புத்தகத் தொகுப்பாகும் எனது சிறுவர் கதைகள்!

சிறுவர்களுக்கான நூல் வெளியிட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசைகளுள் ஒன்று. ஏழாம் வகுப்பு படிக்கும் காலத்தில் சிறுவர்களுக்கான கதைகள் எழுதி பழகி கையெழுத்துப் பிரதிகள் எழுதி வெளியிடுவேன். என் முதல் படைப்பு 1993ல் கோகுலத்தில் வெளிவந்தபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. அதன் பின் ஒரு நீண்ட இடைவெளி. என் எழுத்து தாகத்தை தளிர் என்ற வலைப்பூ மூலம் தணித்து வந்தேன். அந்த தளிர் வலைப்பூவில் எழுதிய 34 கதைகளை தொகுத்து இரண்டு புத்தகங்களாக பூமிக்கு வந்த நட்சத்திரங்கள், விவேகன் பெற்ற வாழ்வு (18+16) என்று அமேசானில் இ- புத்தகமாக வெளியிடும் வாய்ப்பு சங்கப் பலகை முகநூல் குழு வழியே திருமதி உமாஅபர்ணா அவர்களால் கிடைத்தது

.திருமதி உமா அபர்ணா மற்றும் அவரது மகள் டாக்டர் லஷ்மிப்ரியா இருவரும் Pachyderm- tales என்ற இணைய தளம் மூலம் இளம் எழுத்தாளர்கள் நூல் வெளியிட பெரிதும் உதவி செய்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர் இலக்கியத்தை வளர்க்கும் அருமையான பணியினை செய்து வருகின்றனர். இவர்களுடன் இணைந்து ukiyoto என்ற நிறுவனம் புத்தகங்களை வெளியிட்டு வருகின்றது.இளம் எழுத்தாளர்களின் நூல்களை வெகு சீக்கிரமாகவும் குறைந்த பொருட் செலவிலும் இந்த நிறுவனம் நூல்களை வெளியிட்டுத் தருகின்றனர்.

தற்சமயம் குழந்தைகளுக்கான நூல்களை அழகான தரமான காகிதத்தில் அச்சுப்புத்தகமாகவும் அமேசான் தளத்தில் இ- புத்தகமாகவும் வெளியிட்டுத் தருகின்றனர்.அந்த வகையில் என்னுடைய இரண்டு சிறுவர் நூல்களை அமேசான் தளத்தில் அழகான வடிவமைப்போடு வெளியிட்டுள்ளனர். விரைவில் அச்சுப் புத்தகமாகவும் இந்த நூல்கள் வெளிவர உள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆடியோ வடிவிலும் வெளிவர உள்ளது. நூல்களை ப்ரமோட் செய்வது, விற்பனை, ராயல்டி போன்ற விதங்களிலும் இந்த நிறுவனத்தின் செயல்பாடு மிகவும் சிறப்பு

.என்னுடைய நூல்களை வெளியிட்டுக் கொடுத்த டாக்டர். லட்சுமிப்ரியாவின் pachydermtales literary consultancy க்கும் திருமதி, uma aparna க்கும் மற்றும்ukiyoto நிறுவனங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்த நூல்கள் கீழே உள்ள லிங்கில் அமேசான் தளத்தில் கிடைக்கும். ஆர்வம் உள்ள நண்பர்கள் இந்த நூல்களை வாங்கி படித்து ஆதரிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்த சங்கப் பலகை முகநூல் குழுவிற்கும் அதன் அட்மின்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

 https://www.amazon.in/s?k=natham%20suresh&i=digital-text…

amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்

amazon அமேசான் தளத்தில் என்னுடைய மின் நூல்கள்
தளிர் வலைதளத்தில் நான் எழுதிய சில பதிவுகளை மின் நூலாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் நீண்ட நாளாக இருந்தது. சமீபத்தில் அந்த எண்ணத்தை செயலாக்கி அமேசான தளத்தில் இந்த மாதத்தில் 5 மின் நூல்களை வெளியீடு செய்துள்ளேன். 
ஏற்கனவே அமேசான் தளத்தில் நான்கு மின் நூல்களை கடந்த வருடங்களில் வெளியீடு செய்துள்ளேன். தளிர் வலைப்பூவில் பெரிதும் வரவேற்பு பெற்ற இலக்கண இலக்கிய பதிவான உங்கள் தமிழ் அறிவு எப்படி என்ற பதிவுகளை கொஞ்சம் திருத்தி கொஞ்சம் இலக்கணம், கொஞ்சும் இலக்கியம் என்ற தலைப்பிலும் என்னுடைய சிறுகதைகள் சிலவற்றை தொகுத்து அன்புடை நெஞ்சம் என்ற தலைப்பிலும் 
சிறுவர்களுக்காக எழுதிய கதைகளை “ராஜாவை ஜெயிச்ச குருவி” ”எலிவளர்த்த சிங்கராஜா” என்ற தலைப்புகளில் இரண்டு நூலாகவும். நான் எழுதிய ஆன்மீக கட்டுரைகளை தொகுத்து வினைகள் தீர்த்து குறைகள் போக்கும் விரதங்கள் என்ற தலைப்பிலும் அமேசான் தளத்தில் வெளியீடு செய்துள்ளேன்.
 மின்னூல்களின் அதிக பட்ச விலையே ரூபாய் 100 ஆக நிர்ணயித்துள்ளேன். தளிர் தளத்தின் (தேன்சிட்டு) வாசக அன்பர்கள் இந்த மின்னூல்களை அமேசான் தளத்தில் வாங்கி வாசித்து பயனடையுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
 இதில் கொஞ்சம் இலக்கணம் கொஞ்சும் இலக்கியம் நூல் அமேசான் பென் டூ பப்ளிஷ் போட்டியிலும் பங்கெடுக்க உள்ளது. தளிர் வலைதளத்தின் நண்பர்கள் இந்த மின்னூலை வாங்கியும் வாசித்தும் தளிரின் இந்த சாதனைப் பயணத்தில் ஓரடி முன்னேற ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். 
அனைவருக்கும் அன்பின் நன்றிகள். மின்னூல்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்.
அமேசான்              நன்றி.

அன்பார்ந்த வாசக பெருமக்களே!

அன்பார்ந்த தேன்சிட்டு வாசகர்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கங்கள்!

சென்ற மாத தேன்சிட்டு இதழை வாசித்து கருத்துகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றிகள்.

தேன்சிட்டு என்னும் மின்னிதழை கடந்த இரண்டு ஆண்டுகளாய் எனக்குத் தெரிந்த அளவில் வடிவமைத்து வேர்ட் பைலாய் உருவாக்கி அதை பி.டி,எஃப் பைலாக ஒரு புத்தகமாக அனைவருக்கும் பகிர்ந்துவந்தேன். வடிவமைப்பு கலை நான் கற்றவன் அல்ல. தேன்சிட்டு மூலம் அக்கலையை பயின்றேன். கற்றுக்கொண்டேன். வேர்டை விட கோரல் ட்ரா என்ற சாப்ட்வேரில் வடிவமைப்பு செய்தால் இன்னமும் அழகாகவும் நேர்த்தியாகவும் இருக்கும். ஆனால் அந்த சாப்ட்வேர் நான் கற்கவில்லை. என்னிடம் அந்த சாப்ட்வேர் இல்லவும் இல்லை. அதனால் என்னால் முடிந்தவரை வேர்டில் வடிவமைத்துவந்தேன்.

என்னதான் கஷ்டப்பட்டு வடிவமைத்தாலும் சிறு சிறு குறைகள் ஏற்பட்டுவிடுகின்றது. எழுத்துக்கள் கண்களை உறுத்துகிறது. பத்திகள் மாறி விடுகின்றது. எழுத்துப்பிழைகள் ஏற்பட்டுவிடுகின்றது. என் ஒருவனால் இவை அனைத்தையும் கவனித்து இதழை சரியான நேரத்தில் வெளியிடுவது என்பது சுமையை அதிகரித்தது. குடும்பத்தை கவனிப்பதில் நேரம் செலவழிக்க இயலவில்லை.

நேரம் செலவழிக்கும் தேன்சிட்டு மின்னிதழால் எனக்கு ஆத்ம திருப்தியைத் தவிர வேறெதுவும் வருமானமில்லை. ஒட்டுமொத்தமாக  மின்னிதழை நிறுத்திவிடலாம் என்றாலும் மனசு கேட்கவில்லை.  எனவே இந்த மாதம் முதல் தேன்சிட்டு மின்னிதழை இணைய இதழாக உருமாற்றம் செய்துள்ளேன். ஏற்கனவே நீங்கள் இணையத்திலும் வாசித்ததுதான். அப்போது பி.டி.எஃப் பைலும் கிடைக்கும். இந்தமாதத்தில் இருந்து அந்த பி.டி.எஃப் வடிவம் மட்டும் கிடையாது. மற்ற எல்லா பகுதிகளும் தனித் தனிப் பதிவுகளாக தேன்சிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும். 

படிப்பதற்கு வசதியாக இருக்கும். கண்களை உறுத்தாது.  என்னுடைய பணிச்சிரமமும் குறையும். வாசகர்கள் எப்போதும் போல் தங்கள் ஆதரவினை அளித்து தேன்சிட்டு சிறகடிக்க உதவி செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.

