வாழும் கவி- மருதகாசி

 காசங்காடு  வீ. காசிநாதன், சிங்கப்பூர்

மருதகாசி,  1920 பிப்ரவரி மாதம்,13 ந்தேதி பிறந்தவர். 1989 நவம்பர் மாதம் 29ந்தேதி இவ்வுலகை விட்டு மறைந்தார் 1949இல் பாடல்கள் எழுதத் தொடங்கிய இவர் சுமார் இருநூற்று ஐம்பதிற்கும் அதிகமான திரைப்படங்களுக்கு நாலாயிரத்திற்கும் அதிகமான பாடல்கள் எழுதியுள்ளார்.

திருச்சிராப்பாள்ளி மாவட்டம் மேலக்குடிக்காடு கிராமத்தில் பிறந்தவர் 

1949இல் சேலம் மாடர்ன் தியேட்டர்சார் மாயாவதி என்ற படத்தைத் தயாரித்து வந்தனர்  இந்தப் படத்திற்குத் தனது முதல் பாடலை மருதகாசி எழுதினார். பெண் எனும் மாயப் பேயாம்… பொய் மாதரை என் மனம் நாடுமோ… என்று தொடங்கும் அந்த பாடலுக்கு ஜி. ராமநாதன் இசை அமைத்தார். 

கலைஞர் கருணாநிதியின் கதை வசனத்தில் மந்திரிகுமாரி படத்திற்கு மருதகாசி எழுதிய பாடல்கள் அனைத்தும் புகழ் பெற்றன. குறிப்பாக “வாராய்… நீ வாராய்! போகும் இடம் வெகு தூரமில்லை!” என்ற முடிவுநிலைப் பாடலும், “உலவும் தென்றல் காற்றினிலே” என்ற பாடலும் நன்றாக அமைந்தன. இவற்றைப் பாடியவர்கள் திருச்சி லோகநாதன்ஜிக்கி ஆகியோர். 

மந்திரிகுமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் வில்லனாக வரும் S. A. நடராஜன் மற்றம் அவரது மனைவியாக மாதுரி நடித்திருந்தனர். 

கதைப்படி வில்லன் மாதிரியை ஆசை வார்த்தை கூறி மலைஉச்சிக்கு அழைத்துச் சென்று அவரை அங்கிருந்து கீழே தள்ளிக் கொலை செய்துவிட்டு மன்னன் மகளை திருமணம் செய்ய இருப்பார். 

ஆனால் இதை நடராஜன் அவரிடம் விவரிக்கும்போது உண்மை உணர்ந்து கொண்டு கணவரை இறப்பதற்கு முன்பு வணங்கி மூன்று முறை சுற்றி வருவார். 

மூன்றாவது சுற்றில் நடராஜனை மாதுரி கீழே தள்ளிவிடுவார். 

அந்த சூழலுக்கு எழுதிய பாடல் தான் வாராய் நீ வாராய்…. இன்று கேட்டாலும் சுவை குன்றாத பாடல். 

இந்தப் பாடலை பட்த்தின் நீளம் கருதி தயாரிப்பாளர் டி ஆர் சுந்தரம் நீக்கி விடும்படி கூற இசை அமைப்பாளர் ஜி. இராமநாதன்2 நாட்கள் படத்தில் இருக்கட்டும், 

ரசிகர் வரவேற்றால் தொடரட்டும் இல்லையேல் நீக்கி விடலாம். இந்தப்பாடல் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது எனக்கூறி, அவரது கணிப்புப்படியே ரசிகர்கள் இடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது வரலாறு. 

மந்திரிகுமாரி;  Release:- 24th June 1950; இசை:- ஜி.ராமநாதன், பாடியவர்கள் திருச்சி லோகநாதன் ஜிக்கி

வாராய்!நீ வாராய்…!

வாராய்!நீ வாராய்…!

போகுமிடம்வெகு தூரமில்லை

நீ வாராய்…!

ஆஹா! மாருதம் வீசுவதாலே, 

ஆனந்தம் பொங்குதே மனதிலே.

இதனிலும் ஆனந்தம் அடைந்தே,

இயற்கையில் கலந்துயர்

விண்ணினைக் காண்பாய்!

அங்கே…! வாராய்…!

அமைதி நிலவுதே,

சாந்தம் தவழுதே,

ஓஓஓஓ…

நீ! அழிவிலா மோன நிலை தூவுதே!

நீ! முடிவிலா மோன நிலையை

நீ!மலை முடியில் காணுவாய்!

வாராய்…!

ஈடிலா அழகு சிகரம் மீதிலே,

கண்டு இன்பமேகொள்வோம்.

இன்பமும் அடைந்தே,

இகமறந்தே,வேறு உலகம்

காணுவாய்

அங்கே…!

வாராய்…!

நீ வாராய்…!

புலியெனைத் தொடர்ந்தே

புதுமான் நீயே…! வாராய்…!

வாராய்…!

மயக்கும் குரல் மன்னன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்

ஸ்ரீபதி பண்டிதாரத்யுல பாலசுப்ரமணியம் (பிறப்பு – ஜூன் 4 , 1946 , நெல்லூர் மாவட்டம், மெட்ராஸ் மாகாணம் தற்போது ஆந்திரப் பிரதேசம் ) புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசைப் பாடகர் ஆவார்.

நாற்பதாயிரம் பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கிறார்.

ஆறு முறை சிறந்த பின்னணிப் பாடகருக்கான தேசிய விருதினைப் பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி முறையாக கர்நாடக இசையைப் பயின்றது இல்லை என்றாலும் சங்கராபரணம் என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். இதுவரை தேசிய விருதினை நான்கு மொழிகளுக்குப் பெற்ற ஒரே திரைப்படப் பின்னணிப் பாடகர் இவர் ஒருவரே. பிலிம்பேர் விருதினை ஒரு முறையும் பிலிம்பேர் விருது (தெற்கு) மூன்று முறையும் பெற்றுள்ளார்.

மேலும் இவர் தமிழக மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளும் ஆந்திர அரசின் நந்தி விருதினை 25 முறையும் பெற்றார். இவர் 1981 ஆம் ஆண்டு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றிருக்கிறார். எஸ்.பி.பி எந்த பாடகரும் செய்யாத சாதனைகளை இந்திய திரையிசையில் செய்திருக்கிறார். இவர் 1981 ஆம் ஆண்டு பிப்ரவரி 8 ஆம் தேதி கர்நாடகா , பெங்களூரில் உள்ள பதிவரங்கில் காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை ஒரே நாளில் 21 பாடல்களை கன்னட மொழி இசையமைப்பாளர் உபேந்திர குமாருக்காக பாடி சாதனை செய்துள்ளார். மேலும் தமிழ் மொழியில் 19 பாடல்களையும் (ஒரே நாளில்), இந்தி மொழியில் 16 பாடல்களையும் (6 மணி நேரத்தில்) பாடி சாதனை செய்திருக்கிறார். இவைகளெல்லாம் இவருடைய குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.

பாலசுப்பிரமணியம் எஸ்.பி. சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு மகனாக கொணடம்பேட்டை, நெல்லூர் மாவட்டம், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை எஸ் பி சம்பமூர்த்தி ஹரிஹத கலைஞர் ஆவார். இவர் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஐந்து சகோதரிகள் இருக்கின்றனர். இவர்களில் எஸ்.பி சைலஜா இவருக்கு இளைய தங்கை ஆவார். சைலஜாவும் 5000க்கும் மேற்பட்ட பாடல்களை தென்னிந்திய மொழிகளில் பாடியுள்ளார்.

பாலசுப்பிரமணியம் இசை ஆர்வத்தை இளவயதிலேயே வளர்த்து, தன் தந்தை ஹரிஹதத்தை வாசிக்கும் பொழுது கவனித்து, கற்று, இசை கருவிகளை வாசிக்கவும் தேர்ச்சி பெற்றார். அதில் குறிப்பிடத்தக்க கருவிகள் என்றால் ஹார்மோனியம் மற்றும் புல்லாங்குழல் ஆகும். இவர் பொறியாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தோடு ஜே.என்.டி.யு பொறியியல் கல்லூரி, அனன்டபூரில் மாணவனாக சேர்ந்தார்.

டைப்பாய்டு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னையில் உள்ள வேறொரு கல்லூரியில் சேர்ந்து படித்தார். இவருடைய ஆசையோ பாடகனாக வேண்டும் என்பது, ஆனால் இவருடைய தந்தையின் ஆசையோ தன் மகன் பொறியாளன் ஆக வேண்டும் என்றிருந்தது. கல்லூரியில் படிக்கும் போதே பல இசை போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றுள்ளார்.

1964 ஆம் ஆண்டு அமெட்டூர் பாடகர்கள் ஏற்பாடு செய்திருந்த சென்னை மையமாகக் கொண்ட தெலுங்கு கலாச்சார நிறுவனம் நடத்திய இசை நிகழ்ச்சியில் எஸ் பி பி முதல் பரிசு பெற்றார்.

