிலும் அவர் காயத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதனால், அவர் உடனடியாக போட்டிகளில் பங்கேற்க முடியாது என கூறப்படுகிறது. பிசிசிஐ அதிகாரி தகவல் இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறிய போது, “இந்த சுற்றுப் பயணத்தில் இனி அவர் இல்லை. தற்சமயம், அவர் காயம் நல்ல விதமாக இல்லை. பிசியோதெரபிஸ்ட் அவரை பரிசோதித்து வருகிறார். அது எந்த அளவு மோசமாக இருக்கிறது என்பதை இனி தான் பார்க்க வேண்டும்” என்றார். நிச்சயம் பங்கேற்க மாட்டார் மேலும், காயம் குறித்த நிலை எப்படி இருந்தாலும், இந்த தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் நிச்சயம் பங்கேற்க மாட்டார் என அந்த பிசிசிஐ அதிகாரி உறுதியாக கூறி இருக்கிறார். இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது. மாற்று வீரர் யார்? ஒருநாள் போட்டித் தொடரில் ஏற்கனவே ஷிகர் தவான் காயத்தால் விலகி உள்ள நிலையில், ராகுல், ரோஹித் சர்மா துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என திட்டமிட்டு இருந்தது இந்திய அணி. தற்போது ரோஹித் சர்மா இல்லாத நிலையில் மயங்க் அகர்வால் அல்லது ஷுப்மன் கில் ஒருநாள் அணியில் சேர்க்கப்படலாம். ராகுல் வருவார் அதே போல, டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால் துவக்கம் அளித்து வரும் நிலையில், தற்போது சிறப்பான பார்மில் இருக்கும் கேஎல் ராகுல், ரோஹித் சர்மாவுக்கு மாற்று வீரராக அணியில் இடம் பெறுவார். ப்ரித்வி ஷா மற்றும் ஷுப்மன் கில் ஆகியோரும் மாற்று வீரர்களாக அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது.

நன்றி: https://tamil.mykhel.com/

இந்திய ஹாக்கி கேப்டன் ராணி ராம்பால் உலக விருதுக்கு தேர்வு

புதுடெல்லி : உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

உலக விளையாட்டு அமைப்பு சார்பில் இந்த ஆண்டுக்கான உலக விளையாட்டின் சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.ஆன்-லைன் மூலம் நடந்த வாக்கெடுப்பில் அவருக்கு ரசிகர்கள் ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 477 வாக்குகள் அளித்து வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.

ஹாக்கி விளையாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த கவுரவம் கிடைப்பது இதுவே முதல் முறையாகும். ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணியை தகுதி பெற வைத்ததில் முக்கிய பங்காற்றிய ராணி ராம்பால், இந்த விருதை ஹாக்கி சமூகத்துக்கும், இந்திய அணிக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்

நன்றி: தினபூமி

ஐபிஎல்லில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது சோஹைல் தன்விர்

ஐபிஎல் அறிமுகம் சீசனில் கோப்பையை கைப்பற்றிய ராஜஸ்தான் அணியில் இடம் பிடித்திருந்த சோஹைல் தன்விர், ஐபிஎல்தான் உலகின் சிறந்த டி20 லீக் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வாரியத்தால் (பிசிசிஐ) 2008-ம் ஆண்டு இந்தியன் பிரிமீயர் லீக் (ஐபிஎல்) டி20 தொடர் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தத் தொடர் தற்போது உலகளில் நம்பர் ஒன் டி20 லீக்காக திகழ்கிறது.

2008-ம் ஆண்டு நடைபெற்ற அறிமுக தொடரில் பாகிஸ்தான் வீரர்களும் கலந்து கொண்டனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் சோஹைல் தன்விர் இடம் பிடித்திருந்தார்.

அவர் 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஐபிஎல் கிரிக்கெட்டில் இதுதான் ஒரு பந்து வீச்சாளரின் சிறந்த பந்து வீச்சாக இருந்து வருகிறது. அறிமுக தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கைப்பற்ற இவரின் துடிப்பான பந்து வீச்சும் முக்கிய காரணமாக இருந்தது.