 இணைய இதழாக இருப்பதால் மாதம் இருமுறை பதிவுகளை  பதிவேற்றலாம் என்று நினைத்துள்ளேன். இந்த முதல் இதழுக்கு நீங்கள் அளிக்கும் ஆதரவினை பொறுத்து அதை முடிவு செய்ய உள்ளேன்.

வழக்கம் போல உங்கள் மேலான கருத்துகளையும் ஆலோசனைகளையும் வழங்குவதோடு படைப்புக்களையும் அனுப்பி வைத்து இதழ் சிறக்க உறுதுணையாக இருக்கும் படி அன்புடன் கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன். வணக்கம்.

அன்புடன் 

நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு.

கூடு: 2   தேனீ: 2

அக்டோபர்:2020

தேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் கதைகளில்வரும், சம்பவங்கள் இடங்கள் போன்றவை கற்பனையே! படைப்புகளை சுருக்கவும் மாற்றி அமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு.

தேன்சிட்டு இதழுக்கு படைப்புகளை அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி

thalir.ssb@gmail.com.

ஒவ்வொரு மாதமும் 15ம் தேதிக்குள் வரும் படைப்புகள் அடுத்த இதழுக்கு பரிசீலிக்கப்படும். நவம்பர் இதழுக்கான படைப்புகள் 15-10-2020க்குள் வந்து சேரவேண்டும்.

பிற இதழ்கள், இணைய தளங்கள், பழைய புத்தகங்களில் இருந்து படைப்புகளை எடுத்து அனுப்புவதை தவிர்க்கவும்.

படைப்புகளை அனுப்புகையில் இது தம் சொந்த படைப்பு என்றும் வேறு எங்கும் வெளியாகவில்லை என்ற உறுதி மொழி இணைத்தும் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தேன்சிட்டு இணைய இதழில் வெளியாகும் படைப்புகளுக்கு தற்சமயம் சன்மானம் எதுவும் வழங்குவது இல்லை. எனவே சன்மானம் குறித்து  தொடர்புகொள்வதோ படைப்பு வெளியாகுமா என்று கேட்பது போன்றவை தவிர்க்கவும்.

தகுதியான படைப்புகள் ஒரு மாத இடைவெளியில் பிரசுரமாகும். உதாரணமாக செப்டம்பர் மாதம் படைப்பு அனுப்பி இருந்தால் அக்டோபர் அல்லது நவம்பரில் பிரசுரமாகும். அதற்குமேல் பிரசுரம் காணாவிடில் படைப்பு தேர்வாகவில்லை என்று உணர்ந்து கொள்ளவும்

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

   வணக்கம்! தேன்சிட்டு மின்னிதழ் இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டாண்டுகளாய் வாசகர்களின் பெருமளவு ஊக்கத்தினாலும் ஆதரவினாலும் அன்பினாலும்  சிறகை விரித்து பறந்து கொண்டிருக்கும்  இந்த இதழ் மூன்றாம் ஆண்டிலும்  தொடர்ந்து பறந்து உங்கள் விருப்பங்களை நிறைவேற்றும்.

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் துவங்கிய கோவிட் 19 கொரானாத் தொற்று இன்னும் முழுவதும் அகலாமல் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நம் நாட்டையும் மாநிலத்தையும் கூட மிகவும் பாதித்து வருகின்றது. அச்சு ஊடகங்கள் இந்த தொற்றினால் இயங்க முடியாமல் நம் இயக்கத்தை தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் நிறுத்திக் கொண்டுள்ளன. பாரம்பரியம் மிக்க கல்கி வார இதழும் மின்னிதழாக  மாறிவிட்டது.

லாக்டவுன் காரணமாக ஏராளமான யூ-ட்யூப் சேனல்களும் மின்னிதழ்களும், புதிய இணைய தளங்களும் பெருகிவிட்டன. ஆன் லைன் வகுப்புகள் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையை துவக்கி விட்டன. முழுமையாக ஏழு மாதங்களை கடந்த பின்பும் இன்னும்  கோவிட் 19 பாதிப்பை விலக்க முடியவில்லை.  பள்ளிகள் திறக்கும் நாளும் பேருந்துகள் இயங்கும் நாளும் எந் நாளோ? என்று ஏங்க வைக்கிறது.

