ஹைக்கூ கவிதைகள்! நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

வெள்ளை அடிக்கையில்                         

அழுக்காகிப் போனது!

பக்கத்துவீடு!

கொளுத்தும் வெயில்

குடையாய் வந்தன

மரங்கள்!

பிம்பங்கள் பெரிதாகையில்

தொலைந்து போகின்றது!

நிஜம்!

தொட்டியில் அடைபட்டது

வாஸ்து மீனின்

சுதந்திரம்!

கண்டித்தாலும் விடுவதில்லை

குழந்தைக்கு

மண்ணாசை!

மேடு பள்ளங்கள்!

தடுத்து நிறுத்துகிறது

வாழ்க்கையின் ஓட்டத்தை!

   

விரல் அசைவில்

பிறக்கின்றன

எழுத்துக்கள்!

நினைவுகள் பூக்கையில்

வாசம் வீசியது

நட்பு.

இருள் கவ்விய சாலைகள்!

மிளிர்ந்தன

வாகன வெளிச்சம்!

அமாவாசை இரவு

நெருங்கி வந்தன

நட்சத்திரங்கள்!

விழித்து எழுந்ததும்

கலைந்து போனது

கனவு!

இலையுதிர்த்த மரங்கள்!

காணாமல் போனது

நிழல்!

கொட்டிக்கிடந்தது

பிச்சைக்காரர்களிடம்

சில்லறை!

தூரப் போகிறார் கடவுள்!

நீண்டு கொண்டே போகிறது!

தர்ம தரிசனம்!

விலை நிர்ணயம் ஆனதும்

உரிமை பறி போகிறது!

தேர்தல்!

நிறுத்தம் வந்ததும்

பிரிந்து போகிறது சிநேகம்!

பேருந்துப் பயணம்!

நாவில் கயிறு

வலியில் துடித்தது

கோயில் மணி!

கொள்ளைபோனது

புகார் இல்லை!

குழந்தையின் சிரிப்பு!

பருக்கைசோறு

பசியாற்றியது

பறிமாறியது குழந்தை!

ஈரமான கால்கள்!

உலர்ந்ததும் உதிர்ந்தன உறவுகள்!

மணல்!

உயிரா உயிலா எடுத்துச்செல்ல!

சாய்ரேணு சங்கர்.

2

2.1

சதுராவில் கனத்த மௌனம். அதிர்ச்சி அலையலையாய்ப் பரவியிருந்தது.

“என்ன சொல்றீங்க? ஏன் உங்க அப்பாவே உங்க அம்மாவை…”

“அம்மா அப்பாவை லவ் பண்ணிக் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாம். அம்மா பெரிய பணக்காரக் குடும்பம். அப்பா ஒரு சாதாரண ஆபீஸர். கல்யாணம் முடிஞ்சதும் அப்பா வேலையை விட்டுட்டார். எங்க தாத்தாவோட உதவியால் ஏதோ பிஸினஸ் ஆரம்பிச்சார். அது நஷ்டமாயிடுச்சு. இன்னும் என்னவெல்லாமோ ட்ரை பண்ணினார். பிரமாதமா ஒண்ணும் நடக்கல.

“இதற்கிடையில் என் அம்மா எங்க தாத்தாவோட பிஸினஸை ரொம்ப வெற்றிகரமா நடத்திட்டிருக்கறதைப் பார்த்து அவருக்குப் பொறாமை. ஆனா அதை முடிஞ்சவரை காட்டிக்க மாட்டார். அவருக்கு அம்மா தயவு வேணுமே!

“ஏறத்தாழ ஏழு வருஷத்துக்கு முன்னால் எங்க தாத்தா இறந்து போனார். அவர் மொத்த சொத்தையும் என் அம்மா பேரில்தான் எழுதியிருந்தார். அதனால் அப்பா இப்பல்லாம் பெரிய அமவுண்ட்டா கேட்டுத் தொந்தரவு செய்துக்கிட்டே இருக்கார்.”

“அம்மாவுக்கு அப்பான்னா உயிர். அவரைப் பற்றி யார் என்ன சொன்னாலும் நம்ப மாட்டாங்க. அவர் என்ன கஷ்டப்படுத்தினாலும் வெளியே காட்டிக்க மாட்டாங்க. அப்பா குடிப் பழக்கம் கூட இப்போ ஆரம்பிச்சாச்சு. அப்படியும் அவரை விட்டுக்கொடுக்கவே மாட்டாங்க.

“அப்பாவுக்குத் தூபம் போட வீட்டிலேயே ரெண்டுபேர் இருக்காங்க – என் பாட்டி, அப்புறம் சித்தப்பா. பாட்டிதான் எங்க வீட்டுக்கு வில்லி! அம்மாவை ஏதாவது குற்றம் கண்டுபிடிச்சுட்டே இருக்கறதுதான் அவ வேலை. எங்க சித்தப்பா – சரியான கிரிமினல். படிப்பும் ஏறல. ஊரைச் சுற்றித் தினமும் வம்பை இழுத்துட்டு வந்து நிற்பார் – எங்க அம்மா பணத்தைக் கொடுத்துச் சரிக்கட்டணும்.

“பணம் வேணுங்கறதுனால, அப்பா கொஞ்சநாளா அம்மாவை ரொம்பக் கொஞ்சறார் – திட்டுகளுக்கு நடுநடுவில! மஞ்சு…ன்னு அவர் இழுத்துக் கூப்பிடறதைக் கேட்டாலே அம்மா சந்தோஷப்பட்டுப்பாள். அந்த மஞ்சுவின் மரணம் அவரால் திட்டமிடப்படுவது தெரிஞ்சா எப்படித் தாங்கப் போறாளோ?”

அவினாஷும் அனன்யாவும் நீளமாகப் பேசி நிறுத்தினார்கள்.

“சார், எங்க குடும்பம் எப்படியோ போகட்டும். எங்களுக்கு எங்க அம்மா வேணும்! மஞ்சு… மரணம் என்பவை ஒட்டாத ரெண்டு வார்த்தைகளா நிற்கணும், ஒரு வாக்கியமாக ஆகக் கூடாது சார்!” அவினாஷுக்குக் கண்ணீர் முட்டியது.

தன்யாதான் அந்தச் சங்கடமான சூழ்நிலையைக் கலைத்தாள். மிக இயல்பான குரலில் “உங்க அம்மாவுக்கு வேறு சொந்தக்காரங்க இல்லையா?” என்றாள்.

“இருக்காங்க” என்றாள் அனன்யா மூக்கை உறிஞ்சியவாறே. “அம்மாவோட சித்தி, அதாவது தாத்தாவோட இரண்டாவது மனைவி, அப்புறம் அவங்க பையன் சுதாகர்.”

“அவங்க எப்படி?”

“தாத்தா அம்மா பேர்ல எல்லா சொத்தையும் எழுதி வெச்சுட்டது அவங்களுக்கெல்லாம் கோபம்தான். ஆனா அம்மா அவங்களுக்காக எல்லா உதவியும் செய்து நல்லா பார்த்துக்கிட்டாங்க. வெகுகாலமா அவங்க வாழற தாத்தாவோட பெரிய வீட்டிலேயே அவங்களைக் கண்டினியூ பண்ணச் சொல்லிட்டாங்க. சித்திக்கு மாதம் இருபதாயிரம் ரூபா தராங்க. மாமாவுக்கு ஏதோ பெரிய வேலை வாங்கிக் கொடுத்தாங்க. ஆனா மாமா அங்கே ஏதோ கையாடல் பண்ணிட்டார், போலீஸிலும் மாட்டிக்கிட்டார். அரும்பாடுபட்டு அவரை மீட்டுக் கொண்டுவந்தாங்க அம்மா. அவரைத் திருத்தவும் எல்லா முயற்சியும் செய்தாங்க. இப்போ ஒழுங்கா வேலைக்குப் போயிட்டிருக்கார்.”

“அவங்க கோபத்தில் இப்படியெல்லாம் செய்திருக்க சான்ஸ் இருக்கா?” என்றான் தர்மா.

“எப்படி சார் செய்வாங்க? அவங்க பிழைப்பே என் அம்மாவை நம்பியிருக்கு. மாமா ஏதோ சம்பளம் வாங்கறார்னாலும், அம்மா கொடுக்கிற பணத்தை நம்பித்தான் அவங்க ஜீவனம் நடக்குது. முக்கியமா என் அம்மா இல்லைன்னா, சொத்து எங்க அப்பாவுக்கில்லை வரும்! அவங்க ரெண்டுபேரையும் பங்களாவைவிட்டு வெளியேறச் சொல்லிடுவாங்க எங்க அப்பாவும் பாட்டியும்… ரொம்பநாளா அதைக் கேட்டிட்டும் இருக்காங்க. அம்மாதான் பரிதாபப்பட்டுச் சித்தியை அங்கேயே தங்க வெச்சிருக்காங்க.”

அவினாஷின் வார்த்தைகளைக் கேட்டு யோசனையாய்த் தாடையைத் தேய்த்தான் தர்மா.

“சரி, இன்னும் இரண்டொரு நாளில் நாங்க உங்க வீட்டுக்கு வரோம்” என்றாள் தன்யா.

“உங்க ஃபீஸ்…” என்று இழுத்தான் அவினாஷ்.

“லாக்டவுனில் ஃப்ரீ சர்வீஸ். அதுவும் அம்மாமீது அன்புகொண்டவங்களுக்கு ஸ்பெஷலா” என்று சிரித்தான் தர்மா.

“ரொம்ப தாங்க்ஸ் சார்” சொல்லி எழுந்தார்கள் அவினாஷும் அனன்யாவும்.

“நாங்க வரும்போது எங்களைத் தெரிஞ்சதா காட்டிக்க வேண்டாம்” என்று எச்சரித்தாள் தன்யா.

“ஷூர்” – வெளியே போய்விட்டார்கள்.

*****

“தர்மா, இந்தக் குழந்தைகள் சொன்ன விஷயம் உன்னை ரொம்ப அப்செட் பண்னிடுச்சு, இல்ல?” என்று கேட்டாள் தன்யா.

“கொலை முயற்சி அப்செட் பண்ணற விஷயம் இல்லையா?” என்றான் தர்மா பதிலுக்கு.

“லுக், உன்னை எனக்குத் தெரியும். நீ உள்ளூர ரொம்ப டஃப் பர்ஸன். இந்தக் கேஸில் ஏதோ ஒண்ணு உன்னை அசைச்சுப் பார்த்திருக்கு. என்ன அது?” என்றாள் தன்யா விடாமல்.

தர்மா எழுந்து உலாவினான். “என்ன சொல்றது? ஒரு கொடூரத் தவிப்பு? என்ன ஆனாலும் சரிங்கற வெறி?”

“புரியல.”

“இந்த மூன்று கொலை முயற்சிகளில் என் கண்களுக்குப் பட்டது அதுதான் – டெஸ்பரேஷன். ஆர்சனிக் – முடிவு நிச்சயமில்லாத விஷம், ஆனா ஈசியா கிடைக்கக் கூடியது. அந்த பால்கனிச் சம்பவம் – மஞ்சுதான் விழணும்னு இல்லை. பலூன் – மஞ்சுவோடு குழந்தைகளும் செத்திருப்பாங்க!”

“நீ என்ன சொல்ல வர?”

“ஒரு அவசரம், ஆத்திரம் – எப்படியாவது மஞ்சுவைக் கொன்னுடணும்னு! அவளோடு யார் செத்தாலும் கவலையில்லை! இதன் பின்னால் ஏதாவது பழிவாங்குதல் இருக்கச் சான்ஸ் இருக்கா?”

“யோசிக்க வேண்டிய பாயிண்ட்தான். சரி, இப்போ அவங்க வீட்டுக்குப் போய் விசாரணை பண்ணணும். என்ன காரணம் சொல்லிட்டுப் போறது?” என்றாள் தன்யா.

“இருக்கவே இருக்கான் நம்ப தொழிலதிபர் தர்மா! அவங்களுக்கு ஒரு பெரிய பங்களா இருக்குன்னு சொன்னாங்களே, அதை விலைக்குக் கேட்டுப் போற நீ” என்றாள் தர்ஷினி.

“அதைத்தான் கொடுக்கப் போறதில்லைன்னு…”

“ஸில்லி! நிஜமாகவா வாங்கச் சொல்றோம்? அவங்க வீட்டுக்குப் போக ஒரு காரணம், அவ்வளவுதான்” என்றாள் தர்ஷினி.

2.2

“வாங்க, வாங்க” என்று வரவேற்ற அவினாஷின் குரலில் பதட்டம் தெரிந்தது.

“எனி ப்ராப்ளம்?” என்று கேட்டாள் தன்யா.

“அம்மா எங்க பண்ணைக்குப் போயிருந்தாங்க. சரிவில் நின்ற லாரி ஒண்ணு அம்மாவை நோக்கி வேகமா வந்திருக்கு. கடைசி நிமிஷத்தில் கவனிச்சு நகர்ந்திருக்காங்க. கார் மேல மோதிடுச்சு லாரி. தற்செயலா அங்கே வந்த எங்க மாமா மோட்டர்பைக்ல அம்மாவை வீட்டுக்குக் கூட்டி வந்திருக்கார்” வேகமாகச் சொன்னான் அவினாஷ்.

“சரி, இனி நாங்க பார்த்துக்கறோம். அம்மாவை மீட் பண்ண முடியுமான்னு கேட்டுட்டு வா” என்று அவளை அனுப்பினாள் தன்யா.

தனித்து விடப்பட்ட மூவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“டெஸ்பரேஷன்?” என்றான் தர்மா.

2.3

“ஸாரி மிஸ்டர் தர்மா. நீங்க கேட்டு வந்திருக்கறது எங்க பரம்பரை வீடு. அதை என் அப்பா ஞாபகார்த்தமா அப்படியே பராமரிக்க விரும்பறேன்” என்றாள் மஞ்சு.

“புரியுது மேடம். நீங்க இன்னொரு வீடு கட்டிட்டிருக்கறதாகவும் பழைய வீட்டைக் கொடுத்துடப் போறதாகவும் எனக்குத் தகவல் வந்தது. அதான் கேட்டு வந்தேன். ஸாரி” என்றான் தர்மா.

“புது வீடு கட்டிட்டிருக்கறது உண்மை. அதுக்கு நாங்க ஃபாமிலியோடக் குடி போயிடுவோம். இந்த அபார்ட்மெண்ட்டைத்தான் கொடுத்திடலாமா, வாடகைக்கு விடலாமான்னு யோசிக்கறேன். உங்களுக்கு இன்டரஸ்ட் இருக்கா?” என்று கேட்டாள் மஞ்சு.

“இல்லை மேடம், என் டாடியும் ப்ரதரும் தனி வீடுதான் பார்க்கறாங்க. ஒரே இடத்தில் வீடு, பப்ளிகேஷன் ஆபீஸ் இரண்டையும் வெச்சுக்கணும்னு… பின்னால் விரிவாக்கணும்னாகூட வீட்டைச் சுற்றி நிறைய இடம் இருக்காமே” என்றாள் தன்யா.

“ஆமா” என்றாள் மஞ்சு. இந்தக் காலத்தில் இவ்வளவு பெரிய சொத்து விற்பது மிகக் கடினம், அவர்களாகவே தேடி வந்திருக்கும்போது விடலாமா என்று அவளுக்குச் சிந்தனை ஓடியது. அருகிருந்த ரமேஷிடம் “நீங்க என்ன சொல்றீங்க ரமேஷ்? இவங்க வீட்டைப் பார்க்கட்டுமா? எல்லாம் சரியா வந்தா இவங்க வாங்கிக்கட்டும். சித்திக்கும் தம்பிக்கும் வேறு வீடு பார்த்துடலாம்” என்றாள்.

“இதையேதானே நான் தலைதலையா அடிச்சுக்கிட்டேன்? நான் சொன்னா கசக்குது, மத்தவங்க சொன்னா இனிக்குது இல்ல?” என்றான் ரமேஷ்.

“அவ எப்பவுமே அப்படித்தானேடா, உன்னை எப்போ மதிச்சா?” என்று உள்ளிருந்து குரல் கேட்டது.

தர்மா, தன்யா, தர்ஷினி படாரென்று எழுந்துகொண்டார்கள். “ஓகே, அப்போ நாங்க வரோம். உங்களுக்கு எப்போ சௌகரியமோ அப்போ வீட்டைப் பார்க்கறோம்” என்றான் தர்மா.

“நோ ப்ராப்ளம், இப்போ நீங்க ஃப்ரீன்னா இப்போகூடப் பார்க்கலாம்” என்றாள் மஞ்சு, முகத்தில் சிரிப்பு மாறாமல்.

“ஸாரி மேடம், உங்களைத் தர்மசங்கடப்படுத்திட்டோமோ?” என்றாள் தன்யா, அவர்கள் வெளியே வருகையில்.

“இது எங்க வீட்டில் அடிக்கடி நடக்கறதுதான். எனக்குப் பழகிடுச்சு. வொரி பண்ணாதீங்க” என்றாள் மஞ்சு அதே சிரிப்புடன்.

அப்போது உள்ளே வந்தான் ஒரு இளைஞன். மஞ்சுவைப் பார்த்ததும் திகைத்து நின்றான்.

“என்ன மனோஜ், ஃப்ரெண்ட்ஸெல்லாம் பார்த்தாச்சா?” என்றாள் மஞ்சு.

“அண்ணி நீங்க… நீங்க எப்படி…” என்று திணறினான் மனோஜ். பிறகு சுதாரித்துக் கொண்டவனாய் “இன்னிக்குப் பண்ணைக்குப் போகப் போறேன்னு சொன்னீங்களே” என்றான்.

“ஆமா போயிருந்தேன். ஏன் போனா வர மாட்டாங்களா?” மஞ்சு புன்னகையோடு கேட்டாள்.

“சீக்கிரம் வந்துட்டீங்களேன்னு கேட்டேன். சரி அண்ணி” என்று சொல்லிவிட்டு வேகமாக உள்ளே சென்றான் மனோஜ்.

தன்யாவும் தர்ஷினியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். “இவனுக்கு ஏதோ தெரியும்!”

அவர்கள் மனங்களில் மனோஜ் மீது ஒரு சந்தேகப்புள்ளி அழுத்தமாக விழுந்தது.

(தொடரும்)

உயிரா_உயிலா_எடுத்துச்_செல்ல

May be a cartoon of text that says 'உயிரா, உயிலா எடுத்துச் செல்ல? சதுரா துப்பறியும் நிறுவனம் சாகஸம் சாய்ரேணு சங்கர்'

1 மதியம் சற்றே நிறம் மங்கும் மாலையின் ஆரம்பம்.”வாங்க சீக்கிரம்” என்று கூவினாள் மஞ்சு.அவள் ஓட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியவாறே பின்னால் ஓடினார்கள் அவினாஷும்

அனன்யாவும்.மஞ்சுவிற்கு என்ன வயதிருக்கும் என்று நினைக்கிறீர்கள்?இருபதுகளில்? டீன்ஸ்?மஞ்சுவின் வயது நாற்பத்தி இரண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது. பார்த்தால் சொல்லவே முடியாது. ‘சிக்’கென்ற உடலமைப்பு. முகத்தில் சிறிதும் சுருக்கமில்லாத பால்போன்ற தெளிவு. கூடவே ஒரு குழந்தைத்தனம் அந்த முகத்திற்கு அழகையும் இளமையையும் கொடுத்திருந்தது.”இருபத்தி ஏழு மதிக்கலாம்” என்றுதான் அநேகமாக மஞ்சுவின் வயதைக் கணிப்பவர்கள் கூறுவார்கள். இன்னமும்கூடக் குறைத்துச் சொல்பவர்கள் உண்டு. அதற்குக் காரணம் அவளது தோற்றம் மட்டுமல்ல, குன்றாத உற்சாகம். எந்த வேலையை எடுத்துக் கொண்டாலும் முழு முனைப்பு, குறையாத உழைப்பு, வெற்றி.அவினாஷும் அனன்யாவும் அவள் குழந்தைகள் என்று நம்புவது கடினம். பின்னே, மஞ்சுவிற்குப் பதினைந்து வயதில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்று நம்புவது கடினம்தானே? அதோடு, அவர்கள் பார்ப்பதற்கு மஞ்சுவின் கணவன் ரமேஷை ஒத்திருந்தார்கள். ரமேஷ் மட்டும் என்ன? அழகில் குறைந்தவனா? அவன் கம்பீரமான தோற்றத்தைக் கண்டுதானே முதல் பார்வையிலேயே அவன்மேல் காதல் கொண்டாள் மஞ்சு?”சீக்கிரம் வாங்க, ட்வின்ஸ்” என்று அழைத்தவாறே அந்த பெரிய நிலப்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ராட்சஸ பலூனின் கூடைக்குள் தாவி ஏறினாள் மஞ்சு.

அவனாஷும் அனன்யாவும் அதே உற்சாகத்துடன் உள்ளே ஏறிக் கொண்டார்கள்.”பலூன் உயரத்திற்கு வந்ததும் நான் கயிற்றைக் கழற்றி விட்டுடுவேன். அது காற்றோடு மிதந்து செல்லும். பின்னாடியே காரில் வந்து அது எங்கே தரையிறங்குகிறதோ அங்கே உங்களைப் பிக்கப் செய்துகொள்வேன்” என்றான் பலூன் கம்பெனி மானேஜர் விக்கி.”ஆல்ரைட்!” என்று கையைத் தட்டினார்கள் அவினாஷும் அனன்யாவும்.பலூன் மேலே உயர ஆரம்பித்தது. அவினாஷும் அனன்யாவும் உற்சாகத்தில் ஏதேதோ பேச, பாட, ஆட, அவர்கள் பாதுகாப்பை உறுதிசெய்தவாறே அவர்களுக்கு முழுமையாக ஈடுகொடுத்தாள் மஞ்சு. ஜூல்ஸ் வெர்ன் அடிக்கடி அவர்கள் பேச்சில் அடிபட்டார்.இன்னும் சில நிமிஷங்களில் பலூனைப் பூமியோடு பிணைத்த கயிறு வெட்டப்படும்… காற்றோடு பயணம் போகலாம்… கீ….ழே… உலகம் ஒரு 3-டி புகைப்படம்போல் விரியும்… ஆறுகள் சில்வர் புழுக்களாய் நெளியும். வீடுகளெல்லாம் பொம்மைகள்போல்… புல்வெளிகளும் வயல்களும் விதவிதமான பச்சையில் கம்பளங்கள்போல்…

இறைவனுக்கு உலகம் இப்படித்தான் தெரியுமோ என்று மஞ்சு ஒருகணம் எண்ணினாள். வானத்தை நெருங்க நெருங்க நமக்கே கடவுளர் போன்று உணர்வு தோன்றுகிறதே, அதனால்தான் கடவுளர்க்கு வீடு வானம் என்று வைத்தார்களோ? இங்கே என்ன ஒரு சக்தியை உணர முடிகிறது! அப்சொல்யூட் பவர்… முழுமையான சக்தி…அவள் எண்ணத்தின் பைத்தியக்காரத்தனத்தை உணர்த்துவதுபோல் பலூன் கூடை சடாரென்று குலுக்கிப் போட்டது. கீழே சில அங்குலங்கள் இறங்கியிருந்தது.”என்ன ஆச்சு மம்மி? பலூனைக் கீழே இறக்கறாங்களா?” அனன்யா பயக்குரலில் கேட்டாள்.மஞ்சு கீழே பார்த்தாள்.பலூன் கம்பெனியைச் சேர்ந்த யாரும் அங்கே இல்லை. சற்றுத் தொலைவில் தெரிந்த பெட்டிக்கடை போன்ற தற்காலிக அமைப்பில் இயங்கிக் கொண்டிருந்த சிறு கடையின் வெளியே விக்கி தெரிந்தான். டீயோ காப்பியோ அருந்திக் கொண்டிருக்கலாம்.இந்த எண்ணங்கள் அவள் மனதில் மோதுவதற்குள் பலூன் மேலும் பல அங்குலங்கள் உயரமிழந்தது

.”மம்மி…” என்றான் அவினாஷ் பீதியாய்.மஞ்சு மேலே பார்த்தாள். என்ன காரணத்தாலோ பலூன் இளைத்துக் கொண்டிருந்தது. உள்ளிருந்த ஹீலியம் தடைகளை மீறிக் காதலனைத் தேடிச் செல்லும் காதலிபோல காற்றுவெளியில் கலந்துகொண்டிருந்தது.மஞ்சு தன் கைப்பைக்குள் கைவிட்டு ஒரு சிறு குழாயை எடுத்தாள். “பயப்படாதீங்க” என்று சொல்லி, குழாயிலிருந்த விசையை இழுத்தாள்.விர்ரென்று மின்னல் கீற்றுப் போல் குழாயிலிருந்து கிளம்பிய ஒளி, வானிலேறி பளீரென்று ஒளிசிதறல்களாய் மின்னி மறைந்தது.யாரோ மேலே நடப்பதைக் காட்டிக் குரல் கொடுக்க, விக்கி சடேரென்று திரும்பினான்.*****உடனே க்ரவுண்ட் நெட் எழுப்பப்பட்டு, முதலுதவிக்குத் தேவையான உபகரணங்களும் மருந்துகளும் தயார் செய்யப்பட்டு, ஒரு குழுவே கவனமாக வேலை செய்து பலூனிலிருப்போர் பாதுகாப்பாக நெட்டில் விழுமாறு செய்து, ஆக்ஸிஜன் மாஸ்க்குகள் மாட்டப்பட்டு, சிராய்ப்புகளும் மற்ற காயங்களும் மருந்து தடவப்பட்டு…மஞ்சு கூடாரத்திலிருந்த படுக்கையில் படுக்க வைக்கப்பட்டாள். அருகிலேயே சாய்வு நாற்காலிகளில் அவினாஷும் அனன்யாவும்.”மஞ்சு” என்று அலறிக் கொண்டு அரைமணி நேரத்திற்குள் ஓடி வந்துவிட்டான் ரமேஷ்.

5 spots to enjoy a hot air balloon ride in India | Times of India Travel

“ரமேஷ்!” – முகம் மலர்ந்தது மஞ்சுவிற்கு.”என்னம்மா ஆச்சு? எதையாவது பண்ணித் தொலைக்காதேன்னா கேட்கறியா?” கவலையும் கோபமுமாக மஞ்சுவைக் கடிந்து கொண்டான் ரமேஷ்.”ஒண்ணுமில்லை ரமேஷ். மேலிருந்து கீழே பாராசூட் இல்லாம குதிச்சோம், அவ்வளவுதான்” என்று சொல்லிச் சோகையாய்ச் சிரித்தாள் மஞ்சு.அவர்களைப் பேச விட்டுவிட்டு கூடாரத்தின் வெளியே வந்தார்கள் அவினாஷும் அனன்யாவும். விக்கி பலூனை ஆராய்ந்து கொண்டிருப்பதைக் கண்டதும் அவனருகில் சென்றார்கள்.”என்ன விக்கி, என் அம்மா எவ்வளவு ஸ்போர்ட்டிவ்வா உன்னுடைய பலூனில் பயணம் செய்ய ஒத்துக்கிட்டாங்க. கொரோனா விழிப்புணர்வு வாசகங்களும் படங்களும் கொண்டதுன்னு சொன்னதும் உடனே ஒத்துழைப்புக் கொடுத்தாங்க. நீ பலூனை நல்லா டெஸ்ட் பண்ணியிருக்க வேண்டாமா? அம்மா முன்னெச்சரிக்கையா அந்த ஃப்ளேரைக் (flare) கொண்டு வந்திருக்காட்டி என்ன ஆகியிருக்கும்?” என்று கடிந்துகொள்வதுபோல் பேசினான் அவினாஷ்.விக்கி மெதுவாகத் திரும்பி அவினாஷை நோக்கினான்.

“என்ன அவினாஷ், நீ என் தம்பியோட ஃப்ரெண்ட். எனக்கும் தம்பி மாதிரி. உனக்கு இத்தனை பெரிய ஆபத்தை நான் ஏற்படுத்துவேனா? எல்லா உபகரணங்களையும் டபிள் செக் பண்ணிட்டுத் தாண்டா உங்களை எல்லாம் ஏற்றிவிட்டேன். அதான் பலூனைப் பார்த்துட்டிருக்கேன், எங்கே ப்ராப்ளம்னு. என் கண்ணை என்னாலேயே நம்ப முடியல…” என்று இழுத்தான்.”என்ன விஷயம்? எங்கே ப்ராப்ளம்? சொல்லு விக்கி அண்ணா” என்றாள் அனன்யா, அவன் முகபாவம் புரிந்தவளாய்.”இங்கே பாருங்க” என்று பலூனின் அடிப்பகுதியில் ஒரு ஓட்டையைக் காட்டினான் விக்கி. “இது தானாய்க் கிழிஞ்சது இல்லை. யாரோ மெல்லிய ஓட்டை ஒண்ணைப் போட்டிருக்காங்க. அது காற்றழுத்தம் தாங்காமப் பெரிதாகியிருக்கு. நல்ல வேளை, பலூன் ஃப்ரீயா மிதக்க ஆரம்பிச்சு அதற்கப்புறம் இந்தப் ப்ராப்ளம் வந்திருந்தா, எங்களால் உங்களைக் காப்பாற்றியிருக்க முடியாது. நல்லவேளை, இங்கிருந்து பலூன் மிதந்து செல்லும் முன்பே, பிரச்சனை வந்துவிட்டது, நாங்களும் கவனிச்சுக் காப்பத்திட்டோம். இல்லேன்னா…” உடல் சிலிர்த்தது விக்கிக்கு.

“எங்க கம்பெனி வளர்ச்சியைப் பொறுக்காத யாரோதான் இதைச் செய்திருக்கணும்.”அனன்யாவும் அவினாஷும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்கள் தலைகள் விக்கி சொன்னதை மறுப்பதைப்போல் ஆடின.1.2 சதுரா துப்பறியும் நிறுவனம்.ஆபீஸுக்கு வந்து சேர்ந்த தர்மா, வெளியே காத்திருந்த இருவரையும் பார்த்துப் புன்னகைத்தான். “குட். சொன்னபடி கரெக்ட் டைமுக்கு வந்துட்டிங்களே!” என்றவாறே அலுவலகத்தைத் திறந்தான். அதே நேரத்தில் தன்யாவும் தர்ஷினியும் மொபெட்டில் வந்து இறங்கினார்கள்.ஸானிடைஸர் சாங்கியங்களில் ஐந்து நிமிடங்கள் கரைத்து, எல்லோரும் தர்மாவின் அறையில் அமர்ந்தனர்

.”சொல்லுங்க. உங்க பேர் அவினாஷ், அனன்யா என்பதற்கு மேல் எனக்கு எதுவும் தெரியாது” என்று தர்மா பேச்சை ஆரம்பித்தான்.”சார், நாங்க இங்கே வேளச்சேரியில்தான் இருக்கோம். தினமும் ஸ்கூலுக்குப் போகும்வழியில் வேன் ஜன்னல் வழியா உங்க ஏஜன்சி போர்டைப் பார்த்துட்டேதான் போவோம்” என்றான் அவினாஷ்.”அதான் இந்த அசம்பாவிதங்கள் எல்லாம் நடக்கும்போது உங்களிடம் உதவி கேட்கலாம்னு தோணிச்சு” என்றாள் அனன்யா.”முதல்ல உங்க அட்ரஸ், அம்மா அப்பா பெயர் எல்லாம் சொல்லுங்க” என்றாள் தர்ஷினி. அவர்கள் சொல்லச் சொல்லக் குறித்துக் கொண்டாள்.

“அடடே! உங்க அம்மா மஞ்சள்பை சூப்பர்மார்க்கெட்ஸோட ப்ரொப்ரைட்டரா?” என்றாள் தன்யா ஆச்சரியமாய்.”ஆமாம். எங்க அம்மா பேர்ல மஞ்சு சூப்பர்மார்க்கெட்ஸ்னுதான் எங்க தாத்தா ஆரம்பிச்சார். தாத்தா ஆன்மீகத்தில் இன்ட்ரஸ்ட் வந்து நிர்வாகத்திலிருந்து விலகிக் கொண்டார். எங்க அம்மா அதைப் பல வருஷங்களா நடத்திட்டு இருக்காங்க. ஆறு வருஷத்திற்கு முன்னாடி அதை ஆன்லைனா ஆக்கி, சென்னை முழுவதும் டெலிவரி கொண்டுவந்து விரிவாக்கினப்போ, லோக்கல் உணர்வு இருக்கணும்னு மஞ்சள்பைன்னு அம்மா பேர் மாத்தினாங்க” அனன்யா பெருமையாகக் கூறினாள்.”சரி, இப்போ உள்ள பிரச்சனைக்கு வருவோமா?” என்றாள் தன்யா.”என் அம்மாவை யாரோ கொல்லப் பார்க்கறாங்க” என்றான் அவினாஷ் படாரென்று.தர்மாவுக்குத் தூக்கிவாரிப் போட்டது

. “குழந்தைகளா, விளையாட்டு விஷயமில்லை இது” என்று எச்சரித்தான்.”நாங்க குழந்தைகள் இல்லை. எங்களுக்குப் பதினைந்து வயதாச்சு. விஷயங்களைப் பார்த்துப் புரிஞ்சுக்கற அறிவு எங்களுக்கு வந்தாச்சு. ப்ளீஸ், எங்களைக் கைக்குழந்தைகள் மாதிரி நடத்தாதீங்க” என்றான் அவினாஷ் சற்றுக் கோபமாக.”கூல், கூல். முதல்ல நடந்த சம்பவத்தை விவரமா சொல்லுங்க. அது கொலை முயற்சியா இல்லையாங்கறதை நாங்க சொல்றோம்” என்றாள் தன்யா.அவினாஷும் அனன்யாவும் மாறிமாறி இராட்சத பலூன் கீழே விழ இருந்த நிகழ்வை விளக்கிச் சொன்னார்கள்.”அந்த மானேஜர் சொன்ன மாதிரி இது அவருடைய எதிரிகள் செய்த வேலையா இருக்கலாமில்லையா? ஏன், ஆக்ஸிடெண்டா கூட இருக்கலாம்” என்றாள் தன்யா. “என்ன காரணத்தினால இது உங்க அம்மாவைக் கொல்ல நடந்த முயற்சின்னு சொல்றீங்க?” என்று கேட்டாள்

.”இது நிச்சயம் ஆக்ஸிடெண்ட் இல்லை மேம். விக்கி அதைக் கன்ஃபர்ம் பண்ணிட்டான்” என்றாள் அனன்யா. “அப்புறம் இது என் அம்மாவைக் கொல்லப் பண்ணின சதிதான்னு ஏன் சொல்றோம்னா…” சற்றே இடைவெளிவிட்டுத் தொடர்ந்தாள் “…இது முதல் முயற்சி இல்லைங்கறதால!””வாட் டூ யூ மீன்? உங்க அம்மாவைக் கொல்ல ஏற்கெனவே…””யெஸ். முதல்முறை… என் அம்மா மத்தியானம் சாப்பிட்டு ஒருமணி நேரத்திலெல்லாம் மயங்கி விழுந்துட்டாங்க. எங்க வீட்ல நான்-வெஜிடேரியன் சாப்பிடும் பழக்கம் உண்டு. மாமிசத்தில் ஏதோ அசுத்தம் இருந்திருக்கலாம்னும் அது ஃபுட் பாய்சன் ஆகியிருக்குன்னும் டாக்டர் சொன்னார். எங்க யாருக்கும் ஒண்ணும் செய்யாம, அவங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அஃபெக்ட் ஆகும்? மயக்கம் தெளிஞ்சதும் ஒரே வாந்தி, வாயில் ஏதோ உலோகச் சுவை, தலைசுற்றல்…””சுருக்கமாக, ஆர்சனிக் விஷ பாதிப்பின் எல்லா அறிகுறிகளும்” என்றாள் தர்ஷினி அவளுடைய மென்மையான குரலில்.

அவினாஷும் அனன்யாவும் அவள் பக்கம் திரும்பினார்கள். “யெஸ் மேம்” என்றார்கள் வியப்புடன்.”கூகுள்ல தேடினீங்களா?” தர்ஷினியே தொடர்ந்தாள்.”யெஸ் மேம்.””அப்புறம் என்னாச்சு?””என் அம்மாவுக்கு ஸ்டாமினா, மனோதிடம் எல்லாமே ஜாஸ்தி. பிழைச்சு வந்துட்டாங்க. டாக்டர் ஏதோ தப்புப் பண்ணறார், சரியா டயக்னோஸ் பண்ணலைன்னு நினைச்சுதான் கூகுள்ல தேடினோம். ஆனா கிடைத்த தகவல்கள் ரொம்ப அதிர்ச்சியாகவும் பயமாகவும் இருந்ததால, யாரிடம் எப்படிச் சொல்லன்னு தெரியல” என்றான் அவினாஷ்.”தொடர்ந்து இந்தப் பலூன் சம்பவம், இல்லையா?””நடுவில் வேறொன்றும் நடந்தது. நாங்க ஒரு புது வீடு கட்டிட்டிருக்கோம். அதைப் பார்க்கறதுக்காகப் போயிருந்தோம். அங்கே கைப்பிடி இன்னும் மாட்டாத பாலகனியிலிருந்து அம்மா விழப் போனாங்க. நல்லவேளை, பக்கத்திலேயே இஞ்சினியர் இருந்ததால, சட்டுன்னு பிடிச்சுட்டார். நாங்களும் சேர்ந்து கைகொடுத்துத் தூக்கிவிட்டுட்டோம்” அவினாஷ் சொல்ல, அனன்யா தொடர்ந்தாள். “இதுவும் விபத்துன்னு சொல்வீங்க. நாங்க அம்மா இறங்கிப் போனதும் அந்த இடத்தைக் கவனிச்சுப் பார்த்தோம். எண்ணை மாதிரி ஏதோ வழுக்கற பொருள் அங்கே தடவப்பட்டிருந்தது

!”தர்மாவின் முகம் சுருங்குவதைத் தன்யாவும் தர்ஷினியும் கவனித்தார்கள்.”இதையெல்லாம் ஏன் உங்க அம்மாகிட்டச் சொல்லல?” என்று கேட்டான் தர்மா.”அவங்க குணம் உங்களுக்குத் தெரியாது சார். ரொம்பப் பாசிட்டிவ் பர்ஸன். நாங்க சொல்றதை உதறித் தள்ளிட்டு அடுத்த வேலையைக் கவனிக்கப் போயிடுவாங்க.””ம்… உங்க அப்பாகிட்டயாவது சொல்லியிருக்கலாமே. அவர் போலீஸ் உதவியை நாடியிருப்பார். ஏதாவது செய்திருப்பார். ஏன் எங்களைத் தேடி…””அப்பாகிட்ட எப்படிச் சொல்றது?” இடைமறித்தான் அவினாஷ். “இந்தக் கொலைமுயற்சிகளே அவர்தான் செய்யறார் என்னும்போது!”

(தொடரும்)

வாழையடி வாழை!

எழுத்தாக்கம்: ரமேஷ். சென்னை.

வாழையடி வாழை
தென்னை -பனை – கற்ப்பிக்கும் ஒற்றுமை

தென்னை

ஓர் ஊரில் ஒரு குடியானவன் பயிர்கள் பல செய்து வாழ்ந்து வந்தான்.
நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மிகவும் சிறப்பாக செழுமையாக குடும்பத்துடன் ‌வாழ்ந்து வந்தனர்.

பிள்ளைகள் 6
3 பெண் 3 ஆண்
புதியதாக ஒர் வீடு கட்டி…வீட்டை சுற்றி தோட்டமும் அமைத்தனர்..

வீட்டின் முன்புறம் வேப்பம் நெல்லி பாரிஜாதம் நித்ய மல்லி கொடியும்….

வீட்டின் வலதுபுறம் பூச்செடிகளும்… வீட்டின் இடது புறம் மா பலா கொய்யா மாதுளை பப்பாளி போன்ற மரங்களை நட்டனர்..

அதிகம் நீர்வளம் சூரிய ஒளி தேவையான வாழையை வீட்டின் கொல்லைப்புறம்….குளிக்கும் நீர் பாத்திரம் சுத்திகரிப்பு செய்து நீர் சேருமாறு வாழையை நட்டனர்..

மீதம் இருந்த தென்னை பனை எங்கே நடலாம் என்று யோசித்து விட்டு சுற்றி முற்றி பார்த்து வந்தனர்..

அப்போது அதிசயமாக வாழை பேசியது..

ஐயா எஜமானரே…
யார் யார் என்னை அழைத்தது..

வாழை நான் தான் பேசுகிறேன் ஐயா..

எஜ..என்ன அதிசயம் வாழை பேசுகிறதே..

வாழை…. நீங்கள் எங்களை பூஜைக்கு பயன்படுத்தி கடவுளுக்கு இணையாக எங்களை போற்றுவதால்…கடவுள் எங்களுக்கு பேசும் வரம் தந்தார்…

எஜமா…சரி என்ன விஷயம் எதற்கு என்னோடு பேச விழைந்தாய் வாழையே….

வாழை… நீங்கள் அனைத்து மரங்களையும் நட்ட விதம் அருமை.. வீட்டிற்கு பயன்படும் நாங்கள் எப்போதும் உங்களுக்கு உதவியாகவும்‌ ஆரோக்கியமாகவும் இருப்போம்…எங்களை போன்ற சிறிய பயிர்களை வீட்டில் வளர்க்கும் உங்களுக்கு மிக்க நன்றி‌ என கூறியது.

எஜமானுக்கு ஒரே சந்தோஷம்..

சரி சரி..நான் உங்கள் அனைவரையும் பிள்ளை போல் பாவித்து பத்திரமாக வளர்க்கிறேன்…கைமாறு எதுவும் எண்ணி அல்ல மன நிம்மதி மற்றும் சுற்றுச்சூழல் பேணவும் வளர்க்கிறேன் என்றார்..

வாழை…அட அடா என்ன ஒரு நல்ல எஜமானர்….நமக்கு நல்ல நீரும் ஆகாரமும் வெயிலும் இங்கு உறுதியாக கிடைக்கும்…என் மனதில் நினைத்து கொண்டது..பின் எஜமானரிடம்…ஐயா எதற்கு பின்னர் யோசனையாக இருக்கிறீர் என்று கேட்டது.

எஜமானர்..அது வேற ஒன்னும் இல்லை..எல்லா மர செடி கொடி மூலிகை வேர் நட்டுவிட்டே‌….ஆனா இந்த பனை தென்னை வைக்க இடம் தேடுற அகபடலை என்றார்..

முதல் மகள் : அப்பா நா சொல்ற இடத்துலே வைங்க அங்க நல்லா வளரும்….வாசல்ல இரண்டு தென்னை கொல்லை ல இரண்டு பனை என்றாள்..

தந்தை… இல்லை மகளே..தென்னை வேர் அதிகம் அகலமாக வேர் செல்லும் நீரை தேடி அதனால் பின்புறம் கிணற்று பக்கமாக வைக்கலாம் என்றார்..

2வது மகன் : ஆம் தந்தை யே‌ நீங்கள் கூறுவது சரி .. ஆனால் நாம் அந்த பக்கம் வாழை நட்டுவிட்டோமே‌‌..இப்போது என்ன செய்வது என்றான்.

தந்தை..ஆம் நானும் அதை பற்றி தான் யோசிக்கிறேன்..

3வது மகன் : கவலை வேண்டாம் தந்தை யே‌ நாம் இந்த வாழையை‌ இன்னொரு காணி இடம் வாங்கி தனியாக தோப்பு வைத்து வளர்க்கலாமே… ஆனால் பனை தென்னை வீட்டில் வைக்கலாம் என்றான்.

தந்தை..நல்ல யோசனை தான்

1வது மகள்..இல்லை தந்தை யே‌ நாம் வேண்டுமானால் பனையை வீட்டின் வெளியேயும் ….தென்னைக்கு தனியாக கோப்புப் வைக்கலாம்..

வாழை இலங்கையே இருக்கட்டும் என்றாள்

தந்தை.. இதுவும் சரியாக தான் உள்ளது.

4/5 வது மகள் இருவரும்‌…ஆமா ஆமா தந்தை யே அக்கா கூறுவது சரியே…நாம் அப்படியே செய்யலாம் என்றனர்..

தந்தை இப்போது மூத்தமகனிடம் ஆலோசிக்க திரும்பினார்..

2வது மகன் உங்கள் இஷ்டம் தந்தை யே‌ ..நன்றாக யோசித்து நடுங்கள் நான் பள்ளிக்கு செல்கிறேன் என கிளம்பிவிட்டான்..

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த வாழை …மூத்த மகளை ரகசியமாக அழைத்து…நீ கூறுவது தான்‌ சரி..நான் எப்போதுமே நன்றியாக இருப்பேன்.. உங்களுக்கு சாப்பிட இலை கனி வாழைகாய் வாழைப்பூ வாழைதண்டு‌னெ பல விதங்களில் உதவுவேன்..என்ன உங்களிடம் நீரை அதிகம் உறிஞ்சி கொள்வேன்‌ மற்றபடி என்னால் உங்களுக்கு நிறைய லாபம் என்றது…

மூத்த மகளுக்கு ஒரே ஆனந்தம்..அடடா நம்மை பாராட்டி பேசுகிறதே..இந்த வாழையை எப்படாயாவது‌ வீட்டிலே வைத்துவிட்டு..எதுவும் பேசாமல் ‌இருக்கும் தென்னை பனை இரண்டையும் தனிமையில் வெளியே ஒதுக்கிவிட்டு விடுவோம் என யோசித்தால்

தந்தை..என்ன யோசிக்கிறாய் செல்லமகளே என்றார்..

மகள்..ஒன்றும் இல்லை தந்தை யே‌.. நீங்கள் நான் கூறுவதை கேட்கவா போகிறீர்கள் ன சலித்து கண்ணில் சிறிது நீர் வடித்தால்..

தந்தை..அட என் செல்லமே என்ன சொல்லனுமோ சொல்‌ நீ என் கண்ணுகுட்டி உன் பேச்சை தட்ட மாட்டேன் என்றாரா.

மகள்..அது வந்து அப்பா‌இந்த வாழை வைத்தால் நமக்கு இலை பூ காய் பழம் மற்றும் அதன் தண்டு என‌ பல பயன் உண்டு.. ஆனால் இந்து தென்னை பனை இரண்டும் சிறிதே பயன்தரும்.. அதனால் நாம் தென்னை பனை வீட்டின் வெளிப்புறம் தோப்பு அமைக்கலாம் என்றாள்..

தந்தை..அட ராசாத்தியே…நாம் செய்யும் காரியத்தில் பயன் எது அதிகம் பயன் எது சிறிது என காரியதனமாக இருக்கக்கூடாது.. அனைத்தும் ஒன்றோடு ஒன்று பிணைந்தது… தனி ஒரு வளர்ச்சி சரியாகாது… சுற்றுச்சூழல் பாதுகாப்பு முக்கியம்‌ என்றார்..

தென்னை மழைகாலத்தில் நில்லத்தடி நீர் சேமித்து பூமிக்கு அவசியம்..அதேபோல் பனை‌ வேர்‌ ஆழ்ந்து சென்று நிலத்தடி‌ நீரை மேலே கொண்டு வரும் அதனால் அதுவும்‌‌ பூமிக்கு முக்கியம்..வாழை நீரை நம்மிடம் இருந்து பெற்று இருக்கும் ஆனால் நீரை சேமிக்க‌ இயலாது..அதே சமயம் வாழையடி வாழையாக அதீத பயன்‌ தரும்…தென்னை பனை பயன்களும் நிறைய‌உண்டு‌ பல காலம் கடக்கும் என்றார்.

மூத்த மகள்…எனக்கு தெரியும் தந்தையே‌ நீங்கள் உங்கள் மகன் இருவரின் ஆலோசனை தான் கேட்பீர்கள் ‌என்று ஓ ராமா என கூப்பாடு போட்டு அழ ஆரம்பித்தாள்..

தந்தை.. கவலை வேண்டாம்.. சரி சரி..நீ கூறுவது போலவே தென்னை பனை வெளியே படுகிறேன்..வாழை இங்கே இருக்கட்டும் என்றார்.

மூத்த மகள்..ஆனந்த கூத்தாடினாள்..

வாழை.. அப்பாடா ஒரு வழியா தென்னை பனை வெளியே தனியா விட்டாச்சு..இனி‌ நமக்கு தான்‌ அனைத்து நீரும் ஆகாரமும்..என் சந்தோஷமாக வளர்ந்து குலை தள்ளி பல வாழைகண் முளைத்து 1 மர்ம 30 மரங்கள் ஆனது..எப்போதும் வீட்டில் வாழைபழம்‌ பஞ்சம் இல்லை..வாழை உணவுகள் என சென்றது.

மூத்த மகள்.. தந்தை யே‌ பார்த்தீங்களா நான் சொன்ன மாதிரி வைச்சதாலே இவ்வளவு லாபம் பாருங்கள் என்றாள்..
தம்பிகள் கூறிய தென்னை பனை ‌இன்னும் சிறிது கூட பயனளிக்கவில்லை என்று அங்கலாய்த்து கொண்டாள்..

வருடங்கள் சென்றது..

மூத்த மகள் திருமணம் சிறப்பாக நடந்தது..தடபுடலாக..
வாழை வகைகள் விருந்து பிரம்மாண்டம் என் ஊரே போற்றியது..

மங்களகரமாக இருபது வாழை மரங்கள் வெட்டி வாசலில் பந்தல் முன் கட்டினர்..
தென்னை மர ஓலையில் பந்தல் வேய்ந்து இளநீர் நுங்கு தோரணம் கட்டினர்..

பின் சில வருடம் சென்றது.. இரண்டு மகளுக்கும் திருமணம் அதேபோல் சிறப்பாக நடைபெற்றது..

மறுமாதம் இரண்டு மகன்களுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது

மூத்த மகள் இப்போது நிறைமாத கர்ப்பிணி யாக தந்தை வீட்டிற்கு வந்தாள்..

அந்த சமயம் மழை பொய்த்து.. பயிர்கள் சுத்தமாக விளையாமல் வெயிலில் கருகியது..

நாட்கள் சென்றுது…
குழந்தை பிறந்தது..
வீட்டில் உற்சாகம் பொங்கியது..

ஒரு வருடம் சென்றது

ஆனால் இப்போது மழை இல்லாததால் வாழைகளும் திருமணங்களுக்கு வெட்டியதால் மீதம் 5 மட்டுமே உள்ளன..

விவசாயத்தில் போதிய வருமானமும்‌ இல்லை..

வீட்டில் அடுத்த வேளை உணவுக்கு பஞ்சம்..

பெண் பிள்ளைகள் கட்டி கொடுத்த‌ ஊரிலும் பஞ்சம்…செய்வதறியாமல் தந்தை வீட்டிற்கு அனைவரும் வந்து சேர்ந்தனர்

தந்தை வீட்டில் ஊரே ஆச்சிரியபடும் அளவில் வசதி..நல்ல வருமானம்..

மகள்கள் அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது..

தந்தையிடம் கேட்டனர் சுத்துபட்டி எல்லா கிராமமும் பஞ்சம் பட்டினி நீங்கள் மட்டும் எப்படி ‌இவ்வளவு ஆனந்தமாக வாழ்கிறீர்கள் என்று..

தந்தை..அதுவா மகளே…நான் முன்னே ஒருமுறை கூறினேன் அல்லவா.. பயன் கருதி யாரையும் தனியாக ஒதுக்கி விட முடியாது என்று…அன்று நீ பனை தென்னை வீட்டில் வேண்டாம் என வெளியே வைக்க சொன்னாய்..அந்த பனையும் தென்னையும் தான் இப்போது நம் குடும்பத்தை வாழவைக்கிறது.. வருடங்கள் செல்ல செல்ல பல தென்னை பனை கன்றுகள் நானும் மகனும் பயிர் செய்தோம்..

இன்று அதன்மூலம்..நமது நிலத்தில் நிலத்தடி நீர் குறையாமல் பார்த்து நன்றாக வளர்ந்து இளநீர் பனைகுறுத்து‌ கிழங்கு நுங்கு விசிறி துடைப்பம் பந்தல் போட ஓலை…என் பல வழிகளில் லாபம் தந்தது..

நம் கிராமத்தில் நம் வீட்டில் மட்டுமே வாழைகளும் கூட இவர்கள் மூலம் பெற்ற நிலத்தடி நீரால் 5ல் இருந்து 10 ஆக பெருகியுள்ளது..

இப்போது புரிந்ததா.. எதையும் லாப கணக்கிலும்‌ அனுககூடாது என்று..

மகள்களும் தவறை உணர்ந்து வருந்தினர்..

தந்தை…இதைப்போல தான் வாழ்க்கையும் மகளே..நான் சொல்வதே சரி இவர்கள் மூலம் அதிக பயன் அவர்களால் பிரயோஜனம் இல்லை என‌ யாரையும் தனியாக ஒதுக்கி விட முடியாது…அனைவரரிடமும் ஒரே நிலையான அன்பு வைத்து ஒன்று கூடி வாழ்ந்தால்..இன்பமான வாழ்க்கை பல கோடி காலம் நிலைக்கும்..

என் உறவுகள் மேன்மையும் எடுத்து கூறினார்.

மனம் திருந்திய மகள்கள்..அனைவரும்.. பாசமிகு சகோதரர்களிடம் சமமாக அன்பு காட்டி சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர்.

கருத்து…

இக்கால கட்டத்தில் பிறரிடம் காரியமாக இருவேடமிட்டு ஆசையாக பேசியும்..அதிகம் அன்பு வார்த்தை பேச தெரியாமல் பிறரிடம் நற்பெயர் வாங்க தெரியாதவர்களை ஒதுக்கி…தானே அதிகாரம் அந்தஸ்து பெறலாம்…. ஆனால் வாழையைப்போல் ஒர் கதி ஏற்படும்..

பனை தென்னை காலம் உயரும் போது..வாழை அவற்றின் நிலத்தடி நீருக்கு நிற்பது போல சூழலை உருவாக்காமல்….எப்போதும் இணைந்து ஒரே இடத்தில் கூதுகலமாக சரிசமமாக இருந்தால்…பலன்களும் பல கோடி தானே..

😇😇😇🙂🙂😄😄

நாடகமே உலகம்!

நாடகமே உலகம்!

    நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

 ஈ.சி.ஆர் ரோட்டில் அமைந்திருக்கும் அந்த விடுதியில் வண்ண வண்ண விளக்குகள் ஒளிர்ந்து அணைந்து கொண்டிருக்க இளம் நடிகை சஞ்சனா கண்களில் போதை மின்ன தன் காதலன் இயக்குனர் அம்ரேஷ் வர்த்தனுடன் ஆடிக்கொண்டிருந்தாள்.

உடன் ஆடிக்கொண்டும் இருக்கைகளில் அமர்ந்து உயர்ரக மது பானங்களை சுவைத்துக் கொண்டும் இருந்த முக்கால்வாசி நபர்களின் பார்வை அவர்களையே 24*7 ஆகச் சுற்றி வந்தது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் வளைந்தும் நெளிந்தும் சுழன்று ஆடிய சஞ்சனா அப்படியே வந்து அம்ரேஷ் கழுத்தில் கை போட்டுஇழுத்து அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.

அப்போது எங்கிருந்தோ ஒரு ப்ளாஷ் ஒளி மின்ன  அம்ரேஷ் கண்களில் ஆவேசம் பொங்கியது.

”ஹூ ஈஸ் திஸ் நான்சென்ஸ்! எவண்டா எங்களை படம் எடுத்தது?” மரியாதையா மெமரிகார்டை கொடுத்திடு.”.என்று கர்ஜித்தான்.

”அம்ரேஷ்! காம் டவுன்? ஏன் இப்படி நடந்துக்கிறே? எடுத்துட்டு போட்டமே?”

 ”நீ சும்மா இரு சஞ்சு! இந்த போட்டோவை பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா கிராம்னு போட்டு அவன் லைக்ஸ் அள்ளுவான்! அவன் யானைப்பசிக்கு நாம சோளப்பொறியா?”

 ”அட உனக்கு தமிழ்ப் பழமொழி எல்லாம் கூட தெரியுது!” சிரித்தாள் சஞ்சனா.

”எல்லாம் கதை சொல்ற அஸிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்கிட்டே கத்துக்கிட்டதுதான்”!

 இதற்குள் படம் எடுத்தவன் நைஸாக நழுவ முயல அவனை அப்படியே தாவிப் பிடித்து ஓர் அறைவிட்டான் அம்ரேஷ்.

”சொல்லிக்கிட்டே இருக்கேன்! நீ பாட்டுக்கு போய்க்கிட்டிருக்கே ராஸ்கல் அந்த போட்டோவை டெலிட் பண்ணு! இல்லேன்னா மெமரி கார்டை கொடு!”

”நான் ஏன் சார் கொடுக்கணும்! இது ப்ப்ளிக் ப்ளேஸ்! இங்கே நீங்க கொட்டம் அடிக்கிறீங்க கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம? அதை நான் போட்டோ எடுத்தா என்ன தப்பு”?

 ” தப்புதாண்டா! ப்ப்ளிக் ப்ளேசா இருந்தாலும் எங்களோட ப்ரைவசியிலே நீ தலையிட என்னடா உரிமை இருக்கு?”

  ”எது? இதுவா உங்க ப்ரைவசி? ஹாஹாஹா!” அவன் சிரிக்க

அம்ரேஷுக்கு கோபம் அதிகமானது. ”டேய்! வேணாம்!  முதல்லே டெலிட் பண்ணு”! உரக்கக் கத்தினான்.

இப்போது எல்லோர் பார்வையும் அவர்கள் மேல் பதிய சஞ்சனா சங்கடமாய் உணர்ந்தாள்.

 ”அம்ரேஷ்! ப்ளீஸ் லீவ்! அவனை விட்டுரு! எல்லோரும் பார்க்கிறாங்க! எனக்கு வொர்ரியா இருக்கு”.. கிசுகிசுப்பாய் சொன்னாள்.

  ”பார்க்கட்டும்! நம்ம ப்ரைவசியை போட்டோ எடுக்க இவன் யார்? அட்லீஸ்ட் ஒரு சாரி கேட்கட்டும் விட்டுடறேன்”.

  ”ப்ளீஸ் ஒரு சாரி சொல்லிடுங்க! பிரச்சனையை இத்தோட முடிச்சுப்போம்!” சஞ்சனா அவனை கெஞ்சலாக பார்க்க.

 ” என்ன மேடம்? நீங்க டைரக்டருக்கு ஆதரவா பேசறீங்க? அவரு பெரிய டைரக்டரா இருக்கலாம்! ஆனா என்னை கைநீட்டி அடிச்சிருக்காரு! இதை விடமாட்டேன். ஆயிரம் கண்ணுங்க நீங்க டேன்ஸ் பண்ணதை பார்த்த்து. ஆயிரத்தோராவது கண்ணா என் கேமிரா பார்த்த்து அதிலே என்ன தப்பிருக்கு! வேணும்னா சார் மன்னிப்பு கேட்கட்டும் பதிலுக்கு நானும் மன்னிப்பு கேட்கறேன்.”

