சேலம் கோபிநாத் கவிதைகள்

பூக்களின் இதழ்களில்
தேங்கி நிற்கும் மழைத்துளிகள்
வருடி செல்கிறது காற்று.
துள்ளி ஓடும் அணில்
கீழே விழும் பழத்தில்
வேர்விடுகிறது நாளைய மரம்.
பட்டம் விடும் குழந்தைகள்
நகர்ந்து செல்கின்றன
மெல்ல சூழும் மேகங்கள்.
சிதறிக் கிடக்கும்
தானியக் குவியல்
குருவிகளுடன் பசியாறின எறும்புகள்.
ச. கோபிநாத்
சேலம்