புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

  புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாளுக்கு உகந்த கிழமை சனி. கிரகங்களில் ஒன்றான சனிபகவானும் புரட்டாசிமாதத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. புரட்டாசிமாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.


   புரட்டாசி சனிக்கிழமை விரதம் பெருமாளுக்கு உரியது. பாவங்களை போக்கி புண்ணியங்களை தரக்கூடியது. காக்கும் கடவுளாம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை விரதம் இருப்பதால் எமபயம் விலகி அல்லவைகள் நீங்கி நல்லவைகள் கூடும் என்று நம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல் சனிபகவானின் தீய பார்வை விலகி கெடுபலன்கள் குறையும்.


    புரட்டாசி சனிக்கிழமைகளில் நீராடி திருமண் என்று சொல்லப்படும் திருநாமம் அணிந்து உபவாசம் இருந்து விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் எற்றி துளசிமாலை சார்த்தி திருமாலின் அஷ்டாட்சர மந்திரம் ஆகிய  “ஓம் நமோ நாராயணா” என்று நூற்றெட்டு முறை ஜபித்து வந்தால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும். நல்லவை நடக்கும். ஆழ்வார்கள் பாடியருளிய  திருப்பாவை, திருவாய்மொழி போன்ற பாசுரங்களையும் மனமுருக பாடி பெருமாளை சேவிக்கையில் நம் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும்.


 புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர்.வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.


இந்த சனிக்கிழமைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது. நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வது அவசியம். “”கரையாத நாமக் கட்டியும் புரட்டாசியில் கரைந்துவிடும்” என்பார்கள். காலை முதல் மாலை வரை பெரியவர்கள் பழம், பால் சாப்பிட்டும், குழந்தைகள், நோயாளிகள் இட்லி முதலான எளிய உணவு வகைகளைச் சாப்பிட்டும் விரதமிருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு, மஞ்சள் தடவிய ஒரு பித்தளைச் செம்பில் அரிசி எடுத்து, அதை பெருமாள் படம் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த அரிசியை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலாக சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து வணங்கி வர வேண்டும். பின்பு, பெருமாளுக்கு படைத்த பொங்கலைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று முழுக்க மனதுக்குள் “கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல நந்தன கோவிந்தா’ என்று சொல்லிக் கொண்டே நம் அன்றாடப்பணிகளைத் தொடர வேண்டும். மாலையில் கூட்டாக குடும்பத்துடன் அமர்ந்து “ஸ்ரீ வெங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே’ என்ற மந்திரத்தை 108முறை ஜெபிக்கலாம். “”வெங்கடேசா! உன் திருவடிகளைச் சரண அடைகிறேன்” என்பது இதன் பொருள்.


பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்
பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார்.


நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். பெருமாளுக்கு அலங்காரம் செய்யவோ, ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் பொருள் இல்லை. அதனால் களிமண்ணையே சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை மாலைபோல் தொடுத்துப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் தங்க மாலை அணிவித்து வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது தங்க மாலை மறைந்து, மண் மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், பீமன் குறித்தும் அவருடைய பக்தியைக் குறித்தும் அரசனுக்கு அறிவித்தார்.


பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் பொருட்களில் எல்லாம் மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் வைகுண்டப் பதவி அடைந்தார். பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்து பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளினை பெற்றுய்வோமாக!
(இணைய தளங்களில் படித்து தொகுத்தது) 

பாண்டவ மகள்… சுதானு

பாண்டவ மகள்… #சுதானு

ரமேஷ், சென்னை

 …பாண்டவருக்கு மகள் இருக்கும் விஷயம் சிலருக்காவது தெரிந்திருக்கிறது.

மகாபாரதம் உலகின் பெரிய காவியம் ஆகும் அதில் பல கதைகள் உண்டு. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் தொடர்கள் பாண்டவரை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. அதில் வரும் உபகதைகள் ஒளிபரப்பப்படுவதில்லை . அவ்வாறே பாண்டவ மகளின் கதை ஒரு உப கதையாகவும் நாட்டுப்புற கதையாகவும் உள்ளது.

🌼பாண்டவர்கள் :

சந்திர வம்ச அரசன் பாண்டுவின் ஐந்து புதல்வர்களே கூட்டாக பாண்டவர் என அறியப்படுகின்றனர்.

🌼திரௌபதி :

ஐந்து பாண்டவருக்கும் பொதுவான பத்தினி ஆவாள். திரௌபதியை தவிர பாண்டவருக்கு வேறு மனைவிகளும் உண்டு.

🌼உபபாண்டவர்:

பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து ஆண் குழந்தைகள் உபபாண்டவர் என அறியப்படுகின்றனர்.

🌼பாண்டவர் மகள் :

🌻திரௌபதி மற்றும் யுதிஷ்டிரன் இருவருக்கும் #சுதானு என்ற மகளும் பிரதிவிந்தியன் என்ற மகனும் பிறந்தனர். இந்த சுதானு தான் பாண்டவர் வம்சத்தின் மூத்த குழந்தை ஆவார். அதாவது உபபாண்டவரின் #சகோதரி தான் இந்த சுதானு.

தாய் திரௌபதி போல அழகும் அறிவும், தந்தை யுதிஷ்டிரன் போல தர்மமும் வீரமும் உடையவள் தான் இந்த சுதானு.

பிறகு

🌻பீமனுக்கும் திரௌபதிக்கும் சுதசோமனும்

🌻அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதகர்மன் பிறந்தான்.

🌻நகுலனுக்கும் திரௌபதிக்கும் சதாநிகனும்

🌻சகாதேவனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதசேனனும் பிறந்தனர்.

உபபாண்டவர் அனைவர்மீதும் பாரபட்சம் இன்றி அன்பை பொழிந்தாள் சுதானு. சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர் வனவாசம் சென்ற போது தாத்தா துருபதனின் மாளிகையில் பாண்டவரின் குழந்தைகள் அனைவரும் தங்கினர். எனவே அங்கு தாய்மாமன் மற்றும் அத்தையின் அன்பில் வளர்ந்த செல்ல மகள் தான் சுதானு. குருஷேத்திரப் போர் முடிந்த பிறகு பாண்டவரின் மகன்கள் அனைவரும் உறங்கும் போது அஸ்வத்தாமனால் கொல்லப்படுகின்றனர்.

பாண்டவ வம்சத்தில் மிச்சமிருந்தது சுதானு மட்டுமே.

💐இந்த சுதானுவானவள் கிருஷ்ணன் மற்றும் #சத்யபாமாவின் மூத்த மகன் #பானு வை காதலித்து அனைவரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு #வஜ்ரம் என்ற மகன் பிறக்கிறான்.

சிலரோ குருஷேத்திரப் போருக்கு பிறகு தான் இவரது திருமணம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் உபபாண்டவரின் அக்கா என்பதால் இவரது திருமணம் உபபாண்டவரின் திருமணத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் சுதானு துவாரகையில் வசிக்க ஆரம்பிக்கிறாள்.

💐கிருஷ்ணன் #ஜாம்பவதி இணையரின் மகனான #சாம்பனை மணந்த துரியோதனனின் மகள் லட்சுமணாவும் #துவாரகையின்_மருமகள் ஆவாள்.

தந்தையரை போல விரோதம் பாராமல், சுதானுவும் லட்சுமணாவும் அன்பாகவே வாழ்ந்தனர்.

🌼காந்தாரியின் சாபத்தால் துவாரகை அழியும் நேரத்தில் துவாரகையின் அனைத்து பெண்களும் குழந்தைகளும், அர்ஜுனன் மூலமாக ஹஸ்தினாபுரத்தை அடைகின்றனர்.

சுதானு தனது கடைசி காலத்தை அங்கே கழிக்கிறார்.

பாண்டவர்களுக்கு ஒரு சகோதிரியும் இருந்திருக்கிறார் 

குந்திக்கு 

4 பிள்ளைகள் அதாவது தர்மர் பீமன் அர்ச்சுனன் கடைசியில் உண்மை வெளியில் வந்தது கர்ணன். 

மாத்திரா தேவிக்கு 

3 பிள்ளைகள் நகுலன், சகாதேவன், இறுதியில் பாண்டு மாத்திரா தேவியை கூடிக்கலந்தபோது தான் பாண்டு இறந்தார். மாத்திரி உடன்கட்டை ஏறியதும் இவர்களின் அஸ்தி கடலில் விட்டனர். கண்ணனின் கருணையால் பாண்டுவின் விந்து மாத்திரி உடலில் இருந்ததால் உடன்கட்டை ஏறியும் அந்த விந்து தீயிலும் எதுவுமாகாமல் அஸ்தி கடலில் கலக்கும் போது கடலில் உள்ள சங்கில் தங்கியது. அந்த சங்கில் இருந்து பிறந்தவள் தான் சங்குவதி என்ற பெண். இந்த பெண் பாண்டவர்களுக்கு தங்கையாவாள். அர்ச்சுனன் போரில் வெற்றி பெற 5 பொருட்கள் தேவைப்பட்டன. அவை:

1. வீரப்பம்பை

2. வீரசாட்டி

3.வீரகந்தம்

4. பண்டாரப்பெட்டி

5. வீரவாள்.

இவை அனைத்தும் ஒருவனிடத்தில் தான் உள்ளது என்றார் கண்ணன். இவை அனைத்தும் யாரிடம் உள்ளது அர்ச்சுனன் கேட்க போத்தலிங்கம் என்பவனிடத்தில் உள்ளது என்று கண்ணன் கூறினார். இதை எப்படி வாங்குவது என்று அர்ச்சுனன் கேட்க இதை தந்திரத்தால்தான் வாங்க முடியும் என்று கண்ணன் கூறினார். இதில் கண்ணன் கூறிய வழி வீமன் விறகு விற்பவனாகவும், அர்ச்சுனன் அழகிய பெண்ணாக விஜயாம்பாள் என்ற பெயருடன் மற்றும் கண்ணன் விஜயாம்பாளுக்கு தாய்கிழவியாக போத்தலிங்கம் உள்ள நாட்டிற்கு சென்றனர். வீமன் விறகு விற்பவனாக சென்று கொண்டிருக்க விஜயாம்பாள் தன் அண்ணனை தேடிக்கொண்டு போக அச்சமயம் போத்தலிங்கம் விஜயாம்பாளை கண்டு அவள்மீது மோகம் கொண்டான். என் அண்ணன் விறகு விற்றகொண்டு இந்த வழியாக வந்ததை பார்த்தீர்களா என்று விஜயாம்பாள் கேட்க அழள் பேச்சிலும் அழகிலும் மயங்கினான் போத்தலிங்கம். உனக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்னை மணந்துக்கொள் என்று கூறினான்.  அந்த சமயத்தில் அந்த பெண்ணிற்கு தாய் கிழவியாக வந்தார் கண்ணன். அப்போது விஜயாம்பாள் என் பாட்டி என்ன கேட்கிறாரோ அதை தந்தால் நான் தங்களை மணப்பேன் என்று கூறினாள்.            1. வீரப்பம்பை

2. வீரசாட்டி

3.வீரகந்தம்

4. பண்டாரப்பெட்டி

5. வீரவாள். 