  ”டேய்! என் கோபத்தை கிளறாதே! மரியாதையா சாரி கேட்டு அந்த போட்டோவை டெலிட் பண்ணு! இல்லே நடக்கிறதே வேற..”

 ”சார்! மரியாதை…குறையுது! அப்புறம் நானும் இஷ்டத்துக்கு பேசுவேன்.”

”என்னடா இஷ்டத்துக்கு பேசுவே!  கொஞ்சம் கூட சென்ஸ் இருக்கா உனக்கு!  நடிகையை படம் பிடிச்சுப் போட்டு லைக்ஸ் வாங்கற பயல்..”

”டைரக்டர் சார் நீங்களும் வார்த்தையை அளந்து பேசுங்க! எனக்கும் பேசத்தெரியும்!”

 ” என்னடா பேசுவே?” எகிறி மீண்டும் ஒரு அறைவிட்டான் அம்ரேஷ்.

”பொறுக்கி ராஸ்கல்! பிழைக்க வந்த பய நீ என்னை அடிச்சிட்டியா? உன்னை விட மாட்டேன்.. இப்ப பாருடா”! என்று  ஒரே செகண்டில் பேஸ்புக்கில் தான் எடுத்த பட்த்தை அப்லோட் செய்தான் போட்டோ எடுத்தவன்.

 சஞ்சனா ”ஒ மை காட்! வேண்டாம்.. வேண்டாம்” எனக் கெஞ்சிக்கொண்டிருக்க

அதற்குள் அங்கே போலீஸ் வந்த்து

  ”சார் என்ன கலாட்டா இங்கே?”

அம்ரேஷ் நடந்த்தை சொல்லி முடிக்க போட்டோ எடுத்தவனை மிரட்டிய போலிஸ் அவனை ஸ்டேஷனுக்கு கூட்டிச் சென்றது.

மறுநாள் இணையதளங்கள் செய்தித்தாள்கள் செய்திச்சேனல்கள் எங்கும்  பஃப்பில் கலாட்டா! இயக்குனர் அம்ரேஷுக்கும் நடிகை சஞ்சனாவுக்கும் காதலா! என்று பரபரப்பாக செய்தி வெளியிட

பார்த்துக் கொண்டிருந்த சஞ்சனா அம்ரேஷுக்கு கால் செய்தாள்.

”டிவிசேனல், பேஸ்புக் டிவிட்டர் இன்ஸ்டா கிராம் எல்லாம் நம்ம மேட்டர்தான் இப்போ வைரலா போய்க் கிட்டிருக்கு பார்த்தியா அம்ரேஷ்.?”

”நம்ம ப்ளான் ஒர்க் அவுட் ஆயிருச்சு!”

”ஆமாம்! தொடர்ந்து மூணு படம் உன்னுது ப்ளாப்! என் மார்க்கெட்டும் டல் அடிக்குது! இப்ப எடுத்திட்டு இருக்கிற படம் எப்படிப் போகுமோன்னு பயந்துட்டிருந்தேன். நல்ல வேளை நீ ஒரு ப்ளான் பண்ணி நம்மளை பத்தி பேச வைச்சிட்டே.. இனிமே நம்ம படம் பிழைச்சிக்கும். நாமும் பிழைச்சிக்கலாம்!” என்றாள் சஞ்சனா.

”ரெண்டே நாள்ல நம்ம படம் ரிலிஸ் பண்ணிடலாம். நம்ம மேட்டர் வைரலா பரவிக்கிட்டிருக்கிறதாலே மக்கள் ஆர்வமா தியேட்டருக்கு வருவாங்க! வசூல் அள்ளும். எப்படியோ அந்த போட்டோகிராபர் நல்லா கோ ஆப்ரேட் பண்ணான்.”

  ”அவனை வெளியே எடுத்திட்டியா?”

”எடுத்தாச்சு! பேசினபடி பேமெண்டும் கொடுத்தாச்சு! இனிமே நம்ம காட்டுல மழைதான்!” என்றான் அம்ரேஷ் சிரித்தபடி!  ”ஆமா! பணமழைதான்!” என்று பதிலுக்கு சிரித்தபடி போனை கட் செய்தாள் சஞ்சனா

பேய் விளையாட்டு!

பேய்விளையாட்டு!

அந்த இடுகாட்டின் வாசலில் தன் காரை நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தான் பிரபல சீரியல் நிறுவனத்தின் தயாரிப்பு நிர்வாகி சாந்தகுமார்.   கார் ஓசை கேட்டதுமே வாசலுக்கு ஓடிவந்தான் வெட்டியான் ஏழுமலை.

”என்ன சார்? அடக்கம் பண்ணனுமா? பாடி எத்தனை மணிக்கு வரும்! டெத் சர்டிப்பிகேட் எல்லாம் இருக்கா? 3000 ரூபா ஆகும் கார்பரேஷன்  பீஸ் தனி அப்புறம் சரக்கு தனியா வாங்கி கொடுத்திடனும்” என்று அடுக்கிக் கொண்டே போக..

கை அமர்த்தி அவன் வாயை மூடும்படி சைகை செய்தார் சாந்தகுமார்.

அவன் கை கட்டி வாய் பொத்த, ”இங்கே வா! நீதான் இங்கே இன்சார்ஜா? உன் பேர் என்ன?”

  ”ஏழுமலைங்க ஐயா!”

”ஏழுமலை! நாங்க ஒரு திகில் சீரியல் எடுக்கிறோம்! நீ கூட மூன் டீவியிலே நைட் பத்துமணிக்கு அதை பார்த்திருக்கலாம்.”

”அதுக்கெல்லாம் எனக்கேதுங்க நேரம் பொணத்தை புதைச்சோமா! கட்டிங் போட்டோமா கவுந்தடிச்சு தூங்கினோமான்னு போய்க் கிட்டிருக்கு பொழுது!”

”சரி போகட்டும்!  அந்த சீரியல்ல ஒரு சுடுகாடு சீன் வருது! இங்கே ஷூட்டிங் வைக்கணும்!”

”சார்! அதெல்லாம் எப்படி சார் நான் பர்மிஷன் கொடுக்க முடியும்? இது தனியாருக்கு சொந்தமான இடுகாடு! அவங்க கிட்டே…”

”அது தெரியாமலேயா வந்திருப்பேன்! உன் கிட்டே நான் பர்மிஷன் கேட்க வரலை! இன்பர்மேஷன் தான் சொல்ல வந்தேன். நாளையிலிருந்து ஒரு வாரத்துக்கு இங்கே நைட் ஷூட்டிங் நடக்க போகுது…”

”சார் அதுக்கு நான் என்ன பண்ணணும்? ” எரிச்சலாய் கேட்டான் ஏழுமலை.

”பார்த்தியா? கோபப்படறே? என்ன இருந்தாலும் சுடுகாடு! நைட் ஷூட்டிங் எங்களுக்கு கொஞ்சம் பயமா இருக்கும்.  நாம ஷூட்டிங் எடுக்கிற ஏரியாவுலே புதுசா ஏதாவது பொணம் வந்து புதைச்சிடக்கூடாது இல்லையா?  நான் சொல்ற இடம் வரைக்கும் யாரையும் ஆக்குஃபை  பண்ன விடாதே…  உனக்கு தினமும் 500 ரூபா பேட்டாவும்  ஒரு குவாட்டரும் டிபனும் வாங்கி கொடுத்திடறேன். ஷூட்டிங் முடியறவரைக்கும்  நீ எங்க கூடவே இருக்கணும்”.

அப்படின்னா சரிங்க சார்!

”இந்தா அட்வான்ஸா ஒரு ஐநூறு வைச்சுக்கோ! நாளைக்கு நைட் எட்டு மணிக்கு கரெக்டா இங்கே இருப்போம்.”

”வாங்க சார்! நான் காத்துட்டு இருக்கேன்.”

மறுநாள்  சாந்த குமார் தான் சொன்னபடி ஷூட்டிங் நடத்த யூனிட் வேனோடு வந்து சேர்ந்து விட்டார்.

சீரியலின் கதாநாயகியும் வில்லியும் மற்ற ஆர்ட்டிஸ்ட்களும் கார்களில் வந்திறங்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏழுமலை வாயெல்லாம் பல்லாக ”வாங்க சார் வாங்க!” என்று அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தான். காலையில் ஊற்றிக் கொண்ட விஸ்கி வாடை இன்னும் அவன் மீது வீசிக்கொண்டிருந்தது.

”ஏழுமலை! ஷூட்டிங்க கல்லறை தோட்டத்து நடுவிலே வைச்சுக்கலாம்னு பார்க்கறேன். அங்கே எதுவும் பிரச்சனை இல்லையே..!”

”எதுவும் கிடையாது சார்!”

பரபரவென ஆட்கள் இயங்கி லைட் செட்டிங் முடித்து ஷூட்டிங் துவங்கி விட்டது.

டைரக்டர் கதாநாயகியிடம் வந்து சீன் சொல்ல ஆரம்பித்தார். இந்த ”கல்லறை தோட்டத்துக்கு  வில்லி தனியா வர்றாங்க. அப்போ நீங்க வெள்ளை உடையிலே ஆவியா வர்றீங்க அப்படியே கண்களே தீப்பொறி பறக்க அவங்களை மிரட்டறீங்க! என்னை கொன்னு புதைச்சிட்டா நீ தப்பிச்சிட முடியாது. ஆவியா வந்து அழிப்பேன்னு சவால் விடறீங்க!”

”ஒகே.. ஸ்டார்ட் பண்ணலாமா?”

”லைட்டா டச்சப் பண்ணிட்டு…”

”இது பேய் சீன் தான்மா! டச்சப் ஏதும் வேணாம். அப்படியே வாங்க!”

”லைட்ஸ் ஆன்! கேமரா..ரோல்! ஆக்‌ஷன்” டைரக்டர் குரல் கொடுக்க

பளிரேன வெளிச்சம் பரவியது

வில்லி பயந்தவாறு நடந்து வர  ஹீரோயின் அந்த கல்லறை மீதிருந்து வெள்ளை உடையில்  திடிரென்று  தோன்றி..

”வந்துட்டியா….! வா… உன்னைத்தான் தேடிக்கிட்டிருக்கேன். என்னை கொன்னுட்டு நீ நிம்மதியா இருக்க முடியாது… உன்னை பழிவாங்கத்தான் காத்துட்டிருக்கேன். வா… கிட்டே வா… விடமாட்டேன்….!”

”கட் !”

”சூப்பர் மா! ஒரே டேக்ல முடிச்சிட்டீங்க..”

”தேங்க்ஸ் சார்.”

அடுத்த சீனுக்கு ரெடியானார் டைரக்டர்.

ஒரு வாரம் ஏழுமலைக்கு பெரிய வரமாக மாறியிருந்தது. குவார்ட்டரும் கொறிக்க திங்ஸோடு  கிடைக்க தினமும் கிடைத்த ஐநூறு பாக்கெட்டை நிரப்பியிருந்தது.

அன்று கடைசி நாள். சாந்தகுமார் கொடுத்த ஐநூறை வாங்கி பாக்கெட்டில் சொருகிக்கொண்டான். ”ரொம்ப தேங்க்ஸ் ஏழுமலை! ஷீட்டிங் எந்தவித இடைஞ்சலும் இல்லாம முடிஞ்சது. நாங்க கிளம்பறோம்.”

வேன்கள் கிளம்பிப் போக குடிசைக்குள் நுழைந்தான் ஏழுமலை!

ஒருவாரம் கடந்திருக்கும். அந்த சீரியல் டைரக்டர் குரல் கொடுத்தார். யோவ் சுடுகாட்லே எடுத்த சீனை ரஷ் போட்டு பார்த்துடலாம் போடுய்யா..!

சீன் ஓட  அதிர்ந்தார் டைரக்டர். என்னாய்யா? என்னென்னமோ வருது!

அந்த காட்சியில் ஒரு இளம்பெண்ணை வாலிபன் ஒருவன் பலவந்தப் படுத்துகிறான். எவ்வளவோ போராடியும் அந்த பெண் தோற்றுப் போக உயிரை விடுகின்றாள்.

அடுத்த சீன் அந்த வாலிபன் அந்த பெண்ணின் சடலத்தை எடுத்துவந்து இடுகாட்டில் புதைக்கும்படி வெட்டியானிடம் கூறுகின்றான்.  சில ரூபாய் தாள்களை கொடுத்துவிட்டுச் செல்கிறான்.

அந்த இளைஞன் சென்றதும் அவ்வெட்டியான் அந்த பெண்ணின் சடலத்தின் மீது விழுந்து புரண்டு அழுகிறான்.’ மவளே..! உன்னை நாசமாக்கிட்டு உன் பொணத்தையே என்கிட்டே புதைக்கச் சொல்லிட்டு போறானே அந்த பாதகன்..!  அவனை சும்மா விடலாமா? சும்மா விடலாமா? ஆனா என்னாலே என்ன செய்ய முடியும். அவன் பெரிய பணக்காரன் ஏழெட்டு கம்பெனிகளுக்கு முதலாளி. இதோ இந்த சுடுகாடு கூட அவன் கம்பெனியோடுதுதான். அதான் தைரியமா இங்கேயே கொண்டுவந்து உன்னை புதைக்கச் சொல்லிட்டு போறான்..’

அழுகை ஆத்திரமாகிறது! “ஓ” வென கத்துகின்றான். அப்புறம் ஆற்றாமையோடு பள்ளம் தோண்டி பெண்ணை புதைக்கின்றான் வெட்டியான். சில நொடிகளில் காட்சி மாறுகின்றது. அந்த பெண்ணை புதைத்த இடத்தில் இருந்த மரமொன்றில் தூக்கில் தொங்குகிறான் அவன்.

அதிர்ச்சியாகிறார்  டைரக்டர்.

”யோவ்… இது என்னய்யா புதுக்கதை! நம்ம சீரியலை விட செம இண்ட்ரஸ்டிங்கா இருக்குது..!”

”சார் அந்தப் பொண்ணை புதைச்ச வெட்டியான் யாருன்னு  உன்னிப்பா கவனிங்க!”

”ரீவைண்ட் பண்ணு! ஜூம் பண்ணு!”

ஜும் செய்கையில் அங்கே அழுது கொண்டிருந்தான் வெட்டியான் ஏழுமலை!

என்னது ஏழுமலை உயிரோட இல்லையா? நெஞ்சு தூக்கிவாரிப்போட்டது டைரக்டருக்கு

”இன்னாயா நடக்குது இங்கே? சாந்த குமாரை கூப்பிடுய்யா!”

