
வெட்டி வைத்த பழத்தை
மொய்க்கும் ஈக்கள்
திசையெங்கும் ரீங்காரம்.
விளக்கின்றியும் ஒளிவிசீயது
ஒற்றையடிப் பாதை
முழுமதி நாள்
கோடை இதமானது
கொட்டிக் கிடக்கும் மணல்
அயர்ந்துறங்கும் நாய்.
சுத்தமான காற்று
சுவாசிக்க தடையானது
முகக்கவசம்.
வகுப்பறை ஜன்னல்
வந்து வந்து போனது
நேற்று பார்த்த குருவி.
கவிஞர் ச.கோபிநாத்
சேலம்
8438256235

தூங்கும் மேய்ப்பனை
விழிக்கச் செய்கிறது
ஆட்டின் மணியோசை.
ஜி, அன்பழகன்,
அழைப்புமணி பொத்தானை
ஒவ்வொரு முறை அழுத்தும்போது
ஒவ்வொரு பறவையின் ராகம்.
ச.ப. சண்முகம்
அவ்வப்போது மனித நடமாட்டம்
கரடுமுரடான நிலப்பரப்பில்
அழகான புதிய பாதைகள்!
@
எத்தனையோ ஏமாற்றங்கள்
பொருட்படுத்தாது கடந்துபோகும்
அன்றாடங்காய்ச்சிகள்!
@
சாப்பாட்டு நேரம்
வாசலில் காத்திருக்கும்
தெருநாய்!
@
சிற்பக்கலை கூடம்
விற்பனைக்கு காத்திருக்கும்
கடவுள் சிலைகள்!
-மாதவன்.
பிடித்த தட்டானை
பறக்கவிட்டு மகிழ்கிறது
மாற்றுதிறன் குழந்தை..!!
...மகிழ்நிலா தந்தை
இங்குமங்குமாய் ஒரு எறும்பு
பிடிபடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது
இலையின் நிழல்
– கி.கவியரசன்
எரியாத தெருவிளக்குகள்
வெளிச்சம் போட்டு காட்டியது
கும்மிருட்டு.
புது வண்டி ரவீந்திரன்
நாசியில் மண் வாசனை
வந்துகொண்டிருக்கிறது
தூரத்தில் மழை
புது வண்டி ரவீந்திரன்
இலக்கில்லாமல் பயணித்தது
காற்றின் திசையில்
சருகு.
திறந்துவிட்டார்கள்
உள்ளே புகுந்து கொண்டது
போதை..!
”மதுவெள்ளம்”
அடித்துச்செல்லப்பட்டன.
அடித்தட்டு குடும்பங்கள்!
- தளிர் சுரேஷ்
வறுமையின் நிறத்தை
கோடிட்டு காட்டுகிறது
ஊரடங்கு…
வே.புனிதா வேளாங்கண்ணி.
கழுத்து நீண்டு
தழை பறிக்கும் ஓட்டகம்
முதல் கடவுள் நம்பிக்கையாளன்

….க .புனிதன்
சொந்த வீடு கட்டியது
குருவி
நான் வசிக்கும்
வாடகை வீட்டில்
நிழலில் நான்
சுடும் வெய்யிலில்
மரம்