குறும்பா கூடம்!
பறவை!
பறவைகளைவிட
வேகமாகப் பறக்கும்
மனசின் கற்பனைகள்!
சுதந்திரம்!
என்னவென்று தெரியாமலே
சுதந்திரமாக இருக்கிறார்கள்
குழந்தைகள்!
முயற்சி!
நாம் முயற்சி செய்யும் வரை
நம் நம்பிக்கைகள்
நம் கதவைத் தட்டுவதில்லை!
முத்து ஆனந்த்.வேலூர்
வெட்டும் மரம்
தடம் தெரியாமல் போகிறது
பறவையின் சத்தம்.
த.அதியமான்
கோழி கூவும் நேரம்
நிறங்களைப் பெரும்
மலர்ந்த பூக்கள்.
ஜி, அன்பழகன்.
.யார் எறிந்த மத்தப்போ
கீழிறங்குகிறது
மின்னல்வெட்டு
2.போதைக்கு
இறப்பு நிச்சயம்
கள்ளுப்பானையில் ஈ
3.எல்லாம் வல்ல இறைவன்
எப்போதும் வெளிவருவதில்லை
போட்டோ பிரேமுக்குள்ளிருந்து
4.கயிற்றில் கட்டிய மாடு
எத்தனைமுறை அசைபோட்டதோ
காட்டில் வாழ்ந்த அனுபவங்களை
5.விளக்கருகே
இறந்த பூச்சி
கடைசியாகவும் அழகாகப் பறந்தது
#பிறைநிலா
பொள்ளாச்சி
கொட்டும் மழை
குளத்திற்கு வந்துவிடும்
நீருடன் வானம்!
வெட்டுண்ட மரத்தடியில்
அப்படியே கிடக்கும்
உதிர்ந்த பறவைகளின் இறகுகள்!
*
மழைப் பெய்ததும்
குட்டைக்கும் வந்துபோகும்
பௌர்ணமி நிலா!
மாதவன்,
செடியில் பூக்கள்
அதிக எண்ணிக்கையில்
ஊறும் எறும்புகள்
….. தட்சணா மூர்த்தி
தொடர் மழை
கண்ணீர் சிந்தியபடி..
சோளக்காட்டு பொம்மை.
த.அதியமான்.
முகம் பார்க்கும் கண்ணாடி
பேசத் தொடங்கியது
பிம்பத்துடன் குழந்தை!
-சு.கேசவன்
தந்தையை முன்னமர்த்தி
மகள் வரைகிறாள்
கடவுள் ஓவியம்
-பட்டுக்கோட்டை பெ மூர்த்தி
பிள்ளையும் கிள்ளிவிட்டு
தொட்டிலையும் ஆட்டுகிறது
இயந்திர பொம்மை
-ஹிஷாலி!
யாருமற்ற பாதை
வழிகாட்டிப் போகிறது
எறும்புக் கூட்டம்
***
நாளையும் வருவேன்
உறங்கச் செல்
நம்பிக்கை பாடமாக சூரியன்
**
விழித்திருந்த நாளில்
கூடை நிறைய பூக்கள்
வானில் நட்சத்திரங்கள்
**
யாரையோ தேடுகிறது நிலா
வனமெங்கும் உதிர்ந்த இலைகள்
பின் தொடரும் சூரியன்
***
க.அம்சப்ரியா
காற்று சற்றே//
வேகமாகவீச கிளையில்//
பறவையென பறந்தமர்கிறது//
வெண்ணிற நெகிழிப்பை..!
#ஆர்_ஜவஹர்_பிரேம்குமார்,
#பெரியகுளம்.
கண்மூடா சூழலில்
கனவிலின்றி நனவிலும்..
சுற்றிவரும் தேவதைகள்..!
#ஆர்_ஜவஹர்_பிரேம்குமார்,
#பெரியகுளம்.
பம்பரக்கண்கள்
பார்வை சாட்டை
சுழலுவது நான்.
புது வண்டி ரவீந்திரன்
பக்தர்களின் தரிசனத்திற்கு
காத்திருக்கின்றன
கோவில்களில் தெய்வங்கள்
புது வண்டி ரவீந்திரன்
சத்தியமாய் தேவை சமூக இடைவெளி.
இல்லை என்றால் உறுதி
காதல் தொற்று