கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

“என் பையன் டாக்டர்”
” டாக்டரா? எங்க படிச்சார்?”
” அவன் எல்.கே.ஜி யிலேர்ந்தே எங்க வீட்டு மொட்டை மாடியிலதான் படிப்பான்.ஏன் கேக்கறீங்க?”
புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்.
ஏன் பங்ஷனுக்கு உன் வொய்ஃபை கூட்டிட்டு வரலை..?
மேட்சிங் மாஸ்க் இல்லேன்னு கோபிச்சிட்டு கிளம்பலைடா!
சின்ன சாமி நத்தம்.

” என்ன இது? ஆண் சிங்கத்தை பத்தியே கிளாஸ் எடுக்கறாங்க?”
” சொன்னனே…இது ‘ஆண் லயன்’ கிளாஸ்னு”
புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்

“என் ‘பொண்டாட்டி’ முன்னல்லாம் ‘சீரியல்’ பைத்தியமாயிருந்தா!”
“இப்ப?!”
“கொரொனா வந்ததுலர்ந்து ‘சீரியஸ் பைத்தியம்’ ஆயிட்டா!”
முத்துஆனந்த்,வேலூர்.
கொரானா நிவாரணம் வழங்க வந்த தலைவர் ஏன் கடுப்பாயிட்டார்?
லாக் டவுனில் வெளிவந்த லாக்-அப் சிங்கமே பேனர் வைச்சிட்டாங்களாம்!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

“லாக் டவுன்ல கிச்சன்லியே இருந்து கஷ்டப்படற ஒரு பெண்ணோட கதை”
” படத்துக்கு என்ன பேரு?”
” பொன் மகள் வெந்தாள்”
புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்.
“கொரானா” விழிப்புணர்வை நம்ம தலைவர் சிறப்பா செஞ்சுகிட்டு வரார் தெரியுமா?
எப்படி?
வீட்டை விட்டு வெளியே வராம அடைஞ்சே கிடக்கிறாரே!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி
“கீதா ‘அலப்பரை’தாங்கலடி!”
“ஏன்டி என்னாச்சு?!”
“அவ ‘லவ்வர்’கிட்டேயிருந்து ‘வாட்ஸ்அப்’ர மெசேஜ் வந்தாக்கூடக் ‘கையைக் கழுவிட்டு’ப் படிக்கிறாடி!”
முத்து ஆனந்த் வேலூர்

புருஷன், பொண்டாட்டி சண்டையெல்லாம் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும்..!
ஏன் அப்படி?
அப்பத்தான் கணவர்மார்கள் எங்கேயும் தப்பிச் போகாமல் நல்லா அடி வாங்குவாங்க..!
கே. இந்து குமரப்பன் விழுப்புரம்.

லாக் டவுன் பீரியடிலும் மக்கள் சந்தோஷமா இருக்காங்களாமே…?
தினம் தினம் நீங்க விடற பேட்டி பேச்சு அறிக்கைகள் அவங்களை லாக் டவுனை மறக்கடிச்சு சந்தோஷமா இருக்க வைக்குதுங்க தலைவரே…!
எஸ். வேதா, நத்தம்.