வீரர்களுக்கு கோடிக்கணக்கில் பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஐபிஎல் தொடரில் 2009-ல் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது வரை தடை நீடித்து வரும் நிலையில், உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். அதில் விளையாட முடியாதது வருத்தம் அளிக்கிறது என்று சோஹைல் தன்விர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சோஹைல் தன்விர் கூறுகையில் ‘‘தொழில்முறை கிரிக்கெட்டர்களான நான் மற்றும் வேறு சில பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாதது குறித்து வருத்தம் அடைந்திருப்பார்கள். உலகின் நம்பர் ஒன் லீக் ஐபிஎல்தான். எந்தவொரு வீரரும் விளையாட விருப்பம் இல்லை என்று சொல்லமாட்டார்கள்.

நான் மைதானத்தில் மட்டும் அதிக அளவில் கற்றுக் கொள்ளவில்லை. வீரர்கள் அறையில் சில சீனியர் வீரர்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. வார்னர் உத்வேகம் அளிப்பதில் மிகச் சிறந்தவர். ஐபிஎல் போட்டியில் என்னை சிறப்பாக பயன்படுத்தினார்’’ என்றார்

ரத ஸப்தமி ஸ்னான,அர்க்ய மந்த்ரம்.

ரத ஸப்தமி ஸ்னான,அர்க்ய மந்த்ரம்.

ஸப்த ஸப்தி ப்ரியே தேவி ஸப்த லோகைக தீபிகே

ஸப்த ஜன்மார்ஜிதம் பாபம் ஹரஸப்தமி ஸத்வரம்

யத் யத் கர்ம க்ருதம் பாபம் மயா ஸப்தஸு ஜன்மஸு

தன்மே ரோகம் சோகம் ச மாகரி ஹந்து ஸப்தமீ

நெளமி ஸப்தமி தேவி த்வாம் ஸப்தலோகைக மாதரம்

ஸப்த அர்க பத்ர ஸ்நானேன மம பாபம்வ்யபோஹய

மடி வஸ்த்ரம் உடுத்தி நெற்றிக்கு இட்டுகொண்டு ஸங்கல்பம் செய்துகொண்டு ரத ஸப்தமி ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சொல்லி கீழ் கண்டமந்திரம் சொல்லி நீரால் ஸூர்யனுக்கு அர்க்யம் விட வேண்டும்.

ஸப்த ஸப்தி ரதாரூட ஸப்த லோக ப்ரகாசக

திவாகர க்ருஹாணார்க்கியம் ஸப்தம்யாம் ஜ்யோஷிதாம் பதே

திவாகராய நம: இதமர்க்யம் இதமர்க்யம், இதமர்க்யம்.

சூரியன் உத்திராயணத்தில் பிரவேசிக்கும் தினம் ரத சப்தமி: மறுநாள் பீஷ்மாஷ்டமி

சூரிய பகவானுக்குரிய நாளாக ரதசப்தமி நாள் கருதப் படுகிறது. தை மாத அமாவாசை நாளுக்கு அடுத்த ஏழாவது நாள் ரதசப்தமியாக இந்தியா முழுவதும் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏழு வண்ணங்களைக் கொண்ட ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒற்றைச் சக்கரம் கொண்ட தேரில் சூரிய பகவான் வானத் தில் வலம் வருவதாக ஐதீகம் உள்ளது. சூரிய ஒளி இல்லா விடில் பூவுலகில் எதுவுமே இருக்க முடியாது. எனவேதான் உயிர்களைக் காக்கும் திருமாலும் சூரியனும் ஒன்றாகக் கருதப் படுகின்றனர். சூரிய பகவானின் ரதத்திற்கு அருணன் சாரதியாக உள்ளார்.

ரதசப்தமியன்று எருக்க இலைகளை சிரசின் மேல் வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி நின்று நீராட வேண்டும்.ரதசப்தமி திருநாளில் சூரியனின் கிரணங்கள் எருக்க இலைகள் மூலம் ஈர்க்கப்பட்டு, உடலில் ஊடுருவிச் சென்று, வியாதிகளைப் போக்கி குணம் தருகின்றனவாம். அதேபோல், இந்த தினத்தில் ஆறு அல்லது குளத்தில் நீராடுவது சிறப்பு!

ரதசப்தமியன்று வீட்டு வாசலை மெழுகி, தேர்க்கோலம் போட்டு அலங்கரிக்க வேண்டும். பிறகு, சூரிய பகவானுக்கு சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பூஜிக்க வேண்டும். இந்தப் புண்ணிய தினத்தில், வீட்டு பூஜையறையிலும் சூரிய ரதம் போன்று கோலம் வரைந்து, உரிய ஸ்லோகங்கள் கூறி சூரியனை வழிபடுவதால், சகல நலன்களும் உண்டாகும்.

