நவீன் பட்நாயக் – பப்புவிடம் வேகாத கொரோனா பருப்பு.

ஒரிசாவின் முதல்வராக இருந்த மூத்த அரசியல்வாதி பிஜு பட்நாயக் 1997 ஆம் ஆண்டு காலமாகிறார். சூழ்நிலை காரணமாக அவரது புதல்வர் நவீன் பட்நாயக் அரசியலுக்கு வர வேண்டிய கட்டாயம்.

‘இங்கயும் வாரிசு அரசியலா..? இந்தியா எப்பத்தான் திருந்துமோ?’ என்று சலிக்க வேண்டாம். இப்பதிவின் இறுதியில் உங்கள் எண்ணம் தலைகீழாய் மாறலாம்.

உலகப்புகழ் பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலையில் படித்துவிட்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிறார் நவீன். காலப்போக்கில் பல்வேறு நாடுகளுக்கு பயணம். ஒரிசா என்பது அவருக்கு Vacation spot மட்டுமே. ஒரிய மொழியை கூட சரியாக பேசத்தெரியாது.

‘சரி. அரசியலில் குதித்தாகி விட்டது. இனி என்ன? ஊழலில் அசத்தி ஆசியாவின் பணக்கார குடும்பமாக மாறி விடலாம். அப்படியே மகனையும் அரசியலுக்கு கொண்டு வந்து விடலாம். அடுத்து பேரன்..’ என கணக்கு போடவில்லை. சிந்தனை முழுக்க மக்கள் நலனில் மட்டுமே.

வருடம் 1999. இயற்கையின் கோரப்பிடியில் ஒடிசா சின்னா பின்னம் ஆனது. பேயாய் சீரிய புயல் 15 லட்சம் உயிர்களை காவு வாங்கியது. பல லட்சம் பேர் வீடற்ற அகதிகள் ஆகினர். நாட்டின் எந்த மாநிலம் சந்தித்திடாத கொடூரம்.

வருடம் 2000. முதல்வராக பொறுப்பேற்கிறார் நவீன்.

‘இனி ஒரு புயல் வரட்டும். செவுலை திருப்பி விடுகிறேன்’ என சபதம் ஏற்கிறார். ஒன்றல்ல… 2014, 2017, 2018,2017 என பண்டிகை விருந்தாளி போல தொடர்ந்து தாக்குகிறது புயல். ஒவ்வொன்றிலும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா? சிங்கிள் டிஜிட்டிற்கு கீழே மட்டுமே.

அசந்து போகின்றன உலக நாடுகள். பேரிடர் மேலாண்மையில் மிகச்சிறந்த தென்கிழக்கு ஆசிய மாநில விருதை ஒடிசாவிற்கு தந்து பாராட்டுகிறது ஐ.நா.சபை. இந்த விருதை வென்ற ஒரே இந்திய மாநிலம் ஒடிசா மட்டுமே.

மக்களின் அபிமான நாயகன் ஆகிறார் நவீன். 2000 – 2024 வரை தங்களை ஆளும் அதிகாரத்தை தந்திருக்கிறார்கள் ஒடிசா வாசிகள். தொடர்ந்து ஐந்துமுறை முதல்வர். இந்தியாவில் எந்த அரசியல்வாதியும் செய்யாத சாதனை.

‘ஆமா… இந்த வருசம் புயல் எப்ப வருது?’ என அதன் ஜோலியை முடிக்க காத்திருக்க…அதற்கு முன்பாக மாநில எல்லையில் ‘நவீன் சாப்… மே ஐ கம் இன்’ என பல்லை இளித்தபடி கேட்டது கொரோனா.

‘அங்கயே இரு… இதோ நான் வர்றேன்’ என்று கேட்டுக்கு அருகே சென்றார் நவீன். அப்பறமென்ன? வாங்கிய பிரம்படியில் எடுத்தான் பாருங்க ஓட்டம்..!!!

சரி… எப்படி செயல்பட்டது எந்த பிரம்பு?

மார்ச் இறுதியில் லாக் டவுன் போட்டு இந்தியா ‘விழித்து’க்கொண்டது அல்லவா? ஆனால் முதல் வாரத்திலேயே ஒடிசா அலர்ட் ஆகிவிட்டது. உடனடியாக ஹெல்ப் லைன் எண்கள் அறிவிக்கப்படுகின்றன. ஆங்காங்கே Partial Lockdown போடப்படுகிறது. அடுத்த மூன்று வாரத்தில் மட்டும் 72,000 கால்கள். எங்கே யாருக்கு என்ன பிரச்னை என்பது ஆய்வு செய்யப்படுகிறது.

மார்ச் 3 ஆம் தேதி covid19.odisha.gov.in. எனும் வெப்சைட் ரெடி. வெளியூர்/வெளிநாடுகளில் இருந்து ஒடிசா வரும் அனைவரும் இதில் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொண்டால் 15,000 ரூபாயை அரசு வழங்கும். ஆயிரக்கணக்கான நபர்கள் அரசு சொன்னதை செய்கிறார்கள். முதல் கட்ட வெற்றி.

அரசு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவத்துறை சார்ந்த இதர ஊழியர்கள் அனைவருக்கும் நான்கு மாத சம்பளத்தை முன்பணமாக ஏப்ரல் துவக்கத்திலேயே அவர்களது வங்கிக்கணக்கில் போட்டு விடுகிறார் நவீன். பொருளாதார மன அழுத்தம் இன்றி அனைவரும் சுறுசுறுப்பாக வேலை பார்க்கிறார்கள்.

‘உள்ளூரில் இப்படி.. வெளி மாநிலங்களில் தவிக்கும் நமது தொழிலார்களுக்கு என்ன செய்யலாம்?’ என யோசிக்கிறார். உடனடியாக இந்தியாவின் அனைத்து மாநில முதல்வர்களையும் தொடர்பு கொண்டு ‘ஒடிசாவை சேர்ந்த ஒரு தொழிலாளி கூட பாதிக்கப்படக்கூடாது. அவர்களுக்கான உணவு, தங்குமிடம், மருத்துவம் அனைத்தையும் சிறப்பாக செய்யுங்கள். மொத்த செலவையும் எனது அரசாங்கம் தந்து விடும்’ என உறுதி அளிக்கிறார்.

நவீனின் அடுத்த முக்கிய டார்கெட் சிறுநகரங்களும், கிராமங்களும். புயல் வந்த ஆண்டுகளில் குக்கிராமம் வரை எப்படி உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்கிற அனுபவம் பக்காவாக இருந்ததால் நேர்த்தியாக செயல்பட தொடங்குகிறது அரசு எந்திரம்.

84,000 பேர் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். அனைத்து பஞ்சாயத்து வார்டுகளிலும் போதுமான மருத்துவ வசதிகள் ரெடி.

விளைவு… நேற்று ஏப்ரல் 20 வரை தொற்று உள்ளோரின் எண்ணிக்கை 74 மட்டுமே. 24 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு விட்டார்கள்.

கேரளாவிற்கு இணையாக கொரோனாவை வீழ்த்திய மாநிலம் ஒடிசா. காரணம் மிக சிம்பிள்…

ஊர் சொத்தை உலையில் அடித்து தின்கிற எண்ணம் கொண்டவரில்லை நவீன். சிறந்த கல்வியாளர். சேவை மனப்பான்மை கொண்டவர். ஒப்பற்ற நிர்வாகி!!

அரசியல்வாதிக்கு மகன் என்கிற தகுதி மட்டுமே அரசியலுக்கு போதாது. அர்ப்பணிப்பு, அறிவு, ஆற்றல் தேவை என்பதை இதர மட சாம்பிராணிகள் புரிந்து கொள்ள இவரை விட உதாரணம் தேவையில்லை.

இளம் பருவத்தில் இவரை குடும்பமும், உள்ளூர் நண்பர்களும் செல்லமாக என்ன சொல்லி அழைப்பார்கள் தெரியுமா?

பப்பு.

ஆம். பப்பு எனும் பெயர் கொண்டோரை கிண்டல் செய்த தேச மற்றும் மாநில தலைவர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் விழித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அந்த வைரஸை விழிபிதுங்கி ஓட வைத்துக்கொண்டு இருக்கிறார் பப்பு.

Huge respect Naveen sir.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: