கொஞ்சம் சிரியுங்க பாஸ்!
நம்ம தலைவர் எப்படி சிபிஐ ரெய்டில் இருந்து தப்பிச்சார்?
அதிகாரிங்க வருவதை தெரிஞ்சதும் வீட்டுக்கு வெளியே ‘கொரோனோ நோயாளி ‘ தனிமைப் படுத்தப்பட்ட பகுதின்னு எழுதி வைச்சுட்டாரு..!
இந்து குமரப்பன், விழுப்புரம்

சினிமா பார்க்குற செலவு அதிகமாகிட்டே போகுது, பாதியா குறைக்கணும்.,
எப்படி குறைக்கலாம்?
நீங்க வீட்டுக்கு போங்க, நான் படம் பார்த்துட்டு வந்து உங்களுக்கு கதை சொல்றேன்..!
இந்து குமரப்பன், விழுப்புரம்.
என் செயினை அறுத்துக்கிட்டு ஓடுறான்…
புடிங்க!
திருடன்! திருடன்!…
இந்தாம்மா! நான் திருடன் கிடையாது, “நகைப் பிரியர்”!
பா.சக்திவேல், கோவை,

“என்னோட லவ்வர் வீட்டுக்கு போனேன் மிஸ்டுகால் ஆயிடுச்சு…..” ……………………..என் செல் போனில் இருந்து பேசினியா….?”. …………………………..” இல்லை காலை வெட்டி புடுவேன்னு அவள் அப்பா சொல்லி ட்டாரு…….
உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

” டாக்டர் பட்டம் வாங்கின தலைவர் என்ன சொல்றார் ?”
” தலைவரு வேண்டாம் இனி டாக்டர்ன்னு மரியாதையா கூப்பிடச் சொல்லிட்டாரே …
சீர்காழி.ஆர்.சீதாராமன். .
” மணல் கொள்ளை வருமானத்தை தியாகம் செய்து விட்டு ….”
” நதி நீர் இணைப்புக்கு ஆதரவு கரம் நீட்டுகிறோம் ….”
சீர்காழி ஆர். சீதாராமன்.
மாஸ்க்கட்டியிருக்கிற ஹீரோயினை பார்த்து ஹீரோ பாட்டு பாடுகிறார் சார்”
“என்ன பாடல்?
‘மாஸ்க்’ கிலா உண்மை காதலே மாறுமோ செல்வம் வந்த போதிலே இரா.ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.
அந்த பாகவதா் வரும் ஞாயிற்றுகிழமை
இரவு மீயூசிக் கச்சேரி பண்ணப்போறாராம்..”
“அப்படியா?”
” ஆமாம், ‘லைட்’மீயூசிக் பண்ணபோறாராம்
இரா. ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.

படிச்சு முடிச்ச உங்க பொண்ண, கல்யாணம் பண்ணிக் கொடுக்காமல், இப்படி ‘ சீரியல் ‘ ல நடிக்க வைக்குறீங்களே, ஏன்?
கட்டிக்கிட்டு போனால் ஒரு வீட்டை மட்டும் தான் அழ வைக்க முடியும், சீரியல்ல நடிச்சா எல்லா வீட்டையும் அழ வைக்கலாமேன்னு விருப்பட்டாள்!
இந்து குமரப்பன், விழுப்புரம்