ஒவ்வொரு குடிமகனும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அன்றாடப் பொழுதை கழிக்க மிகவும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களின் வாழ்வாதாராத்தை பற்றி சிந்திக்காமால் குடிமக்களை எப்படி  பஞ்சம் பசி பட்டினியில் இருந்து காப்பது என்பது பற்றி துளியும் சிந்திக்காமல் யார் முதல்வர் என்ற நாற்காலி சண்டையில்  இறங்கியிருக்கிறது ஓர் அரசு.  மத்திய அரசோ புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழக மக்களுக்கு விரோதமான ஓர் கல்விக் கொள்கையை  இப்போது கொண்டு வந்திருக்கிக்கிறது. இடையில் ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டி தன்  ஆசையைப் பூர்த்தி செய்து கொண்டு விட்டது. எதிர்கட்சிகளோ  வலுவானதாக இல்லை. ஆளுங்கட்சியை அசைத்துப் பார்க்கும் திராணியோ திடமோ இல்லாமல்  அண்ணன் எப்போ சாவான்? திண்ணை எப்போ காலியாகும் என்ற மனப்பான்மையில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கின்றன.

இத்தகைய சூழலில் குடிமக்களாகிய நாம் விழித்தெழ வேண்டும். சாதி மத கட்சி அரசியலில் இருந்து வெளியே வர வேண்டும். நாட்டை காத்திடும் நல்லவர்களை  திறமையானவர்களை  ஆட்சிக் கட்டிலில் அமர்த்த வேண்டும். சினிமா பிரபலங்கள்,  கட்சி பிரமுகர்கள் என்று பார்க்காமல் நல்லவர் களை தேர்தலில் நிறுத்தி வெற்றிபெறச்செய்ய வேண்டும். அப்போதுதான் வலுவான பாரதம்  உருவாகும்.

இந்த ஆண்டுமலர் வழக்கம்போல உங்கள் அபிமான பகுதிகளைத் தாங்கி சிறப்பாக வந்திருக்கிறது. நகைச்சுவை சிறுகதைப்போட்டியில் ஆறுதல் பரிசு பெற்ற கதைகள் இடம்பெற்றிருக்கிறது. மேலும் சுவையான பகுதிகளுடன் உங்களுக்கு பிடித்த வகையில் வழங்கி இருக்கிறோம். படித்து ரசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து சொள்ளுங்கள்!  மீண்டும் அடுத்த இதழில் சந்திப்போம்! நன்றி.

அன்புடன்.  சா. சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு மின்னிதழ்.

மலர்: 3   இதழ்: 1

கதைகளில் வரும் பெயர்கள், இடங்கள், சம்பவங்கள் கற்பனையே! கதைகளை சுருக்கவோ, மாற்றவோ, திருத்தவோ ஆசிரியருக்கு உரிமை உண்டு.

தேன்சிட்டு மின்னிதழ் குழுமத்தின் சார்பாக  வடிவமைத்து வெளியிடுபவர் மற்றும் ஆசிரியர்:  நத்தம்.எஸ். சுரேஷ்பாபு.

முகவரி:  73. நத்தம் கிராமம். பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி வட்டம், 601204

அலை பேசி: 9444091441.

இமெயில்: thalir.ssb@gmail.com                 அடுத்த இதழுக்கான

உங்களின் படைப்புக்கள் வந்து சேர கடைசி தேதி: 15-09-2020

தேன்சிட்டு இணைய தள முகவரி:   http://thenchittu.com/

நவகுஞ்சரம்! மகாபாரதத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவை நவகுஞ்சரம். ஒன்பது மிருகங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவை இது. சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் கூடிய விலங்கு   நவ’ என்றால் ஒன்பதைக் குறிக்கிறது. ஒன்பது விலங்குகளின் கலவை என்பதால் நவகுஞ்சரம் என்று பெயர்.ஒரிய மொழிக் கவிஞரான சரளதாசர் எழுதிய மகாபாரதக் கதையில் நவகுஞ்சரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அர்ஜுனன் மலை மீது தவம் செய்துகொண்டிருந் தார். அப்போது நவகுஞ்சர உருவெடுத்து கிருஷ்ணர், அர்ஜுனன் முன் தோன்றியதாக வருகிறது.      

அன்பின் நன்றிகள்: அட்டைப்பட ஓவியம்: ஓவியர் மாருதி

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம். இந்த இதழுடன் நமது இதழ் இரண்டு ஆண்டுகளை முழுதாய் நிறைவு செய்கிறது. ஆறுமாதங்கள் முன்பு இவ்விதழை நிறுத்திவிடலாம் என்றொரு யோசனை வைத்திருந்தேன். அதையும் மீறி இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ததில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன்.

சென்ற இதழ் ஹைக்கூ சிறப்பிதழ் பற்றிய உங்கள் கருத்துகள் கிடைக்கப் பெற்றேன். ஹைக்கூ சிறப்பிதழ் ஹைக்கூ படைப்பாளிகள் பலருக்கு பெரிய சுவையை கொடுக்கவில்லை என்பதை விமர்சனங்களின் மூலம் அறிந்தோம். குறைகளை அடுத்தச் சிறப்பிதழில் நிறைகளாக்க முயல்வோம். இந்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழாக வெளியிடுகின்றோம். அதற்கு முதல் காரணம் எழுத்தாளர் தஞ்சை ப்ரணா. அவரது படைப்புக்களை நமது இதழில் தொடர்ந்து வாசித்து இருப்பீர்கள்.

