வெ. ஹேமந்த்குமார் கவிதைகள்

ஊரடங்கில் தனியுலகம்!
*****************************
விலகியிருங்கள் என்றார்கள்!
முன்பே, நான்
அவர்களை விட்டு
மனதளவில் விலகியிருந்தேன்;
வீட்டிலிருங்கள் என்றார்கள்!!
இன்றும் நான்
அதே வீட்டில் தான்
பசித்து, தனித்திருக்கிறேன்;
அறிவுரைகள் கூறியவர்கள்,
அச்சுறுத்தவும் செய்தனர்;
தனிமை தண்டனை என்றனர்;
வீட்டை சிறை என்றும்
இருளின் அறை என்றும்
புலம்பித் தீர்த்தனர்…
ஆனால், நான்
நேர்மறை எண்ணமுடையவன்:
என் கண்களை மூடினால்,
கனவில்
ஓர் உலகில் வாழ்வேன்;
நான் புத்தகத்தைத் திறந்தால்,
மூளையால்
ஓர் உலகிற்கு செல்வேன்;
மெல்லிசையைக் கேட்டால்,
செவிகளால்
ஓர் உலகிற்குள் கரைவேன்;
இவையனைத்தும்
எனக்குள் இயங்கும்
வெவ்வேறு உலகங்கள்.
என்னை எங்கே புதைத்தீர்களோ,
அங்கிருந்தே
மீண்டும் எழுவேன்:
ஒரு புது மனிதனாக,
பெரும் சிந்தனையாளராக,
மாபெரும் விடிவெள்ளியாக;
தனியுலகம் படைக்கிறேன்,
இத்தரணியில்!
வாழலாம் வாருங்கள்,
புதுக் கவிதையில்!!
(வெ.ஹேமந்த் குமார், ஈரோடு)
சுடு)காடு
**************************
இயற்கையோ
எங்களுக்கு கொடுத்தது,
ஒரு முத்தம்!
நாங்களோ
இயற்கையோடு நடத்தினோம்,
ஒரு யுத்தம்!!
நம்பிக்கை துரோகிகளாக
இயற்கையை வென்றோம்;
வனவிலங்குகள்
அத்துமீறல் என்று
அவற்றையும் கொன்றோம்;
நவீனமாக
மாசுபடுத்திய காற்றே
எங்களுக்கு
உயிர்குடி விஷமானது,
நாங்கள் வெட்டிய
மரங்களின் இரத்தம்
செக்கச்சிவந்த ஆறானது.
தோல் போர்த்தி
உடல் மெலிந்த நாங்கள்,
நடைபிணங்கள்;
இன்னும்
மனித வேட்டையில்
இயற்கையின் ஆன்மா…
ஊர் அடங்கிய தனி உலகம் அருமையான கவிதை ஹேமந்த்😃😃
LikeLike