ஆரம்பகாலத்தில் மெல்லிசைக் குழு ஒன்று நடத்தி வந்தார். இதில் பங்கு பெற்றவர்களில் குறிப்பாக இளையராஜா (ஹிட்டார் பிறகு ஹார்மோனியம்), அனிருதா (ஹார்மோனியம்), பாஸ்கர் (percussion) மற்றும் கங்கை அமரன் (ஹிட்டார்) ஆகியோராவர். இவர்களோடு சேர்ந்து எஸ் பி பி இசை நிகழ்ச்சிகளையும் நாடகக் கச்சேரிகளில் பாடல்கள் பாடுவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். எஸ் பி கோதண்டபானி மற்றும் கண்டசாலா நடுவராக இருந்து பங்குபெற்ற பாட்டுப்போட்டியில் எஸ் பி பி சிறந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடிக்க

டி இசையமைப்பாளர்களை சந்திப்பதும், பாட வாய்ப்பு கேட்பதுமாக இருந்த எஸ் பி பிக்கு முதல் போட்டி பாடல் பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடிய, நிலவே என்னிடம் நெருங்காதே என்ற பாடலாகும். எஸ்.பி.பிக்கு முதல் அரங்கேற்ற படம் எஸ்.பி.கோதண்டபானி இசையமைத்த தெலுங்கு திரைப்படம் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ மரியாத ரமணா (15,திசம்பர், 1966), இத்திரைப்படத்தில் ராவே காவ்ய சுமபாலா ஜவராலா பாடலை பி. சுசீலா மற்றும் பி.பி. ஸ்ரீனிவாஸோடு இணைந்து பாடினார். அரங்கேற்ற பாடலுக்கு பிறகு வெறும் எட்டு நாட்களில் கன்னடம் மொழிப்பாடலை 1966இல் “நகரே அதே ஸ்வர்க” என்ற திரைப்படத்தில், கன்னட நகைச்சுவை நடிகர் டி.ஆர். நரசிம்மராஜுக்கு மாமரவில்லோ கோகிலே ௭ல்லோ பாடலைப் பாடினார்.

மலையாள திரையுலகிற்கு இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் என்பவரால் கடல்பாலம் என்ற திரைப்படத்தில் “இ கடலும் மறு கடலும்” பாடலை பாடியதன் மூலம் அறிமுகம் செய்யப்பட்டார். எஸ் பி பாலசுப்பிரமண்யம் 1979 இல் வெளிவந்த சங்கராபரணம் திரைப்படப் பாடல்கள் பாடியதன் மூலம் உலகளவில் பிரபலமானார். சங்கராபரணம் தெலுங்கு திரையுலகில் சிறந்த திரைப்படமாக திகழ்கிறது.

இத்திரைப்படம் இயக்குனர் கே. விஸ்வநாத்தால் இயக்கப்பட்டது. கே.விஸ்வநாத் எஸ்.பி.பிக்கு பெரியப்பா மகன் ஆவார். இத்திரைப்படத்தின் பாடல்கள் திரையிசை திலகம் கே.வி. மகாதேவனால் கர்நாடக சங்கீதத்தை கொண்டு உருவாக்கப்பட்டது. எஸ்.பி.பி முறையாக கர்நாடக சங்கீதம் கற்கவில்லை என்றாலும் கேள்வி ஞானத்தை வைத்து சங்கராபரணம் படப்பாடல்களை பாடினார். இத்திரைப்படத்திற்காக இவர் முதல் தேசிய விருதும் பெற்றார்.  இவருக்கு கிடைத்த அடுத்த தேசிய விருது ‘ஏக் தூஜே கே லியே’ (1981) இந்தி மொழி திரைப்படம் இது இவருடைய முதல் இந்தி திரைப்படம், இயக்குநர் சிகரம் கே. பாலசந்தரால் எடுக்கப்பட்டது.

எஸ் பி பாலசுப்பிரமணியம் தமிழ் திரைப்படங்களுக்கு நிறைய பாடல்களை பாடினார். குறிப்பாக இளையராஜாவின் இசையில் எஸ். ஜானகியோடு இணைந்து ஜோடிப்பாடல்களையும், தனித்தும், சக பின்னணிப்பாடகர்கள் மற்றும் பாடகிகளுடன் சேர்ந்து பல பாடல்களைப் பாடியிருக்கிறார்.

தமிழ் திரையிசையில் இளையராஜா , எஸ் பி பி, எஸ். ஜானகி இம்மூன்று பேரின் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. 1983 ஆம் ஆண்டு வெளிவந்த சகார சங்கமம் (தெலுங்கு திரைப்படம்) கிளாசிக்கல் இசையில் அமைத்ததனால் இளையராஜாவுக்கும் எஸ்.பி.பிக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. 1988 ஆம் ஆண்டு ‘ருத்ரவீணா’ (தெலுங்கு) திரைப்படத்திற்காக மீண்டும் இவ்விருவருக்கும் இந்திய தேசிய விருது கிடைத்தது. இளையராஜா மட்டுமல்லாது இடைக்காலத்தில் இசையமைத்த எல்லா இசையமைப்பாளர்களின் இசையிலும் பின்னணி பாடியிருக்கிறார்.

1989 ஆம் ஆண்டிலிருந்து எஸ்.பி.பி பாலிவுட் நடிகர் சல்மான்கானுக்கு பின்னணி பாடிவந்தார். அதிலும் ‘மைனே பியார் க்யா’ மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் இத்திரைப்படத்தில் எல்லா பாடல்களையும் பாடியுள்ளார். எல்லா பாடல்களும் வெற்றி பெற்றது மட்டுமல்லாது ‘தில் தீவானா’ பாடல் சிறந்த பின்னணிப் பாடகருக்கான பிலிம்பேர் விருதினையும் இவருக்கு வாங்கி கொடுத்தது. இவர் அடுத்த தலைமுறைக்கும் காதல் ரசனையோடு சல்மான் கான் திரைப்பட பாடல்களை பாடியுள்ளார். சல்மான் கான் நடித்த ‘ஹம் ஆப்கே ஹே ஹான்’ மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை குவித்தது இப்படத்தில் லதா மங்கேஷ்கர் உடன் எஸ்.பி.பி பாடிய ‘திதி தேரா தேவர் தீவானா’ பாடல் மிகவும் பிரபலமானது இப்பாடலுக்காக லதா மங்கேஷ்கர் பிலிம்பேர் விருது சிறப்பு விருது பெற்றார். இவைகளெல்லாம் பாலசுப்பிரமணியம் ஒரு மிகப்பெரிய இந்தியப் பின்னணிப்பாடகர் என்பதை எடுத்துகாட்டுகிறது.

௭ஸ் பி

 பாலசுப்பிரமணியம்1990களில் இசையமைப்பாளர்களான தேவா,வித்யாசாகர், எம். எம். கீரவாணி , எஸ். ஏ. ராஜ்குமார் , பரத்வாஜ் போன்றோரின் இசையில் நிறைய பாடல்களைப் பாடினார். ஆனால் மிகப்பெரிய வெற்றி என்று சொன்னால் அது ஏ. ஆர். ரகுமான் இசையில் பாடிய பாடல்களாகும். ஏ ஆர் ரகுமானின் இசை அரங்கேற்ற படம் ரோஜா.

இதில் எஸ் பி பி மூன்று பாடல்களைப் பாடினார். ரோஜா திரைப்படத்திற்கு பிறகு நிறைய பாடல்களை ஏ ஆர் ரகுமானின் இசையில் நீண்ட காலமாகவும் பாடிவருகிறார். புதிய முகம் திரைப்படத்தில் “ஜுலை மாதம் வந்தால்” பாடலை அனுபமாவோடு பாடினார். அனுபமாவிற்கு அப்பாடல் அரங்கேற்ற பாடலாகும்.

கிழக்குச் சீமையிலே திரைப்படத்தில் “மானூத்து மந்தையிலே மாங்குட்டி” பாடல் நாட்டுப்புற நடையில் வித்தியாசமாகப் பாடினார். டூயட் படத்தில் ஏறத்தாழ எல்லா பாடல்களையும் பாடினார். மின்சார கனவு படத்தில் தங்கத்தாமரை மகளே பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது எஸ் பி பிக்கு 1996 ஆம் ஆண்டு கிடைத்தது. இதுதான் இவருக்கு கிடைத்த ஆறாவது தேசிய விருதாகும்.

பாலசுப்பிரமணியம் இசையமைப்பாளர் அம்சலேகாவின் இசையில் கன்னட திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியுள்ளார். பிரேமலோக திரைப்படத்திற்குப் பிறகு நிறைய பாடல்களை அம்சலேகாவின் இசையில் பாடினார்.

