கோபக்காரராக
குடிகாரராக
முரட்டு மனிதராக,
பொறுப்பில்லாதவராகவே
பார்த்துப் பழகிய அப்பா,
அம்மாவை உடல் நலம்
சரியில்லாமல்
மருத்துவமனையில் சேர்த்த
அன்று,
அம்மாவின் கால்களுக்கு
பக்கத்தில் அமர்ந்து கொண்டு
சிந்திய
ஒவ்வொரு துளிக்கண்ணீரிலும்
காணாமல் போயிருந்தது…
அப்பாவை பற்றிய
எல்லா அவப்பெயர்களும்!
***
சட்டென விழுந்து
உடைந்து போன
ஒரு
கண்ணாடி
பொம்மையாய் நான்
இருக்கிறேன்…
கல்லெறிந்த போதெல்லாம்
தப்பித்து
உன் கோப
சொல்லொன்றில்
உடைந்த பொழுதொன்றில்!
***
மு.முபாரக், வாளாடி.
பாரியன்பன் நாகராஜன்-கவிதைகள்
********************************************
1.
கோப்பையில் இருக்கும்
தேநீரை சுவைக்காமல்
குறை கூறுவது போலத்தான்
காதலில் விழாமலே
அதை நிராகரிப்பதும்.
2.
தேனெடுக்கும் பாவனையில்
பூக்களுக்கு முத்தம் தருகிறது
வண்டுகள்.
3.
கேட்ட செய்திகள்
பல இருந்தும்;
யாரிடமும் சொல்லாத
ரகசியங்கள்
பல உண்டு என்னிடத்தில்.
4.
அன்றொருநாள்
மனிதனான போது மானுடத்தின்
பெருவலியுணர்ந்திருக்கும்
பறவைகள்.
5.
அம்மணங்களை
பார்த்து பழக்கப்பட்டவை.
ஆதி இரவுகள்.
6.
சட்டி நிறைய இருந்தாலும்
தேவைக்கு உண்பதே
உத்தம்.
7.
உங்களுக்காக ஒரு கவிதை கூட
பாடாத என்னை
கவிஞனென்று அழைக்காதீர்கள்.
8.
தொலைத்தது நான்
எடுத்தது நீ
ஊரெல்லாம் தேடுகிறேன்
என் காதலை.
9.
அழும் பிள்ளைக்கு ஆறுதலாய்
ஜன்னல் கம்பியில் வழியும்
மழைத்துளிகள்.
10.
மலரை
முத்தமிட்ட வண்டுக்கு
என் ஜாடை.
அதை வாங்கிய மலருக்கு
என் மகளின் ஜடை.
பாரியன்பன் நாகராஜன். இலையுதிர்த்த கிளைக்கு சருகு சொல்லும்
செய்தி…
காற்றுக்கு அகப்பட்டுவிட்டேன்.
இனி எத்திசையோ..!!!
இலையில் அமர்ந்திருக்கிறது நேற்றைய மழை…..!!!
நேசிக்க சில காலங்களை
மட்டுமே கொடுத்து விட்டு…
அதை வாசிக்க பல யுகங்களை தந்து செல்கிறாயே …..!!
ச. இராஜ்குமார் திருப்பத்தூர்
கரோனா தாக்குதல்
————————————–
மூன்றாம் உலகப் போருக்கு
முதல் ஒத்திகை
கரோனா தாக்குதல்….?
வாழ்வா ? சாவா ? -என
வழி தெரியாமல்
விழி பிதுங்கிய மானுடம்..?
ஆயுதக் கிடங்குகள்
அத்தனையும்
அடக்கமாய்….?
சவக்கிடங்குகள்
திடீர் மழை எறும்புக்குக் குடை பிடிக்கிறது காளான் # அன்சார்.எம்.ஷியாம் |
சத்தமின்றி
அவதாரம்…..?
ஊரடங்கில்
உல்லாச வாழ்க்கை
விலங்குகள்….?
பக்தர்களின்றி
கருவறைத் தெய்வங்கள்
கவலைகிடம்….?
கரடியும்-காளையும்
ஓடி ஒளிந்தன
பங்குச்சந்தையில் சங்கு…?
இல்லாதவர்கள்
கையேந்துவது போல்
அரசுகளின் யாசகம்….?
மார் தட்டிய
வல்லரசுகள்
யாரென உணர்ந்தன….?
உலகச் சந்தைக்கு
ஆசைப்பட்டு
கலகச் சந்தையில் சீனா….?
