கந்த சஷ்டி கவசம் இசைத்தட்டு உருவான கதை!

கந்தசஷ்டி கவசம் என்றாலே சூலமங்கலம் சகோதரிகள்தான் நம் நினைவுக்கு வருகிறார்கள்.ஆனால் சும்மா கிடைத்து விடவில்லை இந்த வாய்ப்பு சூலமங்கலம் சகோதரிகளுக்கு !

எல்லையில்லாத இசை ஆர்வம் சூலமங்கலம் ஜெயலட்சுமிக்கும்ராஜலட்சுமிக்கும் !சகோதரிகள் இருவரும் இணைந்து கந்தசஷ்டி கவசம் பாடலை பாடி வெளியிட நினைத்து, பல இசைத்தட்டு கம்பெனிகளுக்கும் ஏறி இறங்கி அலைந்து திரிந்து எவ்வளவோ கெஞ்சிக் கூட கேட்டுப் பார்த்தார்களாம்.ஆனால் எந்த ஒரு இசைத்தட்டு கம்பெனியும் இதற்கு இசைய மறுத்து விட்டார்களாம்

.அதற்கு அவர்கள் சொன்ன காரணம் :‘‘ஓதுவார்கள் பலர் பாடியும் இந்தப் பாடல் மக்களைச் சரியாக சென்றடையவில்லை. வேண்டாம் இந்த வீண்வேலை. விட்டு விட்டு வேறு வேலையைப் பாருங்கள்.’’விடவில்லை சூலமங்கலம் சகோதரிகள்.இசைத்தட்டு சுழல்வது போல் இசைத்தட்டு கம்பெனிகளை சுற்றி சுழன்று வந்து பலமுறை முயற்சித்தும், கீறல் விழுந்த இசைத்தட்டாக, “முடியாது “ என்ற பதிலே திரும்ப திரும்ப வந்ததாம்

.ஆனாலும் மனம் தளராத சூலமங்கலம் சகோதரிகள், அந்த கந்தசஷ்டி கவசம் பாடலை பல வேறு ராகங்களில் டியூன் போட்டுப் பாடிப் பார்த்தார்களாம்

.முதலில் ‘ஆபேரி’ .அடுத்து ‘சுப பந்துவராளி’.அதனைத் தொடர்ந்து ‘கல்யாணி’. இறுதியாக ‘தோடி’.இப்படி நான்கு ராகத்தில் பாடினார்கள் இந்தப் பாடலை !

சரி. போட்டுத்தான் பார்ப்போமே என்று ஒரு கம்பெனி 1970 – ல் வெறும் 500 இசைத்தட்டுகள் மட்டுமே வெளியிட்டார்களாம்.அப்புறம் நடந்ததுதான் எவருமே எதிர்பாராதது.சாதாரணமாக வெளியிடப்பட்ட அந்த இசைத்தட்டு,பல சாதனை ரிக்கார்டுகளை எல்லாம் முறியடித்து வரலாற்று சாதனை படைத்தது.”துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும்நிஷ்டையும் கைகூடும் நிமலனருள்கந்தர் சஷ்டி கவசம் தனைஅமரரிடர் தீர அமரம் புரிந்தகுமரனடி நெஞ்சே குறி.”எவ்வளவு கஷ்டங்களையும் , போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறது இந்த கந்த சஷ்டி கவசம் ?

அதற்குப் பின் கந்தசஷ்டி கவசத்தை பலரும் பலவிதமாக பாடியிருந்தாலும், சூலமங்கலம் சகோதரிகள் அளவுக்கு வேறு எதுவும் நம்மைக் கவரவில்லை.காரணம்,கடின உழைப்பு,விடாமுயற்சி – இவற்றின் ஈர்ப்பு சக்தி இந்தப் பாடலில் இருக்கிறது.அதுதான் இந்த கந்த சஷ்டி கவசத்தின் வெற்றி.அந்த சூலமங்கலம் சகோதரிகளின் வெற்றி.இனி இந்தப் பாடலை கேட்கும்பொதெல்லாம் பக்தியும் வரும்.சாதிக்க வேண்டும் எனும் சக்தியும் வரும்

.John Durai Asir Chelliah

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: