
பெண்ணவள்….
———————————
பெண்..என்பவள்
மானுட வம்சத்தின்
கண்ணவள்…!
அவளொரு
புடவைக்கட்டிய
புதையல்…..!
பிரிந்த மனதை
ஒன்றிணைக்கும்
தையல்….!
அவளொரு
புரட்டிப்படிக்கும்
புது நாவல்….!
இருவிழி பேசியதை
பேச மறுக்கும்
நா-அவள்…!
அவளொரு
பொறுமைக் காக்கும்
பூமி…!
கண்ணெதிரே
நாம் வணங்கும்
சாமி…!
மீட்டத் தெரிந்தவர்களுக்கு
அவளொரு
வீணை…..!
முகம் காட்ட
தெரியாதவர்களுக்கு
அவள் வீணே….!
ஆண்கள் தேடும்
அற்புத
சுயவரம்…..!
அதுவே
அவளின்
வரம்….!
அவள்
குடும்பத்தின்
பொருளாதாரம்…!
அதுவே
ஆடவரின்
ஆதாரம்….!
பெண்
நடமாடும்
அலாரம்….!
அவளே சில நேரம்
நடனமாடும்
மது-ரம்…..!
இல்லத்தோட்டத்தில்
அவளொரு
தாமரை…!
இல்லங்களில்
துள்ளி விளையாடும்
அவளொரு
தா-மரை….!!!
ஆக்கம்:
எல்.இரவி.
எழுத்தாளர்
செ.புதூர்.612203.
செல்.9952720995.