 சாந்தகுமார் நடுநடுங்கியபடியே அந்த காட்சிகளை பார்த்தார்.” சார்.. சத்தியமா எனக்கு ஒண்ணும் புரியலை! நான் அந்த எழுமலையை பார்த்து பேசி பணம் கொடுத்துட்டு வந்தேன்.அந்த ஓனர்கிட்டே பேசும்போது கூட ஏழுமலைன்னு ஒருத்தன் வெட்டியானா இருப்பான். அவனை பார்த்து பேசிக்கோங்கன்னுதான் சொன்னாங்க.”

”யோவ்! நாம பேய் சீரியல் எடுத்தா! அதுலேயே பேய் வந்து விளையாடுதேய்யா!”

”இதற்குள் அந்த சீரியலின் புரட்யூசர் அரக்க பறக்க ஓடிவந்தார். டைரக்டர் சார் என்ன ஆச்சு?”

”நாம எடுத்த சீன் வராம புதுசா ஏதோ ப்ளே ஆகுது! ஆனா இண்ட்ரஸ்டிங்கா இருக்குது!”

”ப்ளே பண்ணுங்க…!”

காட்சி ஓடத் துவங்கியது. அந்த பெண்ணை பலவந்தப்படுத்தும் இளைஞனை பார்த்ததும் ப்ரட்யூசர் அலறினார்…  ”முகேஷ்… நீயா…?”

”ஏன் பதறுறீங்க? இது யாரு உங்களுக்குத் தெரியுமா?”

”இது என் அண்ணன் பையன் முகேஷ்”.

”இந்த சீரியலுக்கு நான் புரட்யூசரா இருந்தாலும் மொத்த பணமும் அவனோடுதுதான்! நான் வெறும் பினாமி மட்டும்தான்!”

”முகேஷ் கொஞ்சம் வழிசல் கேஸ்தான்! ஆனா இப்படி ஒரு பொண்ணை நாசம் பண்ற அளவுக்குப் போயிருப்பான்னு நான் எதிர்பாக்கவே இல்லை!”

”இந்த வீடியோவை உடனே போலிசுக்கு அனுப்பிடனும்.குற்றவாளியை தண்டிக்கணும்.”

”அதுக்கு அவசியமே இல்லை!”

”ஏன் சார்! போனவாரம் நீங்க ஷூட்டிங் ஆரம்பிக்கும் போது அவசரமா வெளியே போறேன்னு நீங்க  கண்டினியு பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனேன் இல்லையா?”

”ஆமாம் சார்! போய் போன் கூட பண்ணீங்களே..! யாரோ உங்க ரிலேஷன் டெத் ஆயிட்டார்னு…!”

”ஆமாம் டெத் ஆனது  முகேஷ்தான்!”

”எப்படி?”

”ஊட்டி மலைப்பாதையிலே ஆக்ஸிடெண்ட்  ஆகியிருக்கு! பாடி கூட கிடைக்கலை!”

”அடப் பாவமே..!”

அப்போது வீடியோ தானாக ஓட ஆரம்பிக்க..

ஊட்டி மலைப்பாதையில் அந்த காரை ஓட்டிக்கொண்டிருக்கிறான் முகேஷ். அவன் எதிரே ஏழுமலையும் அவன் பெண்ணும் வர.. அதிர்ந்து போய் ப்ரேக் அழுத்துகிறான். ப்ரேக் பிடிக்க வில்லை. ஸ்டிரியங் தானாக திரும்ப  மலைப்பாதையின் தடுப்பை உடைத்துக் கொண்டு அந்த கார் அதள பாதாளத்தில் விழுகின்றது.. அப்படியே வீடியோ ப்ரீஸ் ஆகி நிற்க

புரொடியூசரும் டைரக்டரும் அதிர்ந்து போய் நின்றிருந்தனர்.

தவளைகளின் கச்சேரி!

தவளைகளின் கச்சேரி!


ரொம்ப காலத்துக்கு முன்னாடி அழகாபுரி நகரத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தாரு. அவர் அழகாபுரியை அழகா மாத்தறேன் அப்படின்னு சபதம் எடுத்துக்கிட்டு நகரை விரிவு பண்ணாரு. அகல அகலமான சாலைகள். நிறைய அலங்கார விளக்குகள் நாடே ஜெகஜ்ஜோதியா மாத்தினாரு. அந்த சாலைகளில் எந்த தடையும் இல்லாம ரதங்கள் அதிவேகத்தில் பயணிக்கலாம்.
     சாலை வசதி இருக்கிறதாலே பெரிய பெரிய தொழிற்சாலைகள் எல்லாம் அழகாபுரிக்குள்ள வந்துருச்சு. அந்த தொழிற்சாலைகளிலே வேலை செய்ய நிறைய மக்களும் வந்து சேர்ந்தாங்க. தொழிற்சாலைகள் நிறைய நிலத்தடி நீரை உறிஞ்சுகிச்சு. அதே சமயம் விவசாயம் கொஞ்சம் கொஞ்சமா காணாம போயிருச்சு. தொழிற்சாலை கழிவுகளும் மக்கள் பெருக்கத்தாலே வீட்டு கழிவுகளும் அந்த நகரத்துலே ஓடின ஆத்துலே கலந்துருச்சு.
   தெள்ளிய நீரோடையா பாய்ஞ்ச ஆத்துலே ஒரே கழிவுத் தண்ணி கலங்கலா ஓடுச்சு. ஆற்றிலே வசிச்ச மீனுங்க சின்ன சின்ன உயிரினங்கள், தவளைகள், பூச்சிகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா செத்துப் போச்சுங்க. நகரை அழகு படுத்தறேன் வேலைவாய்ப்பை அதிகப் படுத்தறேன்னு சொன்ன ராஜாவுக்கு இப்ப நாம தப்பு செய்துட்டோம்னு தோணிச்சு.
   தொழிற்சாலை புகைகளாலே வானமே மாசு பட்டு ஒரே கறுப்பா போயிருச்சு! நகரத்துலே வந்து போன வாகனங்கள் விட்ட புகையும்  சேர்ந்து காற்றுல மாசு ஏற்பட்டு போச்சு. நகரத்துலே போதிய மரங்கள் இல்லை. எங்க பார்த்தாலும் வானுயர்ந்த கட்டிடங்கள் அதனாலே நகரமே வெப்பமயமா ஆகிப் போச்சு.
     ஒரு காலத்துலே நிறைய மழை பொழிவை தந்துகிட்டிருந்த மேகங்கள் இந்த வெப்ப காற்றினாலே அழகாபுரி பக்கமே திரும்பலை! மழையே இல்லை! குடிதண்ணீருக்கு பற்றாக்குறை வந்துருச்சு. ரொம்ப தூரத்துல இருந்து கிராமத்திலே இருக்கிற ஏரி நீர் குளத்து நீர், அப்புறம் ஆழ்துளை குழாய் போட்டு நீரை நகரத்துக்கு கொண்டு வந்தும் நீர்பற்றாக்குறை இருந்துக்கிட்டே இருந்துச்சு.    மக்கள் பெருக்கத்தை கட்டுப்படுத்தவே முடியலை. அதனாலே நகரமே மாசு அடைஞ்சு போச்சு. நதிகள்லே வசிச்ச மீன்கள் எல்லாம் கொஞ்சம் செத்து போய் மிச்சம் கடலுக்கு போயிருச்சு. தவளைகளாலே கடலுக்கு போக முடியலை!
     அழகாபுரி  சுரபி ஆத்துலே வசித்த தவளைகள் எல்லாம் ஒரு நாள் கூடிச்சுங்க.. “இந்த ஆத்துலே நம்மலாளே வசிக்க முடியலை! வேற இடமும் நமக்கு இல்லே. இந்த நதியை சுத்தப் படுத்தனும்”அப்படின்னு சொல்லுச்சுங்க.


  அப்ப தலைவர் தவளை சொல்லுச்சு, “இந்த நாட்டு மஹாராஜாவாலேயே இந்த ஆத்தை சுத்தப் படுத்த முடியலை! நாம எப்படி சுத்த படுத்தறது. இந்த மனுஷங்க சும்மா இருப்பாங்களா? அவங்க போடற கழிவுகளை அள்ளி முடிக்க நம்ம இனம் போதாது”அப்படின்னு சொல்லுச்சு.
   அப்ப ஒரு இளவயது தவளை சொல்லுச்சு! “முயன்றால் முடியாதது எதுவும் இல்லே! நாம வருண பகவான் கிட்ட முறையிட்டு மேகங்களை பொழிய சொல்வோம். விடாது மழை பேய்ஞ்சா அதுலே அழுக்கெல்லாம் அடிச்சுக்கிட்டு போயிரும். வெள்ளம் பாதிச்சாவாது இந்த நாட்டு மக்களுக்கு புத்தி வந்து நீர் நிலைகளை மதிக்க ஆரம்பிப்பாங்க. இப்பவே நாம போய் வருண பகவானை பார்ப்போம்” அப்படின்னு சொல்லுச்சு.
      உடனே வருணபகவானை நினைச்சு எல்லாம் தவளைகளும் ப்ரார்த்தனை பண்ணிச்சுங்க. தேவலோகத்துல இருந்த வருண பகவானுக்கு தவளைகளோட  ப்ரார்த்தனை கேட்டுச்சு. அவரும் இரக்கப்பட்டு தவளைங்க கிட்டே பேசினாரு.
    “தவளைங்களே உங்க கோரிக்கை என்ன?”ன்னு கேட்டாரு… “தவளைங்களும் இந்த மாதிரி அழகாபுரி ஆத்துலே வசிக்கிறோம்! அங்க ஒரே கழிவு தண்ணியா ஓடுது அதனாலே எங்களாலே வசிக்க முடியலை! நீங்கதான் மேகங்களை அனுப்பி மழை பொழிய வைச்சு ஆத்துல இருக்கிற மாசை நீக்கணும்!”னு வேண்டிகிச்சுங்க.
      “ஏம்பா தவளைங்களே நான் மேகங்களை அனுப்புவேன். ஆனா மேகங்கள் குளிர்ச்சி அடைஞ்சாதான் மழை பொழிய முடியும். உங்க ஊருலே ஒரே வெப்ப காத்தா இருக்கே நீங்க வாயு பகவான் கிட்டே போய் ஈரக்காற்றா வீசச் சொல்லுங்க அப்பத்தான் மேகம் குளிர்ந்து நிறைய மழை பொழியும்”னு சொன்னாரு.
      தவளைங்களும் வாயுபகவானை வேண்டுதல் பண்ணுச்சுங்க. வாயு பகவானும் தவளைங்க குறைய கேட்டுகிட்டாரு. ஆனா அவர் சொன்னாரு “உங்க ஊரிலே மரங்களே இல்லை. நிறைய தொழிற்சாலைங்கதான் இருக்கு நான் குளிர்ந்த காத்துக்கு எங்க போவேன்?” அப்படின்னாரு.
     “அப்ப எங்க கதி என்ன? நாங்க எல்லாம் செத்து போக வேண்டியதுதானா?”ன்னு “ஓ”ன்னு அழுதுச்சுங்க  தவளைங்க! அதுங்க கண்ணீர் ஆறா பெருக்கெடுத்து வர வாயு பகவானுக்கு ஒரு யோசனை தோணிச்சு.
   “தவளைங்களா இங்க நீங்க அழுது கச்சேரி வைக்கிற மாதிரி உங்க ஆத்துலே இறங்கி  அழுது கச்சேரி வையுங்க ஒங்க கண்ணுலே இருக்கிற ஈரத்தை காத்தா கடத்தி மேகத்தை பொழிய வைக்கிறேன்”னு சொன்னாரு.   தவளைங்களும் சம்மதப்பட்டு ஆத்தங்கரையிலே வந்து “ஓ”ன்னு அழுது கச்சேரி வச்சிருச்சுங்க. அது அழ வருண பகவானும் மேகக் கூட்டங்களை அனுப்பி வைச்சாரு. மேகத்து மேல ஈரக்காற்றை பட வைச்சாரு வாயு பகவான்.
   மேகங்களும் தவளைங்க அழுகைக்கு பரிதாபப் பட்டு இருக்கையிலே ஈரக்காற்று பட்டு மழையை பொழிய துவங்கின. ஆஹா! ரொம்ப நாளுக்கு அப்புறமா மழை பெய்யுது விடாதீங்க இந்த கச்சேரியை இன்னும் உற்சாகமா பாடுங்கன்னு தவளைங்க இன்னும் வேகமா அழ ஆரம்பிச்சுது. மேகமும் விடாம மழை பொழிய ஆத்துலே வெள்ளம் கரை புரண்டிருச்சு.
   ஆத்து தண்ணி அழுக்கெல்லாம் அடிச்சிக்கிட்டு போக தவளைங்களுக்கு ஒரே குஷி! இன்னும் அதிகமா பாட ஆரம்பிச்சுதுங்க வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடி கழிவா இருந்த ஆறு  இப்பதான் உண்மையான நதியா மாறுச்சு.


    வருணபகவானுக்கும் வாயுபகவானுக்கும் நன்றி சொன்ன தவளைங்க,” இனியாவது இந்த மனுச பசங்க நம்மளை நிம்மதியா இருக்க விடுவானுங்களா பார்க்கணும்”னு சொல்லி தண்ணியிலே குதிச்சு விளையாட ஆரம்பிச்சுதுங்க.
     “இனியும் அவங்க திருந்தலைன்னா நம்ம கச்சேரியை தொடர்ந்து பாடி மனுஷங்களை உலகத்தை விட்டே விரட்டி அடிச்சுட்டா போச்சு” அப்படின்னு சொல்லுச்சு ஒரு தவளைஅதைக்கேட்டு மத்த தவளைங்க எல்லாம் “ஹ்ஹாஹா’ன்னு சிரிச்சுக்கிட்டே இருந்துச்சுங்க.


தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் தெரிவித்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!
    

amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்

amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்
தளிர் வலைதளத்தில் நான் எழுதிய சில பதிவுகளை மின் நூலாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. சமீபத்தில் அந்த எண்ணத்தை செயலாக்கி அமேசான தளத்தில் இந்த மாதத்தில் 5 மின் நூல்களை வெளியீடு செய்துள்ளேன். 
ஏற்கனவே அமேசான் தளத்தில் நான்கு மின் நூல்களை கடந்த வருடங்களில் வெளியீடு செய்துள்ளேன். தளிர் வலைப்பூவில் பெரிதும் வரவேற்பு பெற்ற இலக்கண இலக்கிய பதிவான உங்கள் தமிழ் அறிவு எப்படி என்ற பதிவுகளை கொஞ்சம் திருத்தி கொஞ்சம் இலக்கணம், கொஞ்சும் இலக்கியம் என்ற தலைப்பிலும் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து அன்புடை நெஞ்சம் என்ற தலைப்பிலும் 
சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை “ராஜாவை ஜெயிச்ச குருவி” ”எலிவளர்த்த சிங்கராஜா” என்ற தலைப்புகளில் இரண்டு நூலாகவும். நான் எழுதிய ஆன்மீக கட்டுரைகளை தொகுத்து வினைகள் தீர்த்து குறைகள் போக்கும் விரதங்கள் என்ற தலைப்பிலும் அமேசான் தளத்தில் வெளியீடு செய்துள்ளேன்.
 மின்னூல்களின் அதிக பட்ச விலையே ரூபாய் 100 ஆக நிர்ணயித்துள்ளேன். தளிர் தளத்தின் (தேன்சிட்டு) வாசக அன்பர்கள் இந்த மின்னூல்களை அமேசான் தளத்தில் வாங்கி வாசித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 இதில் கொஞ்சம் இலக்கணம் கொஞ்சும் இலக்கியம் நூல் அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியிலும் பங்கெடுக்க உள்ளது. தளிர் வலைதளத்தின் நண்பர்கள் இந்த மின்னூலை வாங்கியும் வாசித்தும் தளிரின் இந்த சாதனைப் பயணத்தில் ஓரடி முன்னேற ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். 
அனைவருக்கும் அன்பின் நன்றிகள். மின்னூல்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அமேசான்              நன்றி.

