
காசங்காடு வீ. காசிநாதன், சிங்கப்பூர்
மருதகாசி, 1920 பிப்ரவரி மாதம்,13 ந்தேதி பிறந்தவர். 1989 நவம்பர் மாதம் 29ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார் 1949இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.
திருச்சிராப்பாள்ளி மாவட்டம் மேலக்குடிக்காடு கிராமத்தில் பிறந்தவர்
1949இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர் இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார்.
கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் மந்திரிகுமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன், ஜிக்கி ஆகியோர்.
மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் வில்லனாக வரும் S. A. நடராஜன் மற்றம் அவரது மனைவியாக மாதுரி நடித்திருந்தனர்.
கதைப்படி வில்லன் மாதிரியை ஆசை வார்த்தை கூறி மலைஉச்சிக்கு அழைத்துச் சென்று அவரை அங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்துவிட்டு மன்னன் மகளை திருமணம் செய்ய இருப்பார்.
ஆனால் இதை நடராஜன் அவரிடம் விவரிக்கும்போது உண்மை உணர்ந்து கொண்டு கணவரை இறப்பதற்கு முன்பு வணங்கி மூன்று முறை சுற்றி வருவார்.
மூன்றாவது சுற்றில் நடராஜனை மாதுரி கீழே தள்ளிவிடுவார்.
அந்த சூழலுக்கு எழுதிய பாடல் தான் வாராய் நீ வாராய்…. இன்று கேட்டாலும் சுவை குன்றாத பாடல்.
இந்தப் பாடலை பட்த்தின் நீளம் கருதி தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் நீக்கி விடும்படி கூற இசை அமைப்பாளர் ஜி. இராமநாதன்2 நாட்கள் படத்தில் இருக்கட்டும்,
ரசிகர் வரவேற்றால் தொடரட்டும் இல்லையேல் நீக்கி விடலாம். இந்தப்பாடல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனக்கூறி, அவரது கணிப்புப்படியே ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது வரலாறு.
மந்திரிகுமாரி; Release:- 24th June 1950; இசை:- ஜி.ராமநாதன், பாடியவர்கள் திருச்சி லோகநாதன் ஜிக்கி
வாராய்!நீ வாராய்…!
வாராய்!நீ வாராய்…!
போகுமிடம்வெகு தூரமில்லை
நீ வாராய்…!
ஆஹா! மாருதம் வீசுவதாலே,
ஆனந்தம் பொங்குதே மனதிலே.
இதனிலும் ஆனந்தம் அடைந்தே,
இயற்கையில் கலந்துயர்
விண்ணினைக் காண்பாய்!
அங்கே…! வாராய்…!
அமைதி நிலவுதே,
சாந்தம் தவழுதே,
ஓஓஓஓ…
நீ! அழிவிலா மோன நிலை தூவுதே!
நீ! முடிவிலா மோன நிலையை
நீ!மலை முடியில் காணுவாய்!
வாராய்…!
ஈடிலா அழகு சிகரம் மீதிலே,
கண்டு இன்பமேகொள்வோம்.
இன்பமும் அடைந்தே,
இகமறந்தே,வேறு உலகம்
காணுவாய்
அங்கே…!
வாராய்…!
நீ வாராய்…!
புலியெனைத் தொடர்ந்தே
புதுமான் நீயே…! வாராய்…!
வாராய்…!
அக்டோபர் இதழ் தேனென தித்திக்கிறது.
ஒவ்வொரு பகுதியும் செதுக்கிய அழகுச் சிலை..
கடும் உழைப்பு தெரிகிறது.
படைப்புகளும் நல்ல வாய்ப்புகள்..
வாழ்த்துக்கள்
LikeLike