இவைகள் நாங்கள் பூஜை செய்வதற்கு தேவைப்படுகிறது. இவைகளை கொடுத்தால் நாங்கள் இருவரும் பூஜை முந்ததும் தருகிறோம் என்று தாய்க்கிழவி சொல்ல போத்தலிங்கம் கொடுத்தார். நாங்கள் பூஜை செய்வதை யாரும் பார்க்க கூடாது என்று தாய்கிழவி கண்டிப்புடன் போத்தலிங்கமிடம் கூறினாள். அதற்கு சம்மதித்த போத்தலிங்கம் சற்று பொறுமை காத்தான். சற்று நேரம் கழித்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் காணவில்லை. போத்தலிங்கம் விஜயம்பாள் விஜயாம்பாள் என்று புலம்பி கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தேடினான். இறுதியில் அவர்கள் இருக்கும் நாட்டில் கண்டுபிடித்தப்பின் கண்ணன் நாங்கள் உன்னிடம் இந்த 5 பொருட்களை வாங்கவே வந்தோம் என்று நடந்த உண்மையை கூறி விளக்கினார். அதற்கு பின்பும் போத்தலிங்கம் விஜயாம்பாள் விஜயாம்பாள் என்றான். அதற்கு கண்ணன் சங்கு துவாரகையில் பாண்டுவிற்கும் மாத்ராதேவிக்கும் பிறந்த பெண் பாண்டவர்களின் தங்கையான சங்குவதி இருக்கிறாள் அவளை மணந்துக்கொள் என்று கண்ணன் கூறினார். அன்றுதான் பாண்டவர்களுக்கு தங்கை இருப்பது தெரியும். போத்தலிங்கம் சங்குவதியை மணந்தார். பின்பு போர்க்களத்தில் போத்தலிங்கம் முன்னிருக்கும் பிள்ளையாக போர்மன்னனாக இருக்கவேண்டும் என்று கண்ணன் கூறினார்.

7 தலைமுறை பாவத்தை நீக்க வரும் சூரிய கிரகணம்2020🚩

ரமேஷ், சென்னை.

639 வருடத்திற்கு ஒருமுறை வரும் சூரிய கிரகணம் 21.6.2020 🚩🚩

🚩🚩 7 தலைமுறை பாவத்தை நீக்க வரும் சூரிய கிரகணம்2020🚩🚩

👉(நிகழும் ஸார்வரீ ஆண்டு ஆனி மாதம் -6 ஆம் தேதி (20-6-2020) சனிக்கிழமை அன்று தந்தையில்லாதவர்கள் அமாவாசை தர்ப்பணத்தை செய்ய வேண்டும்.)👈

🌞(மறுநாள் அதாவது ஆனி மாதம்-7 (21-6-2020) ஞாயிற்றுக்கிழமை பார்சுவ சூடாமணி சூர்ய கிரஹணம் ஆகும். )🌞🌞🚩🚩🙏
அன்று காலை வழக்கம்போல காலை நித்ய கர்மாக்களான பிராதஸ்நானம்,🚩 ஸந்த்யாவந்தனம், 🚩 சமிதாதானம்/ஔபாஸனம்🚩 ஆகிய கர்மாக்களைச் செய்துவிட்டு , நித்யபூஜையையும் செய்துவிடலாம். பிரஹ்ம்ம யக்ஞ பாராயணமும் செய்து முடித்து விடலாம். காலை சுமார் பத்து மணியளவில் கிரஹண ஸ்நானத்திற்காக மஹாஸங்கல்பம் செய்து கொண்டு ஸ்நானம் செய்துவிட்டு, முன்பே கூறியது போல தானங்களை உரியவர்களுக்கு கொடுத்துவிட்டோ(அல்லது) தத்தம் செய்து எடுத்துவைத்துவிட்டோ, பிறகு காயத்ரீ ஜபம் மற்றும் தெறிந்த வேத மந்திரங்கள் ஸ்லோகங்களைச் சொல்லலாம்.
தந்தை இல்லாதவர்கள் ஸ்ராத்தம் செய்து அதற்கு அங்கமான தர்ப்பணத்தையும் செய்ய வேண்டும். இவைகள் அனைத்தையும் அந்த கிரஹண காலமான காலை(10.22) முதல் பிற்பகல் (1.42) மணிக்குள் செய்ய வேண்டும். சாந்தி செய்ய வேண்டிய நட்சத்திரகாரர்கள். ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, ஹஸ்தம், சித்திரை, ஸ்வாதி, திருவோணம், அவிட்டம், சதயம்.)🚩🌞🙏

🚩🚩🌞ஆசமனம்🌞🚩🚩
சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே ||🙏
ஓம் பூ : + வஸ்ஸுவரோம் .🤭
( ப்ராணாயாமம் செய்து விட்டு சங்கல்பம் )🤝
மமோபாத்த ஸமஸ்த துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்./ ஸ்ரீமன்நாராயணப் ப்ரீத்யர்த்தம். அபவித்ர: பவித்ரோவா, ஸர்வாவஸ்தாம், கதோபிவா, யஸ்மரேத், புண்டரீகாக்ஷம், ஸபாஹ்யா, அப்யந்தர: ஸ்சுசி : மானஸம், வாசிகம், பாபம் , கர்மணா, ஸமுபார்ஜிதம் , ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி, நஸம்சய : ஸ்ரீராம, ராம ராம ராம, திதிர்விஷ்ணு ; ததா வார : நக்ஷத்ரம், விஷ்ணுரேவச, யோகஸ்ச, கரணம்சைவ, ஸர்வம்,விஷ்ணுமயம், ஜகத் , ஸ்ரீ கோவிந்த , கோவிந்த கோவிந்த, அத்ய ஸ்ரீ, பகவத : மஹாபுருஷஸ்ய , விஷ்ணோராக்ஞயா , ப்ரவர்த்தமானஸ்ய ஆத்யப்ரஹ்ம்மண : த்விதீயபரார்த்தே, ஸ்வேதவராஹ, கல்பே, வைவஸ்வத, மன்வந்தரே, அஷ்டாவிம்சதிதமே, கலியுகே, பிரதமேபாதே, ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதக்கண்டே, மேரோ: தக்ஷிணே பார்ச்வே, சகாப்தே, அஸ்மின், வர்த்தமானே, வ்யாவஹாரிகே,(சாந்த்ரமாநேந), ப்ரபவாதீனாம், ஷஷ்ட்யா: ஸம்வத்ஸராணாம், மத்யே…….ஸார்வரீ நாம ஸம்வத்ஸரே , உத்தராயணே , கிரீஷ்மருதௌ , மிதுன மாஸே , கிருஷ்ணபக்ஷே, அமாவாஸ்யாம், சுபதிதௌ , வாஸர: பானு வாஸரயுக்தாயாம், ம்ருகசீர்ஷோ நக்ஷத்ரயுக்தாயாம், கண்டநாமயோக, நாகவகரண, ஏவங்குண, விசேஷண, விசிஷ்டாயாம், அஸ்யாம், வர்த்தமானாயாம், அமாவாஸ்யாம் சுபதிதௌ. மமோபாத்த, ஸமஸ்த, துரிதக்ஷயத்வாரா, ஸ்ரீபரமேஸ்வர, ப்ரீத்யர்த்தம்,
……….கோத்ரோத்பவஸ்ய
………..நக்ஷத்ரே
………..ராசௌஜாதஸ்ய
………..சர்மண:மம
………..நக்ஷத்ரே
………..ராசௌ ஜாதாயா:
……….நாம்நீயா:
மம தர்ம பத்னீயா:
…….. ……. …….. ……. …….
மம குமாரஸ்ய………..
மம குமார்யா: …………
மம ஜனகஷ்ய ……..‌…
மம ஜனன்யா:………(ext).‌.‌…….
அவயோ: (மம) ஸக குடும்பஸ்ய,
க்ஷேமஸ்த்தைர்ய, தைர்ய, வீர்ய, விஜய, ஆயு: ஆரோக்ய, ஐஸ்வர்யாணாம், அபிவிருத்யர்த்தம், ஆயுஷ்மது, சத்சந்தான, சம்ருத்யர்த்தம், ஸமஸ்த, மங்கள, அவாப்த்யர்த்தம், சமஸ்த, துரித, உப சாந்த்ய்ர்த்தம், ஸமஸ்த, அப்யுதயார்தம்ச, தர்மார்த்த, காம்ய மோக்ஷ, சதுர்வித, பல புருஷார்த்த, ஸித்யர்த்தம், இஷ்ட காம்யார்த்த, ஸித்யர்த்தம், உத்யோக, வ்யாபார, வ்யவசாய, ஸத்கீர்த்தி, யசசு, தன தான்ய, லக்ஷ்மிகடாக்ஷ, அபிவ்ருத்யர்த்தம், சத்ருபாதா, நிவர்த்யர்த்தம், ராஜத்வாரே, ஸர்வகார்ய, ஆனுகூல்ய, ஸித்யர்த்தம், இஷ்ட தேவதா, குலதேவதா, க்ஷேத்திரமேவ, பதே பதே, புனர்தர்சன, ப்ராப்த்யர்த்தம், ஸரீரே, வர்த்தமான, வர்த்திஷ்யமான, ஸமஸ்த, ரோக பீடா, பரிஹாரார்த்தம், ‌ஜென்மலக்ன, ஜென்மநக்ஷ்த்திர, ஜென்மராசி, அபேக்ஷயா, சந்த்ரலக்ன, சந்த்ரராசி, அபேக்ஷயாச, ஜென்ம, கர்மாத்தான, ஸ்வாங்காதிக, வைநாசிக, காலச்சக்ரவசாத், அங்கக்ருஹவசாத், உபக்ருஹவசாத், பாவக்ருஹவசாத், நவாம்ச, தசாம்ச, த்ரும்சாம்ச, ஷஷ்டியாம்ச, அம்சாவசாத், ஜன்மாப்யாஸாத், ஜன்மபிருப்ருதி, ஏதக்ஷணபர்யந்தம், இதாநீம், ஸமஸ்த, பாபக்ஷயார்த்தம், துஸ்வப்ன, துஸ்சகுன, தௌர்மனஸ்ய, துஸ்சிந்தன, துஸஷ்கீர்த்தி, நிவார்த்யர்த்தம், ப்ரை: க்ருத, கரிஷ்யமான, மந்தர, யந்தர, தந்தர, ஆபிசார, விஷசூர்ண, ப்ரயோக, ஆகர்ஷண, வசீகரண, மோகன, ஸ்தம்பன, உச்சாடண, பந்தநாதி, ஜெனித, உபத்ரவ, நிவர்த்யர்த்தம், ரவி, அங்காரக, ஜீவ, சுக்ர, ஸோம, ஸெயம்ய, சனி, ராகு, கேது, சாரவசாத், நவக்கிரஹ, ஜனிததோஷ, நிவாரணார்த்தம், வக்ரஹோர, மஹாதசா, மாரகாதி, க்ருஹவேதா, மஹாவேதாதி, ஜனித, உபத்ரவ, நிவர்த்யர்த்தம், சிவத்துரோக, விஷ்ணுத்துரோக, குருத்துரோக, பிராமணத்துரோக, பசுபக்ஷியாதித்துரோக, ஸ்வர்ண, அபஹரண, சுவாஸிநீகோப, பகவதீகோப, குல பாரம்பரிய, தெய்வசாப, மனுஷ்யசாப, மாத்ருசாப, பித்ருசாப, குருசாப, பராமணசாப, பந்துஜனசாப, பக்ஷிசாப, விருக்ஷசாப, ஸர்வசாப, தோஷ, நிவாரணார்த்தம், வஷேசதக: அநாதி, அவித்யா வாஸனயா, அஸ்மின் மஹதி, ஸம்ஸார சக்ரே, விசித்ராபி : கர்மகதிபி : விசித்ராஸு, யோனிஷு, புந :புந : அனேகதா, ஜனித்வா, தேனாபி, புண்யகர்ம, விசேஷ்ண, இதானீம், தனமானுஷ்யே, த்விஜஜன்மவிசேஷம், ப்ராப்தவத :(மம) ஜன்மாப்யாஸாத், ஜன்மப்ரப்ருதி, ஏதக்ஷாண, பர்யன்தம், பால்யேவயஸி, கௌமாரே, யௌவனே, வார்தகே ச, ஜாக்ரத்ஸ்வப்ன, ஸிஷுப்தி, அவஸ்தாஸு, மனோவாக்காய, கர்மேந்த்ரிய, ஞானேந்திரிய, வியாபாரைஸ்ச, ஸம்பாவிதானாம், ஸர்வேஷாம், பாபாநாம், ஸத்ய: அபநோதநார்த்தம், ஸமஸ்த, பாபக்ஷயார்த்தம், (மம) இஹஜன்மணி, புர்வஜன்மணி, ஜன்ம, ஜன்மாந்த, ரெஷுச, ரஹஸ்யக்ருதாநாம், ப்ரகாஷக்ருதாம், அதிபாதகாநாம், உபபாதகாநாம், ஸமபாதகாநாம், மஹாபாதகாநாம், சங்களிகரணானாம், மலனிகரணானாம், அபாத்ரிகரணானாம், யாதிபரம்ஸகரணானாம், ப்ரகீர்னகரானாம்,
ஞானத: ஸக்ருத் கிருதானாம், அக்ஞானத ; அஸக்ருத் க்ருதானாம், ஞானத : அக்ஞானதஸ்ச, அத்யன்த அப்யஸ்தானாம், நிரன்தர அப்யஸ்தானாம், க்ஷிரகாலாப்யஸ்தானாம், நிரந்தர, க்ஷிரகாலாப்ய
ஸ்தானாம் ஏவம்நவானாம், நவவிதானாம், பஹூனாம், பஹுவிதானாம், ஸர்வேஷாம், பாபானாம், ஸத்ய : அபனோதனத்வாரா, அயாஜ்யயாஜன, அதஸ்ப்ரதிக்ரஹன, அபக்ஷ்யபக்ஷண, அபோஜ்யபோஜன, அபேயபேயாதி, ஸமஸ்த, பாபஷ்யார்த்தம்,(மம) ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், (மம) தர்மபத்னீயா: தீர்கஸெமங்கள்ய, பிராத்யர்த்தம், (மம) ஜனகஷ்ய, ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், ஜனன்யா: தீர்க, ஸெமங்கள்ய, பிராத்யர்த்தம்,
அஸ்மின், தம்பதி, ஸகித, பீமரதசாந்தி, விஜயரதசாந்தி, சதாபிஷேக, கனகாபிஷேக, பூர்ணாபிஷேக, பிராத்யர்த்தம், பூர்ணாபிஷேக, பரியந்தம், ஸரிரம், வஜ்ரவது, திடகாத்ரதா, சித்தியர்த்தம், (மம) குமாரஸ்ய, குமார்யா: ஸகல, வித்யா, பிராத்யர்த்தம்………….(ext)
மம கிருஹே, ஸர்வ மங்கள, அபிவ்ருத்யர்த்தம், ஸகல, கல்யாண, ஸம்ருத்யர்த்தம்.