நிற்காதே ஓடு!

நிற்காதே ஓடு!

நகரில் இருந்து சற்று ஒதுங்கி கடற்கரை ஓரமாக  இருந்தது அந்த ரிசார்ட். ஆங்காங்கே தனித் தனி குடில்கள். அனைத்திலும் சகலவிதமான வசதிகளுடன் கூடிய அறைகள். டிவி. வைஃபை, ஏசி, ப்ரிட்ஜ் என அனைத்தும் அங்கே வாங்கும் பணத்திற்கேற்ப வழங்கப்பட்டுக்கொண்டிருந்தது. சமூகத்தின் பிரபலங்கள் ரிலாக்ஸ் தேடி அந்த குடில்களில் தஞ்சம் புகுவது வழக்கம். உடன் குடியும் கும்மாளமும் சேர்ந்திருக்கும்.

அப்படி ஒரு குடிலுக்குத்தான் வந்திருந்தாள் மேகலா. மேகலா யார் என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் டிவி சீரியல்கள் பார்க்காத விநோத ஜந்துவாக நீங்கள் இருக்க வேண்டும். பிரபல டிவிக்களில் வீஜேவாக இருந்து இப்போது சீரியல் கதாநாயகியாக ப்ரமோட் ஆகியிருந்தாள். அஜய் டீவியில் அவள் கதாநாயகியாக நடிக்கும் “ஆண்டவன் ஸ்டோர்ஸ்” டி.ஆர்.பி யில் எகிறிக்கொண்டிருந்தது. ஆண்டவன் ஸ்டோர் அமுதா என்றே எல்லோராலும் அறியப்பட்டிருந்தாள் மேகலா.

மேகலா சாதாரணமான பெண் இல்லை! துணிச்சல் மிக்கவள். சிலம்பம் கராத்தே என்று பழகியிருந்தாள். மூன்று மொழிகளில் பேசுவாள். டான்ஸ் ஓவியம் என்று எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்ட்டிவிட்டீஸ் அதிகம் அவளிடம் இருந்தது. இந்த விஷயமே அவளை டிவி விஜேவாக ஆக்கியிருந்தது. மருத்துவம் படித்துக்

கொண்டிருந்தவள் படிப்பு முடிந்த்தும் அவளுக்கு பிடித்த விஜே தொழில் செய்யப்போவதாக சொல்லி ஒரு சின்னஞ்சிறு சேனலில் நுழைந்தாள். இரண்டே வருடங்களில் ஏகப்பட்ட வளர்ச்சி! இதோ அஜய் டீவியில் ஒரு முக்கிய ஆங்கராகவும் சீரியல் கதாநாயகியாகவும் அசத்திகொண்டிருக்கிறாள்.

அன்று சீரியல் ஷூட்டிங்கில் இருக்கையில்  ஒரு போன் கால் வந்தது. அந்தக் கால் தான் இந்த ரிசார்ட்டுக்கு அழைத்து வந்தது. ஷூட்டிங் ப்ரேக்கில் தான் அந்த காலை அட்டெண்ட் செய்தாள் அவள். “ஹலோ மேகலா மேடமா?”

”ஆமாம்! நீங்க யாரு?”

”நான் யாருங்கிறது முக்கியம் இல்லே! நான் சொல்லப் போற விஷயம்தான் முக்கியமானது!”

”அப்படி என்ன முக்கியமான விஷயம்!”

”நீங்களும் ராம்நாத்தும் கல்யாணம் பண்ணிக்கப் போறதா கேள்விப் பட்டேன்! உண்மையா?”

”ஆமாம்! அதுக்கென்ன?”

”ராம்நாத் நல்லவன் கிடையாது!”

”இதை நீ ஏன் பொறாமையாலே சொல்லக் கூடாது?”

”பொறாமையா? எனக்கா? உங்க மேலேயா?”

”ஏன் இருக்கக் கூடாதா? நான் ஒரு பிரபல விஜே! என் மேலே உங்களுக்கு பொறாமை ஏற்பட்டு எனக்கு நல்ல வாழ்க்கை அமையக் கூடாதுன்னு நீங்களா எதாவது கதை கட்டி விடலாம் இல்லையா?”

”நான் யாருன்னு தெரிஞ்சா நீ இப்படி பேசியிருக்க மாட்டே?”

”நீங்கதான் அதைச் சொல்ல மாட்டேங்கிறீங்களே?”

”ஹாஹாஹா! இப்படி சாமர்த்தியமா பேசி என்னை யாருன்னு தெரிஞ்சுக்க முயற்சி பண்ண வேணாம். உன்னை விட அதிக புகழ்வெளிச்சம் பார்த்தவள் நான். உன் வருங்கால புருஷனாகப் போற ராம்நாத் எனக்கும் வலைவிரிச்சுப் பிடிச்சு ஏமாத்திட்டான். நான் மட்டும் இல்லே.. இன்னும் சிலபேர் அவன் வலையிலே விழுந்து ஏமாந்து போயிருக்காங்க! உனக்கு நம்பிக்கை இல்லேன்னா ஒரு விடியோ க்ளிப்பிங் அனுப்பறேன் பாரு! அப்புறமா இன்னிக்கு ஓல்ட் மஹாபலிபுரம் ரோட்ல இருக்கிற ஸீ ஷோர் ரிசார்ட்டுக்கு வந்து  ஏ 87 ஹட்டுக்கு வந்து பாரு..!”

பேசியவள் போனை வைத்துவிட்டாள். அடுத்த சில நொடிகளில் ஒரு விடியோ வாட்சப்பில் வர ஓப்பன் செய்தாள். அதில் மங்கலான வெளிச்சத்தில் ராம்நாத் அரைகுறை ஆடையுடன் ஒருபெண்ணுடன் சல்லாபித்துக் கொண்டிருந்தான்.

 ” சே… ”அவள் முகம் கோபத்தால் துடித்தது.

இவ்வளவு மோசமானவனா இந்த ராம்நாத்! எப்படியெல்லாம் சுற்றிசுற்றி வந்தான். வீட்டுக்கே வந்து உங்கள் பெண்ணை எனக்குத் திருமணம் செய்து கொடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கண்ணீர் விட்டு அழுதான்.

 ஒரு சாதாரண அரசு உத்தியோகம் பார்த்து ரிட்டையர்ட் ஆன அப்பாவிற்கு ராம்நாத்தின் பணக்கார பவிசு சுத்தமாக பிடிக்கவில்லை! உங்கள் தகுதிக்கு நாங்கள் தகுதியானவர்கள் இல்லை என்று எத்தனையோ விதமாகச் சொல்லிப் பார்த்தார். ஆனாலும் விடாமல் துரத்திக் கொண்டிருந்தான். ஒவ்வொரு ஷூட்டிங்க் ஸ்பாட்டிலும் கையில் ஒரு ரோஜா பூங்கொத்தோடு காத்திருப்பான். தினம் தினம் வாட்சப்பில் டெக்ஸ்ட் செய்வான். கவிதை மழை அதில் பொழிவான்.

அவனது பெற்றோர் கோயிலுக்குப் போனால் அங்கே அவர்களுக்கு முன்னால் பக்திப்பழமா காத்திருப்பான். அவளது ஓவ்வொரு அசைவையும் அவன் பின் தொடர்ந்தான்.

பலமாத நச்சரிப்புக்கு பின் போன மாதம்தான் மேகலாவின் பெற்றோர் அவனுக்கு தலை அசைத்தார்கள். சிம்பிளாக ஒரு நிச்சயதார்த்தம் செய்து மொதிரம் மாற்றிக் கொண்டார்கள். அதன் பின் ரொம்பவும் உரிமை எடுத்துக் கொண்டான்.” இனி நீ எனக்கு மட்டும் சொந்தம்.  இந்த டிவி சிரியலில் நடிப்பதை எல்லாம் விட்டுவிடு. என் பொண்டாட்டி மற்றவர்களை தொட்டு நடிப்பது எனக்குச் சுத்தமாக பிடிக்காது! எனக்கு நீ உனக்கு நான்”! என்றான்.

மேகலா முதலில் அதிர்ந்து போனாள். அவளுடைய ஆம்பிஷனே ஆங்கரிங் அவளுக்குப் பிடித்த தொழிலையே இவனை மணப்பதற்காக விட்டுவிட வேண்டுமா? ”நோ! முடியாது ”என்றாள்.

”என் கனவு! என் லட்சியம் எல்லாம் டிவி ஷோ காம்பியரிங்கும் ஓர் ஆர்ட்டிஸ்டா வாழணுங்கிறதுதான்! அதுக்காக நான் படிச்ச படிப்பையே தூக்கிப் போட்டுட்டு இந்த பீல்டுக்கு வந்தேன். உங்களுக்காக இதெல்லாம் விட்டுக் கொடுக்க முடியாது. நான் என் தொழில்லே சுதந்தரமா இருக்கலாம்னு நாம லைப் பார்ட்னராகலாம்! முடியாதுன்னா இப்பவே நம்ம எங்கேஜ்மெண்ட்டை கேன்சல் செய்துக்கலாம்” என்று முகத்தில் அடித்தார் போல சொல்லிவிட்டாள்.

ராம்நாத்துக்கு  ஆத்திரம் அதிகமாக இருந்தது.” நான் யார் தெரியுமா? என் பேங்க் பேலன்ஸ் ஸ்டேட்டஸ் தெரியுமா? என்னோட வைஃப்  ஆயிரத்துக்கும் ஐநூறுக்கும் காம்பியரிங் செய்தா எனக்கு எவ்வளோ பெரிய அவமானம் தெரியுமா?” என்றான்.

”நான் காம்பியரிங் செய்யறது பிடிச்சுத்தானே என்னை பெண் கேட்டு வந்தீங்க? ”

”இட்ஸ் ஓக்கே! நீ காம்பியரிங் வேணா பண்ணு! ஆனா சீரியல் பண்ணாதே!”

”ஸாரி மிஸ்டர் ராம்நாத்! எங்கேஜ்மெண்ட் ஆனவுடனேயே உங்க சுயரூபத்தை காட்டினதுக்கு நன்றி! உங்களுக்கும் எனக்கும் செட் ஆகாது! இந்தாங்க நீங்க போட்ட ரிங்! ”என்று கழட்டி எறிந்த மேகலா விறுவிறுவென வெளியேறினாள்.

அதற்கப்புறம் ஒருவாரம் ராம்நாத்திடமிருந்து எந்த தகவலும் இல்லை! ஷுட்டிங் ஸ்பாட்டிலும் எந்த தொந்தரவும் இல்லை! நேற்று இரவுதான் டெக்ஸ்ட் பண்ணினான். ”மன்னித்துவிடு! கொஞ்சம் பொசஸ்ஸிவா நடந்துகிட்டேன்! காம்பியரிங் உன் ஆம்பிஷன்னு புரிஞ்சுகிட்டேன்! உன் தொழில்ல நான் இடையூறு செய்ய மாட்டேன்! எனக்கு நீ வேணும்! ”என்றான்.

”யோசிக்கிறேன்!” என்று பதில் அனுப்பி போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டாள் மேகலா

இன்று அதைத்தொடர்ந்து வந்த இந்த போன்காலால் ஸீ ஷோர் ரிசார்ட்டிற்கு தன்ன்ந்தனியாக  வந்திருக்கிறாள். அதோ ஏ 87 ஹட். வேகமாக நடக்கிறாள் மேகலா.

 கதவு பூட்டியிருக்க திறந்திருந்த ஜன்னல் வழியே  எட்டிப் பார்க்கிறாள். உள்ளே..

ஒரு பெண் அலறும் சத்தம். அவளை பலவந்தம் செய்து கொண்டிருக்கிறான் ராம்நாத்.அவன் பிடியில் இருந்து நழுவ அந்தப் பெண் முயற்சித்துக் கொண்டிருக்க அவள் கரங்களை பிடித்து இழுத்து படுக்கையில் சரித்துக் கொண்டிருந்தான் ராம்நாத். “யூ ராஸ்கல்!” விடுடா அவளை இல்லேன்னா போலிஸை கூப்பிடுவேன்…!”

ஜன்னலுக்கு வெளியே இருந்து குரல் கொடுத்தாள் மேகலா

திடீரென மேகலாவைப் பார்த்ததும் அதிர்ச்சியான ராம்நாத்தின் பிடி நழுவ அந்தப் பெண் கதவைத்திறந்துகொண்டு ஓட

“ஏய்! நீ எப்படி இங்கே வந்தே…! அவ போனா என்ன? உன்னை என்ன செய்யறேன் பார்…!”

ஓட ஆரம்பித்தாள் மேகலா..!

”ஏய் நில்லுடி! இது என்னோட ஏரியா! தப்பிக்கவே முடியாது..!”

ஓடிக்கொண்டே தன் அண்ணனுக்கு வாய்ஸ் மெசேஜ் அனுப்பினாள் மேகலா.

ரிசார்ட்டுக்குள்ளே அது என்ன?  ஒரு கல்லறை மாதிரி இருக்கிறதே..!

மூச்சிறைக்க ஓடி ஒரு கல்லறையின் பின் ஒளிந்தாள்.

பின்னாலேயே துரத்திவந்த ராம்நாத்தால் அவளை பிடிக்க முடியவில்லை!  பின்னே சும்மாவா? மேகலா ஒரு ரன்னிங் சேம்பியனும் கூட.

மூச்சிறைக்க கல்லறைத்தோட்டத்தில் நுழைந்த ராம்நாத்தை வரவேற்றான் கோவிந்தன்.

“என்னங்க சார் இப்படி ஓடியாறீங்க?”

”மண்ணாங்கட்டி! எனக்கு முன்னாடி இங்கே ஒரு பொண்ணு ஓடியாந்தா! நீ என்ன பண்ணிக்கிட்டிருக்கே?”

”அப்படி யாரும் வரலீங்களே…!”

”அப்ப நான் பொய் சொல்றேனா?”

