
ஓட ஓட தூரம் குறையலை…! மந்திரியாரே!
நாசமாப் போச்சு! மன்னா! நீங்க இப்போ அரண்மனையில் சைக்ளிங் பயிற்சியில் இருக்கிறீர்கள்!
எஸ்.வேதா, நத்தம்
நாடுமுழுக்க ஊரடங்கு போட்டுவிட்டோம்! அடுத்து என்ன மன்னவா?
நாம் போய் பதுங்கு குழியில் அடங்குவோம் வாருங்கள் மந்திரியாரே!
எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி,

எதிரி கோட்டை வாசல் வரை வந்துவிட்டான் மன்னா…!
கோட்டை மேல் நின்று கைதட்டி பன்னீர் தெளித்து, விளக்கேற்றி பார்ப்போமா மந்திரியாரே…!
எஸ்.வேதா, நத்தம்.
புலவர் ஏன் எகிறி குதித்துக் கொண்டு இருக்கிறார்?
மன்னர் கொடுத்த செக் பவுண்ஸ் ஆகிவிட்டதாம்!
சின்ன சாமி, நத்தம்.
யாரங்கே….?

மன்னா! இப்படியெல்லாம் கத்தி எனர்ஜி வேஸ்ட் பண்ணாதீர்கள்! ஒரு மிஸ்டு கால் கொடுங்கள் உடனே வந்துவிடுகிறேன்!
எஸ்,எஸ்,பி, பஞ்செட்டி,
எதிரிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளாராமே மன்னர் அவ்வளவு தைரியம் எங்கிருந்து வந்தது?
அது எங்கள் நாடு கொரானோ பாதிப்புள்ள பகுதி என்ற எச்சரிக்கை தானே!
சின்னசாமி, நத்தம்.
.

மன்னருக்கு போர் என்றாலே அலர்ஜி!
அதற்காக “கொரானாவுக்கு எதிரானா போரில்” கூட கலந்துகொள்ளமாட்டேன் என்று சொல்வது சரியில்லை!
சின்னசாமி, நத்தம்.
எதிரி பதுங்கி பதுங்கி வருகிறான் மன்னா?
இப்படி திடீரெனக் கூறி என்னை விழிபிதுங்க வைப்பதே உமக்கு வாடிக்கையாகிவிட்டது தளபதியாரே!
எஸ். வேதா, நத்தம்.

புலவர் மன்னரின் அருகில் வந்த்தும் மன்னர் ஒதுங்கி கொண்டாரே என்ன விஷயம்?
அவர் கொரானாக் கவிதைகள் எழுதி வந்திருக்கிறாராம்!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி,
என்னது மன்னர் கொடி அசைந்ததும் காற்று வந்த்துன்னு பாட்டு பாடிக்கிட்டு இருக்கார்….!
எதிரி இவரது சமாதானத்தை ஏத்துக்கிட்டு வெள்ளைக் கொடியை அசைச்சதும்தான் அவருக்கு மூச்சே வந்தது அதைத்தான் ஜாடையா பாடறார்!
வில்வமணி, பொன்னேரி.