சிரி கண்ணா! சிரி!

” தலைவருக்கு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கே எப்படி ?”
” சிறைக் களியில வளர்ந்தது அவர் உடம்பாம் !
ஆர்.சீதாராமன், சீர்காழி.

என் பையனுக்கு இப்பெல்லாம் மாஸ்க் மேல கோவம் வர்து”
” என்னாது? மாஸ்க் மேலயா?”
” மூக்கு மேலதான் கோவம் வரும்.ஆனா இப்பதான் மூக்கு மேல மாஸ்க் போட்டிருக்கானே..அதான் அப்டி சொன்னேன்”
புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்

தலைவர் புது வகையான விளம்பர விரும்பியா எப்படி ? ” வாயில மாஸ்க்குக்கு பதில் ஸ்டிக்கர் ஒட்டச் சொல்றாரே ….”
,ஆர்.சீதாராமன். சீர்காழி

தலைவர் தன் கொள்கை முடிவுலே இருந்து பின் வாங்க மாட்டாராம்!
இருக்கட்டும் அதுக்காக கட்சி ஆபிஸுக்கு ஒரு ஸ்டாப்ளர் பின் கூட வாங்க மாட்டேன்னு சொல்றது நல்லாயில்லே..!
சின்னசாமி, நத்தம்.

தலைவர் மேடையில்: நாங்கள் பேசக்கூடாது என்று எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து செய்த சதிதான் இந்த மாஸ்க் அணிதல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
எஸ்.வேதா, நத்தம்.

மாஸ்க் போடாம வெளியே போகக் கூடாதுன்னு அரசாங்கம் சொன்னது நல்லதா போச்சு?
மாஸ்க் தானே போடறோம்! முகம் தெரியவா போகுதுன்னு என் மனைவி மேக்கப் போடற நேரம் குறைஞ்சிருச்சு!
ஏ.எஸ். மணி, மாநெல்லூர்

அவள் :ஏன் அவளோட புது மாடல் கொண்டையைப் பார்த்து எல்லாரும் பயந்து ஓடுறாங்க?
இவள் : அவ போட்டுயிருக்குறது ‘கொரோனோ வைரஸ்‘ மாடல் கொண்டையாம்..!
இந்து குமரப்பன் விழுப்புரம்.
அவர் : குறுக்கெழுத்து போட்டி கடிதங்களை தேர்ந்தெடுக்க ஏன் கவர்ச்சி நடிகை வரச்சொல்லி இருக்காங்க…?
இவர் :அவுங்க தான் நல்லா ‘குலுக்கி குலுக்கி‘ எடுப்பாப்ங்களாம்….!
இந்து குமரப்பன் விழுப்புரம்.

அந்த நடிகை சமூக இடைவெளியை அதிகமாகவே கடை பிடிக்கிறாங்களாமே…?
பின்னே அவங்க “கவர்ச்சி நடிகை” ஆச்சே…!
எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

“எதுக்குங்க தூங்கும்போதுகூட ‘மாஸ்க்’ போட்டுக்கிட்டிருக்கீங்க?!”
“வைரஸ் கிட்டே நெருங்கும்போது எச்சரிக்கையா இருக்கணும்னுதான்!
முத்து ஆனந்த். வேலூர்