இவருடைய ஐந்தாவது தேசிய விருது அம்சலேகாவின் இசையில் பாடியதற்காக கிடைத்தது. கனயோகி பஞ்சக்சரி காவயி (1995) திரைப்படத்தில் உமண்டு குமண்டு பாடலுக்காக, சிறந்த பின்னணிப் பாடகருக்கான இந்திய தேசிய விருது அம்சலேகாவின் ஹிந்துஸ்தானி கிளாசிக்கல் இசையில் பாடியதன் மூலம் பெற்றார்.

எஸ்.பி.பி 2000ஆம் ஆண்டிற்கு பிறகு இளைய தலைமுறை இசையமைப்பாளர்களான யுவன் சங்கர் ராஜா , கார்த்திக் ராஜா , ஹாரிஸ் ஜெயராஜ் ,டி. இமான் , ஜி. வி. பிரகாஷ்குமார் , நிவாஸ் கே. பிரசன்னா போன்றோரின் இசையமைப்பில் பாடிக்கொண்டிருக்கிறார்.

எஸ்.பி.பி 2013 ஆம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தில் நடிகர் சாருக்கானுக்காக விஷால்-சேகரின் இசையில் “நிக்கல் நா சாயி சென்னை எக்ஸ்பிரஸ்” தலைப்பு பாடலை பாடியுள்ளார். இப்பாடல் பதினைந்து வருடங்களுக்கு பிறகு இவர் இந்தி திரையிசையில் பாடியதாகும்.

பாலசுப்பிரமணியம் 2015ஆம் ஆண்டு சனவரி மாதம் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்திற்கு ஆந்திரமாநிலத்தின் தூதராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் மதங்களைக் கடந்து பக்திப்பாடல்கள் பல பாடியுள்ளார் இதற்காக 2015ஆம் ஆண்டுக்கான கேரள அரசின் “ஹரிவராசனம்” விருது பெற்றுள்ளார்.

பின்னணிக்குரல், இசையமைப்பு, நடிப்பு எஸ்.பி.பி நடிகர் கமல்ஹாசனுக்கு 120 தெலுங்கு திரைப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

கமல் நடித்த தமிழ் திரைப்படம் ‘மன்மத லீலை’ தெலுங்கில் ‘மனமத லீலா’ என மொழிமாற்றம் செய்யப்பட்டது. அதன்மூலம் எஸ்.பி.பி. தொடர்ந்து பல நடிகர்களுக்கு பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

குறிப்பாக கமல்ஹாசன், ரஜினி, சல்மான் கான், கே. பாக்யராஜ், மோகன், அணில்கபூர், கிரிஸ் கர்ணாட், ஜெமினி கணேசன், அர்ஜுன் சர்சா, நாகேஷ், கார்த்திக் மற்றும் ரகுவரன் ஆகியோருக்கு பல்வேறு மொழிப்படங்களில் பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

நடிகர் கமலஹாசனுக்கு குரல் ஒன்றிய பின்னணி கொடுப்பவராக திகழ்கிறார். கமல் நடித்த தசாவதாரம் திரைப்படத்தை தெலுங்கில் மாற்றிய போது மொத்தமுள்ள பத்து கதாபாத்திரங்களில் ஏழு கதாபாத்திரங்களுக்கு (பெண் கதாப்பாத்திரம் உட்பட) பின்னணி கொடுத்துள்ளார். இவர் சிறந்த பின்னணிக்குரல் கொடுப்பவருக்கான நந்தி விருதினை ‘அன்னமயா’ மற்றும் ‘ஸ்ரீ சாய் மகிமா’ திரைப்படத்திற்கும் பெற்றுள்ளார். 2012 ஆம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீ ராம ராஜ்ஜியம் (தமிழ்) படத்திற்கு நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்காக பின்னணிக்குரல் கொடுத்துள்ளார்.

பாலசுப்பிரமணியம் தென்னிந்திய மொழிகளில் எழுபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் , தெலுங்கு , கன்னடம் , இந்தி இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரைப்படத்திற்கு மேல் இசையமைத்துள்ளார். சூப்பர் சிங்கர் உள்பட பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்றுள்ளார். பாட்டுடைத் தலைவன், களிப்பும் காதலும் ததும்பும் எஸ்.பி.பி.யின் குரல் தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒன்று.

ஸ்ரீபதி பண்டிதரதயுல பாலசுப்ரமணியம் என அழைக்கப்படுகிற எஸ்.பி.பி-க்கு சாவித்திரி என்ற மனைவி. காதல் மணம். பல்லவி, சரண் என இரண்டு குழந்தைகள். பல்லவி பாடகியாக இருந்திருக்கிறார். சரண் பாடகராகவும் , நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்!.

முதன் முதலாக எஸ்.பி.பி. திரைப் பாடலாகப் பாடியது `சாந்தி நிலையம் ’ படத்துக்காக `இயற்கை எனும் இளைய கன்னி, ஏங்குகிறாள் துணையை எண்ணி ’ தான். ஆனால், திரைக்கு முதலில் வந்தது `அடிமைப் பெண் ’ படப் பாடலான`ஆயிரம் நிலவே வா’!.

பாடலைத் தவிர, நடிப்பிலும் அசத்தியவர். தெலுங்கு, கன்னடம், தமிழ் என மூன்று மொழிகளில் 50 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார். `கேளடி கண்மணி ’, `காதலன்’ இரண்டு, இன்றும் நினைவில் நிற்பவை!.

எஸ்.பி.பி இதுவரை ஆறு முறை தேசிய விருதுகள் வாங்கியிருக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்குப் பாடல்களைப் பாடியதற்காகப் பெற்ற விருதுகள். `சங்கராபரணம்’,`ரூத்ர வீணா’, `ஏக் துஜே கேலியே ’, `மின்சாரக் கனவு ’ என இவர் பாடியதெல்லாம் ஒலிபரப்பாகாத நாளே இல்லை!

“ஏக் துஜே கேலியே ’’ படம் ஹிட்டுக்குப் பிறகு மும்பையில் ஒரே நாளில் 19 பாடல்கள் பாடியவர். இதுதான் எல்லாப் பாடகர்களையும்விட எஸ்.பி.பி-யின் ஆல் டைம் ரெக்கார்டு!

இளையராஜாவும், எஸ்.பி.பி-யும் மிக நெங்கிய நண்பர்கள் இருவரும் `வாடா, போடா’ எனப் பேசிக்கொள்ளும் அழகு எல்லோரையும் வியக்க வைக்கும்!· சுத்தமான சைவ உணவுப் பழக்கம், இவ்வளவு பெரிய ஆகிருதிகொண்ட இவர் சாப்பிட எடுத்துக்கொள்கிற நேரம் ஐந்தே நிமிடங்கள். தயிர் சாதம்… இஷ்ட உணவு!· இதுவரை 42,000 பாடங்களுக்கு மேல் பாடி இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, ஒரியா, துளு, படகா, மராட்டி என ஒரு டஜன் மொழிகளில் பாடுபவர்!

எஸ்.பி.பி. தன் குரலைப் பாதுகாக்க, எந்தச் சிறப்புக் கவனமும் மேற்கொள்வது இல்லை. குளிர்ந்த நீர், ஐஸ்கிரீம், இனிப்பு என எல்லாம் சாப்பிடுவார்!. மூச்சுவிடாமல், `கேளடி கண்மணி’ யில் `மண்ணில் இந்தக் காதல் ’ `அமர்க்களம் ’ பட`சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ’ என எஸ்.பி.பி. பாடிய பாடல்கள் மிகப் பெரிதாகப் பேசப் பெற்றவை. இன்றளவும் அவரது தனிக் கச்சேரியில் விரும்பிக் கேட்கப்படுகின்றன இந்தப் பாடல்கள்!· எஸ்.பி.பி.-க்குப் பிடித்த பாடகர்கள் முகமது ரஃபி ஜேசுதாஸ், முகமது ரஃபியின் பாடல்களை விரும்பிக் கேட்பார்· எம்.ஜி.ஆரே விரும்பிக் கொடுத்த பாடல் `ஆயிரம் நிலவே வா’ அந்தப் பாடலுக்கு எஸ்.பி.பி.அழைக்கப்பட்டபோது, குளிர் காய்ச்சலில் இருந்தார். `ரெஸ்ட் எடு, நீ எத்தனையோ பேரிடம் எம்.ஜி.ஆர் பாடலுக்குப் பாடுகிறேன் எனச் சொல்லி இருப்பாய். மூணு நாளைக்குப் பிறகு நீயே வந்து பாடு! ’ எனச் சொல்லி வாய்ப்பு கொடுத்தார்!· கர்நாடக இசைக் கச்சேரி செய்ய வேண்டும் என்பது எஸ்.பி.பி-யின் தணியாத தாகம், விரைவில் ஒரு நிகழ்ச்சியை எதிர்பார்க்கலாம்!. பிடித்த இசையமைப்பாளர், இளையராஜாதான் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மீது மிகுந்த மரியாதை இருந்தாலும், `ராஜா… ராஜாதான் ’ என்கிற கட்சி!. `துடிக்கும் கரங்கள் ’ படத்தில் ஆரம்பித்து 60 படங்களுக்கு இசை அமைத்திருக்கிறார். எல்லா மொழிப் படங்களும் இதில் அடக்கம்!. பிறந்த தினம் ஜீன் 4, 1946. இப்போது 74 வயதாகிறது. இன்றும் பிஸியாக பாடிக்கொண்டே இருக்கிறார். பிறந்த நாளைக் கொண்டாடுவதில் விருப்பம் இல்லை!. `முதல் மரியாதை ’ படத்தில் சிவாஜிக்குப் பதிலாக நடித்திருக்க வேண்டியவர். பாரதிராஜா வற்புறுத்தியும் கடைசி நேரத்தில் எஸ்.பி.பி மறுத்துவிட்டார்!. ரஷ்யா தவிர, எஸ்.பி.பாலசுப்ரமணியம் போகாத நாடுகளே பூமியில் இல்லை.

