தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா இணைந்து நடத்தும்
மாபெரும்நகைச்சுவைசிறுகதைப்போட்டி-
மொத்தப்பரிசு ரூபாய்- 8000
முதல் பரிசு_ 3000- இரண்டாம்பரிசு ரூ 2000. மூன்றாம் பரிசு ரூ 1500
மேலும் மூன்று ஆறுதல் பரிசுகள் தலா.ரு 500.
போட்டிக்கான கதைகள் வந்து சேர கடைசி நாள்: 31-5-2020
முடிவுகள் ஜூலை 2020 இதழில் வெளியாகும்.
பரிசுபெற்ற கதைகள் தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழ் மற்றும் தேன்சிட்டு இணையதளத்தில் பிரசுரமாகும்.
போட்டிக்கான விதிமுறைகள்:
கதைகள் சிரிக்க வைப்பதுடன் சிந்திக்கவும் வைக்க வேண்டும்.
கதைகள் 800 முதல் 1000 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
கதைகள் இதற்கு முன்னர் எந்த இதழிலும் ஊடகத்திலும் மின்னிதழ், இணையதளங்களில் பிரசுரம் ஆகாதவையாக இருத்தல் வேண்டும். படைப்பாளி இது தமது சொந்த படைப்பு வேறு எங்கும் பிரசுரம் ஆகவில்லை என்று சான்றளித்து கையோப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.
கதைகளை எம்.எஸ்.வேர்டில் தட்டச்சு செய்து மின்னஞ்சலில் மட்டுமே அனுப்பி வைக்க வேண்டும்.
போட்டி குறித்து கடிதத்தொடர்போ போன் செய்து விசாரிப்பதை தவிர்க்கவும்.
போட்டியில் பிரபலமான எழுத்தாளர்கள் கலந்து கொள்வதை தவிர்க்கவும்.
போட்டிக்கான கதைகள் நடுவரால் பரிசீலிக்கப்பட்டு தேன்சிட்டு மின்னிதழில் போட்டி முடிவுகள் அறிவிக்கப்படும். நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
.அனுப்பவேண்டிய மின்னஞ்சல் : thalir.ssb@gmaiil.com.
போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகள்!