
(வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் ஒரு வீட்டில் கணவன் மனைவி)
“காவ்யா என்ன பண்றே?”
“இதோ வரேங்க!”
“எப்பப் பாரு போன்ல என்ன பண்றே?”
“போன்ல ‘சேட்’ பண்ணிக்கிட்டிருந்தேங்க!”
“இதே வேலைதானா? உன்னைச் சொல்லக் கூடாது! உன்னைப் பெத்தவங்களைத்தான் சொல்லணும்!”
“போதும் நிறுத்துங்க! எங்கப்பாதான் நம்ம ‘கல்யாணம்’ஆகும்போதே சொன்னாருல்ல!”
“என்ன சொன்னாரு?”
“என் பொண்ணு ‘குனிஞ்ச தலை நிமிராதவன்னு’ சொன்னாரா? இல்லையா?”
“அதுக்கு இப்படி ஓர் ‘அர்த்தம்’ இருக்குன்னு உனக்கும் உன் அப்பனுக்கும்தான்டி தெரியும்!”
-முத்து ஆனந்த் வேலூர்
பண்டிகாவனூர் ரேசன் கடையில் ஊழியரும் ரேசன் வாங்க வந்த பெண்ணும்.
அண்ணே…! இந்த மாசம் ஆயிரம் ரூபா கொடுக்கலையா?
”ஆயிரம் போதுமா?”
போதாதுதான்..! பத்தாயிரம் கொடுத்தாக்கூட எங்க ஊட்டுக்காரன் குடிச்சே தீர்த்துடுவான்!
ரூபா எவ்ளோ கொடுத்தாலும் போதாதுன்னுதான் சொல்வே! அதான் ஃபிரியா ரேசன்பொருள் கொடுக்கறாங்க!
ஆமா! புழுத்துப்போன அரிசியும்! முளைச்சுபோன கோதுமையும் வாங்கி என்னா பண்றது?
அப்ப எட்த்தை காலிப்பண்ணு!
தோடா! நா வாங்காம உட்டா நீ கொள்ளையடிக்கலாம்னு பாக்கிறியா!
ஆமா இதுல கொள்ளையடிச்சுதான் கோடீஸ்வரன் ஆகப்போறேன்! ஃபிரியா கொடுத்தா பெனாயிலைக் கூட வாங்கற பரம்பரையாச்சே..உங்க பரம்பரை வாங்கிட்டு போ..!
கவர்மெண்ட்டு வேலை இப்படி பேச்ச்சொல்லுது! முகத்தை நொடித்தபடி வாங்கிச்செல்கிறார் பெண்மணி. சின்னசாமி,நத்தம்.
சீர்காழி ( கடை வீதியில் இருவர் )
” மாப்ள நான் குடிக்கிறது சிகரெட் பிடிக்கிறது ஓசி டீ குடிக்கறது எல்லாத்தையும் விட்டுட்டேன்….” ” ஏன் இந்த திடீர் மன மாற்றம் மச்சான் ….?”
” கொரானாவால உலக சந்தை கடும் வீழ்ச்சியானதை என்னால தாங்க முடியலடா …”” அடங்கொய்யால , ஒரு ரூபாய் காசு கொடுத்து எதுவும் வாங்காம மாமனார் வீட்டு எடுபிடியா இருக்கற நாய்க்கு காரணத்தை பாரு ….”
” பொதுநல சிந்தனை இருக்க கூடாதா மாப்ள …..?”
” அதுக்கு அர்த்தமாவது தெரியுமாடா உனக்கு விளங்காத வெங்காயம் ….”
( நைஸாக நழுவுகிறார் )
– பி.கே. ராதா. சீர்காழி .
தச்சூர்க்கூட்டுசாலை! பேக்கரி ஒன்றில் கடைக்காரரும் இளைஞரும்!
என்னப்பா..! கடையை மூடிட்டு இப்படி நடுத்தெருவுலே வியாபாரம் பண்றே?
நானாவது நடுத்தெருவுலே வியாபாரம் பண்றேன்! நீயெல்லாம்…இப்படி நக்கல் பண்ணிட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கே ..!
அண்ணே கோச்சுக்காதேண்ணே! மில்க் பிஸ்கட் இருக்கா?
மாரி பிஸ்கெட் இருக்கு!
எண்ணே மில்க் கேட்டா மாரி இருக்குன்னு சொல்றே?
விரும்பினதை சாப்பிடற காலம் மாறி கிடைச்சதை சாப்பிடற காலம் வந்துருச்சுன்னு சொல்றேன்! வேணும்னா வாங்கு! இல்லே கிளம்பு
இளைஞர் முறைத்தபடி நகர்கிறார். எஸ்.எஸ்.பாபு. பஞ்செட்டி
பொன்னேரி மளிகை கடை ஒன்றில் கடைக்கார்ரும் பொருள் வாங்க வந்தவரும்
50 சன்ரைஸ் ஒரு சரம் கொடுங்க! சன்ரைஸ் இல்லே! ப்ரு போட்டுடலாமா?
சரி போடுங்க! ஹமாம் சோப் ஆறு! சர்ப் எக்செல் 6 போடுங்க!
சர்ப் எக்செல் இல்லே! ரின் இருக்கு போடவா?
சரி போடுங்க!பில்ஸ்பெரி ஆட்டா அரைகிலோவுல ஒரு டசன்!
பில்ஸ்பெரி இல்லே! நாகா இருக்கு போடலாமா?
சரி போடுங்க!எவ்ளோ ஆச்சு? இந்தாங்க என்று ஒரு பை நிறைய சில்லரையை கொடுக்கிறார்!யோவ் சில்லரையை யார் எண்ணறது? நோட்டா கொடு!
நோட்டு இல்லே..! சில்லரைதான் இருக்கு! நான் கேட்ட பொருளை கொடுக்காம மாத்தி கொடுத்தா நான் வாங்கிட்டேன் இல்லே அதே போல நீங்களும் நோட்டுக்கு பதில் சில்லரை வாங்கிக்க பழகுங்க!
கடைக்காரர் பேந்த பேந்த முழிக்கிறார். சந்தோஷ்குமார், பொன்னேரி