🚩ஸ்ரீ காமாக்ஷி அம்பிகா சமேத ஸ்ரீ ஏகாம்பரேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ மகா திரிபுரசுந்தரி அம்பிகா சமேத ஸ்ரீ சந்திரமௌலீஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ தேவி பூதேவி அம்பிகா சமேத ஸ்ரீ வரதராஜஈஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ அஸ்வத்த நாராயண ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ ரங்கநாயகி அம்பிகா சமேத ஸ்ரீரங்கநாத ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீமீனாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ சுந்தரேஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ அலமேலு அம்பிகா சமேத ஸ்ரீ வெங்கடாஜலபதி ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ அபயாம்பிகை அம்பிகா சமேத ஸ்ரீ மயூரநாதர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் ஈஸ்வர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ புவனேஸ்வரி அம்பிகா சமேத ஸ்ரீ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ வள்ளி தேவசேனா அம்பிகா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீசாயா சுவர்ச்சலா அம்பிகா சமேத ஆதித்யக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீரோகிணி தேவி சமேத ஸ்ரீ சோமக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீசக்தி தேவி சமேத ஸ்ரீஅங்காரக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீஞான தேவி சமேத ஸ்ரீபுதனக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீதாராதேவி சமேத ஸ்ரீபிரகஸ்பதிக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீசுகீர்த்திதேவி சமேத ஸ்ரீசுக்கிரன்க்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீநீளாதேவி சமேத ஸ்ரீசனீஸ்வரக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீசிம்மிதேவி சமேத ஸ்ரீராகுக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீசித்ரலேகா தேவி சமேத ஸ்ரீகேதுக்ரஹ ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ ஆதித்யாதி நவக்ரஹ தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ அபிராமி அம்பிகா சமேத ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ பாலாம்பிகா சமேத ஸ்ரீ அமிர்தமருத்யுஞ்ஜய ஸ்ரீ மார்க்கண்டேஸ்வரர் ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீபாஸ்கரஷேத்ரே ஸ்ரீசேது மாதவ ஸ்ரீகாலபைரவர் ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩ஸ்ரீ சீதா லட்சுமண பரத சத்ருக்ன ஹனுமத் சமேத ஸ்ரீ ராமச்சந்திர ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩 ஸ்ரீ ஜகத்குரு ஆதிசங்கரர் ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩 ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹஸ்வாமி ஸன்னிதௌ.

🚩 ஸ்ரீ இஷ்டதேவதா குல தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩 ஸ்ரீவிநாயகாதி ஸமஸ்த ஹரிஹர தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.

🚩திரயஸ் த்ரிகும் ஸத்கோடி தேவதா ஸ்வாமி ஸன்னிதௌ.
மம ஸமஸ்த, பாபஷ்யார்த்தம், ஸூர்யோபராக, புண்யகாலே … புண்யக்ஷேத்ரே /புண்யதீர்த்தே , புண்யகால, ஸ்நானமஹம், கரிஷ்யே.🌞🙏🚩

🚩👉(அப உபஸ்ப்ருஸ்ய) 👈🚩

👉( கைகளை தீர்த்தத்தால் துடைத்துக் கொள்ளவும் ) 👈

🙏(பிரார்த்தனை ஸ்லோகம்)🙏
🚩துர்போஜன துராலாப துஷ்ப்ரதிக்ரஹ ஸம்பவம் பாபம் ஹர மமக்ஷிப்ரம் ஸஹ்ய கன்யே நமோஸ்துதே ||🚩

👉(க்ரஹசாந்தி பரிஹார ஸ்லோகம்)👈 🚩🌞🚩
🚩யோசௌ வஜ்ரதரோ தேவ:
ஆதித்யானாம் ப்ரபுர்மத:|
ஸஹஸ்ர நயன சூர்ய: க்ரஹ பீடாம் வ்யபோஹது||🚩

👉(ப்ராதஸ்நானம் மந்திரம்)👈
🚩அதிக்ரூர மஹாகாயா கல்பான்த கஹனோபம் . ! பைரவாய நமஸ்துப்யம் அனுஞாம் தாதுமர்ஹசி || 🚩

🚩கங்கா கங்கேதி யோப்ரூயாத்
யோ ஜனானாம் சதைரபி:!
முச்யதே ஸர்வ பாபேப்ய:
விஷ்ணு லோகம் ஸகச்சதி||🚩

👉(இடுப்பு வேஷ்டி பிழியும் போது சொல்ல வேண்டிய மந்திரம்)👈
🚩உச்சிஷ்ட பாகினோ தாஸா:
யேம்ருதா:அமந்த்ரகா: த்ருப்யந்து தநுதாம் ப்ராப்தா: மம ஸம்பந்தி நோநரா:🚩

👉(வேஷ்டியை உதரும் மந்திரம்) 👈
🚩உதுத்யம் ஜாதவேதஸம் தேவம்வஹந்தி கேதவ: த்ரேசே விச்வாய ஸூர்யம்.🚩

👉(வேட்டியை கட்டிக் கொள்ளும் மந்திரம்)👈
🚩ஆவஹந்தி விதன்வானா + ப்ரமா பத்யஸ்வ.🚩

👉(இதனுடன் ஆபோஹிஷ்டா , அகமர்ஷண ஸூக்தம் போன்ற மந்திரங்களைக் கூறி ஸ்நானம் செய்யவும் முடிவில் ஸ்நானாங்க தர்ப்பணம் செய்யவும்)👈

      (🌞கிரகணம்🌞)

🚩( ஸ்நான ஸாத்குண்யம் )🚩
ஹிரண்ய கர்ப கர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோ : | அனந்த புண்ய பலதம் அத : சாந்திம் ப்ரயஸ்ச்சமே || அத்ய க்ருத புண்யகால ஸ்நான பல ஸித்யர்த்தம் இமாம் தக்ஷிணாம் ப்ராஹ்ம்மணாய ஸம்ப்ரததே நம : நமம . 🚩🚩

👉(பிறகு கையில் சிறிதளவு ஜலம் எடுத்துக்கொண்டு கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி கீழே விடவும்) 👈

🚩காயேந வாசா மநஸேந்த்ரியைர்வா புத்யாத்மநாவா ப்ரக்ருதே: ஸ்வாபாவாத் கரோமி யத்யத் ஸகலம் பரஸ்மை நாராயணாயேதி
ஸமர்ப்பயாமி.🚩

🙏(கிரஹணம் விட்டபிறகு விட்ட ஸ்நானம் செய்து விட்டு, அன்றைய மதியம் செய்யவேண்டிய மாத்யானிகம், பிரம்மயக்ஞம் நித்யகர்மாக்களை செய்ய வேண்டும்)🙏

      🌞🚩(சம்பூர்ணம்) 🚩🌞

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

மங்கள கிரி ஸ்ரீ பானக நரசிம்மர்!

  ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் இருபத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது மங்களகிரி என்னும் வைணவத்தலம். இந்த தலத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மராக ஸ்ரீதேவியை இடது மடியில் அமர்த்திக்கொண்டு அருள்புரிகிறார் மகாவிஷ்ணு. இக்கோயிலுக்கு அருகில் மலை மீதுள்ள குகை ஒன்றில் ஸ்ரீ நரசிம்மர் சுயம்பு மூர்த்தியாக காட்சி தருகிறார். இவருக்கு பானகம் நைவேத்தியம் செய்யப்படுகிறது. இவரே ஸ்ரீ பானக நரசிம்மர் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

    பாரதத்தில் உள்ள மலைகள் மகேந்திரம், மலையம், ஸஹ்யம் சுக்திமான், ருக்ஷம் விந்தியம் பாரியாத்ரம் என்ற சப்த குல பர்வதங்கள் என்று விஷ்ணுபுராணத்தில் கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியாகிய மகாலட்சுமி அமிர்தத்தை விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து தவக்கோலத்தில் நின்றதன் காரணமாக பாரியாத்ர பர்வதத்திற்கு மங்களகிரி என்ற பெயர் வந்தது. ஹஸ்தகிரி, தர்மாத்ரி, தோத்தாத்ரி, முக்தியாத்ரி, சபலதா என்பவை அதன் மற்றபெயர்களாகும்.

   மங்களகிரி மலையில் மேய்ந்துவந்த பசு ஒன்று தினமும் மாலையில் பால் இல்லாமல் திரும்பியதை கண்ட பசுவின் சொந்தக்காரன் சந்தேகித்து பசுவை பின் தொடர்ந்து கண்காணித்து வந்தான். அச்சமயம் ஒருநாள் இரவும் பகலும் கூடும் அந்தி வேளையில் நிழல் உருவம் ஒன்று அப்பசுவின் பாலை அருந்திவிட்டு அருகிலிருந்த குகையில் சென்று மறைவதைக் கண்டான்.

    அன்று இரவு அவனது கனவில் ஸ்ரீ மகாலட்சுமி சமேதராய் ஸ்ரீ நரசிம்மர் காட்சி தந்து தான் நொமுச்சி என்ற கொடிய அசுரனுக்காக குகையில் மறைந்திருப்பதாக கூறி மறைந்தார். மறுநாள் அவன் அந்த குகைத் துவாரத்தில் பசுவின் பாலை ஊற்றினான்.  ஆனால் அதிலிருந்து வழிந்துவிட்ட பாதி பாலை பிரசாதமாக வீட்டுக்கு எடுத்துச்சென்றான்.

   அந்தப் பகுதியை ஆண்டுவந்த அரசன் இதைக் கேள்விப்பட்டு ஸ்ரீ நரசிம்மருக்கு குகைமீது கோயில் எழுப்பியதாக மங்களகிரி தலபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

   கொட்டைப்பாக்கில் செலுத்திய ஊசிமுனையில் ஒற்றைக்கால் கட்டை விரலில் சூரியனை நோக்கி நின்று பிரம்ம தேவனை தியானித்து தவம்புரிந்தவன் கொடிய அரக்கன் நொமூச்சி. அவனுக்கு காட்சி தந்த பிரம்ம தேவன் எந்த மானிடனாலோ, ஆயுதத்தினாலோ நொமூச்சிக்கு மரணம் ஏற்படாது என்ற வரத்தை கொடுத்துவிட அரக்கன் தேவர்களை துன்புறுத்த அவர்கள் மஹாவிஷ்ணுவை சரணடைந்தார்கள் அதையடுத்து மஹாவிஷ்ணு நரஸிம்ம மூர்த்தியாக மங்களகிரி குகையினுள் நொமூச்சியின் வருகைக்காக காத்திருந்தார். இந்திரன் விடுத்த சக்ராயுதத்தை தன் விரல்களில் ஏற்றுக்கொண்டு குகையருகில் நொமூச்சியை சம்ஹரித்தார் என்று பிரம்மவைவர்த்த புராணத்தின் சங்கரகீதை கூறுகிறது. ஸ்ரீ நரசிம்மரது நகங்கள் சுதர்சன சக்கரத்தின் அம்சமாக இதன் காரணமாக கருதப்படுகிறது.

   கிருத யுகத்தில் அவ்வாறு அமிர்தத்தை அருந்திய நரசிம்மர், திரேதாயுகத்தில் பசுநெய்யையும் துவாபர யுகத்தில் பசுவின் பாலையும் கலியுகத்தில் பானகத்தையும் அருந்தி அருள் பாலிக்கிறார் என்று கூறப்படுகிறது.

   மங்களகிரி மலை எண்ணூறு அடி உயரம் கொண்டது. நானூறு படிகள் ஏறினால் நரசிம்ம தரிசனம் கிடைக்கும். அடிவாரத்தில் பிரம்மராம்பிகை சமேத மல்லேஸ்வரரையும் அருகில் உள்ள கருடாழ்வாரையும் தரிசித்து விட்டு மலை ஏறத் தொடங்கலாம்.

   ஐம்பது படிகள் ஏறியதும் பால்செட்டு வெங்கடேஸ்வர சுவாமியைத் தரிசிக்கலாம். ஒரு சமயம் சர்வ சுந்தரி என்ற அப்சரஸ் பெண் கொடுத்த சாபத்தினால் நாரத மஹரிஷி பாலவிருட்சமாக மாறி நின்றார். வேங்கடேஸ்வர சுவாமி அருகே வளர்ந்த அந்த பால்செட்டு செடி பிற்காலத்தில் மலையடிவாரத்தில் கருடாழ்வார் சன்னதி அருகில் நடப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

  புத்திரப்பேறு கிடைக்காத பெண்கள் ருதுஸ்நானம் முடிந்த தினம் இந்த பால் விருட்சத்தை வலம் வந்து பழங்களை வினியோகித்தால் அவர்களுக்கு புத்திரபாக்கியம் கிட்டும் என்ற நம்பிக்கை இங்கு காணப்படுகிறது

     நரசிம்மர் சிலை அகன்ற பித்தளை வாயுடன் உள்ளது. பெரிய சட்டிகளில் பானகம் தயாரித்து வைத்துள்ளனர். இதில் நான்கைந்து சட்டி பானகத்தை நரசிம்மரின் அகன்ற வாயில் ஊற்றுகிறார் அர்ச்சகர். அப்போது மடக் மடக் என மிடறல் சத்தம் கேட்கிறது. குறிப்பிட்ட அளவு குடித்ததும் சத்தம் நின்று விடுகிறது. சட்டியில் இருக்கும் மீதி பானகத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுத்து விடுகிறார். சில சமயங்களில் நரசிம்மர் வாயில் இருந்து பானகம் வெளியேயும் வருகிறது. இந்த வழிபாட்டுக்கு கட்டணம் ரூ.45.  கோயிலிலேயே பானகம் கிடைக்கிறது. இந்த மலை முன்பு  எரிமலையாக இருந்ததாம். இதில் இன்னொரு விசேஷம் என்னவென்றால், வெல்லமும், பானக நீரும், தேங்காய் உடைத்த தண்ணீரும் கொட்டிக்கிடந்தாலும், நரசிம்மர் சன்னதியில் ஒரு ஈயோ எறும்போ பார்க்க முடியாது. சர்க்கரையும், எலுமிச்சையும் சேர்ந்த கரைசல் இந்தப்பாறையில் படும்போது, அதன் சூடு தணிந்து, எரிமலை வெடிக்கும் வாய்ப்பு குறைவதற்காக இவ்வாறு செய்யும் பழக்கம் வந்திருக்கலாம் என்ற கருத்தும் இருக்கிறது. நமது முன்னோர் எவ்வளவு பெரிய விஞ்ஞான ஆர்வலர்கள் என்பதற்கு இதுவே சான்று.

   கிருதயுகத்தில் தாங்கள் செய்த நன்மைக்காக சொர்க்கத்தை அனுபவித்த உயிர்கள் மீண்டும் பிறப்பை சந்திக்க காத்திருந்தன. மீண்டும் பூலோகம் செல்ல வேண்டியிருந்ததை எண்ணி வருந்தி இந்திரனிடம் முறையிட்டன. இந்திரன் அவற்றிடம், பூலோகத்திலுள்ள மங்களகிரிக்கு சென்று நரசிம்மரை யார் வழிபடுகிறாரோ, அவர் மீண்டும் சொர்க்கம் பெறுவார், என்றான். அதுபோல, திரேதாயுகத்தில் உயிர்கள் செய்த பாவமும் மங்களகிரி வந்ததால் நீங்கி, பிறப்பற்ற நிலை பெற்றனர். இந்த ஊர் அஞ்சனாத்ரி, தோட்டாத்ரி, முக்தியாத்ரி, மங்களகிரி என்ற பெயர்களால் யுகவாரியாக அழைக்கப்பட்டிருக்கிறது.

முக்தி அளிக்கும் ஸ்ரீ பானக நரசிம்மரை ஒருமுறை சென்று வழிபடுவோம்! வாழ்வில் வளம் பெறுவோம்!

சகல நன்மையும் தரும் சனிப்பிரதோஷ வழிபாடு!

சிவாலயங்களில் மிகவும் சிறப்பாக வழிபாடு செய்யப்படுவது பிரதோஷ வழிபாடு ஆகும். பிரதோஷத்தில் சனிப்பிரதோஷத்திற்கு மிகவும் சிறப்பு உண்டு. பாற்கடலை கடைகையில் ஆலகால விஷம் வெளிப்பட்டதை சிவனார் உண்ட தினம் சனிக்கிழமை என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் சனிப்பிரதோஷம் சிறப்பு அடைகின்றது.

பொதுவாக பிரதோஷம் நித்ய பிரதோஷம் மாதப்பிரதோஷம், மஹா பிரதோஷம் என மூன்று வகைப்படும்.

நித்ய பிரதோஷக்காலம்: தினமும் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4 நாழிகை பின் 3 3/4 நாழிகை சேர்ந்த 7 1/2 நாழிகை.

மாத பிரதோஷகாலம்: பிரதிமாதம் வளர்பிறை,மற்றும் தேய்பிறை திரயோதசி திதியன்று சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை.

மஹா பிரதோஷம்: இவை மூன்று வகைப்படும் உத்தமம், மத்யமம், அதமம்.

உத்தம மஹாபிரதோஷம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில் வளர்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

மத்யம மஹாபிரதோஷக்காலம்: சித்திரை,வைகாசி, ஐப்பசி,கார்த்திகை, ஆகிய மாதங்களில்தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

அதம மஹாபிரதோஷ காலம்:மேற்கூறிய நான்கு மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் வரும் வளர்பிறை தேய்பிறை திரயோதசியுடன் கூடிய சனிக்கிழமைகளில் சூர்யாஸ்தமனத்திற்கு முன் 3 3/4நாழிகை,பின் 3 3/4 நாழிகை காலம்.

பிரதோஷ காலத்தில் எல்லா தெய்வங்களும் சிவாலயத்தில் வந்து சேர்ந்து வழிபாடு செய்வதாக ஐதீகம். எனவே பிரதோஷ காலத்தில் மற்ற சன்னதிகளில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணிவரை வழிபாடு செய்வதில் பலனில்லை. ஏனெனில் அங்கிருக்கும் தெய்வங்கள் சிவாலயத்திற்கு வந்து விடுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த பிரதோஷ வேளையில் சிவ வழிபாடு செய்தோமானால் எல்லா தெய்வங்களின் அருளும் ஒருசேர கிடைக்கும்.

சனிப்பிரதோஷ வேளையில் சிவனாருக்கு திலான்னம் என்னும் எள்ளுச்சாதம் நிவேதனம் செய்து பக்தர்களுக்கு விநியோகம் செய்வதால் சனிக்கிரக பாதிப்புக்கள் விலகும். சிவன் எல்லா கோள்களுக்கும் அதிபதி. எனவே சனிப்பிரதோஷ வழிபாடு செய்கையில் நவகிரக தோஷங்கள் நிவர்த்தி அடையும்.

