பிரகாசம்

பிரகாசம்

கவிமுகில் சி.சுரேஷ்

 சிறுகதை: கவிமுகில் சி.சுரேஷ்

     மனசு நேற்று போல் இன்று இல்லை ஏன் அடிக்கடி எண்ணம் பச்சோந்தியின் வண்ணமாய் மாற்றும் கொள்கிறது
    ஒவ்வொரு நாளும் உணர்ச்சி அலைகளில் மனம்உரு குழைந்து போகிறது ஒருநாள் கதாநாயகனாகவும் அடுத்தநாள் வில்லனாகவும் இருக்கிறேன் ஏன் என மனதுக்குள் குழம்பிப்போய் தனக்குத்தானே கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தான்
கணேஷ்
    அவன் எண்ணத்தை களைத்தவளாய் “அப்புறம் யோசிங்க இப்ப டீ சாப்பிடுங்க ஆறிடப் போகுது”  என அவனின் மனைவி
லொட் டென டீ நிரம்பியிருந்த கப்பை அவன் அருகே இருந்த மேசையின் மேல் வைத்தாள்
     அவனுக்கும் சூடாய் ஏதாவது தொண்டை யில் இறங்கினால் நலமாயிருக்கும் வறண்டு கிடக்கிறதே என டீ கோப்பையை கையில் எடுத்து அதை மெல்ல உறிஞ்ச ஆரம்பித்தான்
   அதன் சுவையில் மெய் மறந்தான் வறண்ட தொண்டையும் சூடாய் இதம் கொண்டது
    காலை ஆறு மணிக்கு சரியான நேரத்தில் டீ கொண்டுவந்து கொடுத்த மனைவிக்கு நன்றி சொல்ல அவனுக்கு தோனிற்று இருந்தாலும் வழக்கமாய் அவள் கொடுக்கும் டீ தானே அந்த நேரம்
   ஆகவே சொன்னால் அது சரியாக இருக்காது என தனக்குள்ளே வைத்துக்கொண்டான்
   அன்றைய நியூஸ் பேப்பரை புரட்டிப் புரட்டி பார்த்தான் மனம் அதில் லயிக்கவில்லை ஒவ்வொரு பக்கமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என துர் செய்திகளே காணப்பட்டது தொடர்ந்து அவைகளை வாசிக்க மனம் மறுத்தது
    கொரோனா தன்னை எங்கேயும் செல்லாமல் வீட்டிலேயே கட்டிப்போட்டு விட்டதே என ஒருபக்கம் மனதில் வருந்திக் கொண்டிருந்தான்
    வீட்டிலேயே சும்மா உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என ஒவ்வொரு நாளும் திட்டமிட்ட சில காரியங்களை செய்து கொண்டு வந்தான்
    வீட்டுக்கு ஒட்டடை அடித்தான், சமையல் வேலையில் கூடமாட மனைவிக்கு ஒத்தாசை புரிந்தான்,  நான் பொறியல் செய்கிறேன் என அடம்பிடித்து உப்பை அதில் அதிகமாய் போட்டு திட்டு வாங்கிய அனுபவங்களை கொண்டான்
   வீட்டு அலமாரியில் இருந்த அனைத்து கதை புத்தகங்களையும், கவிதை புத்தகங்களை வாசித்து நேரத்தை கடத்திக் கொண்டிருந்தார்
   தூரத்து உறவினர்கள் நண்பர்களோடு போனில் மணிக்கணக்காக பேசிக்கொண்டிருந்தான்
   மனதில் ஊறிக் கொண்டிருக்கும் எண்ணங்களை எல்லாம் எழுத்தாய் வடிவம் கொடுத்தால் என்ன என யோசித்தான்
   சிறுவயதில் ஆறாம் வகுப்பு படிக்கையில் கவிதை போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய ஞாபகம் மனதில் வலம்வந்தது
  அப்ப எழுதினேன் இப்ப நான் ஏன் எழுதுவதில்லை அப்ப எழுதியதை வாசித்த நண்பர்கள் தமிழ் ஆசிரியரும்  உனக்கு கவிதை எழுத வருது என்று பாராட்டினார்கள்
    நான்தான் அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை அறுபட்ட செயினாய் அதற்குப் பிறகு ஏனோ நான் எழுதாமல் விட்டு விட்டேன் நாட்களை ஏனோ வீணாய் கழித்து விட்டேன் என தனக்குள்ளே வருந்திக் கொண்டிருந்தேன்
    இனியும் எனக்குள் இருக்கும் எழுத்தாளனை நான் முடக்கிவைக்க விருப்பம் இல்லை என்ற முடிவுக்கு வந்தான்
    நேரத்தை வீணாக்காமல் தன் அனுபவங்களையும் படித்த காரியங்களையும் கற்பனை ஓட்டத்தோடு எழுத ஆரம்பித்தான் வெள்ளைத்தாளில் எழுத்துக்களை உணர்ச்சி மயமாய் நிரப்பிக் கொண்டிருந்தான்
  மனதிற்குள்ளேயே எத்தனையோ சம்பவங்களை எத்தனை நாட்கள்தான் புதைத்து வைத்துக் கொண்டிருக்க முடியும்
அவைகளுக்கு எழுத்துவடிவில் உயிர் கொடுத்தான்
  தன் அனுபவங்கள் மொத்தத்தையும் ஒரு புத்தகமாய் எழுதி முடித்தான்
  கொரோனா அக்காலத்தில் அவன் ஒரு புதிய எழுத்தாளனை பிறப்பு எடுத்திருந்தான்
  இந்த கரோனா காலம் மனதையும் உடல்நிலையையும் சிந்திக்க வைக்கின்ற ஒரு காலமாகவே அவன் எண்ணினான்
    மனிதநேயம் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் காணப்படவேண்டும் என்று போதிக்கின்ற ஒரு காலமாய் இதை உணர்ந்தான்
  அவனுக்குள் இருந்த ஒரு எழுத்தாளன் இப்பொழுது எழுத்தில் பிரகாசிக்க ஆரம்பித்தான்
   உங்க கதை நல்லா இருக்கு அதுல தேவையான நல்ல இன்பர்மேஷன் நிறைய கொடுத்து இருக்கீங்க என அநேகர் செல்போனில் சொல்லும்பொழுது அவன் மனம் இனித்தது இன்னும் எழுத வேண்டும் என ஊக்கம் கொண்டான்
  எழுத எழுத அவன் முகம் பிரகாசம் அடைந்தது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: