கொஞ்சம் சிரியுங்க பாஸ்!
” எதிரி மன்னன் சாக்ஸ் போட்டு வர காரணம் என்ன அமைச்சரே ?”
” தங்கள் பாத பூஜை ரகசியம் கசிந்து விட்டது போல மன்னா….”
– சீர்காழி .ஆர் . சீதாராமன் .

தலைவரை மேலிடம் கட்டம் கட்டிட்டாங்களாம் ….”
” தனிமை படுத்திட்டாங்கன்னு டீசன்ட்டா சொல்லுங்க ….
– சீர்காழி .ஆர் . சீதாராமன் .
உங்க பையன் பொண்ணுங்க இடுப்பையே சைட் அடிச்ட்டு இருக்கானே?
ஹிப் னாடிசம் படிக்க வெச்சேன்,ஒரே “குஷி” ஆகிட்டான்
சி.பி. செந்தில்குமார், சென்னிமலை.
இன்னும் எத்தன நாளைக்குதான் நடந்ததையே நினச்சிட்டு இருக்கப்போற?”
வாக்கிங்க் போனது போதும், சுகர் சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொல்றவரை
சி.பி.செந்தில்குமார். சென்னிமலை.

டியர்! பீச்ல லவ்வர்ஸ் எல்லாரும் ஃபேஸ் to ஃபேஸ் பார்த்தபடிதான் உட்கார்ந்திருப்பாங்க. நீ ஏன் முதுகை காட்டியபடி திரும்பி உட்கார்றே?
நீங்கதான் என்னோட மறுபக்கத்தை தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?
சி.பி,எஸ்.
என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.
ஓஹோ… சென்ஸ் ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ் ஆஃப் ரூமர் அவங்களுக்கா?
சி.பி.எஸ்.
கார் ரேஸ் வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?
சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.
சி.பி.எஸ்.

இவர் கணினி தொழில்நுட்பத் துறையில் வேலை பாக்குறவரு போல?
இதயத் துடிப்ப வச்சே எப்படி சொல்றீங்க டாக்டர்.
இதயம் லப் டப்புன்னு துடிக்காம லேப் டாப் லேப் டாப்புன்னு துடிக்குதே…
அத வச்சித்தான்.
- பகவான் ஜி
எங்க மேனேஜர் இப்ப லஞ்சம்னு கை நீட்டறதே கிடையாது…!
திருந்திட்டாரா?
நீ வேற கொரானா பயத்துலே எல்லாமே இ-பே பண்ணச் சொல்லிடறாரு…!
எஸ்.எஸ்.பாபு.
தலைவர் திடீர்னு கொள்கை பரப்பு செயலாளரா நடிகையை அறிவிச்சிட்டாரே ஏன்?
அவங்கதான் இளைஞர்களை “சுண்டி இழுக்கறாங்க”ளாம்!
எஸ்.எஸ்.பாபு,

உங்க பையன் எங்கிருக்கான்னு கேட்டா எப்பவும் மாமியார் வீட்டுல இருக்கிறதா சொல்றீங்களே வீட்டோட மாப்பிள்ளையா இருக்காரா?
ஜெயிலோட மாப்பிள்ளையா இருக்கார்!
சின்னசாமி, நத்தம்.
புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன்
அப்புறம்?
அன்னிக்கு பூரா என் நேரம் டார்க்கா ஆயிருச்சு!
-அகரத்தான்.
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?
போஸ்ட் மார்ட்டம் பண்ணப் போற பாடிக்கு மயக்க மருந்து கொடுக்க சொல்றாரே!
எஸ்.வேதா, நத்தம்.
“எந்தப்பொருள் வாங்கனும்னாலும்,பத்து பதினைஞ்சி கடை ஏறி இறங்கி ,விலை low வா விக்கிற கடையிலதான் வாங்குவார் என் வீட்டுக்காரர்”
” உங்க வீட்டுக்காரர் ‘லோ’ ‘லோ’ ன்னு அலையறதை நானும் பார்த்திருக்கேன்டி”
புது வண்டி ரவீந்திரன்
“அந்த கலைக்டர் அம்மா விரல் நுனியில் வச்சிருக்காங்க”
” புள்ளி விவரங்களைத்தானே?
” இல்ல.மருதாணியை”
“நம்ம பிரேம் கண்ணாடி கடை வச்சதிலேர்ந்து தன்னோட பேரை மாத்திக்கிட்டானாம். தெரியுமா?”
” என்னான்னு மாத்திக்கிட்டான்?”
” ஃபிரேம்”