   நான்கு மாதங்கள் முன்பு தேன்சிட்டு இதழ் சரிவர வாசகர்களிடையே சென்று சேரவில்லை என்ற வருத்தத்தில் இதழை பி.டி.எப் வடிவம் நிறுத்திவிட்டு இணைய தளத்தில் மட்டும் பதிவுகளாக வெளியிடலாமா என்று நான் யோசித்துக் கொண்டிருந்தபோது. தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப் போட்டி நடத்தலாமா என்று போனில் தொடர்பு கொண்டு கேட்டார். அவர் ஒரு பரிச்சயமான சிறந்த எழுத்தாளர். முகநூலில் அவருக்கு ஏராளமான நட்பும் பாலோயர்ஸும் உண்டு. அவர் முகநூலிலேயே இந்த சிறுகதைப் போட்டியை அறிவித்திருக்கலாம். இருப்பினும் தேன்சிட்டுடன் இணைந்து சிறுகதைப்போட்டியை நடத்த வந்தது மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.

  இதைக் கேட்டபோது. சிலர் மின்னிதழ் துவக்கி ஆர்பாட்டமாய் வெளியிடுவார்கள் சிலமாதங்களில் அந்த இதழ் காணாமல் போய்விடும். அப்படியில்லாமல் தொடர்ந்து நீங்கள் வெளியிட்டு வருகிறீர்கள். உங்களை பாராட்டும் விதமாகவும் வாசகர்களுக்கு இந்த கொரானா லாக்டவுன் காலத்தில் பயனுள்ள விதமாக பொழுது கழியும் வண்ணம் நகைச்சுவை சிறுகதைப்போட்டி நடத்தலாம் என்றார். அவர் தேன்சிட்டின் மீது கொண்ட நம்பிக்கை தேன்சிட்டுவிற்கு உற்சாகத்தைக் கொடுத்தது.

    தேன்சிட்டு- எழுத்தாளர் ப்ரணா நகைச்சுவை சிறுகதைப் போட்டி உதயமானது. அப்போட்டியில் வாசகர் பலர் கலந்து கொண்டு படைப்புக்களை அனுப்பி இருந்தீர்கள். அந்த படைப்புக்களை நடுவர் பரிசீலித்து பரிசுகளை அறிவித்துள்ளார்.  பரிசுபெற்றோர் விவரம் உள்ளே. பரிசுபெற்ற நகைச்சுவை கதைகளில் முதல் மூன்று பரிசினை பெற்ற கதைகள் இவ்விதழை அலங்கரிக்கின்றன.

நகைச்சுவை சிறப்பிதழில் உங்களை மகிழ்விக்கும் வண்ணம் ஏராளமான நகைச்சுவை துணுக்குகளும் நகைச்சுவை கதைகளும் தந்துள்ளோம். கொரானா என்னும் கொடிய தொற்றுநோயின் தாக்கத்தில் இருந்து கொஞ்சமேனும் உங்கள் துயரங்களை மறந்து சிரிக்க இந்த இதழ் உதவுமேயானால் மிகவும் மகிழ்வோம்.

   அடுத்த இதழ் மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எனவே புத்தம் புதிய பகுதிகளுடன் உங்களை மகிழ்விக்க வருகிறது தேன்சிட்டு.

உங்கள் படைப்புக்களையும் விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளையும் விரைந்து அனுப்புங்கள். தேன்சிட்டோடு வானில் சிறகடியுங்கள்! நன்றி வணக்கம்.                     அன்புடன்.

நத்தம்.எஸ். சுரேஷ்பாபு. ஆசிரியர், தேன்சிட்டு.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்!

        தேன்சிட்டு மின்னிதழின் 23 வது இதழான இந்த இதழ் ஹைக்கூ சிறப்பிதழாக மலர்வதில் பெருமை அடைகின்றேன். தமிழில் எழுதப்படும் குறுகிய வடிவிலான கவிதை வடிவம் ஹைக்கூவின் ரசிகன் நான். பல்லாயிரக்கணக்கான ஹைக்கூக்களை வாசித்து மகிழ்ந்து இருக்கிறேன். தேன்சிட்டு துவக்குகையிலேயே ஹைக்கூவிற்கு என குறும்பா கூடம் என்ற தனிப்பகுதியை துவக்கி ஹைக்கூ எழுத்தாளர்களை சிறப்பித்து உள்ளேன். அந்த வகையில் இப்போது ஹைக்கூவிற்கு என சிறப்பிதழ் வெளியிடுவது தமிழ் ஹைக்கூ எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் ஒரு பணியாக கருதுகின்றேன். இந்த இதழில் படைப்பாளர்கள் அனுப்பிய ஹைக்கூக்கள் தவிர இணையத்தில் தீவிர தேடுதலில் கிடைத்த  தரமான ஹைக்கூக்களை தந்துள்ளேன். இணைய படைப்பாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

தேன்சிட்டுடன் எழுத்தாளர் ப்ரணா இணைந்து நடத்தும் நகைச்சுவை சிறுகதைப்போட்டிக்கான உங்களின் படைப்புக்கள் கிடைத்து நடுவர் வசம் அனுப்பப்பட்டுள்ளது. நடுவரின் தீர்ப்பும் முதல் பரிசு பெறும் கதையும் அடுத்த இதழில் இடம்பெறும். கலந்து கொண்டோருக்கு எனது வாழ்த்துகள்.

வேலூர் காதல் கவிஞர் முத்து ஆனந்த் அவர்களின் கவிதைக்காதலி தொடர் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. 12 மாதங்களாக உங்களை காதல் பெருவெள்ளத்தில் மூழ்கடித்த கவிதைத்தொடர் நிறைவடைவதை வாசகர்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். எதுவொன்றிற்கும் ஆரம்பம் இருக்கும்போது முடிவும் இருக்கும் தானே.  கவிஞர் ப்ரணாவின் பாடல்கள் பலவிதம் தொடரும் இம்மாதத்துடன் நிறைவு பெறுகிறது.

 அடுத்த இதழ் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. எனவே விரைவில் புதிய பகுதிகளை எதிர்பாருங்கள். அடுத்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழாக அமைய உள்ளதால் வாசகர்கள் புதிய சிந்தனையில் அமைந்த புதிய ஜோக்ஸ்களையும் தங்கள் வாழ்க்கையில் நிகழ்ந்த நகைச்சுவை சம்பவங்களையும் நகைச்சுவை கதைகளையும் எழுதி அனுப்பி வையுங்கள். தரமான படைப்புக்கள் தேன்சிட்டை அலங்கரிக்கும்.

உலகெங்கும் பரவிய கொரானோ தொற்று தமிழகத்திலும் வேகமாக பரவிவருவது வேதனையளிக்கிறது. அரசாங்கம் ஊரடங்கு அறிவித்தாலும் கொரானாவின் வேகம் குறையாமலிருப்பது மக்களிடம் உள்ள அறியாமையையும் அசட்டுத் துணிச்சலையும் வெளிப்படுத்துகின்றது. அதே சமயம் மக்களின் வாழ்வாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் உரிமைகளை இந்த கொடும் தொற்று பறித்துக் கொண்டு இருக்கின்றது. சுதந்திரத்தின் அருமை இப்போது மக்களுக்கு புரிய ஆரம்பித்திருக்கும். ஆனாலும் அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்படுவதால் பாதிப்பு நமக்குத்தான் என்பதை உணர்ந்து  நோய் தொற்றிலிருந்து முழுவதும் விடுபட தன்னாலான ஒத்துழைப்பை மக்கள் கொடுக்க வேண்டும். கூடிய வரை வீட்டிலிருங்கள், வெளியே செல்கையில் முக கவசம் அணியுங்கள். கை, கால், முகம் முதலியவற்றை அடிக்கடி சோப்பு போட்டு கழுவுங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். இவையெல்லாம் நோயை நம்மிடம் இருந்து துர விலக்கும் சுயக் கட்டுப்பாடுகள் தான்.

முழுமையாக நோய் கட்டுப்படுவது நம் கையில் இல்லை. அது இறைவன் கையில் மட்டுமே. ஆனால் அந்த இறைவன் வாழும் கோயில்களும் இப்போது அடைத்துக் கிடப்பது கிரகங்களின் வலிமையை உணர்த்துகிறது. கோள்களின் இயக்கம் இப்போது நம்மை கட்டுப்படுத்தி வருகின்றது. அந்த ஆதிக்கத்தில் இருந்து விடுபட   இறை நாம ஜெபம் செய்வோம். கிருமியின் பெயரை சொல்லாது இறைவன் பெயரை உச்சரிப்போம். உலகம் மீண்டும் இயல்பு நிலை திரும்ப நேர்மறை சிந்தனைகளை விதைப்போம்.   