`எப்படி அந்த கம்யூனிஸ்ட் பூமி விட்டுப் போச்சு ’ என இப்போதும் அடிக்கடி சொல்லி குறைபட்டுக்கொள்வார்!. சினிமாவில் இருந்தாலும் சினிமாக்காரகள் யாரும் இதுவரை வீட்டுக்கு வந்தது இல்லை. ஏனோ, இப்போதும் தனிமைதான் இவருக்கு விருப்பம். சினிமாவையும் வீட்டையும் தள்ளித் தள்ளியே வைத்திருக்க விரும்புவார்!. எஸ்.பி.பி பிரமாதமாக வரைவார். மிக நன்றாகப் புல்லாங்குழல் வாசிப்பார். இரவுகளில் புல்லாங்குழல் இசை இவர் அறை வழி கசிவதை இன்றைக்கும் கேட்கலாம்!. எஸ்.பி.பி.யின் பள்ளித் தோழரான விட்டல், ஆரம்ப காலம் தொட்டு. இன்று வரை இவருடனே இருக்கிறார். திரையுலகின் ஆச்சர்ய நண்பர்களாக இவர்களைக் குறிப்பிடுவார்கள். கால்ஷீட், உணவு, உடல்நலம் எல்லாம் பேணிக்காப்பது விட்டலின் பொறுப்பு!. தெலுங்குப் படங்களில் நிறைய `ராப் ’பாடல்கள் எழுதியவர். `கவிஞர்கள் அமையாவிட்டால் நீங்களே எழுதிவிடுங்களேன் பாலு ’ என இசையமைப்பாளர்கள் இவரிடம் வற்புறுத்துவார்கள்!. கடந்த 20 வருடங்களில் அதிகமான விமானப் பயணங்கள் மேற்கொண்டவர் எஸ்.பி.பி.

நன்றி:

புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

  புண்ணியங்கள் நல்கும் புரட்டாசி சனிக்கிழமை விரதம்!

தமிழ் மாதங்களில் புரட்டாசி பெருமாளுக்கு உகந்த மாதம் ஆகும். பெருமாளுக்கு உகந்த கிழமை சனி. கிரகங்களில் ஒன்றான சனிபகவானும் புரட்டாசிமாதத்தில் அவதரித்ததாக கூறப்படுகிறது. புரட்டாசிமாதம் எமனின் கோரைப் பற்களுள் ஒன்று என்றும் சொல்லப்படுகிறது.


   புரட்டாசி சனிக்கிழமை விரதம் பெருமாளுக்கு உரியது. பாவங்களை போக்கி புண்ணியங்களை தரக்கூடியது. காக்கும் கடவுளாம் ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த கிழமையான சனிக்கிழமை விரதம் இருப்பதால் எமபயம் விலகி அல்லவைகள் நீங்கி நல்லவைகள் கூடும் என்று நம்பிக்கை. அதுமட்டும் அல்லாமல் சனிபகவானின் தீய பார்வை விலகி கெடுபலன்கள் குறையும்.


    புரட்டாசி சனிக்கிழமைகளில் நீராடி திருமண் என்று சொல்லப்படும் திருநாமம் அணிந்து உபவாசம் இருந்து விஷ்ணு ஆலயங்களுக்குச் சென்று நல்லெண்ணை தீபம் எற்றி துளசிமாலை சார்த்தி திருமாலின் அஷ்டாட்சர மந்திரம் ஆகிய  “ஓம் நமோ நாராயணா” என்று நூற்றெட்டு முறை ஜபித்து வந்தால் நம்மை பிடித்த துன்பங்கள் விலகும். நல்லவை நடக்கும். ஆழ்வார்கள் பாடியருளிய  திருப்பாவை, திருவாய்மொழி போன்ற பாசுரங்களையும் மனமுருக பாடி பெருமாளை சேவிக்கையில் நம் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும்.


 புரட்டாசி சனிக்கிழமைகளில் அனைத்துப் பெருமாள் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். 108 திவ்ய தேசங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். திருப்பதி போன்ற முக்கிய தலங்களில் பிரம்மோற்சவமும் திருக்குடை சமர்ப்பிக்கும் வைபவமும் நடைபெறும். சிலர் புரட்டாசி மாதத்தில்தான் தங்கள் நேர்த்திக் கடன்களையும் குலதெய்வ வழிபாடுகளையும் நிறைவேற்றுவர்.வீடுகளில் விரதம் இருப்பவர்கள் நெற்றியில் திருநாமம் இட்டு, மாவிளக்கேற்றி, வடை பாயசத்துடன் அமுது சமைத்துப் படையலிட்டுப் பூஜையை நிறைவேற்றுவர். சிலர் தங்கள் குடும்ப வழக்கப்படி தங்கள் பகுதியில் உள்ள வீடுகளில் மடியேந்தியோ, உண்டியல் குலுக்கியோ தானம் பெற்று அதில் கிடைக்கும் அரிசியில் பொங்கலிட்டு வழிபடுவர்.


இந்த சனிக்கிழமைகளில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மஞ்சள் ஆடை உடுத்துவது நல்லது. நெற்றியில் திருநாமம் இட்டுக்கொள்வது அவசியம். “”கரையாத நாமக் கட்டியும் புரட்டாசியில் கரைந்துவிடும்” என்பார்கள். காலை முதல் மாலை வரை பெரியவர்கள் பழம், பால் சாப்பிட்டும், குழந்தைகள், நோயாளிகள் இட்லி முதலான எளிய உணவு வகைகளைச் சாப்பிட்டும் விரதமிருக்க வேண்டும். மாலை ஐந்து மணிக்கு, மஞ்சள் தடவிய ஒரு பித்தளைச் செம்பில் அரிசி எடுத்து, அதை பெருமாள் படம் முன் வைத்து பூஜை செய்ய வேண்டும். அந்த அரிசியை வெண் பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கலாக சமைத்து, பெருமாளுக்கு நைவேத்யம் செய்து வணங்க வேண்டும். அருகிலுள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று துளசிமாலை அணிவித்து வணங்கி வர வேண்டும். பின்பு, பெருமாளுக்கு படைத்த பொங்கலைச் சாப்பிட்டு விரதம் முடிக்க வேண்டும். அன்று முழுக்க மனதுக்குள் “கோவிந்தா ஹரி கோவிந்தா, கோகுல நந்தன கோவிந்தா’ என்று சொல்லிக் கொண்டே நம் அன்றாடப்பணிகளைத் தொடர வேண்டும். மாலையில் கூட்டாக குடும்பத்துடன் அமர்ந்து “ஸ்ரீ வெங்கடேச சரணவ் சரணம் ப்ரபத்யே’ என்ற மந்திரத்தை 108முறை ஜெபிக்கலாம். “”வெங்கடேசா! உன் திருவடிகளைச் சரண அடைகிறேன்” என்பது இதன் பொருள்.


பெருமாளுக்கு மண்சட்டியில் நிவேதனம்
பெருமாள் கோயில்களில் சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவது திருப்பதி தலம். அத்திருத்தலத்துக்கு அருகில் முன்னொரு காலத்தில் பீமன் என்னும் குயவர் வாழ்ந்துவந்தார். அவர் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனியும் விரதம் இருப்பதாகச் சங்கல்பம் எடுத்துக் கொண்டார். தொடர்ச்சியான வேலைகளால் விரதம் இருக்க முடியவில்லை. கோயிலுக்குச் சென்றாலும் நின்று நிதானித்து வழிபட மாட்டார். சம்பிரதாய முறைப்படி வழிபடுவதும் அவருக்குத் தெரியாது. ‘பெருமாளே நீயே எல்லாம்’ என்பதை மட்டும் மந்திரம் போல உச்சரித்துவிட்டு வந்துவிடுவார்.