தன்னுடய சுழற்சிப் பாதையில் ஆறு மாதமாகச் சூரியனிடமிருந்து தொலைவில் சுற்றிக் கொண்டிருந்த பூமி அடுத்த ஆறு மாதங்கள் சூரியனுக்கு நெருக்கமான பாதையில் சுற்ற ஆரம்பிக்கிறது. இதனை முறையே தட்சிணாயணம், உத்திராயணம், என்று அழைக்கிறோம்.

சப்தமி என்றால் ஏழாவது நாள் எனப்பொருள் .தை மாதம் வளர்பிறையின் ஏழாம் நாள் பூமி, சூரியனை நெருங்க ஆரம்பிக்கும் முதல் நாள். இந்தக் குறிப்பிட்ட நாளில் சூரியனிடமிருந்து ஒரு விசேஷ ஒளிஆற்றல் வெளிப்படுகிறது.. இந்த விசேஷ ஒளிஆற்றலை நாம் கிரகித்துக்கொண்டால் அடுத்து வரக்கூடிய கோடைகாலத்தில் ஏற்படும் வெம்மையிலிருந்து நமது உடலைக் காப்பாற்றிக்கொள்ளலாம்.

இந்த விசேஷ ஒளி ஆற்றலை எப்படி கிரகிப்பது?

அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாகவே எழுந்து உடலில் யோகச்சக்கரங்கள் இருக்கும் இடங்களில் எருக்கம் இலைகளை வைத்து நீராடவேண்டும். காரணம் சூரியனுடைய விசேஷ ஒளிஆற்றலைக் கிரகிப்பதற்கான நாடிகளில் இருக்கும் தடைகளை எருக்கம் இலை வெளியேற்றிவிடும். சூரியனார் கோயில் ஸ்தல விருச்சம் எருக்கம் செடி என்பதை இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.

பொதுவாக எருக்கம் இலைக்கு toxin ஐ வெளியேற்றக்கூடிய சக்தி உண்டு.(இந்த ரகசியம், பீஷ்மருக்கு வேத வியாசரால் உபதேசிக்கப்பட்டது) ரத சப்தமியில் உத்திராயணம் பிறந்த பிறகே, பீஷ்மர் தன் உயிரை விட்டதாக மகாபாரதம் கூறுகிறது. உலக நலனுக்காக பீஷ்மர் பிரம்மச்சர்ய விரதம் ஏற்றவர்.

அவருக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய சந்ததி இல்லை. அதனால் ரத சப்தமிக்கு மறுநாள் மக்கள் பீஷ்மருக்கு தர்ப்பணம் செய்கிறார்கள். அந்த நாளை பீஷ்மாஷ்டமி என்றும் கூறுவார்கள்.

ஒரு வரலாறு ,காஷ்யபருக்கு வினதை மற்றும் கர்த்துரு என்ற மனைவியர் இருந்தனர். இவர்கள் குழந்தை வரம் வேண்டி சிவனை வழி பட்டனர். அவர்களுக்கு ஒரு முட்டையைக் கொடுத்த சிவன், ஓராண்டு காலம் பாதுகாக்கும்படி சொன்னார். வினதையிடம் இருந்த முட்டையில் இருந்து கருடன் பிறந்தது.

அது மகாவிஷ்ணுவின் வாகனமாகும் தகுதியைப் பெற்றது. கர்த்துருவின் முட்டையில் இருந்து ஏதும் வராததால், அவசரப்பட்ட அவள் அந்த முட்டையை உடைத்துப் பார்க்க அதனுள் இருந்து குறை உடலுடன் ஒரு குழந்தை பிறந்தான். அவள் மிகவும் வருத்தப்பட்டு சிவனிடம் மன்னிப்பு கோரினாள்.

சிவனும் அவளை மன்னித்து, அந்தக் குழந்தை சூரியனின் ஏழு குதிரை கொண்ட தேரை ஓட்டும் சாரதியாவான் என்றும், சூரிய உதயத்தை அவனது பெயரால் “அருணோதயம்’ என வழங்குவர் என்றும்

அருள் செய்தார்.(காச்யபர் யாருன்னு கேட்கக் கூடாது)

மற்றும் ஒரு வரலாறு ,ஸ்ரீராமனின் முன்னோர்களில் ஒருவன் யுவனவன். இந்த மன்னனுக்கு சந்ததி இல்லை. அதனால் வருத்தப்பட்டு மகரிஷிகள் சொல்படி புத்திரகாமேஷ்டி யாகம் செய்தான். அவர்கள் நீரை மந்திரித்து ஒரு கலசத்தில் பத்திரப்படுத்தி மன்னனின் மனைவி குடிக்க வேண்டும் என்றார்கள்.

அந்தக் கலச நீர் யாகவேதியின் நடுவே இருந்தது. அனைவரும் உறங்கி விட்டனர். ஆனால் அந்த இரவில் மன்னனுக்கு தாகம் எடுத்தது. யாகவேதியின் நடுவே வைத்திருப்பது மகரிஷிகளால் மந்திரித்து வைக்கப்பட்ட நீர் என்று தெரியாமல் மன்னன் அதையெடுத்துக் குடித்து விட்டான்.

மன்னன் வயிற்றில் கரு வளர்ந்தது. அந்தக் குழந்தை தன் கட்டை விரலால் மன்னனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வந்தது.

அதனால் மன்னன் மாண்டு விட்டான். அழுத குழந்தைக்குப் பாலூட்ட இந்திரன் தன் பவித்திர விரலை குழந்தையின் வாயில் வைக்க அதிலிருந்து பெருகிய அமிர்தத்தைப் பருகி குழந்தை வளர்ந்தது. இந்தக் குழந்தை ‘மாந்ததாதா’ என்ற பெயரில் உலைக ஆட்சி புரிந்தது என்பது ஒரு வரலாறு.

குளித்தபின்பு, ஆதித்ய முத்திரையுடன் கூடிய சில விசேஷப் பிராணயாமப் பயிற்சிகளைச் செய்யலாம். ஜுவாலா முத்திரையுடன் கூடிய சுரக்ஷா(ஒளி) த்யானம் செய்யலாம்.

ராவணனை வெற்றிபெற அகஸ்திய மகரிஷி ராமருக்கு ‘ஆதித்ய ஹ்ருதயம்’ என்னும் ஸ்தோத்திரத்தை உபதேசித்தார். இதை தினமும் பாராயணம் செய்பவர்கள் சகல வெற்றியையும் பெறுவார்கள் என்பது நிச்சயம். சூரிய நமஸ்காரம் செய்யலாம்.ஆதித்ய கிருதயம், சூரிய சஹஸ்ரநாமம், பாராயணம் செய்யலாம். காயத்ரீமந்திரம் ஜெபம் செய்யலாம்.

ஓம் தத் சத்

நன்றி: வேதாகம ப்ராம்மண சமூகம்.

பாம்பு வைரஸ் (கொரோனா வைரஸ்)

பாம்பு வைரஸ்

(CORONA VIRUS)

என்ன டாக்டர்…. சீனா ல ஏதோ கொரோனா வைரஸ் ன்னு வந்து எல்லாரையும் கொன்னுட்டு இருக்காமே. நல்ல வேளை நம்ம ஊருக்கு இன்னமும் வரல !! நாம தப்பிச்சோம் !!

சீனா க்கு வேலை விஷயமா போய்ட்டு ஊர் திரும்புற நம்ம ஊர் ஆள் கூடவே அந்த வைரஸ கூப்டுட்டு வந்தா என்ன சார் பண்ணுவீங்க ??

~டாக்டர்ர்ர்ர்ர் !!

ஹாஹா…பதற வேணாம் சார். வாங்க இந்த கொரோனா வைரஸ் பத்தி தெளிவா பாக்கலாம்.

*முதல் உலகப்போர் அப்போ INFLUENZA.

*இந்த நூற்றாண்டு தொடக்கத்தில் SARS

*கொஞ்ச நாளைக்கு முன்னாடி கேரளால NIPHA

*இப்போ இந்த CORONA

~இந்த வைரஸ் கிருமித்தொற்று ஏன் டாக்டர் இவ்ளோ கொடூரமா இருக்கு ?

சூப்பர் கேள்வி சார் !!

மனிதனுக்கு பெரும்பாலான கிருமித்தொற்றுகள் பாக்டீரியா மற்றும் வைரஸ் மூலமா பரவுது !!

இந்த பாக்டீரியா இருக்குல… இது உயிருள்ள (Life) ஒரு கிருமி. தானாகவே வேதிவினைகளை(Biochemical Changes) மேற்கொண்டு இனப்பெருக்கம் செய்துகொள்ளும் தன்மை உடையது.