தொடர்ந்து தேன்சிட்டில் புதுமைகளை புகுத்திவருவதில் முனைந்து வருகின்றோம்.  உங்கள் கருத்துக்கள் பாராட்டுகள் எங்களை ஒருபடி உயர்த்தி வைக்கும். எனவே உங்கள் மேலான கருத்துக்களை உடனே எங்களுக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த இதழ் நகைச்சுவை சிறப்பிதழ்.  உங்கள் முகங்களில் புன்னகையை சிரிப்பை வரவழைக்க முயற்சிக்கிறோம்! கொரானா என்னும் “புண்”ணில் இருந்து மீண்டு புன்னகை மிளிரும் உலகம் மீண்டும் மிளிரட்டும். அடுத்த இதழில் சந்திப்போம். நன்றி.                                                      அன்புடன்.

                               நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர். தேன்சிட்டு.

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே!

தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்  ஜூன்2020

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! வணக்கம்!  உலகம் முழுவதும் கொடூரமான கொரானோ வைரஸ் பாதிப்பில் பாதிக்கப்பட்டுள்ள போதும் தேன்சிட்டு வாசகர்கள் மனம் சோராமல் தேன்சிட்டு இதழை வாசித்து மகிழ்ந்து கருத்துக்களை அனுப்பி வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அதே சமயம் தேன்சிட்டு இன்னும்  கொஞ்சம் பொறுப்புணர்வோடு வாசகர்களை திருப்தி படுத்தும் அளவிற்கு  இதழை தயாரித்து வழங்கவேண்டிய கடமையையும் இந்த கருத்துக்கள் எமக்கு உணர்த்துகிறது. அதற்கான முயற்சிகளை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றோம்.

   ஒவ்வொரு மாத இதழை தயாரிக்க ஆரம்பிக்கையிலும் இது முதல் இதழ் என்ற எண்ணத்தோடுதான் இதழை தயாரித்து மிகுந்த கவனத்தோடு உங்கள் முன் வைக்கிறோம்.எனவே தேன்சிட்டு என்றும் தேன் சிந்தும்.

கொரானாவோடு வாழப் பழகிக்கொள்ளுங்கள் என்று அரசாங்கம் கைவிரித்துவிட்ட வேளை இது. ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்தையும்  சுய சுகாதாரத்தையும் பின்பற்றினால் மட்டுமே இனிவரும் காலங்களில் நோய் தொற்று இல்லாமல் சுகாதாரமாக வாழமுடியும். எனவே நம்மையும் சுற்றுப்புறத்தையும் சுகாதாரமாக வைத்துக்கொள்வோம்.

ஏற்கனவே மூன்று மாத காலமாக பல்வேறு நிறுவனங்கள் இயங்காத நிலையில் தற்போது இயங்கத் துவங்கியுள்ள நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபடத்துவங்கிவிட்டன. கடுமையான பொருளாதார இழப்பை காரணம் காட்டி இந்த ஆட்குறைப்பில் நிறுவனங்கள் ஈடுபட்டாலும் தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு இல்லாத ஒரு பயங்கரமான நிலையை இந்த கொரானா கொண்டுவந்து வைத்துவிட்டது. இந்நிலையில் பொதுத்துறை நிறுவனங்கள் பலவற்றையும் தனியாருக்கு தாரைவார்த்துக் கொடுக்க அரசு தயாராகிவிட்டது. இது தொழிலாளர்களுக்கு பெரும் சிக்கலையே வரவைக்கும்.

2020 அமோகமாக இருக்கும் என்று சொன்ன ஜோஸ்யர்கள் காணாமல் போய்விட்டார்கள். 2020 ஆரம்பமே பெரும் பீதியை தந்துள்ளது. மீதி மாதங்களை கடக்க மக்களிடம் இப்போதுள்ள ஒரே பிடிமானம்  நம்பிக்கை மட்டுமே! ஆம் எல்லோருக்கும் நம்பிக்கை ஒன்றே இப்போது துணைவன். நம்பிக்கையோடு இருப்போம்! காலங்கள் மாறும் கஷ்டங்கள் தீரும் என்று கனவு காண்பதோடு அதை மெய்ப்பிக்கவும் பாடுபடுவோம்! கண்டிப்பாக நமது கனவும் மெய்ப்படும்.

தேன்சிட்டு மற்றும் எழுத்தாளர் ப்ரணா சேர்ந்து நடத்தும் நகைச்சுவை சிறுகதைப் போட்டிக்கான உங்கள் கதைகள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றது. இருப்பினும் பலர் எங்களை தொடர்பு கொண்டு  கடுமையான கொரானோ பாதிப்பு சூழலில் நகைச்சுவை எழுத மனம் வரவில்லை! கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

 வாசகர்களின் கோரிக்கையை முழுமனதோடு ஏற்றுக்கொண்டு  இந்த போட்டிக்கான கால வரையறையை ஜூன் மாதம் 30ம் தேதி வரை நீட்டித்து உள்ளோம். வாசகர்கள் இந்த அவகாசத்தை பயன்படுத்தி படைப்புக்களை அனுப்பி பயன்பெறவும்.