நாட்கள் செல்லச் செல்ல கோயிலுக்கும் தொடர்ந்து செல்ல முடியாத நிலை. அதனால் பெருமாளை வீட்டுக்கே அழைத்து வழிபடுவது என்று பீமன் முடிவு செய்தார். அவர் குயவர் என்பதால் களிமண்ணால் பெருமாள் சிலையை வடித்தார். பெருமாளுக்கு அலங்காரம் செய்யவோ, ஆபரணங்கள் வாங்கவோ அவரிடம் பொருள் இல்லை. அதனால் களிமண்ணையே சிறு சிறு உருண்டைகளாக்கி அவற்றை மாலைபோல் தொடுத்துப் பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார்.அந்த ஊரின் அரசன் தொண்டைமானும் பெருமாள் பக்தர். ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர் விரதமிருந்து பெருமாளுக்குத் தங்க மாலை அணிவித்து வழிபடுவார். ஒருநாள் காலை அவர் கோயிலுக்குச் சென்றபோது தங்க மாலை மறைந்து, மண் மாலை இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். என்ன தவறு நிகழ்ந்திருக்கும் என்ற யோசனையுடனேயே உறங்கினார். கனவில் தோன்றிய பெருமாள், பீமன் குறித்தும் அவருடைய பக்தியைக் குறித்தும் அரசனுக்கு அறிவித்தார்.


பீமனின் பக்தியைப் பெருமாள் வாயாலேயே கேட்டறிந்த மன்னன், பீமனின் குடிசைக்குச் சென்றார். அவருக்குப் பொன்னும் பொருளும் வாரிவழங்கினார். ஆனால் அந்தப் பொருட்களில் எல்லாம் மயங்காமல் இறுதிவரை பெருமாளையே துதித்து, முடிவில் வைகுண்டப் பதவி அடைந்தார். பீமன் என்னும் அந்தக் குயவனின் பக்தியைப் பறைசாற்றும் வகையில் இன்றுவரை பெருமாளுக்கு மண்சட்டியில்தான் திருவமுது படைக்கப்படுகிறது.


பாவ வினைகளால் உண்டான பிணி, தடை, தோஷம், கண் திருஷ்டி போன்றவை விலகவும் கர்ம வினைகள் தொடராமல் இருக்கவும் ஆயுள், ஆரோக்கியம், புத்திர சம்பத்து, மாங்கல்ய பலம், சவுபாக்கியம் கிடைக்கவும் விரத முறைகள் காலம் காலமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றனர். உணவு கட்டுப்பாட்டுடன் தெய்வத்தை மனதில் நிறுத்தி இருக்கும் விரதங்கள் உடலுக்கும், உள்ளத்துக்கும், ஆன்மாவுக்கும் அருமருந்து. அந்த வகையில் புரட்டாசி சனிக்கிழமை விரத வழிபாடு மிகவும் பழமை வாய்ந்ததும், மகத்துவம் மிகுந்ததும் ஆகும்.இத்தகைய சிறப்பு வாய்ந்த புரட்டாசி சனிக்கிழமை விரதத்தை கடைபிடித்து பகவான் ஸ்ரீமன் நாராயணனின் அருளினை பெற்றுய்வோமாக!
(இணைய தளங்களில் படித்து தொகுத்தது) 

நீங்களும் அதிர்ஷ்டசாலியே!

நீங்களும் அதிர்ஷ்டசாலியே!

அதிர்ஷ்டசாலிகள் நேர்மறையானதை சிந்திக்கக் கூடியவர்கள் என்பது மட்டுமல்லாமல், நீங்கள் நேர்மறையான சிந்தனை உடையவர்களாக இருந்தால் நிச்சயம் நீங்களும் லக்கியானவராக வெற்றியாளராக இருப்பீர்கள் என்கிறது வாழ்வியல். 

உண்மையில் என்ன இல்லை என்ற பார்வையில் அதிர்ஷ்டமும் இல்லை என்ன இருக்கிறது என்ற பார்வையில் அதிர்ஷ்டமும் இருக்கிறது.

லக்கியானவர்கள் என சொல்லப் படுகிறவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களை தங்கள் மனதுக்குள் மீண்டும் மீண்டும் அசை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். அதே நேரம் அன்லக்கி என சொல்லக் கூடியவர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த தோல்விகளை, அவமானங்களை எதிர்மறையான நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் அசை போடக் கூடியவர்களாக இருக்கிறார்கள். 

அதனால் அவர்களுடைய ஆழ்மனதும், அவர்கள் மனதில் என்ன மாதிரியான காட்சிகள் ஓடிக் கொண்டிருக்கிறதோ, அது தான் அவர்கள் விரும்பக் கூடிய ஒன்று என முடிவுக்கு வந்து அது மாதிரியான சூழலையே அவர்களை நோக்கி ஈர்க்கிறது. 

அந்த வகையில் அதிர்ஷ்டமும் துரதிர்ஷ்டமும் உங்கள் எண்ணங்களில் தான் கருக் கொள்கிறது. உங்கள் விழிப்புணர்ச்சியில் தான் அது உருப் பெருகிறது.

இதைப் புரிந்து கொண்டால் நிச்சயம் நீங்களும் அதிர்ஷ்டசாலியே !

பல வருடங்களுக்கு முன்பு, பாலைவனங்களில் தார் சாலைகள் போடப் படாத கால கட்டங்களில்… ஒட்டகம் மட்டுமே புதையும் பாலை மனலில் வாகனமாக பயன்படுத்தப் பட்டபோது, ஒட்டகத்தை மணலில் உட்காரச் செய்து அந்த பயணி தன் பயணத்தில் கொண்டு செல்ல வேண்டிய பொருட்களை எல்லாம் அதன்  நீண்ட முதுகில் மூட்டை மூட்டையாக ஏற்றுகிறார். ஒட்டகமும் அசையாமல் உட்கார்ந்திருக்கிறது. அவர் இப்போது ஒட்டகத்தை ஓட்டி செலவதற்காக எழுந்திருக்க சொல்கிறார். அது எழுந்திருக்க மறுக்கிறது!.  என்ன ஆயிற்று இந்த  ஒட்டகத்திற்கு.., அவர் குழம்பியவாறு அதை சுற்றி இருக்கும் கயிற்றை இழுத்து மீண்டும் மீண்டும் அதை எழ வைக்க முயற்சிக்கிறார். அது எழ மறுக்கிறது. அவர் அதை தன் கைகளால் தள்ளி எழச் சொல்கிறார். அது ஏதோ சமிஞ்கை காட்டுவது போல், சரமாரியாக மூட்டைகள் ஏற்றப் பட்ட தன் முதுகை வலதும் இடமுமாக அசைத்து விட்டு அந்த இடத்தை விட்டும் எழுந்திருக்காமல் வெறுமனே முரண்டு பிடிக்கிறது. அந்த பயணிக்கு ஒட்டகம் என்ன சொல்ல வருகிறது, அது ஏன் இப்படி தன்னுடன் ஒத்துழைக்காமல் முரண்டு பிடிக்கிறது என்பது பிடிபடுகிறது. இப்போது அவர் ஒன்றுமே இல்லாத சில காலி மூட்டைகளை ஒட்டகத்தின் மேல் ஏற்றுகிறார். 

ஒட்டகம் இன்னும் அதிகமாக முரண்டு பிடித்து எழாமல் அமர்ந்திருக்க, அவர் தனக்குள் சிரித்தவாறு ஒட்டகத்தின் கண்ணில் படுவதற்கேற்ப அந்த காலி மூட்டைகளை அதன் முதுகில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக தள்ளி விடுகிறார். ஒட்டகம் ஏதோ சாதித்த பெருமையில், எந்த பாரமும் குறையாமலே ஏதோ பாரம் இறங்கி விட்டது போல் தன் உடலை சிலிர்த்து எழுந்து பயணிக்கத் தொடங்குகிறது. 

பெரும்பாலான உறவுகளில் இந்த வீம்பும் பிடிவாதமும் தானே முன்னின்று, ஏதோ ஒன்றிற்கு முரண்டு பிடித்துக் கொண்டு எந்த உறவையும் முறிக்கிறது. அவன் என்னை அவமானப் படுத்தி விட்டான்… அவன் சாரி சொல்லாமல் அவனோடு ஒரு போதும் பேச மாட்டேன் என உங்கள் நட்பையும் உறவையும் தள்ளி வைக்கச் செய்கிறது. உண்மையில் பாரமே இல்லாத ஒன்றை இறக்கி வைத்து விட்டு பெரும் பாரம் குறைந்தது போல் வீறு நடை போட வைக்கிறது. 

எந்த ஒன்றிற்கும் உண்மையான பிரச்னையை புரிந்து கொண்டு அதை சீர் செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைப்பதை விட, உங்கள் ஈகோ திருப்தி அடைய வேண்டும் எனும் எண்ணம் தானே பல நேரங்களில் உங்களிடம் மேலோங்கி நிற்கிறது. 