ஆண்டி முதல் அரசன் வரை
சமூக இணைப்பில்
வைரஸ் நிவாரணம்…..?
மாமூல் வாழ்க்கையில்
போலீஸ் மட்டுமல்ல –
பொதுமக்களும் பாதிப்பு…?
ஆக்கம் :
எல்.இரவி.எம்.ஏ;எம்.காம்;எம்.ஃபில்;பி.எட்;டி.எ;
செ.புதூர்.612203.
கப்பல் விடும் சிறுமியின்
கன்னக் குழியில்
தேங்கிச் சிரிக்கிறது மழை!
-கவிஞர். தக்ஷன், தஞ்சை
சிறகுகள் இருக்கிறது
பறக்க வானம்தான்
போதவில்லை..!
அண்ணாந்து பார்த்த
போதெல்லாம்
ஆகாயம் பார்த்ததில்லே
அம்மா முகம் தான் பார்த்திருக்கும்….!
ஆயிரம்தான் வேதனை
அலை அடிச்சு பார்த்தாலும்
அன்புதான்டி உன்னிடத்தில்
அழகாக பூத்திருக்கும்….!
வயிற்றுக்குள்ள பசித்தீ
வாட்டி எடுக்கையிலே
கண்ணுக்கு குளுர்ச்சியா
கலர் கலரா பலூனு
காட்சி தந்து என்ன லாபம் ….!
ஊரேல்லாம் திருவிழா
ஓகோன்னு நடக்குதடி
ஒருபிடி சோத்துக்குத்தா
உங் குழந்தை அழுகுதடி…..!
பலூனு வித்தாக்கா
பசியாத்த வழி கிடைக்கும்
பாவி நீ என்ன செய்வே
பத்தினி வம்சமடி….!
ஒழுக்கமும் உழைப்புமே
உசிரவிடப் பெருசன்னு
ஊருக்கு சொல்லுகிற உன்ன
தேருக்குள் வச்சு தெய்வமா கும்பிடனும்….!
மயிலாடுதுறை விமலாநாகேஷ்,
நீ விட்டுச்சென்ற
ஓரிரு மழைத்துளியில்
என்
வீட்டில் வளர்கிறது
நீ நட்டுவைத்த
மல்லிகை நாற்று
கொல்லைப்பக்கம்
சென்றுவருகையில்
மணம்வீசி
மனமயக்குகிறது
அதில் பூத்த ஒற்றைமலர்
அதுவும்
நீ கொடுத்த ஒற்றை முத்தம்போல்
கற்றை கரும்பென
விழிப்பதற்குள்
மெல்லத்தேய்கிறததந்த
மல்லிவாசம்
எழுந்துவருவதற்குள்
வாய்நிறைய பூவும்
தழையுமென
குதித்தோடுகிறதோர்
வெள்ளை ஆட்டுக்குட்டி
உன்
அப்பனைப்போல்..!
(ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.)
இடை நீக்கம்
கொஞ்ச நாள் கொஞ்சும் முத்தங்களுக்கு
விடுமுறையளித்துவிட்டு
கைகளைத் தட்டியும் கை கழுவிய பிறகு
கன்னங்களைத் தட்டியும்கட்டுப்பாடுகளுடன் காதலிக்கலாம்!
அஞ்சாமை பேதைமை ஆற்றாமை
கல்லாமையை விரட்டுவது போல்
கண்டபடி களம் புகும்காணாத நோய்களையும்
துரத்தியடித்துதுன்பத்திலிருந்து *மீள்வோம்!
பிறகென்ன?! *காதல்நமக்குஎன்று (மே) ம் முடியாத
தொடர்கதையாகி விடும்!
யாருக்கும் அஞ்சாத நம் நெருக்கம்கூட
அச்சத்திற்கு அச்சமுற்று இடை வெளி விட்டுவிட்டது!
இனியென்ன உனக்கும் எனக்கும்வீட்டிற்குள்ளேயே நடை பயிற்சிதான்!
புன்னகையை சிரிப்பாக மாற்றநடனப் பயிற்சியையும்கூட
நாம் மேற்கொண்டுபார்த்து ரசித்துமன அழுத்தத்தை மறக்கலாம்!
கொரோனாவைக் கொன்ற பிறகு
பணியிலிருந்து நீக்கப்பட்டஅத்தனை முத்தங்களையும்
மீண்டும் வரவழைத்துஉனக் (கே) கு
வழங்குகிறேன்! முத்து ஆனந்த்,வேலூர்