இந்த இதழில் வழக்கமான பகுதிகளுடன் சிறுகதை சிறப்பிதழாக நிறைய சிறுகதைகளுடன் மலர்ந்துள்ளது. இது உங்களுக்கு பெருமகிழ்ச்சி அளிக்கும் என்று நினைக்கின்றேன்.  தொடர்ந்து தேன்சிட்டு மின்னிதழை வாசித்து உங்கள் கருத்துக்களை அனுப்பி ஆதரவு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டு விடைபெறுகின்றேன்! நன்றி!                   அன்புடன்.

                                      நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு

                                  ஆசிரியர் , தேன்சிட்டு.

தேன்சிட்டு பல்சுவை மின்னிதழ்.   மலர் 2  இதழ்- 10

ஜூன் 2020

கதைகளில் வரும் இடங்கள், சம்பவங்கள், பெயர்கள் கற்பனையே! கதைகளை சுருக்கவும் மாற்றி அமைக்கவும் ஆசிரியருக்கு உரிமை உண்டு. தேன்சிட்டு மின்னிதழ் குழுமம் சார்ப்பாக வெளியிடுபவர். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு.

முகவரி: 73. நத்தம் கிராமம். பஞ்செட்டி அஞ்சல், பொன்னேரி வட்டம் 601204

அலைபேசி: 9444091441:  இமெயில் thalir.ssb@gmail.com.

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே!

அன்பார்ந்த வாசகப்பெருமக்களே! வணக்கம்! இனிய உழைப்பாளர் தின வாழ்த்துகள்! உலகம் முழுவது கோவிட் 19 வைரஸால் பாதிக்கப்பட்டு ஊரடங்கில் இருந்துவரும் வேளையில் தேன்சிட்டு இவ்வுலகை  மீண்டும் இயல்பு நிலைக்கு கொண்டுவர இறைவனை பிரார்த்தித்துகொள்கிறது.

இந்த வைரஸ் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் ஏராளம். ஒவ்வொரு பேரழ்ழிவின் போது நாம் படிக்கும் பாடங்கள் ஏராளம். அப்போது அதை பிரமாதப்படுத்துவதும் பின்னர் அதை கை கழுவிவிடுவதும் சகஜம். கை கழுவச்சொல்லும் இந்த வைரஸும் அப்படித்தான். இந்த இருமாத கால ஊரடங்கு நமக்கு கொடுத்திருக்கும் படிப்பினைகளை நாம் தொடர்ந்து கடைபிடிக்கப் போகிறோமா என்பதில்தான் நமது வருங்காலம் இருக்கிறது.

  தவறு என்பது தெரியாமல் செய்வது! தப்பு என்பது தெரிந்தே செய்வது! இந்த வைரஸ் தொற்றில் இருந்து நம்மை காப்பாற்றும் மருத்துவர்களையும் சுகாதாரப்பணியாளர்களையும் தெய்வமாக வழிபட வேண்டிய நேரத்தில் அவர்கள் இறந்து போனால் இடுகாட்டில் புதைப்பதற்கோ எரிப்பதற்கோ இடம் கொடாது கொடுஞ்செயல்களை சிலர் செய்துவருவது கண்டிக்கத்தக்கது. ஒருசிலரின் இந்த பாதகமான செயல்களால் ஒட்டுமொத்த மனிதர்களுமே மனிதம் மறந்தவராக சித்தரிக்கப்படுவது வருந்தக்கூடியது.

ஊடகங்களும் திரித்துக்கூறுவதும் பழித்து பேசுவதுமான போக்குகளை கைவிடவேண்டும். எதிர்கட்சிகளும் ஆளும் கட்சியுடன் இணைந்து இந்த வைரஸ்பாதிப்பில் இருந்து தமிழகம் மீள ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  .தமிழகவரலாற்றில் இது போன்ற கடும் நிகழ்வுகள் நிறைய முறை நடந்திருக்கலாம். அதிலிருந்து மீண்டு வந்த்து போல தமிழகம் புதிய எழுச்சியுடன் மலர்ந்து வரும் என்று நம்புவோம்.

தேன்சிட்டு வழக்கம்போல பழமையும் புதுமையும் கலந்து உங்கள் பார்வைக்கு வந்திருக்கிறது. நகைச்சுவை சிறுகதைப்போட்டி குறித்த அறிவிப்பும் வந்துள்ளது. உங்கள் பங்களிப்பை படைப்புகளாகவும் விமர்சன்ங்களாகவும் வழங்குங்கள்! தேன்சிட்டு சிறகடித்து உங்கள் மனதை மகிழ்விக்கும். நன்றி!  அன்புடன். நத்தம்.எஸ்.சுரேஷ்பாபு. ஆசிரியர்,