
விலங்குகள் சம்பந்தமான
சேனல் ஒன்றில்,
புலி ஒன்று மானை
விரட்டி பிடிக்க போகையில்,
தொலைகாட்சியை ஆப்
செய்து விட்டு,
அப்பா அந்த மான்
புலிகிட்ட இருந்து தப்பிச்சு
இருக்கும்,ல,
என அழுதபடி கேட்கும்
மகளிடம்
தப்பிச்சு இருக்கும்,
என்ற ஒற்றை பொய்
சொல்லி
கடந்து போக நினைக்கையில்,
ஆயிரம் புலிகளிடம் அகப்பட்ட
வேதனையைத்
தந்து விடுகிறது…எனக்குள்,
முன்பொரு நாளில் பொய்
சொல்லக்கூடாதென
மகளுக்கு
சொல்லித் தந்த பாடம்!
மு.முபாரக், வாளாடி.
இனியெல்லாம் வரமே!
தேனா? கனியா?
அமுதமா? கவிதையா?
உன்முத்தங்களுக்கு
நான் என்ன பெயர்தானடி சூட்டுவது?!
உன் வருகையைத் தவறாமல் வரவேற்று
மகிழ்விக்கும் என் கனவுகள்கூட
வரம் வாங்கி வந்திருக்கிறது!
பிரிந்திருக்கிறோமே என்று நினைத்து
பசலையில் விழாதே!
இப்படியிருந்தால் – நம் காதலுக்குத்
தென்றல் இருக்கும் திசையை
யார் தெரிவிப்பது?!
உன் மோகனப் புன்னகை
என் நினைவிலிருந்து எப்பொழுதும்
மறக்காத போதும் மறையாத போதும்
வேறெதுதான் என்னைக் களவாடும் ?
கவர்ந்திழுக்கும் உன் முகமே எனக்குக்
கவிதையாக இருப்பதாலோ என்னவோ
வீட்டுக்குள்ளிருந்தும் முகநூல் தரிசனத்தை
என் மனம் விரும்பவில்லை!
நீ இனிக்க இனிக்கப் பேசுவதால்தான்
நினைக்கும்போதே இனிக்கிறாய்!
இனியெல்லாம் சுகமே என்ற நாள்
நமக்கும் வரும்! – முத்து ஆனந்த்

உலகையே திரும்பி பார்க்க வைக்கும்
வல்லரசு நாடானால் பசிக்காதா
எனக் கேட்கிறது…
ஒரு குழந்தையின் வேதனையான முகம்,
விண்வெளியில் ஆராய்ச்சி
செய்தால் பசிக்காதா
எனக் கேட்கிறது…ஒரு குழந்தையின் வலியை சுமக்கும் முகம்,
கிரிக்கெட் போட்டியில் கோப்பையை
வெற்றியாகப் பெற்றால்,பசிக்காதா எனக்கேட்கிறது…
ஒரு குழந்தையின் ஏமாற்றமான முகம்,
பலகோடி செலவு செய்துசிலை அமைத்தால்
பசிக்காதா எனக் கேட்கிறது…
ஒரு குழந்தையின் சோர்ந்த முகம்,
அமெரிக்காவிற்கு மருந்துகளை
கொடுத்துவிட்டால் பசிக்காத
எனக் கேட்கிறது…
ஒரு குழந்தையின் விரக்தியான முகம்,
உலகையே திரும்பிபார்க்க
வைக்கும் விளையாட்டு மைதானத்தை
உருவாக்கினால் பசிக்காத
எனக்கேட்கிறது…
ஒரு குழந்தையின் பரிதாப முகம்!
மக்களின் பசி தீர்க்க முடியாத
வளர்ச்சி எதற்கு என கேட்கிறது…
பல நாள் பசியோடு அழுதுவடிந்த கண்களை கொண்ட குழந்தையின் முகம்!
மு.முபாரக், வாளாடி

மாடி மாடியாகத் தாவி
குளம் தேடி அலைகிறது
மீன்கொத்தி..!
(ஆர் ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்)
குளித்து மேலேவரும்
யாத்ரீகனின் வான்னோக்கிய கைகளில்
வழியும் சூரியன்..!
(ஆர் ஜவஹர் பிரேம்குமார் …
) #1.
தூங்கும் குழந்தை
சிலிர்த்து சிரிக்கிறது
அம்மாவின் முத்தம்..!
#2.
இலையில்லா வேப்பமரத்தில்
துளிர்க்கிறது பகலில்
மரத்தடியில் நிழல்..!
#3.
மீன்சந்தையில் மீன்கள்
கண்களில் வைத்திருக்கும்
எஞ்சிய குளத்தின் தடம்..!
(ஆர் ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்

முதல் காதல்
மறந்தும் போவதில்லை
மறைத்தும் போவதில்லை
யாருக்கும்
எப்போதும்..!
என் முதல் காதலும்
அப்படித்தான்..
நான் பெற்ற
முதல் முத்தம்போல்..!
எவ்வளவு
இனிமை அது..
ஒரு இமைப்பொழுதும்
விரும்புவதில்லை
அவளின்றி தனிமையை..
ஆனாலும்
அவளுடனான தனிமையோ
இனிமை இனிமை
இன்றும்
நினைத்தாலும் இனிமை..
சினிமா
பீச்
ஷாப்பிங்
பஸ் பிரயாணம்
அட
தனிமையில்
கரம்பற்றி நடந்தாலும்
மறக்க மனம்
கூடுதில்லையே..
முதன் முதலில்
தலை வைத்து
தூங்கிய மடியும்
முத்தங்களின்
அணிவகுப்பும்
ம்ம்.. என்றினி கிடைக்கும்
வேண்டாம் வேண்டாமென்றாலுமே..
என்னினியாள்
சுமந்த
பஞ்சினிய தோளும்
இருக்க இடமீன்ற
இடுப்பெனும் சிம்மாசனமும்..
அன்பே..
என்
இனிய அன்னையே
இப்படியோர்
மறக்கயியலா
காதலை
என்னுள்ளப் பாறையில்
சிலையென
செதுக்கிவிட்டு
எங்கே
சென்றுவிட்டாய்..
யாரிடமினி
நான்
பெறுவோம்
இப்படியோர்
காதலின் இன்பமதை..!
ஆர்_ஜவஹர்_பிரேம்குமார்,
பெரியகுளம்.

வரப்பிரசாதம்
” மரக்கிளையில் தூளி கட்டி குழந்தையை
போட்டுவிட்டு வயிறு பசி போக்க
வயல் வேலை பார்க்கும் போது
மரக்கிளையில் பலத்தூளிகள் அசைந்தாட
குருவிக் கூட்டமும் பறவைக் கூட்டமும்
ஒலி எழுப்ப பெண்கள் கூட்டம்
கிராமிய ப் பாடல் பாட மெல்ல
உறங்கியது குழந்தைகள் இயற்கை
சொர்க்கத்தில் இடம் கிடைத்த சந்தோஷத்தில்
நிம்மதியாக ….”
_ சீர்காழி . ஆர் .சீதாராமன் . 9842371679 .