பொதுவாக பிரதோஷ பூஜையில் சிவனுக்கு நிவேதனம் முக்கான்னம் என்னும் மிளகுப் பொங்கல்( வெண்பொங்கல்) உகந்தது ஆகும். ஆலகாலத்தை உண்டவர் சிவபெருமான். மிளகு விஷத்தை போக்கும் குணம் உடையது. எனவே வெண்பொங்கல் நிவேதனம் சிறப்பு ஆகும்.

சோமசூக்தபிரதட்சணம்: முதலில் நந்தியை தரிசித்து அப்பிரதட்சணமாக சண்டிகேஸ்வரர் வரைசென்று அங்கு திரும்பி பிரதட்சணமாக வழியில் நந்தியை தரிசித்து கோமுகியை அடையவேண்டும் மீண்டும் திரும்பி வந்து நந்தியைதரிசித்து சண்டிகேஸ்வரரயை அடையவேண்டும்.மீண்டும் பிரதட்சணமாக வந்து நந்தியை தரிசிக்காமல் கொமுகியைஅடைந்து திரும்பி நந்தியைதரிசிக்காமல்சண்டிகேஸ்வரரை தரிசித்து பின்னர் பிரதட்சணமாகவந்து நந்தியை தரிசித்து பின்னர்,நந்தியின் இரு கொம்புகளுக்கிடையில் சிவனை தரிசித்து வழிபட வேண்டும்.இப்பிரதட்சணம் செய்து வழிபட்டால் மேன்மையான பலன்கள் கிடைக்கும்.

பிரதோஷ காலம் என்பது சூரியன் அஸ்தமனத்திற்கு முன் மூன்றே முக்கால் நாழிகையும் சூரியன் அஸ்தமனத்திற்கு பின் மூன்றே முக்கால் நாழிகையும் ஆகும். ஒருநாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு மணிக்கு இரண்டரை நாழிகைகள்.ஆக சராசரியாக மாலை 4 மணியில் இருந்து இரவு 7.30 வரை பிரதோஷ காலம் உண்டு. சவுகரியத்திற்காக மாலை 4.30 முதல் 6.00வரை என சொல்லப்படுகிறது.

பிரதோஷ தினத்தில் அதிகாலையில் நீராடி திருநீறனிந்து சிவ நாமம் ஆன நமசிவாய ஓதி உபவாசம் இருக்க வேண்டும். அன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவு தவிர்த்து பிரதோஷ தரிசனம் முடித்து பிரசாதம் உண்டு விரதம் முடிக்க வேண்டும். பின்னர் இரவு உணவு சாப்பிடலாம். இப்படி பதினோறு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனருள் கிடைக்கும்.

ஒரு கைப்பிடி காப்பரிசி (வெல்லமும் அரிசியும் சேர்த்தது), ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம் புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால்… சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

நந்திக்கும் சிவனுக்கும் வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்தல் சிறப்புடையது. தூய்மையான ஆற்றுநீர், கிணற்றுநீர் அபிஷேகத்திற்கு முதன்மையானதாகும். கொண்டுவந்த திருமஞ்சனத்திற்குரிய நீரில் பாதிரிப்பூ, உத்பலம், தாமரைப்பூ, அலரிப்பூ முதலிய மணமுள்ள பொருள்களை இடவேண்டும். விளாமிச்சை எனப்படும் வெட்டிவேர், தீர்த்தப்பொடிகள் இடவேண்டும்.

நல்லெண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, பஞ்சகவ்யம், பஞ்சாமிருதம், பால், தயிர், நெய், தேன் கரும்பின் சாறு, பழவர்க்கம், இளநீர், வாசனைச் சந்தனம் சிருங்கநீர், தாராநீர், ஸ்நபனநீர், சங்காபிஷேகம் ஆகியனவற்றை வரிசையாகச் செய்யவேண்டும். விபூதி, அன்னம், கும்பநீர், அர்க்கிய தீர்த்தம் இவற்றாலும் அபிஷேகம் செய்யவேண்டும்.

சகலாகம சங்கிரகம் என்னும் நூலில் கீழ்க்கண்ட முறை கூறப்பட்டுள்ளது:- 1. எண்ணெய், 2. பஞ்சகவ்யம், 3. மாவு, 4. நெல்லிமுள்ளி, 5. மஞ்சள் பொடி, 6. பஞ்சாமிருதம், 7. பால், 8. தயிர், 9. நெய், 10. தேன், 11. கரும்பின் சாறு, 12. பழரசங்கள், 13, இளநீர், 14. அன்னம், 15. சந்தனம், 16. ஸ்நபனநீர்.

அறுகு, சண்பகம், புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, தும்பை ஆகிய எட்டும் அஷ்ட புஷ்பங்கள் எனப்படும். பிரதோஷ தினத்தில் இவற்றை சிவபெருமானுக்கு அணிவித்து அர்ச்சனை செய்தல் சிறப்பாம்.

அபிஷேக பலன்கள்:

அபிஷேகத்தூள் – கடன் தொல்லை தீரும்

பஞ்சாமிர்தம் – நீண்ட ஆயுள் கிடைக்கும்

பால் – பொறுமை, சாந்த குணம் உண்டாகும்

தயிர் – உடல் ஆரோக்யம் சிறக்கும்

எலுமிச்சை – திருஷ்டி விலகும்

தேன் – கல்வி, கலைகளில் சிறக்கலாம்

இளநீர் – புத்திர பாக்கியம் கிடைக்கும்

விபூதி – அறிவு பெருகும்

மஞ்சள் – சகல சௌபாக்கியமும் கிடைக்கும்

பச்சரிசி மாவு – கடன் வசூலாகும்

நெய் – எதிரிகள் நண்பர்கள் ஆவர்

சந்தனம் – பக்தி பெருகும்

பன்னீர் – நினைத்த காரியம் கைகூடும்

நல்லெண்ணெய் – சுக வாழ்க்கை அமையும்

பஞ்ச வில்வங்கள்

முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா ஆகியன. இவை சிவபெருமானுக்கு மிகவும் உகந்தவை பிரதோஷ பூஜையில் இவற்றினால் அர்ச்சனை செய்தால் சிவபெருமானுக்கு மகிழ்ச்சி அளிக்கும். நமக்கு நன்மைகள் உண்டாகும்

மிகவும் புண்ணியமான இந்தநேரத்தில் நாம் எந்த ஒரு மந்திரம் ஒரு முறை ஜபித்தாலும், அது பலகோடிமடங்கு ஜபித்ததற்கான புண்ணியத்தைத் தரும்.

ஓம் ஆம் ஹவும் சவும் என்ற மந்திரத்தை ஒரு சிவாலயத்தில் ஒரு முறைஜபிப்பதால்,நாம்,நமது முந்தைய ஏழு பிறவிகள்,நமது முன்னோர்கள் ஏழுதலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் அவற்றால் ஏற்பட்ட பாவங்கள்அழிந்துவிடும்.(பொய் சொல்லுதல்,கொலை செய்தல்,பேராசைப்படுதல்,வீணானஅபகரித்தல்,குருவை நிந்தித்தல் போன்றவை பஞ்சமாபாதகங்கள்)எனவே,இந்தமந்திரத்தை,குறைந்தது ஒன்பது தடவையும்,அதிகபட்சமாக 108 முறையும்ஜபிப்போம்.

நந்திகேச மஹாபாக சிவத்யான பராயண:
உமாசங்கர ஹேவார்த்தம் அனுஞ்ஞாம் தாதுமர்ஹஸி”

என்ற நந்தி ஸ்துதியாலும் வணங்கித் துதிக்க வேண்டும்.

`சிவனடியில் சரணம் புகுந்து சிவத்தியானத்தில் ஆழ்ந்திருக்கும் மகா புண்ணியம் பெற்ற நந்திகேசுவரரே! சன்னதிக்குச் சென்று உமையோடு கூடிய ஈஸ்வரனைத் தரிசிக்க எனக்கு உத்தரவு தருக’ என்பது இதன் பொருளாகும்.

பிரதோஷ வழிபாட்டினால், கடன், வறுமை போன்றவை விலகி மிருத்யு பயம் நீங்கி பிரம்மஹத்தி தோஷமும் விலகுகின்றது. பிரதோஷவழிபாடு செய்கையில் அனைத்து தெய்வங்களையும் வழிபாடு செய்த பலன் கிடைக்கின்றது.

இன்று சனிப்பிரதோஷம் எல்லா சிவாலயங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்பர்கள் அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்று தங்களால் இயன்ற அபிஷேகப் பொருள்கள் புஷ்பங்களை சமர்பித்து நெய்தீபம் ஏற்றி நந்தியெம்பெருமானையும் சிவபெருமானையும் வழிபாடு செய்து பிறவிப் பெருங்கடலை நீந்த அவனருள் வேண்டுவோமாக!

சகல பாக்கியங்கள் அளிக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்!

கஜாநநம் பூத கணாதி ஸேவிதம் கபித்தஜம்பூபல ஸாரபக்ஷிதம்

உமாஸுதம் சோக விநாச காரணம் நமாமி விக்நேச்வர பாதபங்கஜம்

ஆனைமுகத்தோன் ஆறுமுகனின் அண்ணன் கணபதி பிறந்த தினம் சுக்கிலபட்ச சதுர்த்தி! அது விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதை அனைவரும் அறிவீர்கள். மாதத்தில் மற்றுமோர் சதுர்த்தி உண்டு. அது கிருஷ்ணபட்சத்தில் வரும் சதுர்த்தி. அதுவே சங்கடஹர சதுர்த்தி என்று சொல்லப்படுகிறது. விநாயகர் எளிமையானவர். ஆற்றங்கரைகளில் அரச மரத்தடியில் கூட எழுந்தருளி அருள் பாலிப்பவர்.

ஆனை முகனை நினைத்து மஞ்சளில் பிடித்து வைக்கலாம்! மண்ணிலே பிடித்து வைக்கலாம். எளிதாக கிடைக்கும் எருக்கம் பூ அருகம்புல் அவருக்கு பிடித்தமான பத்திரங்கள். இவரின் அருளை எளிமையாக பெற்றிட சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது சிறப்பாகும்.

ஒவ்வொரு மாதமும் சங்கட ஹர சதுர்த்தி வரும் என்றாலும் வருடத்தில் தட்சிணாயனம், மற்றும் உத்தராயணத்தில் ஆவணி மற்றும் மாசி மாத சுக்லபட்ச சதுர்த்திக்கு முன் வருவது மஹா சங்கட ஹர சதுர்த்தியாகும். விநாயகர் சதுர்த்திக்கு முன் வரும் இந்த மஹா சங்கடஹர சதுர்த்தியில் துவங்கி மறு வருடம் ஆடி மாதத்தில் பன்னிரண்டு சதுர்த்திகள் விரதம் இருப்பது மிகவும் சிறப்பாகும். இதையே மாசி முதல் தை மாதம் வரையிலும் சிலர் கடை பிடிப்பர்.

