
)
அரைகுறை ஆடையுடன்
திரிந்துகொண்டிருக்கிறது
அடுப்பில் பால்
2)
சிவப்பு எச்சரிக்கை
ஊருக்குள் நுழையவில்லை
மழை
3)
விதையின் தாகம் தீர்க்கிறது
குடை மேல்படாத
மழைத்துளி
4)
தனது இறுதி ஊர்வலத்தை
கவிதையாக்கிப்போகிறது
சருகொன்று..
செம்பா
திருச்சி
அடர்ந்த வனம்
வெறுமையாக காட்சி தரும்
பகல் நிலவு
ஒரே ஒரு பூவில்
பல வண்ண வண்டின்
நாட்டிய அரங்கேற்றம்
பழைய தோட்டம்
நிறைய வீடு வந்ததும்
பசுமை தோட்டம் !!!
இறுதி ஊர்வலம்
பூக்களால் அலங்கரிக்கப்பட்ட
பல்லக்கில் விதவை
அரை முழுவதும்
பணத்தின் வாசனை
வாசலில் கடன்காரன்
ஹிஷாலி, சென்னை.
அடுக்குமாடி வீடு
அழகாய் இருந்தது…
குடிசையின் படம்!
பொங்கல் வைக்க
பானை வைக்கிறான்..ஏழை,
அடகுக் கடையில்!
மு.முபாரக்
முதுநிலை எழுத்தர்,
எண் 273 வாளாடி கூட்டுறவு வங்கி,
வாளாடி,
கடும் வறட்சி
வான்நோக்கி கையேந்தும்
பப்பாளி இலைகள்.
வாண வேடிக்கை
காதை அடைக்கிறது
வயிற்றுப் பசி.
-ஜி.அன்பழகன்,
மரம் பார்க்கும் வியாபாரி
வட்டமிடும் தாய் பறவை
கூட்டில் குஞ்சுகள்.
-சு.கேசவன்
தூர்வாரிய கிணறு
புது உலகம் காணும்
தவளைகள்
-கவியாசகன்…
நள்ளிரவு வேளை
வெடிச்சத்தம் ஓய்ந்ததும் கேட்கிறது
பறவைகளிள் ஓலங்கள்.
-ச.ப.சண்முகம்…
சிக்கிய திருடன்
பிணக்கூறு அறிக்கையில்
வெறும் வயிறு!
சிரித்துப் பேசும்
முதியவர் கையில்..
மரப்பாச்சி பொம்மை.! – விஜயகுமார் வேல்முருகன்.
இலையுதிர்ந்த மரத்தில்
குறுக்கும் நெடுக்குமாக
சிலுவைகள்……..
ஷர்ஜிலா யாகூப்
பௌர்ணமி இரவு
நிலவைத் தொட்டுவிடும்
குளக்கரை மரம்
முஹமத் இஸ்ரத் இம்ரஷா
இறந்த மீனின்
கண்களில் தெரிகிறது
கடலின் ஆழம்..!
வறண்ட குளம்
நிரம்பி கிடக்கிறது
கொக்கின் கால் தடங்கள்..!
வே..மு.ஜெயந்தன்.
பெரிய மதில்சுவர்
பின்னால் தான் இருக்கிறது
அழகான பூந்தோட்டம்
தட்சணாமூர்த்தி
போணியாகாத சோகம்
புலம்பியபடியே வீடு திரும்புகிறான்
அதிர்ஷ்டகல் வியாபாரி
பட்டுக்கோட்டை பெ மூர்த்தி
துரத்தும் வெயில்
எறும்புகளை கூடவே இழுத்துச் செல்கிறது
நிழல்.
கவி.விஜய்.
விரைந்திடும் சுருக்கு
உயிர் பயத்தில் ஓணான்
காப்பாற்றும் மழை
புத்தர் கோவில்
அலையும் பட்டாம்பூச்சி
அமர்கிறது அமைதி
கன்னிக்கோவில் இராஜா
பனி மூடிய மலை
சில்லிட வைக்கிறது
ஒரு கோப்பை தேனீர்….
உறையூர் வா.மகேஷ்.
நன்றி: ஹைக்கூ உலகம் முகநூல்பக்கம். முனைவர் ம.ரமேஷ்.