ஆனா, இந்த வைரஸ் உயிரற்ற (No Life) கிருமி. தன்னுடைய வேதிவினை மற்றும் இனப்பெருக்கம் செய்ய கண்டிப்பா வேறு ஒரு உயிரை சார்ந்து இருக்கும்.

எல்லா வைரஸ்களும் பாதிப்பு தரக்கூடியவை.

ஆனா, எல்லா பாக்டீரியாக்களும் அப்டி இல்லை.

இன்னும் புரியுற மாதிரி சொல்லணும் ன்னா, நம்ம குடல் பகுதியை நல்லா வெச்சுக்க நம்ம குடல் ல LACTOBACILLI மாதிரி சில நல்ல GUT பாக்டீரியாக்கள் உண்டு. இவை ஆபத்தற்றவை.

~ஒஹ்ஹ்…அப்படியா டாக்டர் ?? சரி. இந்த வைரஸ் எல்லாம் கெட்டது ன்னு வெச்சிக்குவோம். அதுக்காக ஒரு நாட்டையே உலுக்கிப் போடுற அளவுக்கு வீரியம் இருக்கா ?? பாக்டீரியா தொற்று வந்தா மருந்து மாத்திரை கொடுக்குற மாதிரி இதுக்கும் குடுத்து சுலபமா சரி செஞ்சிடலாம் ல.

மறுபடி சூப்பர் கேள்வி சார்.

இந்த வைரஸ் இருக்கு ல்ல. இது மனித உடலை ஊடுருவி தாக்கியதும் தன்னுள் உள்ள ஜீன்களில் சில மாற்றங்களை (Mutation) செஞ்சிக்கும். இதற்கு பெயர் ANTIGENIC SHIFT & ANTIGENIC DRIFT.

இதெல்லாம் செஞ்சிட்டு அடுத்த முறை தாக்கும் பொழுது அதனோட அமைப்பு, தன்மை, வீரியம் எல்லாமே வேற மாதிரி இருக்கும். அதாவது ஒரு வைரஸ் தாக்கும் முன்பு இருந்த தன்மை, அது மனித உடலில் இனப்பெருக்கம் செய்து அடுத்தவரை தாக்கும் பொழுதோ அல்லது அடுத்த ஆண்டு தாக்கும் பொழுதோ வேறு தன்மையும் வீரியமும் கொண்டிருக்கும்.

அதனால தான் பாக்டீரியா தொற்றை விட வைரஸ் கொஞ்சம் சவாலான ஒன்று சார்.

அதனால தான் INFLUENZA FLU போன்ற வைரஸ் கிருமிகளுக்கு சில வருட இடைவெளியில் மறக்காம தடுப்பூசி போடுவாங்க. வைரஸின் ஜீன்களில் ஏற்பட்ட புதிய மாற்றங்கள் நம்மை மீண்டும் தாக்காமல் இருக்க இந்த BOOSTER தடுப்பூசி.

சரி…இப்போ இந்த கொரோனா வைரஸ் க்கு வருவோம்.

சீனாவின் பகுதியான வூஹான் மாநகரில் தான் இது இப்போ பரவ ஆரம்பிச்சிருக்கு.

இங்க ஒரு விஷயம் நல்லா கவனிங்க.

INFLUENZA

SARS

NIPHA

CORONA

இந்த வைரஸ் எல்லாத்துக்கும் ரொம்ப பிடிச்ச பகுதி நம்ம நுரையீரல் இருக்க சுவாசப் பகுதி.

இதனால தான் சளி, இருமல், ஜுரம்,வாந்தி ன்னு ஆரம்பிக்கும் கிருமித்தொற்று படிப்படியா மூச்சுக்குழாயை பாதித்து, நுரையீரலில் நிமோனியா காய்ச்சல் என்னும் ஊறு விளைவித்து, மூச்சுத்திணறல் ஏற்பட செய்து கடைசியா உயிரைப் பறிக்கும் !!

சளி இருமல் மூலம் அடுத்தவர்களுக்கு எளிதில் பரவும் நோய் இது.

அதனால தான் இந்த மாதிரியான வைரஸ் கிருமி தாக்குதலுக்கு உண்டானவர்களை எல்லாம் QUARANTINE ன்னு சொல்லப்படும் தனிமைப்படுத்தி, மற்றவர்களுக்கு பரவ விடாமல் பார்த்துக்கொள்வாங்க சார்.

~சரி டாக்டர்… இந்த நோய்க்கு மருந்தே இல்லையா ??

நிரந்தர தீர்வு இன்னும் கண்டுபிடிக்கல சார். ஆனா, இதனால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்த மருந்துகள் இருக்கு. இந்த கொரோனா வைரஸ் காரணமா நுரையீரலில் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு வைரஸை கொல்லும் Anti Viral மருந்துகள் தரப்படுகின்றன.

சுவாசக்கோளாறு ஏற்பட்டால் செயற்கை சுவாசம் என்னும் Ventillator பொருத்தப்படும்.

உடலில் உள்ள நீர் வீணாய் போவதை தடுக்க, நமது ரத்த நாளங்கள் வழியே தேவைப்படும் அளவு குளுக்கோஸ் செலுத்தப்படும்.

உயிரிழப்பு ஏற்படாமல் இருக்க இதெல்லாம் ரொம்பவே உதவியா இருக்கு.

~இதுக்கு இன்னும் தடுப்பூசி வரலையா டாக்டர் ??

சார்… உலகத்தை கட்டி ஆண்ட வைரஸ் கிருமித்தொற்றுகளான பெரியம்மை, போலியோ, இது எல்லாமே இப்போ இல்லாம இருக்க காரணம் அவற்றை மனிதர்களுக்கு பரவாமல் இருக்க ஆண்டாண்டு கால ஆராய்ச்சிக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகள் தான்.

நான் ஆரம்பத்துல சொன்னேன் ல, இந்த வைரஸ்கள் தங்கள் தன்மையையும் வீரியத்தையும் அடிக்கடி மாற்றிக்கொள்ளும் சக்தி கொண்டவை ன்னு. அதனால தடுப்பூசியை கண்டுபிடிப்பது சற்று சவால்.

ஆனா, இந்த கிருமிகளால் ஏற்படும் பாதிப்பை சரி செய்து மக்கள் உயிரை காப்பாற்ற போதுமான மருத்துவ வசதிகள் நம்ம கிட்ட இருக்கறதால யாரும் பெருசா பீதி அடைய வேண்டாம்.

உடனே ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை, நாட்டு வைத்தியம் மூலம் சரி பண்ணுறேன் ன்னு யாராவது சொன்னா, தயவு செஞ்சு நம்ப வேண்டாம். உங்களுடைய பயம் தான் அவர்களோட மூலதனம்.

~சரி டாக்டர்… இப்போ இந்த கொரோனா வைரஸ் நம்ம ஊர்ல வரல. வராம இருக்க என்ன செய்யணும் !!

அரசாங்கம் இதை ஏற்கனவே செய்ய ஆரம்பிச்சிடுச்சு சார்.

கடல் வழியாக கப்பல் மூலம் வரும் நபர்களை தனிமைப்படுத்தி அவர்களை முழு பரிசோதை செய்வது.

இங்கு வரும் வெளிநாட்டவரையோ, அல்லது அங்கிருந்து மீண்டும் நம்ம ஊருக்கு வரும் இந்தியர்களை சல்லடை போட்டு கிருமித்தொற்று இல்லை என்று ஊர்ஜிதம் செய்து கொண்டு தான் இருக்காங்க.

வருமுன் காப்பதே சிறந்தது !!

அதனால நாம நம்ம பங்குக்கு

1. சுத்தமாக கை கழுவுவது

2. கைக்குட்டை வைத்து கொண்டு இருமலாம்.

3. சளி, இருமல் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்தித்தல்.

4.சுத்தமான உணவு மற்றும் குடிநீர் பழக்கம்.

5.மக்கள் நெரிசல் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்லும் பொழுது மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுதல். வீட்டிற்கு வந்தவுடன் குளித்தல்.

இப்படி சில முறைகளை கையாண்டாலே போதும். பல கிருமித்தொற்று நம்ம நாட்டில் பரவாது.

~டாக்டர்… எனக்கு காலைல வாட்சப் ல ஒரு மெசேஜ் வந்துச்சு.

-சுடுதண்ணி குடித்தால் கோரோனா வராது.

-நிலவேம்பு குடித்தால் கோரோனா வராது.

-ரசத்தில் மஞ்சள் சேர்த்து குடித்தால் கோரோனா வராது.