சங்கடம் என்றால் துன்பம். ஹர: என்றால் அறுத்தல் அதாவது விடுதலை செய்தல். சங்கட ஹர சதுர்த்தியன்று விநாயகரை விரதம் இருந்து வழிபட்டால் துன்பங்களில் இருந்து விடுதலை அடையலாம்.

இந்த விரதத்தை கடைபிடித்து அங்காரகன் என்னும் செவ்வாய் நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை பெற்றான். எனவே செவ்வாய் கிழமைகளில் வரும் சதுர்த்தி அங்காரக சதுர்த்தி என்று போற்றப்படுகின்றது. அன்றைய தினம் விநாயகரை வழிபடுவதால் அங்காரகனுடைய அருளினையும் பெறலாம்.

பதியான சிவனை பிரிந்த பார்வதி சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து மீண்டும் கணவரை அடைந்தாள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. பாண்டவர்கள் கௌரவர்களை வென்றதும் இந்த விரதம் இருந்துதான். பன்னிரண்டு சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்த பலன் மஹா சங்கட ஹர சதுர்த்தி இருந்தால் கிடைக்கும்.

விநாயகர் உலகை வலம் வந்தபோது, தனது அழகைப்பற்றி கர்வம் கொண்டிருந்த சந்திரன் அவரைப் பார்த்து சிரிக்க, கோபம் கொண்ட விநாயகர், சந்திரனை நோக்கி, ‘நீ தேய்ந்து மறையக் கடவது’ என்று சபித்தார்.

பின், தவறுக்கு வருந்திய சந்திரன், விநாயகரை நோக்கித் தவமிருக்க, சந்திரனைத் தன் தலைமீது ஏற்று, பாலசந்திரன் என்ற பெயருடன் அருள்பாலித்து சந்திரனுக்கு வளரும் தன்மையைத் தந்தார். அவ்வாறு சந்திர பகவான் வரம் பெற்ற நாள் தேய்பிறை சதுர்த்தி. ஆகவே, சதுர்த்தி திதி விநாயகருக்கு உகந்ததாயிற்று. சங்கடம் என்றால் எல்லாருக்கும் தெரியும். ஹர என்றால் நீக்குதல். சங்கடத்தை நீக்கும் நன்னாளே சங்கடஹர சதுர்த்தி. நாம் செய்த கர்மவினையின் பயனாக வரும் எல்லாவிதமான இன்னல்களையும் போக்கி, அளவில்லாத நன்மைகளை தருவதால் இந்த விரதம் சங்கட ஹர சதுர்த்தி விரதம் என்று போற்றப்படுகிறது.

கிருஷ்ணர், வளர்பிறை சதுர்த்தி தினத்தில் நிலவைப் பார்த்ததால், அபவாதம் கிடைக்கப்பெற்றார். இதையடுத்து, தேய்பிறை சதுர்த்தி தினத்தில் கிருஷ்ணர் விநாயகரை வழிபட்டார். விநாயகர் அவருடைய அபவாதம் நீக்கி, அனுக்கிரகம் செய்தார்.

புருகண்டி முனிவர்’ என்றழைக்கப்பட்ட அவருக்கு விநாயகரின் தரிசன பாக்கியம் கிடைக்கிறது. அவர் சொற்படி, முனிவர் சங்கடஹர சதுர்த்தி விரதத்தைக் கடைபிடித்து, அதன் பலனை விநாயகப் பெருமானுக்கே அர்ப்பணம் செய்கிறார். அதனால், பல காலமாக, நரகத்திலிருந்த தன் முன்னோர்களுக்கு அதிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார். ஒவ்வொரு பூஜையின் முடிவிலும் அந்தப் பூஜைப் பலனை இறைவனுக்குச் சமர்ப்பிப்பதே சிறந்தது. இதன் மூலம் சித்த சுத்தி ஏற்படுகிறது. ‘நான் பூஜை செய்கிறேன்‘ என்ற அகங்காரம் அகன்று, ‘அவனருளால் அவன் தாள் பணிகிறோம்‘ என்ற எண்ணம் தோன்றுகிறது.

நாம் செய்த புண்ணியச் செயல்களை இறைவனுக்கு அர்ப்பணம் செய்தால் அவை பன்மடங்காக, நமக்குத் திரும்பக் கிடைக்கிறது. புருகண்டி முனிவரின் மகிமை அறிந்து அவரைத் தரிசனம் செய்ய, தேவேந்திரன் வருகிறார். அவர், தரிசித்து முடித்துக் கிளம்பும் போது, விதி வசத்தால்,அவர் விமானம் மண்ணில் புதையுண்டு போக, முனிவர் தமது சங்கடஹர சதுர்த்தி விரதப் பலனை அவருக்குக் கொடுத்து, விமானத்தை மீட்க வழி செய்கிறார்.

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்தவர்கள் தங்கள் விரதப் பலனை யாருக்காவது தானம் கொடுத்தால் கூட அவருக்குச் சங்கடங்கள் விலகி விநாயகரின் அருளால் நன்மைகள் கிடைக்கும் என்பதற்கு இந்த நிகழ்வு ஒரு உதாரணம் ஆகும்.

சங்கட ஹர சதுர்த்தியன்று காலையில் காலைக்கடன்கள் முடித்து நீராடி உபவாசம் இருந்து விநாயகர் சுலோகங்களை பாராயணம் செய்து மாலையில் அருகில் உள்ள விநாயகர் ஆலயங்களுக்குச் சென்று அங்கு நடைபெறும் பூஜையில் கலந்து கொண்டு அர்ச்சணை செய்து வழிபட்டு வீடு திரும்பி இரவில் உதயமாகும் சந்திரனை தரிசித்து வழிபாடு செய்து விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும். பின்னர் சிற்றுண்டி அருந்தலாம். இவ்வாறு முழுவிரதம் அனுஷ்டிக்க இயலாதவர்கள் காலை சிற்றுண்டி அருந்தி மதியம் விரதம் இருந்து உணவு உண்ணாமல் இருந்து மாலையில் விநாயகர் ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து இரவு சிற்றுண்டி அருந்தி விரதம் பூர்த்தி செய்யலாம்.

குள்ளக் குள்ளனைக் குண்டு வயிறனை

வெள்ளைக் கொம்பனை விநாயகனைத் தொழு
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழு
துள்ளி யோடும் தொடரும் வினைகளே
கருணை வள்ளல் கணபதியைத் தொழ
அருமைப் பொருள்கள் அனைத்தும் வருமே
முப்பழம் வெல்லம் மோதகம் தின்னும்
தொப்பை யப்பனைத் தொழவினை இல்லை
வேழ முகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்.

நாட்டுப்புறப்பாடல்

வரும் 12-3-20 விஹாரிவருஷம் மாசிமாதம் 29ம் தேதி வியாழக்கிழமை மஹா சங்கடஹர சதுர்த்தி விநாயகர் ஆலயங்களில் விஷேசமாக கொண்டாடப்படுகிறது. வாய்ப்புள்ளவர்கள் அது சமயம் விநாயகர் ஆலயங்களுக்குச்சென்று விநாயகப்பெருமானை வழிபட்டு விக்கினங்கள் நீங்கப் பெறுங்கள்!.

தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி

தாந்த்ரீக முறையில் ஸ்ரீ ராஜசியாமளா தேவி:

முதலில் தாந்த்ரீக முறை என்றால் என்னவென்பதைப் பார்க்கலாம். யந்திரம் மற்றும் மந்திரம் ஆகியவற்றின் துணை கொண்டு ஓர் உயரிய இலக்கை அடையும் முறைக்கு ‘தாந்த்ரீகம்’ என்று பெயர்.

சரஸ்வதி தேவியின் தாந்த்ரீக ரூபமே ஸ்ரீ ராஜ சியாமளா தேவி. தாந்த்ரீக முறையில் வழிபடப்படும், தச மஹா வித்யைகளுள் மாதங்கி தேவி ஒன்பதாவது வித்யாரூபமாகப் போற்றப்படுகிறாள். தசமாஹவித்யா தேவியரின் தோற்றம் குறித்து பொதுவாக வழங்கப்படும் புராணக்கதை பின்வருமாறு.

தாக்ஷாயணியாக அம்பிகை திருஅவதாரம் புரிந்த சமயத்தில், தேவி, தன் தந்தை தக்ஷன், சிவனாரை மதிக்காமல் துவங்கிய யாகத்திற்கு சென்று அவனுக்குப் புத்தி புகட்ட விரும்பினாள். சிவனார் அதைத் தடுத்ததும் அம்பிகையின் கோபம் பன்மடங்காகப் பெருகியது. அந்த உணர்ச்சி நிலையே பத்து மஹாவித்யைகளாகப் பிரிந்து, எல்லாத் திசைகளிலும் சிவனாரைச் சுற்றி நின்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, வடமேற்குத் திசையில் நிலைகொண்ட மஹாவித்யையே ஸ்ரீமாதங்கி.

தசமஹாவித்யா தேவியரின் ஒன்றிணைந்த வடிவமாக, ஸ்ரீ தத்தாத்ரேயரின் தர்மபத்தினியான ஸ்ரீ அனகாதேவி போற்றப்படுகிறார். கீழ்வரும் ஸ்லோகம் அதைச் சொல்கிறது.

“காளீ தாரா சின்னமஸ்தா ஷோடசீ

மஹேஸ்வரி த்ரிபுரா பைரவீ தூம்ரவதீ பகலாமுகீ மாதங்கீ

கமலாலயா தசமஹாவித்யா ஸ்வரூபிணி

அனகாதேவீ நமோஸ்துதே.’

மற்றொரு புராணக்கதையின்படி, மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சி, ஸ்ரீ லலிதா பரமேஸ்வரி அளித்த வரத்தின் பலனாக, அவருக்கு மகளாக வந்துதித்தவளே ஸ்ரீ மாதங்கி. மதங்க முனிவரின் மகளாக வந்துதித்த காரணத்தாலேயே ‘மாதங்கி’ என்ற திருநாமம் அம்பிகைக்கு ஏற்பட்டது. கிராமப்புறங்களில், ‘பேச்சி’, ‘பேச்சாயி’ ‘பேச்சியம்மன்’ என்ற திருநாமங்களோடு வழிபடப்படும் தெய்வம், பேச்சுக்கு அதிபதியான இந்த அம்பிகையைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஸ்ரீ தேவிபாகவதத்தின் படி, தசமஹாவித்யைகளும் ஸ்ரீ லலிதா தேவியின் பரிவார தேவதைகளாகப் போற்றப்படுகிறார்கள்.

எல்லைகளற்ற கடல்போல் விரிந்த ஞானத்திற்கும், உள்முகமான அறிவாற்றலுக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. மனதில் தோன்றுவதை சாமர்த்தியமாக வெளிப்படுத்தும் நல்லாற்றலும், எதையும் கிரகிக்கும் திறனும், கிரகிப்பதை பிறர் விரும்பும் வண்ணம் வெளிப்படுத்தும் திறனும், ஸ்ரீமாதங்கியின் அருளாலேயே சித்திக்கும். மேலும், ஒருவர் பேசும் வாக்கியத்தின் மத்திமப் பகுதியே அவர் மனதில் நினைத்திருப்பதை வெளிப்படுத்துவதாக அமையும். இந்த மத்திமப் பாகத்துக்கும் மாதங்கி தேவியே அதிதேவதை. நுண்ணறிவுக்கும் அதை வெளிப்படுத்தும் திறனுக்கும் மனதை அறிவின் மூலம் கட்டுப்படுத்தி அம்பிகையிடம் லயிக்கச் செய்யும் ஆற்றலுக்கும் அம்பிகையின் அருள் அவசியம்.