உறவுகள் மகிழ்ச்சியெனும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள், சிறு சிறு குறைகளை பெரிது படுத்தாமல், அவர்களை நெருக்கமாக வைத்துக் கொள்வதும், எங்கோ பறக்க விடுவதும், உங்கள் கைகளில் தான் இருக்கிறது. அதுவே உங்கள் மகிழ்ச்சியின் அளவை  தீர்மானிக்கிறது. 

dr.Fajila Azad, International Lifecoach & Hypnotist

பாண்டவ மகள்… சுதானு

பாண்டவ மகள்… #சுதானு

ரமேஷ், சென்னை

 …பாண்டவருக்கு மகள் இருக்கும் விஷயம் சிலருக்காவது தெரிந்திருக்கிறது.

மகாபாரதம் உலகின் பெரிய காவியம் ஆகும் அதில் பல கதைகள் உண்டு. தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும் தொடர்கள் பாண்டவரை மையமாக வைத்தே எடுக்கப்படுகின்றன. அதில் வரும் உபகதைகள் ஒளிபரப்பப்படுவதில்லை . அவ்வாறே பாண்டவ மகளின் கதை ஒரு உப கதையாகவும் நாட்டுப்புற கதையாகவும் உள்ளது.

🌼பாண்டவர்கள் :

சந்திர வம்ச அரசன் பாண்டுவின் ஐந்து புதல்வர்களே கூட்டாக பாண்டவர் என அறியப்படுகின்றனர்.

🌼திரௌபதி :

ஐந்து பாண்டவருக்கும் பொதுவான பத்தினி ஆவாள். திரௌபதியை தவிர பாண்டவருக்கு வேறு மனைவிகளும் உண்டு.

🌼உபபாண்டவர்:

பாண்டவர்களுக்கு திரௌபதி மூலம் பிறந்த ஐந்து ஆண் குழந்தைகள் உபபாண்டவர் என அறியப்படுகின்றனர்.

🌼பாண்டவர் மகள் :

🌻திரௌபதி மற்றும் யுதிஷ்டிரன் இருவருக்கும் #சுதானு என்ற மகளும் பிரதிவிந்தியன் என்ற மகனும் பிறந்தனர். இந்த சுதானு தான் பாண்டவர் வம்சத்தின் மூத்த குழந்தை ஆவார். அதாவது உபபாண்டவரின் #சகோதரி தான் இந்த சுதானு.

தாய் திரௌபதி போல அழகும் அறிவும், தந்தை யுதிஷ்டிரன் போல தர்மமும் வீரமும் உடையவள் தான் இந்த சுதானு.

பிறகு

🌻பீமனுக்கும் திரௌபதிக்கும் சுதசோமனும்

🌻அர்ஜுனனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதகர்மன் பிறந்தான்.

🌻நகுலனுக்கும் திரௌபதிக்கும் சதாநிகனும்

🌻சகாதேவனுக்கும் திரௌபதிக்கும் ஸ்ருதசேனனும் பிறந்தனர்.

உபபாண்டவர் அனைவர்மீதும் பாரபட்சம் இன்றி அன்பை பொழிந்தாள் சுதானு. சூதாட்டத்தில் நாட்டை இழந்த பாண்டவர் வனவாசம் சென்ற போது தாத்தா துருபதனின் மாளிகையில் பாண்டவரின் குழந்தைகள் அனைவரும் தங்கினர். எனவே அங்கு தாய்மாமன் மற்றும் அத்தையின் அன்பில் வளர்ந்த செல்ல மகள் தான் சுதானு. குருஷேத்திரப் போர் முடிந்த பிறகு பாண்டவரின் மகன்கள் அனைவரும் உறங்கும் போது அஸ்வத்தாமனால் கொல்லப்படுகின்றனர்.

பாண்டவ வம்சத்தில் மிச்சமிருந்தது சுதானு மட்டுமே.

💐இந்த சுதானுவானவள் கிருஷ்ணன் மற்றும் #சத்யபாமாவின் மூத்த மகன் #பானு வை காதலித்து அனைவரது சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு #வஜ்ரம் என்ற மகன் பிறக்கிறான்.

சிலரோ குருஷேத்திரப் போருக்கு பிறகு தான் இவரது திருமணம் நடந்ததாக கூறுகின்றனர். ஆனால் உபபாண்டவரின் அக்கா என்பதால் இவரது திருமணம் உபபாண்டவரின் திருமணத்திற்கு முன்பே நடந்திருக்கவேண்டும்.

திருமணத்திற்கு பின்னர் சுதானு துவாரகையில் வசிக்க ஆரம்பிக்கிறாள்.

💐கிருஷ்ணன் #ஜாம்பவதி இணையரின் மகனான #சாம்பனை மணந்த துரியோதனனின் மகள் லட்சுமணாவும் #துவாரகையின்_மருமகள் ஆவாள்.

தந்தையரை போல விரோதம் பாராமல், சுதானுவும் லட்சுமணாவும் அன்பாகவே வாழ்ந்தனர்.

🌼காந்தாரியின் சாபத்தால் துவாரகை அழியும் நேரத்தில் துவாரகையின் அனைத்து பெண்களும் குழந்தைகளும், அர்ஜுனன் மூலமாக ஹஸ்தினாபுரத்தை அடைகின்றனர்.

சுதானு தனது கடைசி காலத்தை அங்கே கழிக்கிறார்.

பாண்டவர்களுக்கு ஒரு சகோதிரியும் இருந்திருக்கிறார் 

குந்திக்கு 

4 பிள்ளைகள் அதாவது தர்மர் பீமன் அர்ச்சுனன் கடைசியில் உண்மை வெளியில் வந்தது கர்ணன். 

மாத்திரா தேவிக்கு 

3 பிள்ளைகள் நகுலன், சகாதேவன், இறுதியில் பாண்டு மாத்திரா தேவியை கூடிக்கலந்தபோது தான் பாண்டு இறந்தார். மாத்திரி உடன்கட்டை ஏறியதும் இவர்களின் அஸ்தி கடலில் விட்டனர். கண்ணனின் கருணையால் பாண்டுவின் விந்து மாத்திரி உடலில் இருந்ததால் உடன்கட்டை ஏறியும் அந்த விந்து தீயிலும் எதுவுமாகாமல் அஸ்தி கடலில் கலக்கும் போது கடலில் உள்ள சங்கில் தங்கியது. அந்த சங்கில் இருந்து பிறந்தவள் தான் சங்குவதி என்ற பெண். இந்த பெண் பாண்டவர்களுக்கு தங்கையாவாள். அர்ச்சுனன் போரில் வெற்றி பெற 5 பொருட்கள் தேவைப்பட்டன. அவை:

1. வீரப்பம்பை

2. வீரசாட்டி

3.வீரகந்தம்

4. பண்டாரப்பெட்டி

5. வீரவாள்.

இவை அனைத்தும் ஒருவனிடத்தில் தான் உள்ளது என்றார் கண்ணன். இவை அனைத்தும் யாரிடம் உள்ளது அர்ச்சுனன் கேட்க போத்தலிங்கம் என்பவனிடத்தில் உள்ளது என்று கண்ணன் கூறினார். இதை எப்படி வாங்குவது என்று அர்ச்சுனன் கேட்க இதை தந்திரத்தால்தான் வாங்க முடியும் என்று கண்ணன் கூறினார். இதில் கண்ணன் கூறிய வழி வீமன் விறகு விற்பவனாகவும், அர்ச்சுனன் அழகிய பெண்ணாக விஜயாம்பாள் என்ற பெயருடன் மற்றும் கண்ணன் விஜயாம்பாளுக்கு தாய்கிழவியாக போத்தலிங்கம் உள்ள நாட்டிற்கு சென்றனர். வீமன் விறகு விற்பவனாக சென்று கொண்டிருக்க விஜயாம்பாள் தன் அண்ணனை தேடிக்கொண்டு போக அச்சமயம் போத்தலிங்கம் விஜயாம்பாளை கண்டு அவள்மீது மோகம் கொண்டான். என் அண்ணன் விறகு விற்றகொண்டு இந்த வழியாக வந்ததை பார்த்தீர்களா என்று விஜயாம்பாள் கேட்க அழள் பேச்சிலும் அழகிலும் மயங்கினான் போத்தலிங்கம். உனக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கிறேன் என்னை மணந்துக்கொள் என்று கூறினான்.  அந்த சமயத்தில் அந்த பெண்ணிற்கு தாய் கிழவியாக வந்தார் கண்ணன். அப்போது விஜயாம்பாள் என் பாட்டி என்ன கேட்கிறாரோ அதை தந்தால் நான் தங்களை மணப்பேன் என்று கூறினாள்.            1. வீரப்பம்பை

2. வீரசாட்டி

3.வீரகந்தம்

4. பண்டாரப்பெட்டி

5. வீரவாள். 

இவைகள் நாங்கள் பூஜை செய்வதற்கு தேவைப்படுகிறது. இவைகளை கொடுத்தால் நாங்கள் இருவரும் பூஜை முந்ததும் தருகிறோம் என்று தாய்க்கிழவி சொல்ல போத்தலிங்கம் கொடுத்தார். நாங்கள் பூஜை செய்வதை யாரும் பார்க்க கூடாது என்று தாய்கிழவி கண்டிப்புடன் போத்தலிங்கமிடம் கூறினாள். அதற்கு சம்மதித்த போத்தலிங்கம் சற்று பொறுமை காத்தான். சற்று நேரம் கழித்து பார்த்தபோது பூஜை செய்தவர்கள் காணவில்லை. போத்தலிங்கம் விஜயம்பாள் விஜயாம்பாள் என்று புலம்பி கொண்டு ஒவ்வொரு நாட்டிலும் தேடினான். இறுதியில் அவர்கள் இருக்கும் நாட்டில் கண்டுபிடித்தப்பின் கண்ணன் நாங்கள் உன்னிடம் இந்த 5 பொருட்களை வாங்கவே வந்தோம் என்று நடந்த உண்மையை கூறி விளக்கினார். அதற்கு பின்பும் போத்தலிங்கம் விஜயாம்பாள் விஜயாம்பாள் என்றான். அதற்கு கண்ணன் சங்கு துவாரகையில் பாண்டுவிற்கும் மாத்ராதேவிக்கும் பிறந்த பெண் பாண்டவர்களின் தங்கையான சங்குவதி இருக்கிறாள் அவளை மணந்துக்கொள் என்று கண்ணன் கூறினார். அன்றுதான் பாண்டவர்களுக்கு தங்கை இருப்பது தெரியும். போத்தலிங்கம் சங்குவதியை மணந்தார். பின்பு போர்க்களத்தில் போத்தலிங்கம் முன்னிருக்கும் பிள்ளையாக போர்மன்னனாக இருக்கவேண்டும் என்று கண்ணன் கூறினார்.

எளிமையானவர் ஏழைகளின் தோழர் வசந்தகுமார்!

நன்றி என சொல்லி விட்டு புன்னகையுடன்
புறப்பட்டு சென்றார் திரு வசந்தகுமார்.

அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தது என்னவோ அரை மணி நேரம்தான். ஆனால் வெகுநாட்கள் நெருங்கி பழகியவர் போல ஒரு நட்பையும் பாசத்தையும் எனக்குள் ஏற்படுத்தி விட்டு போய் விட்டார் அவர்.

சில ஆண்டுகளுக்கு முன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு ஆடியோ ஒலிப்பதிவு கூடத்தில்தான் திரு வசந்த குமாரை எதிர்பாராதவிதமாக
முதன்முதலாக சந்தித்தேன். 

அந்த ரிக்கார்டிங் ஸ்டுடியோவில் முன்னதாகவே நாங்கள் எங்கள் கிளையண்ட்டுக்காக நேரத்தை புக் செய்திருந்தோம்.

காலை 10 மணி முதல் பகல் ஒரு மணிவரை எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து இருந்தார் சவுண்ட் என்ஜினியர் நித்தியானந்தம்.

சுறுசுறுப்பாக போய்க்கொண்டிருந்தது எங்கள் ஒலிப்பதிவு.

திடீரென காலை பதினோரு மணிக்கு ரெக்கார்டிங் இன்ஜினியர் நித்யாவுக்கு ஒரு போன் கால் வந்தது.

பேசி முடித்துவிட்டு எங்களை தர்ம சங்கடத்துடன் பார்த்தார் இன்ஜினியர்.

“என்ன ?” என்று கேட்டேன். 

நித்யானந்தம் கைகளை பிசைந்து கொண்டே, “ஒண்ணுமில்ல ஸார். ஒரு சின்ன சிக்கல்” என்றார்.

“என்ன விஷயம், சொல்லுங்க…” என நான் அழுத்தமாக கேட்ட பிறகு தயக்கத்துடன் சொன்னார்.

காலை பதினோரு மணி முதல் பதினொன்றரை வரை
ஒரு அரை மணி நேரம் ஒலிப்பதிவுக்கு நேரம் வேண்டும் என்று  முதல் நாளே சொல்லி வைத்திருந்தாராம் திரு வசந்த குமார்.

ஆனால் ஏதோ வேலை நெருக்கடியில் அந்த வசந்த் அண்ட் கோ அப்பாயின்ட்மெண்ட்டை மறந்து விட்டிருந்ததால்  காலை 10 முதல் பகல் ஒரு மணிவரை முழுமையாக எங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்து விட்டார் நித்யா.

எங்கள் ரெக்கார்டிங் போய்க் கொண்டிருக்கிறது.

வசந்தகுமாரும் அவரது ஒலிப்பதிவுக்காக இப்போது இந்த ஸ்டூடியோவுக்கு வந்து கொண்டிருக்கிறார் .

இதுதான் இப்போதைய சிக்கல்.

எங்கள் ஒலிப்பதிவையும் பாதியில் நிறுத்தச் சொல்ல முடியாது.
முதல் நாளே ஒலிப் பதிவுக்கான நேரத்தை சொல்லி இருந்த காரணத்தால் திரு வசந்த குமாரையும் வர வேண்டாம் என்று சொல்ல முடியாது.

தர்மசங்கடத்தில் தவித்தார் நித்யா.

இந்த சிக்கலை எப்படி சரி செய்வது என்று சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில் கணீரென்ற குரலில் ‘ஹலோ’ சொல்லியபடி ஸ்டூடியோவுக்கு
உள்ளே நுழைந்த வசந்தகுமார்…
ஒலிப்பதிவு  அறைக்குள் இருந்த எங்களை வித்தியாசமாக பார்த்தார்.

‘அவருக்காக கொடுத்திருந்த நேரத்தில் இன்னொருவர் எப்படி..?’ என அவர் சிந்திப்பதை அவர் எங்களை பார்த்த பார்வையே வெளிப்படுத்தியது.

இதற்குள் நித்யா திரு வசந்த குமார் அருகில் சென்று
தலையை சொறிந்து கொண்டும் கைகளை பிசைந்து கொண்டும் தன்னுடைய தவறையும் அதனால் ஏற்பட்ட தர்மசங்கடமான நிலைமையையும்
எடுத்துச் சொன்னார்.

முகத்தில் எந்த வித சலனமும் இன்றி நித்யா சொல்லுவதை உற்றுக் கவனித்துக் கொண்டிருந்தார் திரு வசந்த குமார். ஒரு நொடிதான் யோசித்தார். சட்டென்று புன்னகைக்கு மாறினார்.

நித்யானந்தம் தோள்களில்   தட்டிக் கொடுத்த வசந்தகுமார், “அதனால் என்ன ? இப்போ அவங்களுக்கு நேரம் ஒதுக்கி கொடுத்திட்டீங்க. அவங்களோட வேலையை முடிங்க. ஆனா எனக்கும் அவசரம். ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பணும். எப்படியாவது இன்னைக்கு ஈவினிங் எனக்கு நேரம் ஒதுக்கி கொடுங்க. ஓகே தானே ?”

இப்படி சொல்லி விட்டு புறப்பட தயாரானார் வசந்தகுமார்.

அவ்வளவு பெரிய தொழிலதிபர், இவ்வளவு எளிமையாகவும் இனிமையாகவும் நடந்து கொள்வது நிஜமாகவே என்னை கவர்ந்தது. 

சற்றே யோசித்தேன்.

அடுத்த அரை மணி நேரத்தை வசந்தகுமார் அவர்களுக்கு கொடுத்துவிட்டால் என்ன ?
நமது ஒலிப்பதிவை அதற்கு பிறகு கூட வைத்துக் கொள்ளலாமே !

நான் நித்யாவை அழைத்து விஷயத்தைச் சொன்னேன். நிம்மதிப் புன்னகையோடு அதை அவர் வசந்த குமாரிடம் சொல்ல அவர் முகத்திலும் புன்னகை. அப்படியா என்று என்னை பார்த்து சிரித்தார் வசந்தகுமார்.

அடுத்த அரை மணி நேரம் ஒலிப்பதிவு ஒருபக்கம் ஓடிக் கொண்டிருக்க…
அதையும் கவனித்துக் கொண்டு, ஸ்டுடியோவின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார் திரு வசந்தகுமார்.

எந்த ஊர் என என்னிடம் விசாரித்தார். தென்காசி எனச் சொன்னவுடன் தொகுதி அரசியல் நிலவரத்தை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.
காமராஜரின் உறவினர்கள் எனக்கு மிக நெருக்கம் எனச் சொன்னவுடன் ஆர்வமாக இன்னும் எனக்கு அருகில் நெருங்கி அமர்ந்து அது தொடர்பான விஷயங்களையும் கேட்டுக்கொண்டார்.