”இந்த கல்லறை தோட்ட்த்துக்குத்தான் அவ ஓடியாந்தா? மீடியா பொண்ணு! அவ தப்பிச்சிட்டா நம்ம கதை க்ளோஸ்!”

”சார்! அப்படியெல்லாம் நம்மகிட்டேயிருந்து தப்பிக்க முடியுமா? இங்கே எத்தனை பொண்ணுங்களை சமாதி ஆக்கியிருக்கோம்! இது நம்ம கோட்டை! இங்கே இருந்து ஒரு ஈ எறும்பு கூட வெளியே போக முடியாது!”

”இப்படி வாய் கிழிய பேசு! ஆனா காரியத்துலே கோட்டை விட்டுரு! அவ இந்த வழியாத்தான் வந்தா? அவளை பிடிக்காம கோட்டை விட்டுட்டியே!”

”சார்! நான் அவசரமா ஒண்ணுக்கு இருக்கப் போயிருந்தேன்! அப்பத்தான் அந்தப் பொண்ணு உள்ளே நுழைஞ்சிருக்கணும்! இப்ப ஒண்ணும் ஆகிப்போயிடலை! இந்த கல்லறைதோட்ட்த்துக்கு இது ஒண்ணுதான் வழி! அப்படியே வெளியே போயிட முடியாது! நாலா பக்கமும் காம்பவுண்ட் போட்டிருக்கு! தாண்டி குதிச்சு போக முடியாத உயரம். எப்படியும் இந்த பக்கம் வந்துதான் ஆகணும் பிடிச்சிரலாம்.”

”ஏய் நீ நினைக்கிற மாதிரி பொண்ணுல்லே அவ! அத்லெடிக் கேர்ள். என்னாலே அவ ஓட்டத்தை பிடிக்க முடியலை!  அவ தாண்டிக் குதிச்சு கூட ஓடிருவா! ”

”இன்னிக்கு அவளா நானா பார்த்துடறேன் சாமி!”

”இந்தா பிடி! இதை உன் செலவுக்கு வைச்சுக்க! எனக்கு அவ உயிரோட வேணும்!” சில ஐநூறு ரூபாய் தாள்களை நீட்டினான் ராம்நாத்.

அப்போது அங்கேயிருந்த ஒரு கல்லறைக்குப் பின்னால் அசைவு தெரிந்தது.

”டேய்! அவ அங்கேதான் ஒளிஞ்சுகிட்டிருக்கா..போலிருக்கு! அசைவு தெரியுது..”

”வாங்க சாமி! போய் புடிப்போம்…!”

இருவரும் ஒரு அடி முன் வைக்க,

”ஹாஹாஹா! ”என ஓர் பேரிரைச்சல் ஒலிக்க அதிர்ந்து வானை நிமிர்ந்து நோக்கினர்

ஒரு பெண்ணின் முகம் மட்டும் கண்களில் தீ கக்கிக் கொண்டு ஆக்ரோஷமாக அங்கே உயர்ந்து நின்றது..

 ” நீ… நீ..? “

”யாருன்னு மறந்து போச்சா ராம்நாத்?”

”க… கல். கல்பனா…!”

”பரவாயில்லையே…! பத்துமாசம் ஓடிப்போயும் மறக்காம நினைவுல வைச்சிருக்கியே..!”

வியர்த்து வழிந்தான் ராம்நாத். கோவிந்தன் பேச்சு மூச்சுவரமால் சிலையாக நிற்க

”ஏய் கோவிந்தா! ஏண்டா அப்படியே நிக்கறே..! ஏதாவது செய்யுடா! இது  கல்பனாவோட ஆவி… ”

  ”ஆவிகளை எல்லாம் என்னாலே கட்டுப்படுத்த முடியாது சார்!” குரல் நடுங்கியபடி கோவிந்தன் சொல்ல…

  ஓட ஆரம்பித்தான் ராம்நாத்..

”ஓடாதே…! நில்லு…! ” கல்பனா ஆவேசமாக குரல் கொடுக்க

”இ.. இல்லே.. ”என்று அலறியபடியே ராம்நாத் ஓடவும் வாசலில் போலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

மேகலாவின் அண்ணன் எஸ்.ஐ சரவணன் ஜீப்பில் இருந்து இறங்க இரண்டு கான்ஸ்டபிள்கள் ஓட முயன்ற ராம்நாத்தை  பிடித்துவந்தனர்.

கல்லறை தோட்டத்தில் இருந்து கல்பனா வேடத்தை கலைத்தபடி வெளியே வந்தாள் மேகலா.

ராம்நாத்தின் முகம் இன்னமும் வெளிறிப் போனது!” நீ மேகலாவா? கல்பனா இல்லையா?”

”அதிர்ச்சியா இருக்கா ராம்நாத்?”

”கல்பனா யாரு தெரியுமா?”

”யாரு? அவளும் ஒரு டீவி ஆர்ட்டிஸ்ட்தானே..!”

”ஆமா! ஆனா அவ கோவிந்தனோட பொண்ணுன்னு உனக்குத் தெரியாது..!”

”இந்த ரிசார்ட்டை கட்டி உன் லீலைகளை நடத்தி பல பெண்களை சீரழிச்சி கொன்னு இங்கே புதைச்சிருக்கே! கல்பனா உன் வலையிலே விழுந்து செத்தப்புறம் உன்னை பழிவாங்கறதுக்காகவே இங்கே வேலையிலே சேர்ந்திருக்கார் கோவிந்தன்.”

”உன்கூட எனக்கு எங்கேஜ்மெண்ட்னு நியுஸ் வந்த்தும் என்னோட தீவிர ரசிகரான அவர் நானும் பாதிக்கப் படக் கூடாதுன்னு எனக்கு போன் செய்தார். அவர் சொன்ன விஷயங்களை முதல்லே நான் நம்பலை! அப்புறம் வீடியோ ஆதாரத்தோட அனுப்பவும் தனியா வந்து சந்திச்சேன். உண்மைகளை தெரிஞ்சுகிட்டேன்.  உன்னை கையும் களவுமா பிடிக்கணும்னு திட்டம் போட்டோம்.”

”இன்னிக்கு நீ அந்த பொண்ணை கூட்டிக்கிட்டு ரிசார்ட் வரப்போறதை மேசேஜ் பண்ணிட்டார் கோவிந்தன். நான் உடனே வந்து உன்னை பிடிக்கப் போட்ட நாடகம்தான் இந்த பேய் வேஷம்.”

”இந்த பேய்வேசத்தாலே உன் வேஷம் கலைஞ்சு போச்சு! இனிமேலாவது பெண்களை போகப் பொருளா நினைக்காம காமத்தோட பார்க்காம தெய்வமா நினைச்சு பழகுடா!”

மேகலா சொல்லி முடிக்கவும் மீடியாக்கள் வந்து சூழ்ந்து வெளிச்சம் போடவும் முகத்தை மூடிக்கொண்டான் ராம்நாத்.

 டிஸ்கி:  நண்பர் பாலகணேஷ் முகநூலில் வைத்த படத்திற்கு கதை எழுதும் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதை.

சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?

#செவி வழிக்கதை.

நாடோடிக் கதைகள் வரிசையில் இதுவும் ஒரு சிறப்பான கதை! என்பாட்டி சிறிய வயதில் சொன்னது இது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் இந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாரு. ஒரு நாள் அவரு காட்டுல நடந்து போயிகிட்டிருந்தாரு. நல்ல வெயிலானதால அவருக்கு ரொம்ப களைப்பு ஆயிருச்சு. ஒரு மரத்துக் கீழ அப்படியே படுத்து தூங்க ஆரம்பிச்சாரு. கண் அசருர சமையத்துல வெறுங்கொட்டையா அவரோட தலை மேல விழுந்துச்சு. ‘தலையில என்னடா இப்படி விழுதேன்னு’ மேல பார்த்தாரு.    ஒரு சின்ன சித்துண்ணி பறவை மரத்து பழத்தையெல்லாம் தின்னுட்டு கொட்டைங்களை கீழ துப்பிக்கிட்டு இருந்துச்சு. ராஜாவுக்கு பயங்கர கோபம் வந்துடுச்சு. இவ்வளவு சின்ன பறவைக்கு அவ்வளவு திமிரா? உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தா நான் ஒரு ராஜான்னு கூட பார்க்காம என் தலைமேல கொட்டைய போடுவேன்னு அதட்டுனாரு.   ஆனா அது பயப்படாம அப்படியே உக்காந்துகிட்டு இருந்துச்சு!ராஜா அவசர அவசரமா மரத்துல ஏறினாரு சித்துண்ணி கழுத்தை பிடிச்சுதூக்கிக்கொண்டுபோய் சேறும் சகதியுமா இருந்த இடத்துல போட்டு காலால மிதிச்சாரு மிதிச்சுட்டு,  சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ? ன்னு கேட்டாரு.  “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் சாப்பிட்டுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துஇப்ப சேத்துல உழுகிறேன்” அப்படின்னு சித்துண்ணி துடுக்கா பதில் சொல்லுச்சு.  உடனே ராஜா, இந்த சித்துண்ணிக்கு எவ்வளவு ஆணவம்? னு அங்க இங்க பார்த்தாரு பக்கத்துல சின்ன ஓடையில தண்ணி ஓடிகிட்டு இருந்துச்சுஅதுல கொண்டு போய் அந்த பறவையை போட்டு“சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”ன்னு கேட்டாரு.“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுஇப்ப சின்ன ஆத்துல கால் கழுவறேன்” அப்படின்னு அது பாட்டா பாடுச்சு.  ராஜாவுக்கு கோபம் தாங்கலை! “உனக்கு இது சின்ன ஆறா? இதுல நீ கால வேற கழுவறீயா?ன்னு கேட்டுட்டு அதை தூக்கிக்கிட்டு கொஞ்ச தூரம் நடந்தாரு பெரிய ஆறு ஒண்ணு கண்ணுல பட்டது. அதுல சித்துண்ணிய தூக்கி போட்டாரு. இந்த ஆறு கண்டிப்பா அடிச்சிட்டு போயிடும்னு நம்பி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு. ““நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுது சின்ன ஆத்துல கால் கழுவி

இப்ப பெரிய ஆத்துல குளிக்கிறேன்” அப்படின்னு சித்துண்ணி நிதானமா சொல்லுச்சு.  ராஜாவுக்கு கோபம் தீந்த பாடில்லை! அதிகமாகி ஆத்தங்கரையில் ஒரு பாறை இருந்துச்சு. வெயில் அடிச்சி சூடா இருக்கவும் இதுல தூக்கி போட்டா சித்துண்ணி செத்துடும்னு அதை பிடிச்சி பாறை மேல வீசி எறிஞ்சாரு. எப்பவும் போல கேட்கவும் செஞ்சாரு. “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுஇப்ப கல்லுல துணி துவைக்கிறேன்”ன்னு சந்தோஷமா சொல்லுச்சு.
  “நீ துணி வேற துவைக்கிறயா? என்று கோபப்பட்ட ராஜா சித்துண்ணிய பிடிச்சு ஒரு முள்ளுக்காட்டுக்குள்ளே கொண்டுபோய் போட்டாரு. பிறகு “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
“நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுஇப்ப முள்ளுல காயப்போடுறேன்”ன்னு அலட்சியமா பதில் சொல்லுச்சி அந்த சின்ன சித்துண்ணி குருவி.
  சித்துண்ணி சொன்ன பதில் கேட்டு ராஜாவுக்கு கோபம் உச்சிக்கு ஏறிடுச்சு. ஆத்திரத்துல மூக்கு சிவக்க  சித்துண்ணிய எரியற அடுப்பில கொண்டு போய் போட்டாரு போட்டுட்டு வழக்கம் போல “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு. அதுக்கு சித்துண்ணி,   “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு இப்ப அடுப்பிலகுளிர் காயறேன்” அப்படின்னு சொல்லுச்சு.
 ராஜாவுக்கு ஆத்திரம்னா அப்படி ஒரு ஆத்திரம் என்ன செய்யறதுன்னே தெரியலை அதை பிடிச்சு கொண்டு போய் காத்துக்கூட போக முடியாத ஒரு பெட்டியில போட்டு மூடி “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?” ன்னு கேட்டாரு.
    “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுதுசின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு அடுப்பில குளிர் காய்ஞ்சுஇப்ப பொட்டிகுள்ள உட்கார்ந்துபொட்டு இட்டுகிட்டு இருக்கேன்அப்படின்னுகொஞ்சம் கூட பயப்படாம சொல்லுச்சு.
“நீ அடங்கவே மாட்டியா?”ன்னு ராஜா சித்துண்ணிய தூக்கிட்டு ரொம்ப தூரம் போனாரு. “இனி இத விடக்கூடாது”ன்னு வைராக்கியத்தோட போனாரு.    அங்க ஒரு பெரிய அரிசி ‘மில்’ இருந்துச்சு. “சித்துண்ணிய இந்த மில்லுல போட்டு பொடிப்பொடியா அரைச்சிட வேண்டியதுதான்!” ன்னு அதுல போடப் போனாரு.  போடற சமயத்துல அது ‘விர்ரு’ண்ணு பறந்து போய் மில்லு கூறை மேல உட்கார்ந்துகிச்சு! ராஜா அங்க இங்க தேடிப்பார்த்துட்டு பரிதாபமா மீண்டும் கேட்டாரு “சித்துண்ணி சித்துண்ணி செத்தாயோ?”
  “நான் ஏன் சாவேன் ராஜகுமாரா?என் வயிறு நிறைய பழம் தின்னுஉன் தலைநிறைய கொட்டை உமிழ்ந்துசேத்துல உழுது

சின்ன ஆத்துல கால் கழுவிபெரிய ஆத்துலகுளிச்சுகல்லுல துணி துவைச்சுமுள்ளுல காயப்போட்டு அடுப்பில குளிர் காய்ஞ்சு பொட்டிகுள்ள உட்கார்ந்துபொட்டு இட்டுகிட்டு இப்பஜாலியா சுதந்திரமா பறந்து போறேன்! இனிமே உன்னால என்ன ஒண்ணும் செய்யமுடியாது”
  அப்படின்னு சொல்லிட்டு பறந்தே போயிடுச்சு. ராஜா ரொம்ப ஏமாந்து போய் பேசாம அவரு ஊருக்கே திரும்பி போயிட்டாரு.

நீதி: சிறுவர்களின் குறும்பை பெரிது படுத்தக் கூடாது!

தேன்சிட்டு இணையதளத்திற்கு வருகை தந்தமைக்கு மிக்க நன்றி!

பதிவு குறித்த கருத்துக்களை பின்னூட்டத்தில் இட்டுச் செல்லுங்கள்!

தொடர்ந்து தேன்சிட்டு இணைய தளத்திற்கு வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்!

உங்களின் படைப்புகளையும் தேன் சிட்டு இணைய இதழில் வெளியிடலாம். உங்கள் படைப்புகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்! நன்றி!