பாட்டு, நடனம், நினைத்த பொழுதில் கவி இயற்றும் திறன் போன்ற நுண்கலைகள் அம்பிகையின் அருளாற்றலாயே ஒருவருக்குக் கிடைக்கிறது. சரஸ்வதி தேவியின் விரிந்த, பேராற்றலுள்ள வடிவமே ஸ்ரீ மாதங்கி தேவி எனக் கொள்ளலாம். சரஸ்வதி தேவியை மொழி, கலைகள், கற்கும் திறன் இவற்றின் அதிதேவதையாகக் கொண்டால், மாதங்கி தேவியை மனதை உள்முகமாக திருப்பி, தான் யார் என்பதை அறியும் ஆற்றலுக்கும், ஆத்மவித்தைக்கும் அதிதேவதையாகக் கொள்ளலாம்.

சியாமளாவிற்கு மூன்று அங்க- உபாங்க தேவதைகள் உள்ளனர். லகு மாதங்கி, வாக்வாதினி, நகுலி என்பவர்களே அவர்கள்.

நவக்கிரகங்களில் புதபகவான் இந்த தேவியின் அம்சத்தோடு கூடியவராகக் கருதப்படுகிறார். ஸ்ரீமாதங்கி தேவி, தசாவதாரங்களில் புத்த அவதாரத்தோடு தொடர்புடையவராகவும் கருதப்படுகிறார் (பத்து மஹா வித்யா தேவியரும் மஹாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களோடு தொடர்புடையதாக கொள்ளலாம்.)

சில சோதிடர்கள், ஜாதகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகரின் பலன்களைச் மிகச் சரியாகச் சொல்வதைக் காணலாம். இதற்கு, ‘கர்ணமாதங்கி’ என்கிற, மாதங்கி தேவியின் திருவடிவைப் போற்றும் மந்திர உபாசனையே காரணம். இந்த மந்திரத்தை முறையாக‌ உபாசிப்பவர்களின் கேள்விகளுக்கு, அவர்களின் காதுகளில் தேவியே வந்து பதிலை உச்சரிப்பதாக ஐதீகம்.

தசமஹா வித்யைகளுள் ஒருவராகக் கருதப்பட்டாலும், இந்த தேவி, ஆற்றல் நிறைந்த மிகப் புனிதமான திருவுருவாகவே போற்றித் துதிக்கப்படுகிறாள். அனைத்து கேடுகளையும் தான் ஸ்வீகரித்துக் கொண்டு நன்மையை பிறருக்கு அருள்பவளே ஸ்ரீ மாதங்கி.

தொகுத்து அளித்தவர்.

ஸ்ரீலஸ்ரீ ஆனந்தகுமார் சுவாமிகள். குடியாத்தம்.

குடிமல்லம்” பழமையான “சிவன்” கோயில்

*”குடிமல்லம்” பழமையான “சிவன்” கோயில்.*எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரேணிகுன்டாவில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள “குடிமல்லம்” எனும் கிராமத்தில் உள்ள “பரசு ராமேஸ்வர” ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) ” இக்கோவில் கலை காணப்படுகிறது.


பழமையான சிவலிங்கம் :-
உலகின் மிகப் பழமையான சிவ லிங்கம் ‘ஹரப்பா’ வில் உள்ளது.
அதற்கு அடுத்த பழமையான சிவலிங்கங்கள் தமிழகத்தில் மட்டுமே உள்ளன. ‘குடிமல்லம்’ என்ற இடத்தில் உள்ள சிவலிங்கம். பழைய எல்லைப்படி இது தமிழகம். இன்றைய எல்லைப்படி இது ஆந்திரா. ஆம் ரேணிகுண்டாவிற்கு அருகில் உள்ள ஊர்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
உலகில் சிவலிங்கத்தை ஆராய்ச்சி செய்பவர்களின் கருத்துப்படி இதுவே மிகவும் பழமையான சிவலிங்கம்.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம். 

உலகம் முழுதும் இறைவனை வழிபடுவதில் தொன்மையானது லிங்கவழிபாடு ஆகும். தற்போதைய நிலையில் மிகவும் பழமையான லிங்கங்கள் என்பது
1. ஆந்திரா குடிமல்லம் பரசுராமேஸ்வரர் ஆலய லிங்கமும்
2. “பிடா” எனுமிடத்தில் கண்டெடுக்கப்பட்டு லக்னோ அருங்காட்சியகத்தில் உள்ள பஞ்சமுக லிங்கம் ஆகும்.
 நாம் முதலில் குடிமல்லம் லிங்கம் பற்றி விரிவாகக் காண்போம்.   ஆந்திர மாநிலத்தில் குடிமல்லம் என்ற ஊரில் உள்ள பரசுராமேசுவரர் கோவிலில் வழிபடப் பெறுகிறது. இவ்வூர் சென்னைக்கு அருகே காளஹஸ்தியிலிருந்து 21 கி.மீ., தொலைவிலும், ரேணிகுண்டா ரயில் நிலையத்திற்கு தென் கிழக்கே 11 கி.மீ., தொலைவிலும் அமைந்துள்ளது. இவ்வூருக்கு சற்று தொலைவில் சுவர்ணமுகி ஆறு ஓடுகிறது.


குடிமல்லம் பரசுராமேசுவரர் கோவில் மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் போற்றி பாதுகாக்கப்படுகிறது. `குடி’ என்றால் தெலுங்கில் `கோவில்’ என்பது பொருள். இக்கோவிலை 1903ம் ஆண்டு கல்வெட்டு அறிஞர் வெங்கய்யா ஆய்வு செய்து இதன் சிறப்பினை எடுத்துக் கூறினார். இக்கோவிலில் காணப்படும் கல்வெட்டுகளின் வரலாற்றுச் சிறப்பினை தொல்பொருள் ஆய்வு அறிஞர் கோபிநாதராவ் எடுத்துரைத்தார்.
 தொன்மைச் சிறப்புமிக்க பரசுராமேசுவரர் கோவில், குடிமல்லம் சிவபெருமானை லிங்க வடிவிலே கண்டு போற்றி வழிபடுகிறோம். மிகவும் தொன்மையான அற்புத வடிவம் கொண்ட சிவலிங்கம், இக்கோவிலில் 1973ம் ஆண்டு சீரமைப்பு பணிகளை மேற்கொண்டபோது வரலாற்றுச் சிறப்புமிக்க கலைப் பொருட்கள், கல்வெட்டுகள் ஆகியவை கிடைத்தன. இக்கோவிலின் தொன்மைச் சிறப்பினை ஆய்வாளர் ஐ.கே.சர்மா என்பவர் தமது `சைவ சமய கட்டடக்கலை வளர்ச்சி’ என்ற ஆங்கில நூலில் ஆய்வுக்கட்டுரையாக எழுதியுள்ளார். இனி இக்கோவிலை காண்போம்!
கிழக்கு நோக்கிய திருக்கோவில். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளை உடையதாக விளங்குகிறது. தொண்டை நாட்டுப் பகுதிக்கே உரிய தூங்கானை வடிவில் (கஜபிருஷ்டம்) கருவறை அமைந்துள்ளது. கருவறையின் பின்பகுதி வட்டவடிவமாக அமைந்திருக்கும். கருவறையின் தேவகோட்டங்களில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, பெருமாள், பிரம்மா, துர்க்கை ஆகிய தெய்வ வடிவங்கள் அமைந்துள்ளன. இவற்றில் தட்சிணாமூர்த்தி வடிவம் சிறப்பானது. தமது மேலிரு கரங்களில் அட்சமாலையும், கெண்டியையும் தாங்கியிருக்கிறார். இடதுமேற்கரத்தில் கெண்டியைத் (கமண்டலம்) தாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
📷கோவிலில் நுழைந்து செல்லும்போது மகாமண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஒன்றுக்கொன்று சற்று பள்ளமாக அமைந்திருப்பதால் `குடிபள்ளம்’ எனவும் இப்பகுதியில் அழைக்கின்றனர். கோவிலில் அம்மன் `ஆனந்தவல்லி’ என்ற பெயருடன் தனிச்சன்னிதியில் அங்குசம் – பாசம், அபய – வரத கரங்களுடன் கருணை பொங்கும் முகப்பொலிவுடன் அருள்மழை பொழிகிறாள். திருச்சுற்றில் பரிவார கோவில்கள் உள்ளன. இவற்றில் வடகிழக்கில் காணப்படும் சூரியன் திருமேனி தொன்மையானதாகும். நுழைவு வாயிலில், மேல் கோபுரம் இல்லாமல் தட்டையாக உள்ளது.
 இக்கோவிலில் 25க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் காணப்படுகின்றன. பிற்கால பல்லவ மன்னர்கள், பான அரசர்கள் சோழமன்னர்கள், யாதவராயர்கள் இக்கோவிலைப் போற்றி சிறப்பான வழிபாட்டிற்கு தானமளித்ததைக் கல்வெட்டுகளின் மூலம் அறிகிறோம். கல்வெட்டுகளில் இவ்வூர் திருவிப்பிரம்பேடு பேரம்பேடு என அழைக்கப்படுகிறது.
மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும்.
இத்தனை முக்கியமான சிவன் கோயிலுக்கு மக்கள் வருவதே இல்லை. ஆனால் ரேணிகுண்டாவை தாண்டித்தான் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர்.
அப்படி என்ன இந்த சிவ லிங்கத்தில் உள்ளது என்பது என்பதை காண ஆன்மீகவாதிகள் சென்று முன்னேற்றம் அடைந்துள்ளனர். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.
*ஓம் சர்வம் சிவார்ப்பணம்*

நன்றி:

சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

சுபிட்சம் அளிக்கும் அன்னாபிஷேக தரிசனம்!

ஐப்பசி மாத பவுர்ணமி அன்று சந்திரன் பூர்ண சந்திரனாய் தனது பதினாறு கலைகளும் ஜொலிக்க ஒளிர்கின்றான். அன்று சந்திரன் அமிர்த கலையாக ஜொலிக்கின்றான்.அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி தினம் சிவனுக்கு அன்னாபிஷேக தினமாகும். சிவன் பிம்ப ஸ்வரூபி. சிவன் பிம்பரூபி, அவரது மெய்யன்பர்கள் பிரதி பிம்ப ரூபிகள். பிம்பம் திருப்தி அடைந்தால் பிரதி பிம்பம் திருப்தி பெறும்அன்னம் லிங்க ஸ்வரூபம். ஒவ்வொரு அரிசியும் ஒரு லிங்க வடிவம்.

வேதத்தில் அஹமன்னம், அஹமன்னம் அஹமன்னதோ என்று கூறப்பட்டுள்ளது. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள் அன்னத்தின் வடிவில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அன்னம்தான் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்நாடி. உலக வாழ்கைக்கு அச்சாணி. அன்னம் பிரம்ம, விஷ்ணு, சிவ சொரூபம்.

