காது கொஞ்சம் நீளம்!

வேலூர் இன்பென்ட்ரி சாலையில் ஒரு ப்ரைவேட் ஆபிசில் தோழனும் தோழியும்)

“ஏன் அவகிட்டே ‘லவ்’வை சொல்ல அவ்வளவு யோசிக்கறீங்க?”

“எல்லாம் ‘தயக்கம்’தாங்க!”

“அதைதான் ஏன்னு கேக்கறேன்!”

“வேணாம்ன்னு சொல்லிட்டான்னா?!”

சொல்லிட்டா என்ன? வேற ஆளைப் பாருங்க!”

(கேட்ட நண்பர் அதிர்ச்சியாகிறார்!)

-முத்து ஆனந்த், வேலூர்

வேலூர் சங்கரன்பாளையம் கல்லூரிச் சாலையில் தோழிகள் இருவர்)

“என்னடி எவன் ‘லவ்’ பண்ணாலும் துரத்தி விடறே!”

“உனக்குத்தான் தெரியுமில்லேடி! நான் என் ‘மாமா’வைதான் ‘கல்யாணம்’ பண்ணிக்கப் போறேன்னு!”

“ஏன்டி, பைனல் இயர் படிக்கறே! இன்னும் படிக்கப் போறேங்கறே! அப்படியிருக்கறப்ப ‘படிக்காத ஆளை’க் ‘கல்யாணம்’ பண்ணிக்கப் போறேங்கறே!”

“அதான் அவருக்கும் சேர்த்து என்னைப் படிக்க வைக்கறாரே! அது போதாதாடி?!”

“ஆகா, ‘நன்றியின் இலக்கணமே, பேஷ் பேஷ்!”

முத்து ஆனந்த் வேலூர்

சிதம்பரம் சீர்காழி அரசு பேருந்தில் கண்டருக்டரும் பயணியும் … )

” ஓடற பஸ்ல ஏறாதேப்பா கால் சிலிப் ஆயிடும் உயிருக்கே அது ஆபத்து .. “

” உங்க பஸ் ஓடறதே அதிசயம் இதுல கமெண்ட் வேறையா..?”

” படி தடுக்கி விட்டு கீழ விழுந்து பாதியில செத்துடாதேன்னு தமிழ்ல சொல்லனுமாக்கும் ?”

” அவச் சொல்லா பேசாம போய் டிக்கெட்டை போடுய்யா ..”

” எங்க நல்ல வாய்க்கு மரியாதை கொடுக்கறீங்க நார வாய்க்கு தானே பயப்படறீங்க ?”

( பஸ்ஸில் ஒரே சிரிப்பு … )

– பி.கே .ராதா .சீர்காழி .

நத்தம் சன்னதி தெருவில் தேர்வு எழுதிவந்த மகனும் தந்தையும்!

என்னடா? இன்னிக்கு எக்ஸாம் நல்லா எழுதினியா பேப்பர் எப்படி இருந்தது…?

எக்ஸாம் நல்லாத்தான் எழுதினேன்! ஆனா பேப்பர்தான் சுத்த வேஸ்ட்…!

என்னடா சொல்றே?

ஆமாம்பா! பேப்பர்லே இங்க் ஊறுது!

அப்பா கடுப்பாகி டேய் நான் அதை கேக்கலை! கொஸ்டீன் பேப்பரை கேட்டேன்!

உடனே மகன் கொஸ்டீன் பேப்பரில் கிறுக்கி பார்த்து… அப்பா இதுலே இங்க் ஊறலை! நல்லாத்தான் இருக்கு!

அதற்குமேல் பேசமுடியாமல் அப்பா தலையில் அடித்துக்கொண்டு வெளியேற நமுட்டு சிரிப்புடன் உள்ளே நுழைகிறான் மகன்.

சின்னசாமி, நத்தம்.

பஞ்செட்டி டீக்கடை ஒன்றில் இரு இளைஞர்கள்!

மாஸ்டர் சூடா ரெண்டு டீ போடுங்க!

போடலாம்! போடலாம்! முதல்ல பேலன்ஸை செட்டில் பண்ணுங்க!

என்ன மாஸ்டர் நாங்க என்ன ஓடியா போயிரப்போறோம்! கொடுத்திடமாட்டோமா?

நீங்க ஓடிப்போக மாட்டீங்கதான்! உலகம் பூரா கொரானா வைரஸ் அது இதுன்னு அழிஞ்சிகிட்டு இருக்கு! அது உங்களை பிடிச்சுகிட்டா இன்னா பண்றது…! முதல்ல காசை கொடுத்துட்டு காபியை ஆர்டர் பண்ணுங்க!

தோ…பார்றா…! நீ போடற டீ காபியை இத்தனை நாளா குடிச்சிட்டே ஆரோக்கியமா இருக்கிறோம்னா கொரோனோ வைரஸ் எங்களை என்ன பண்ணிடும்?

மாஸ்டர் கடுப்பாகி முறைக்க இளைஞர்கள் நகர்கிறார்கள்!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

பொன்னேரி பெட்டிக்கடை ஒன்றில் கடைக்காரரும் ஓர் இளைஞரும்.

மாலைமலர் ஒண்ணு கொடுங்க!

வித்துப்போச்சுங்க! அப்ப முரசு இருந்தா கொடுங்க!

அதுவும் காலி…!

வழக்கமா ஆறுமணி வரைக்கும் விற்காம கடையில தொங்கிட்டிருக்கும் இன்னிக்கு எப்படி வித்துருச்சு?

அதான் ட்ரம்ப் வந்திருக்கார் இல்லையா?

ட்ரம்பா? …. என்னப்பா அமெரிக்க ஜனாதிபதியைக்கூட தெரியாம இருக்கியே?

அவர தெரிஞ்சுகிட்டு என்னப் பண்ணப் போறேன்!

என்ன பண்ணப் போறியா? மோடி அவரை ப்ரெண்ட் பிடிச்சிட்டாரு! இனிமே இந்தியா வல்லரசு ஆயிரும்!

அட! அப்புறம்?

பாகிஸ்தான் சீனா எல்லாம் நம்மகிட்டே இனிமே வாலாட்ட முடியாது தெரியுமா?

அப்ப தலை ஆட்டுவாங்களா?

என்னப்பா நக்கலா?

பின்னே என்ன? ட்ரம்ப் வரான்னு ஒரு பெரிய சுவரை கட்டி வைச்சிருக்கான் மோடி அதுக்கு ஆன செலவுக்கு அந்த ஏழைங்களுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம்! இவனுங்களை நம்பி இந்தியா வல்லரசு ஆயிரும்னு உங்களை மாதிரி ஆளுங்க நம்பிக்கிட்டிருக்காங்க பாருங்க! உங்களை சொல்லனும்!

தம்பி… நீங்க எதிர்கட்சியா?

நான் எதிர்கட்சியும் இல்லே! ஆளுங்கட்சியும் இல்லே! அன்றாடம் காய்ச்சி!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: