கொஞ்சம் சிரியுங்க பாஸ்!
“நிறைய தடவை மருதாணி வச்சும் கை சிவக்கவே இல்லை!”
” ஏன்?”
” அதான் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை கையை கழுவச்சொல்றாங்களே?”
“எங்கப்பா கையை சுட்டுக்கிட்டார்”
” வியாபாரத்திலியா?”
” இப்ப ஏது வியாபாரம்?
.விளக்கு ஏத்தும்போது”
“ஏண்டா பேராண்டி..நீ வரைஞ்ச படத்துல ..மண்ணுக்கு பச்சை கலர்ல வண்ணம் தீட்டீ இருக்கியே…ஏன்?”
” அது என்ன மாதிரி பச்ச மண்ணு தாத்தா”
என் வருங்கால மாமனார் ரொம்ப பழமை விரும்பிடா..!
அதுக்காக உன் கல்யாணப் பத்திரிகையை ஓலையில் எழுதி எல்லோருக்கும் கொடுக்கிறதா?
இந்து குமரப்பன் விழுப்புரம்.
” மூட்டுவலி அதிகமா இருக்கு டாக்டர் …”
” உங்க மனைவி கிட்ட சண்டைப் போட்டு வெளிநடப்பு ஓவரா செய்தீங்களா சார்…?”
சீர்காழி.ஆர்.சீதாராமன்.
கணவன் : என் கூட நீ வண்டியில் வரும் போது நீயும் ஹெல்மெட் போட்டுக்கிிட்டு வர்றது கஷ்டமாக இருக்கா.?
மனைவி : ஆமாங்க.. எதிர்ல வர்றவ சேலை, நகையெல்லாம் சரியா தெரிலைங்க..!
இந்து குமரப்பன் ,விழுப்புரம்.
அவன் : என் மனைவிக்கும், எனக்கும் சண்டை வந்தால், அவ கோவிச்சுக் கிட்டு அம்மா வீீட்டுக்குப் போயிடுவா…!
இவன் : நீங்க என்ன பண்ணுவீங்க?
அவன் : அடிக்கடி அவ கூட சண்டை போடுவேன்…..!
இந்து குமரப்பன் ,விழுப்புரம்.
மாமனார் வீட்டில் கொடுத்த காரை ஏன் வேணாம்னு சொல்லிட்டே..?
: அவர் வாங்கி தந்தது ‘கொரோனோ’ மாடல் கார் சார்..,!
இந்து குமரப்பன் ,விழுப்புரம்.
நடுராத்திரியிலே எழுந்து எதுக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சிக்கிட்டு இருக்கீங்க?
நாளைக்கு லாக் டவுன் ஓப்பன் ஆகுதேன்னு நினைக்கும் போது தூக்கமே வரமாட்டேங்குதுடி!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.
புலவரே உங்கள் பாட்டில் கூர்மை இல்லை…!
மன்னா….! உங்களை புகழ்ந்து பாடி பாடி வரிகள் எல்லாம் மொக்கையாக போய்விட்டது மன்னா! எஸ்.எஸ். பாபு, பஞ்செட்டி.