கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நீ… காதலிக்கிறப் பொண்ணு., டிராபிக் போலீஸ்காரரின் மகள் எப்படி சொல்றே?
தினமும் பச்சை, சிகப்பு, மஞ்சள் கலர் மட்டும் தான் சுடிதார் போட்டுக் கிட்டு வர்றாளே..!
–இந்து குமரப்பன், விழுப்புரம்
டாக்டர் :உங்க மாமியாருக்கு மூச்சு திணறல் அதிகமாயிடுச்சு, மூச்சு விட கஷ்டப்படுறாங்க மேடம்..!
மருமகள் :கஷ்டமான வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அவுங்க கிட்டே சொல்லிடுங்க டாக்டர்..!
–இந்து குமரப்பன், விழுப்புரம்.

*”இந்த கோரானா வந்தாலும் வந்தது லிப்ஸ்டிக்கே போட முடியவில்லை….!”*
*”ஏன் போட்டுக்க வேண்டியது தானே…!”*
*”போட்டு என்ன பண்றது அதுக்கு மேல மாஸ்க்கை கட்ட வேண்டி இருக்கே….! *உமா புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717
கட்சி தலைவர்: “வர தேர்தல்ல எல்லா தொகுதியிலும் நம்ம கட்சி சார்பா வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிடலாம்னு ஆசைப்படுறேன். அதுக்கு என்ன செலவாகும்?”
உதவியாளார்: சும்மா ஆசை படுறதுக்கெல்லாம் ஒன்னும் செலவு பண்ண வேண்டியது இல்ல தலைவரே!
ப்ரணா,பெங்களூரு

“அந்த ஜோசியர் மேல ஏன் தலைவர் கோபமா இருக்காரு?”
“வருங்காலத்துல ‘கொரோனா நிவாரண நிதி ஊழல்ல’ வசமா மாட்டப்போறீங்கன்னு சொன்னாராம்”
——ப்ரணா, பெங்களூரு

” எதிரி நாட்டு மகாராணிக்கு நூல் விட்டீர்களா மன்னா …?”
” ஏன் அமைச்சரே ?”
” அவன் தங்கள் கழுத்துக்கு மாஞ்சா கயிறு அனுப்பி இருக்கிறான் ….”
சீர்காழி.ஆர்.சீதாராமன்
“அந்த டாக்டர் போலியா எப்படி சொல்றீங்க ?”
” குடலிறக்கம் நீங்க தலைகீழா நடக்க சொல்லிட்டாராம் ….”
சீர்காழி.ஆர்.சீதாராமன்.

ஆளுக்கு பாதியா சீட்டை பிரிச்சிக்கிட்டும் கட்சிக்குள்ள திரும்பவும் எதுக்குய்யா சண்டை?
கொசுறு கேட்டு சிலர் அடம்பிடிச்சிகிட்டு இருக்காங்களாம்!
சின்ன சாமி, நத்தம்.

அந்த சாமியார் புதுசா ரிசர்வ் பேங்க் எல்லாம் திறந்திருக்காரே…!
கூடிய சீக்கிரம் ஜெயிலுக்கு போக “ரிசர்வ்” பண்னிக்கிட்டிருக்கார்னு சொல்லு!