மவுனப்பொழுது! முள்ளாய் குத்துகிறது! கடிகாரத்தின் ஓசை! தளிர் சுரேஷ். |
கவிதைச்சாரல்!

இடைவேளை நேரத்தில்
எல்லோரும் தின்கிறார்கள்
எனக்கும் மிட்டாய் கொடுத்தனுப்பு
பள்ளிக்கு செல்லும்போதெல்லாம்
அடம்பிடிப்பான் மகன்
மனசுகேட்காமல் வாங்கிக்
கொடுத்தனுப்பியபிறகு மனசே சரியில்லை
என்மகன் மிட்டாய் தின்கையில்
பக்கத்துச்சிறுவர்களிடம்
உருப்போட்டு முடித்ததும் சில்லறை விழுகிறது! நடைபாதை ஓவியன்! தளிர் சுரேஷ். |
ஏதேனும் இருக்குமோ இருக்காதோ -பழ. புகழேந்தி
என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்
என்னை மன்னித்துவிடு!
உலகத்தில்
நான்தான்
கடைசிப் பெண் என்று
ஒன்றுமில்லை
வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்
முனைவர் ம.ரமேஷ். வேலூர்.
அதே இசை
🎵 🎵 🎵 🎵

குழல் ஒன்றின் இசை
கூவு குயிலின் இனிமைத்தேடலின்பாற்பட்டு
குழைந்து இழைந்து
செவிப்புலன்களில்
குவிந்து விடுகிறது…
தினம் தினம் கேட்கும்
அவ்விசைக் கர்த்தாவைக்
கண்டதுமில்லை..
காணத் துடித்ததும் இல்லை..
இசையே வசமாக்கி
வசியம் செய்து கொண்டிருந்தது…
தனித்திருந்த ஒரு பொழுதில்
தட்டப்பட்ட கதவுக்கு அப்பால்
யாரென்று கேட்கிறேன்..
பசிக்கிறது என்கிறது ஒரு குரல்..
பழங்களையே சேமித்துக் கொண்டிருந்த நான்
பழத்தை நீட்டலாமென்று
தாழ் திறந்தேன்…
பயங்கரமில்லாத அருவருக்கத்தக்க
அழுக்குத் தேங்கிய
ஆளென்றே சொல்ல முடியாத ஒன்றைத்தான்
அங்கே கண்டேன்…
குமட்டலில் ஓங்காளித்தாலும்
ஒரு பழம் நீட்டினேன்..
பழமல்ல என்பசி
பச்சை மாமிசம் என்றது அது..
அது என்னிடம் கிடைக்காதே என்றேன்..
உன்னையே தின்கிறேன் என்றது..
உள்ளே நுழைய முற்பட்டதை
உதைத்துச் சாத்திய கதவினூடே
அதனின்று ஏதோ அவிழ்ந்து விழுந்தது..
அது ஒரு புல்லாங்குழல்..
ஙே… என்று நான் விழிப்பதற்குள்
அதை எடுத்துக்கொண்டது..
அடித்துச் சாத்திய
கதவின் அப்புறம்
இப்போதும் கேட்டது
அதே குழல் இசை…
– பவானி ரெகு
Top of Form
Bottom of Form
பிறகு பார்க்கலாம் என
விட்டுவைத்த ஒரு குறுஞ்செய்தி
பிறகு வாசிக்கலாம் என
மூடிவைத்த சில புத்தங்கள்
பிறகு அழைக்கலாம் என நினைத்த
ஒரு தொலைபேசி அழைப்பு
பிறகு எழுதலாம் என நினைத்துவைத்த
சில கவி வரிகள்
என்பன
பிறகு அப்படியே
நமக்குத் திரும்ப அமைவதுமில்லை…
பிறகு அவை
அவ்வளவு பிரயோசனப்படுவதுமில்லை…
ஏனெனில்
பிறகு பார்க்கலாம் என
விட்டுவைத்த
அந்தக்குறுஞ்செய்தி
மரணத்தருவாயில் இருக்கும்
ஒருவரின் கடைசி ஆசைகள்
பற்றியதாய் இருந்திருக்கலாம்…
அவ்வாறே
பிறகு பார்க்கலாம்
பிறகு எடுக்கலாம்
பிறகு கொடுக்கலாம்
பிறகு செய்யலாம் என
நினைக்கும் ‘பிறகு’ கள்
பிறகு நமக்கு
கிடைக்காமலே போகலாம்…
அல்லது
பிறகு நாமே
இல்லாமலும் போகலாம்…
பிறகு எதற்காக
உரிய நேரங்களை
ஒதுக்கி வைக்க வேண்டும்….
(பஸீனா)

ஒரு பேய்மழை நாளில்
பேனாவும் கையுமாக
அமர்ந்து எதையோ
எழுதிக் கொண்டிருக்கிறான்
அவன்..
அந்த ஏழைகவிஞனின்
மனைவி பழைய
ஓட்டுவீட்டின் சாளரங்களை
சாரலுக்கு பயந்து
சாத்திக்கொண்டிருக்கிறாள்..
இருந்தபோதும் கண்ணுக்கு
தெரியாத பலநூறு
சாளரங்களின் வழியே கவிஞனைத்தேடி
வீட்டுக்குள் நுழைகிறது
மழை…
அழையா விருந்தாளியை
தட்டுமுட்டு சாமான்கள்
கொண்டு சிறைபிடிக்கிறாள்
அவன் மனைவி..
போதாக்குறைக்கு அவனின்
பரிசுக்கோப்பைகளும்
பேழைகளும் கூட
வந்துவிடுகிறது…
நிச்சயமாய் அவை
காலிக்கோப்பைகள் அல்ல..
இதோ..அக்கோப்பைகள் தோறும்
சிலபல லைக்குகளுக்கும்
கமெண்டுகளும் நிறைந்து
வழிகின்றன…
–விஜய்ஆனந்த்
நீண்ட நாட்களுக்கு முந்தைய
ஒரு தீபாவளி நாளில்
ஐம்பது ரூபாய்க்கு
பட்டாசு வாங்கி தர சொல்லி
அழுது அடம்பிடித்து
கிடைக்காத விரக்தியில்
என் அப்பாவை பழித்தபோது
எனக்கிருந்த
அதே கோபத்தை
அதே விரக்தியை
பிரதிபலிக்கிறான் மகன்
பதினெட்டாயிரம் ரூபாய்
அலைபேசியை அவன் கேட்டு
வாங்கித் தர முயலாத
என் நிலையை கண்டு…..
அப்பாவான பின்புதான் தெரிகிறது
பட்டாசுகளையும்
அலைபேசிகளையும் விட
அவசிய தேவைகள்
நிறைய இருக்கிறதென்று……
1.
அவள்
முதன்முதலாகத் தந்த
முத்தத்தையும்
மகிழ்ச்சி நிரம்பி வழிந்த
அதன் சுவையையும்
இன்பம் கூட்டிய
அந்த அந்திப் பொழுதையும்
காலங்கள் பல கடந்தும்
மறக்கவே இல்லை
அவன்.
2.
என் கைகளை
இறுகப் பற்றிக் கொள்.
என்னை நான்
தொலைத்தது போல்
உன்னையும்
தொலைத்து விடப் போகிறேன்.
3.
உன் மீது
எனக்குள்ள மோகத்தினைக்
காதலெனக் கொள்க…!
4.
நீ என்னை
நெருங்கி வரும் வேளையில்
என் தனிமைக்குத் துணையாய்
இருந்த நிலவு
மெல்ல மெல்ல
என்னை விட்டு விலகுகிறது.
5.
உயிர் போகும் வலியை
பொறுத்துக் கொள்கிறேன்.
ஆனால்
உயிரே போய் விடும்
போலிருக்கிறது பசியில்.
-பாரியன்பன் நாகராஜன் குடியாத்தம்.
என்னில்
முழுவதுமாய்
நீ
இருக்கிறாய்!
உன்னில்
முழுவதுமாய்
நான்
இருக்கிறேன்!
ஆனால் –
காண்பவர்
கண்களுக்கு
(மட்டும்தான்)
நாம் இருவரும்
தனித்தனியாக
இருப்பதைப்போல் தெரிகிறது!
****

ரசனை!
விடிந்த பிறகும்
விண்மீன்கள்
ஏன் செல்லவில்லை
தெரியுமா?!
நீ
வெளியில் வந்து
வாசல் கோலமிடும்போது
உன்
விழி மீன்களைப்
பார்த்து ரசிக்கத்தான்!
****
முத்து ஆனந்த் வேலூர்
பெண்வள்ளல்!
எப்பொழுதும் தேனொழுகப் பேச
எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?!
என்ற உன் கேள்விக்கான பதிலை
உன்னிடமிருந்துதான் எடுக்க வேண்டும்
அன்பே! நினைத்த மாத்திரத்தில்
நினைத்த பொழுதுகளில் எனக்கு
முத்தங்களை வழங்கும்
தேன்சிட்டு நீதானே!
எந்த ஆடையாக இருந்தாலும்
அணிந்த பின் உன் அழகையெல்லாம்
அவைகளுக்குக்கொடுத்து விடும்
பெண் வள்ளல் அல்லவா நீ!
பரிசுத்தமான அன்பை
உன் இதயத்திலிருந்தும்
மிக சுத்தமான தேனை
உன் இதழ்களிலிருந்தும்
நான்பெற்ற பிறகும்
இனிக்க இனிக்கப் பேசுவதை
நான் கை விடலாமா அல்லது
மறந்துதான் போகலாமா?
பேராசை பெரு நட்டம் என்பது
உண்மையென்றாலும் (கூட)
என் மொத்த ஆசையையும்
உன்மீது மட்டுமே வைத்திருக்கிறேன்
இல்லையென்றால் – என்னிடம் இருக்கும்
உன் மனசு என் மேல் வழக்குத் தொடுக்குமே!
நீ எனக்குச் சொந்தமான பின்
ஒவ்வொரு நொடியிலும்
காதல் மட்டுமே தெரிகிறது!
முத்து ஆனந்த். வேலூர்
தெருவாசல் விளையாட்டுக்கு
தடைபோட்டது சாலை நெரிசல்!
வீதியில் ஓடியாட தடைபோட்டது
குப்பை கஞ்சியம்
வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாட
தடைபோட்டது பெருகிவரும்
குரங்குச் சட்டை.
பொறுமை இழந்த குழந்தை
எடுத்தது கைபேசி ஆயுதத்தை
இப்போதும் தடை போட்டது
உடல் ஆரோக்கியத்திற்கு
மனம் ஊனமாய்
குழந்தை ஏக்கப்பார்வையோடு
எதிர்காலத் தேடல்
தெருவாசலில்!
சீர்காழி.ஆர்.சீதாராமன்,
நன்றி: படைப்பு முக நூல் குழுமம்.