தில்லையிலே அனுதினமும் காலை பதினோறு மணியளவில் ஸ்படிக லிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

சிவன் அபிஷேகப் பிரியர். மொத்தம் எழுபது வகை திரவியங்கள் அபிஷேகத்திற்கு சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் அன்னமும் ஒன்று. ஒவ்வொரு அன்னமும் ஒருலிங்கம் என்பதால் அன்னாபிஷேகத் தினத்தில் சிவனை தரிசித்தால் கோடிலிங்க பலன் கிடைக்கும்.
சோறு கண்ட இடம் சொர்கம் என்ற சொலவடை உண்டு. அது டேரா போட்டு தங்கும் உறவினர்களை குறிப்பதன்று. ஐப்பசி அன்னாபிஷெக தரிசனத்தை கண்டவருக்கு சொர்கத்தில் இடம் உண்டு என்பது ஆகும்.
ஐப்பசி பௌர்ணமி நாளன்று அனைத்து சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் எனப்படும் சிறப்பு வழிபாடு லிங்க மூர்த்திக்கு நடத்தப்படுகிறது.

அனைத்து உயிர்களுக்கும் அன்னமான உணவை அளித்துப் பாதுகாக்கும் சிவபெருமானுக்கு சுத்த அன்னத்தைக் கொண்டு முழுக்காட்டுவது இந்த நாளின் சிறப்பாகும். இனிப்பு, காய்கறி மற்றும் பழங்களுடன் செய்யப்படும் சுத்த அன்னாபிஷேகக் காட்சி, ஆலயத்துக்கு வழிபட வரும் பக்தர்களை பரவசத்துக்குள்ளாக்குகிறது. இந்த அன்னாபிஷேக நாளன்று சிவாலயங்களில் கருவறையிலுள்ள சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனை முடிந்த பின்னர், சமைத்த சுத்த அன்னத்தைக் கொண்டு திருமுழுக்காட்டப்படுகிறது. லிங்கத் திருமேனி மறையுமளவுக்கு அன்னம் குவிக்கப்பட்டு, இனிப்புகள், பழங்கள் நிவேதனதுக்கு வைக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் நடைபெறுகின்றன. இந்த அன்னாபிஷேக நாளன்று இறைவனைத் தரிசித்து பிரசாதத்தை உட்கொள்வதை பெரும்பேறாக பக்தர்கள் கருதுவதுடன், வரும்காலங்களில் வாழ்வில் பஞ்சமே இராது என்றும் நம்புகின்றனர். அத்துடன் அபிஷேக அன்னத்தை எறும்பு, கால்நடை, பறவை உள்ளிட்ட எல்லா உயிர்களுக்கும் அளிப்பர்.

சிவன் பரம்பொருள், அவனது பிரதிபிம்பமே அனைத்து ஜீவராசிகளும், இரண்டும் வேறல்ல. அபிஷேக அன்னப்போர்வையால் ஐயன் அகமும் புறமும் குளிரும் போது எல்லா ஜீவராசிகளும் அவனது பேரருட்கருணையினால் குளிர்வது இயற்கைதானே.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகின்றது. நிலத்தில் விளைந்த நெல் அரிசியாகின்றது. அரிசி நீரில் மூழ்கி, தீயில் வெந்து அன்னமாகின்றது. எனவே அன்னமும் பஞ்ச பூதங்களின் சேர்க்கை. இந்த அன்னம் அபிஷேக நிலையில் ஆண்டவன் மேனி முழுவதும் தழுவி அவனை அகப்ப்டுத்தி அடைக்கலமாகின்றது. அதன் மூலம் ஐம்பூதங்களும் அவனுள் அடக்கமென்பது புலனாகின்றது.எனவே அவனே பரம்பொருள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகின்றது.
அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம்.

சிவபுராணத்தில் உள்ள ஒரு கதை உணவின் முக்கியத்துவத்தைக் கூறுகிறது. இவ்வுலகில் உள்ளோர் எல்லோரும் உணவு உண்டார்களா தெரியவில்லையே எனச் சந்தேகம் எழுப்பினாராம் பார்வதி தேவி சிவபிரானிடம். அனைவரும் இன்றைய பொழுதில் உணவு உண்டாகிவிட்டது என்று பதில் கூறினாராம் சிவன்.

இங்கே, கைலாயத்தில் என்னுடனேயே தங்கி இருக்கும்போது, இது தங்களுக்கு எப்படித் தெரியும் என்று தேவி கேட்க, யாம் அனைத்தையும் அறிவோம் என்கிறார் சிவன். இதனைச் சோதிக்கப் பார்வதி தேவி முடிவு செய்கிறார். மறுநாள் சிறிய தங்கச் சம்படத்தில் எறும்பு ஒன்றைப் போட்டு அடைத்துவைத்தாள் தேவி. பின்னர் மதிய உணவு வேளையின்பொழுது, அனைவருக்கும் உணவு கிடைத்ததா என்று தேவி கேட்க, என்ன இது தினமும் கேட்க ஆரம்பித்துவிட்டாய், அனைவரும் உண்டார்கள் என்று பதிலிறுத்தார் சிவன்.

தன் புடவைத் தலைப்பில் சம்படத்தை முடிந்து வைத்திருந்த தேவி, அதனை எடுத்துத் திறந்தபடியே, இதில் இருக்கும் எறும்பும் சாப்பிட்டதா என்று கூறியபடியே அப்பாத்திரத்தினுள் பார்க்க, அதில் இருந்த அரிசியை எறும்பு உண்டுகொண்டிருந்தது. திகைத்தாள் பார்வதி.

கல்லுக்குள் தேரைக்கும், கருப்பை உயிற்கும் உள்ளுணர்வே தரும் தயாபரன் சிவன். அந்த லிங்கத் திருமேனிக்கு ஐப்பசி மாதம் பெளர்ணமி அன்று ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் உலகமெங்கும் நடைபெறும்.
உணவு. உணவின்றி உயிரில்லை. உயிரின்றி உலகில்லை.
அன்னம் எனும் உணவேஅனைத்திற்கும் ஆதாரம்.வேதங்கள் அன்னத்தை மிகவும் போற்றுகின்றன. தைத்ரீயஉபநிஷதம், சாம வேதம் போன்ற ஸ்ம்ருதிகள் அன்னத்தின் புகழைப் பறைசாற்றுகின்றன.

சோறு நம் பசிப்பிணியினை போக்கவல்லது! வயிற்றுத்தீயை அணைக்கவல்லது! யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி என்றார் திருமூலர்! அத்தகைய சிறப்பு வாய்ந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து அதை பிரசாதமாக பெறுவது என்பது நம் பாக்கியம் ஆகும். இன்று அன்னாபிஷேக நன்னாள்.

பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தின் விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுக்கின்றனர். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப் படுகின்றது. எம்பெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

அன்னமே தெய்வம்! எனப்படுகிறது. இந்த காலத்தில் எப்படி எப்படியோ உணவுகள் வீணாக்கப்படுகிறது. ஒரு பருக்கை சாதம் சாக்கடையில் வீசினாலும் அடுத்த ஜென்மத்தில் புழுவாக பிறக்கவேண்டும் என்கிறது சாஸ்திரங்கள்! இரவில் விளக்கு வெளிச்சம் இன்றி உணவை அருந்தக் கூடாது என்றும் சொல்லப்படுகிறது.

ஐப்பசிமாதப் பவுர்ணமிக்கு ஒரு சிறப்பு உண்டு. அன்றுதான் சந்திரன் தனது சாபம்முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறான்.அது என்ன சாபம்? தெரிந்த கதைதான்.

சந்திரன், அஸ்வினி, முதல் ரேவதிவரையான தனது நட்சத்திர மனைவியரு ரோகிணியிடம் மட்டும் தனி அன்புசெலுத்தி மற்றவர்களிடம் பாரபட்சம் காட்டியதால், மாமனார் தட்சனால் உடல்தேயட்டும் என்று பெற்ற சாபம்.
சந்திரனுக்கு ஒவ்வொரு கலையாக தேயஆரம்பித்ததுஅவன் மிகவும்
வருந்திக் கெஞ்சவே, திங்களூரில் சிவனை பூஜித்தால்சாப விமோசனம்கிடைக்கும்என்றார், தட்சன். உடனே அவன் திங்களூர் வந்துசிவனை நோக்கி தவம் செய்யத் துவங்கினான். அவன் மேனியின் ஒளி நாளுக்கு நாள்மங்கத் துவங்கியது. மூன்றே மூன்று கலைகள் மிச்சமிருக்கும் போது சிவனார்,அவன்பால் மனமிரங்கி அந்தப் பிறையைத் தனது தலையில் அணிந்து கொண்டார்.கொடுத்த வாக்கை மீறிய அவனுக்கு பதினாறு கலைகளும் கிடைக்கப் பெற்றாலும்முழுப்பொலிவும் வருடத்தின் ஒரு நாள் அதாவது ஐப்பசி பவுர்ணமி அன்று மட்டுமேகிடைக்கும். அது மட்டுமல்ல அவனது ஒளி தினமும் தேயும் முழுவதும் மறைந்துபின் படிப்படியாக வளரும். இது எப்போதும் நடக்கும் ஒரு சுழற்சியாக இருக்கும்என்று அருளிச் செய்தார் விடைவாகனர். திங்கள் முடிசூடியவருக்கு மதிமுழுமையான ஒளியுடன் இருக்கும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வதுதானே சிறப்பு !

ஆன்மிக ரீதியாக மட்டுமன்றி அறிவியல் ரீதியாகவும் இதற்கு ஆதாரம் இருக்கிறது.அக்டோபர் (ஐப்பசி) மாதத்தில்தான் நிலவு, பூமிக்கு மிக அருகில் வந்து தனது முழுஒளியையும் பூமியை நோக்கி வீசுகிறது என்கிறது வானவியல். நவகிரங்களில்சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. இதை உணர்ந்த நமது ரிஷிகள் அந்த மாதத்தில்அன்னாபிஷேகம் செய்வது சிறப்பு என்று கண்டறிந்து அதனைநடைமுறைப்படுத்தினார்கள்.

இந்நாளில் உபவாசம் இருந்து மஹாபிஷேகம் செய்து பின் சிவனுக்கு அன்னாபிஶேகம் செய்த பிரசாதத்தை உண்ணும் போது பக்தி புண்ணிய பலன்கள் சேர்கின்றன.
வாடாமல் உயிரெனும் பயிர் தழைத்து
ஓங்கிமிக அருள் மழை பொழிந்தும் இன்ப
வாரிதியிலே நின்ன தன் பெனுஞ் சிறகால்
வருந்தாமலே யணைத்து
கோடாமல் வளர் சிற்றெறும்பு முதல்
குஞ்சரக் கூட்ட முதலான žவ
கோடிகள் தமக்கு புசிக்கும் புசிப்பினை
குறையாமலே கொடுக்கும்
அந்த சர்வேஸ்வரனை அன்னாபிஷேக கோலத்தில் வருடத்தின் ஒரு நாள் மட்டுமே கிட்டும் அந்த அற்புத திருக்கோலத்தை கண்டு தரிசித்து, ஆலயம் தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற நம்மால் முடிந்த உதவி செய்து நன்மையடைவோமாக.

(படித்து தொகுத்தது)