இதெல்லாம் உண்மையா டாக்டர் ??

சார்…. இவ்ளோ தெளிவா வைரஸ் எவ்ளோ மோசமானது, உலகமே பல்லாயிரம் கோடி செலவு செஞ்சு மருந்துகளை உற்பத்தி பண்ணி, மக்களை காப்பாத்திட்டு இருக்கு ன்னு சொல்றேன். நீங்க சுடுதண்ணி கதையை எல்லாம் நம்பிட்டு இருக்கீங்களே சார்..!

~அப்போ இந்த மஞ்சள் க்கு லாம் எந்த பவர் உம் இல்லையா டாக்டர் !

இருக்கு சார். நம்ம சாப்பிடும் பல வகை உணவுப்பொருட்களுக்கு மருத்துவ குணம் உண்டு.

ஆனா, அதை சர்வரோக நிவாரணியாக பயன்படுத்தும் போது தான் சிக்கல்.

மஞ்சள் ஒரு கிருமிநாசினி. அவ்வளவு தான்…இதை நானும் நம்புறேன்.

ஆனா, மஞ்சள் கேன்சரை குணப்படுத்தும் ன்னு சொன்னா, நம்ம அறிவை கொண்டு யோசிக்கணும்.

அதனால நல்ல சுத்தமும் நல்ல சுகாதாரமும் நல்ல வாழ்வியலை தரும்.

அதையும் மீறி, சில கிருமித்தொற்றுகள் வரும் பொழுது மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கோங்க.

அரசாங்கம் அறிவுறுத்தும் எல்லா தடுப்பூசிகளையும் போட்டுக்கோங்க. நோய் எதிர்ப்பு சக்தி நல்லா இருக்கும். சுலபமா நோய்க்கிருமி தாக்குதல் ஏற்படாது.

கொரோனா நம்ம ஊருக்கு வராது ன்னு நம்புவோம். அதிகமா இருக்க சீனாவும் சீக்கிரமே அந்த பிடியில் இருந்து பழைய நிலைக்கு வரும் ன்னு நல்லதையே நினைப்போம் சார்.

நன்றி

Dr.அரவிந்த்ராஜ்

விவசாயியை மணந்த பெண் இஞ்ஜினியர்.

தற்போதை இளம்பெண்கள் தங்கள் கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்க வேண்டும், பல இலட்சங்கள் சம்பாதிக்க வேண்டும். ஐ.டி துறையில் வேலை பார்க்க வேண்டும் என்று பல்வேறு கட்டளைகள் போட பெற்றோர் அதற்கேற்ற வரன்களை தேடி வருகின்றனர். ஆனால் திருவண்ணாமலையில் பொறியியல் படித்த பெண் ஒருவர் மணந்தால் ஒரு விவசாயியைத்தான் மணப்பேன் என்று வித்தியாசமாக அடம்பிடித்து தன் ஆசைப்படி ஒரு விவசாயியை மணந்துள்ளார். அந்த செய்திதான் கீழே

கண்ணமங்கலம்:’விவசாயியைத் தான் திருமணம் செய்வேன்’ என்ற கொள்கையோடு, விவசாயியை தேர்வு செய்து, பெண் இன்ஜினியர் திருமணம் செய்து கொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், முனியந்தாங்கலை சேர்ந்தவர், லட்சுமணன் மகள் அரசம்மா, 27; இன்ஜினியரிங் படித்துள்ளார். இவருக்கு, பல இடங்களில் அவரது பெற்றோர் வரன் தேடி வந்தனர். அரசம்மா, ‘நான் ஒரு விவசாயியைத் தான் திருமணம் செய்து கொள்வேன்’ என, தீர்க்கமாக கூறிவிட்டார்.

இதையடுத்து, தேப்பனந்தலில் வசிக்கும் லட்சுமணனின் சகோதரி எல்லம்மாள், 65, தன் மகன் விவசாயியான சிவக்குமார், 29, என்பவருக்கு அரசம்மாவை பெண் கேட்டார். இதையடுத்து, 27-ல், சிவகுமாருக்கும், அரசம்மாவுக்கும் திருமணம் நடந்தது. மகளின் ஆசைப்படி லட்சுமணன், மருமகன் சிவகுமாருக்கு, விவசாய பணிக்காக டிராக்டர் மற்றும் டில்லர் வாங்கி கொடுத்துள்ளார்.

நன்றி: தினமலர் நாளிதழ்.