பேச்சின் இடையிடையே அடிக்கடி தோளில் மாலை போல போட்டிருந்த அங்கவஸ்திரத்தை எடுத்து கீழே வைப்பதும் மறுபடி எடுத்து தோளில் போட்டுக் கொள்வதுமாக இருந்தார்.

திடீரென கள்ளமற்ற சிரிப்புடன் இப்படி கேட்டார்: “அதுசரி. இந்த அங்கவஸ்திரத்தை இப்படி நான் போட்டிருக்கறது எப்படி இருக்கு ? நல்லா இருக்கா இல்லையா ?”

இந்த திடீர் கேள்வியை எதிர்பாராத நான் திகைத்துப் போனேன்.

ஆனாலும் சமாளித்து,
“இது உங்களுக்கு ரொம்ப நல்லா இருக்கு சார்” என்றேன்.

“அப்படியா ?” என விழிகள் விரிய சிரித்தபடி கேட்டார்.  “ஆமாம் சார் . மற்றவர்களைவிட இது உங்களை வித்தியாசப்படுத்தி  காட்டுகிறது.”

“நிஜமாத்தான் சொல்றீங்களா இல்ல கிண்டலுக்கு சொல்றீங்களா ?” என்று  கேட்டுவிட்டு கலகலவென்று சிரித்தார் திரு வசந்த குமார்.

இதற்குள் ஒலிப்பதிவு வேலைகள் முடிந்து விட புன்னகையுடன் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டு சென்றார் திரு வசந்த குமார்.

நித்தியானந்தம் சிரித்தபடி கேட்டார் : “என்ன ஜான் சார் ? இரண்டு பேரும் ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிக்கிட்டு இருந்தீங்க. ஒரே ஊர்க்காரங்க அப்படிங்கிற பாசமா ?”

நான் கொஞ்சம் சிந்தித்தபடி சொன்னேன்: “இல்லை. அது என்னன்னு தெரியல. அவர்கிட்ட ஏதோ ஒரு  ஈர்ப்பு சக்தி இருக்கு.”

ஆம். 

திரு வசந்தகுமார் அவர்கள் தொழில் அரசியல் இரண்டிலும் வெற்றி பெற காரணம், இனிமையான அவரது புன்னகையும், இனம் தெரியாத அந்த ஈர்ப்பு சக்தியும்தான்.

எளிதில் எல்லோரையும் கவர்ந்து இழுக்கும் அவரது ஈர்ப்பு சக்தி,
அந்த பாஸிட்டிவ் வைரஸை மட்டும் தன் பக்கம் ஈர்க்காமல் இருந்திருக்கலாம்.

என்ன செய்வது ?

வசந்தகுமார் அவர்களின்  கள்ளமில்லா அந்த புன்னகையும், கணீரென்ற அவரது குரலும்
காலங்கள் உள்ளவரை நிலைத்திருக்கும்.

John Durai Asir Chelliah

நாலுபேருக்கு சிலை வைத்த சந்துரு மாஸ்டர்

23 September 2020|அக்டோபர் தேன்சிட்டு., கட்டுரை

  John Durai Asir Chelliah 

சந்துரு மாஸ்டர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம்.

சென்னை அரசு ஓவியக் கலை கல்லூரியின் முதல்வராக இருந்தவர். தற்போது திருநெல்வேலியில் சிற்பக் கலைக் கல்லூரியை சிறப்பாக நடத்திக் கொண்டிருப்பவர்.

தமிழகத்தின் தலைசிறந்த சிற்பிகளில் ஒருவர்.

சமீபத்தில் ஒரு நாள்…

நள்ளிரவு 12 மணியை தாண்டியும் தூக்கம் வரவில்லை சந்துரு மாஸ்டருக்கு.

அப்படியும் இப்படியும் படுக்கையில் புரண்டார். இடையிடையே எழுந்து அறைக்குள்ளேயே அங்குமிங்கும் நடந்தார்.

ஏதோ நினைத்துக் கொண்டவர் போல படுக்கைக்கு பக்கத்தில் மேஜையில் வைத்திருந்த காகிதத்தில் ஒரு சில கோடுகளை வரைந்தார்.

மறுபடியும் படுத்தார், எழுந்தார், வரைந்தார், மீண்டும் அங்குமிங்கும் நடந்தார் சந்துரு மாஸ்டர்.

இப்படி ஒரு வித்தியாசமான சிந்தனை இதுவரை அவருக்குள் எழுந்தது இல்லை. அந்த எண்ணம் வந்ததிலிருந்து அவர் தூக்கம் தொலைந்து போனது.

அவர் உறக்கம் இல்லாமல் தவிப்பதற்கு ஒரே காரணம், அவர் உள்ளத்தில் ஏற்பட்ட பெரு வியப்பு.

ஆம். அந்த நாலு பேரை நினைத்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை சந்துரு மாஸ்டருக்கு.

யார் அந்த நான்கு தரப்பினர் ?

மருத்துவ பணியாளர்கள்,
காவல்துறை நண்பர்கள்,
துப்புரவு துறை தொழிலாளர்கள்,
சமூக ஆர்வலர்கள்…

உலகமே பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் இந்த தொற்றுநோய் காலத்தில், இந்த நான்கு துறையினர் மட்டும் கொஞ்சம் கூட அச்சமில்லாமல் அந்த தொற்று நோய்க்கு எதிராக களத்தில் இறங்கி போராடிக் கொண்டிருப்பது அவருக்கு மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்தது.

சரி. வியப்பதோடு மட்டும் விட்டு விட முடியுமா ?

இந்த நான்கு துறை வீரர்களையும் வரலாற்றில் இடம் பெறச் செய்ய வேண்டாமா ?

அப்போதுதானே வருங்கால தலைமுறை இவர்களின் பெருமையை அறிந்து கொள்ளும்.

அதற்கு கலைஞனாக தான் செய்ய வேண்டிய கடமை என்ன ?
இதை நினைத்தபோதுதான் தூக்கம் தொலைந்து போனது சந்துரு மாஸ்டருக்கு.

பலவித கோணங்களில் சிந்தித்துப் பார்த்தார். எதுவும் அவருக்கு திருப்தி தரவில்லை.

சட்டென ஒரு எண்ணம் உதித்தது.

அசோகச் சக்கரம்.

நான்கு சிங்கங்களை கொண்ட அந்த வடிவம் சந்துரு மாஸ்டர் நினைவுக்கு வந்தது.

அந்த நான்கு சிங்கங்களின் வடிவத்தில் இந்த நான்கு தரப்பினரையும் சிற்பமாக வடித்தால் என்ன ?

உற்சாகமாக எழுந்தார்
சந்துரு மாஸ்டர்.
உடனே தொடங்கி விட்டார்
அந்த உன்னத கலைப் படைப்பை !

அசோகச் சக்கரம் சின்னத்தில் இருப்பது போலவே அந்த நான்கு சிங்கங்களுக்கும் பதிலாக 


மருத்துவத்துறை
காவல்துறை
துப்புரவு பணியாளர்கள்
சமூக சேவகர்கள்
இந்த நான்கு துறையில் உள்ளவர்களையும் தன் சிற்பத்தில் இடம் பெறச் செய்த
சந்துரு மாஸ்டர் சொல்கிறார்:

“உலகமே அச்சத்தில் உறைந்து போய் இருக்கும் இந்தச் சூழ்நிலையில், தங்கள் உயிரைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல், மனித குலத்தை காப்பதற்காக மகத்தான இந்த மனித நேயப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்த நான்கு தரப்பினரையும் பாராட்டி பதிவு செய்ய வேண்டியது ஒரு கலைஞனாக இருக்கும் என்னுடைய கடமை என்றே கருதுகிறேன். அதற்காகத்தான் இந்த சிற்பத்தை வடிவமைத்திருக்கிறேன்.”

உண்மையிலேயே சந்துரு மாஸ்டரை நினைத்து நான் பெருமை கொள்கிறேன். காரணம் 1980 இல் நான் சென்னை ஓவியக் கலை கல்லூரியில் படித்தபோது சிற்பக்கலை பிரிவில் எனக்கு ஆசானாக இருந்தவர் இந்த சந்துரு மாஸ்டர்.

விரைவிலேயே தமிழக அரசு தகுந்த ஒரு இடத்தை தேர்வு செய்து இந்த சிலையை அங்கே நிறுவ இருக்கிறதாம்.

இதுபோன்ற சமுதாய அக்கறை கொண்ட கலைப்படைப்புகளை எதிர்காலத்தில் இன்னும் ஏராளமாக படைக்க என்னுடைய மனம் நிறைந்த வாழ்த்துகள் சந்துரு சார்…!

திரும்பி பார்க்கிறேன்!

 துடுப்பதி ரகுநாதன், கோவை.

திரும்பி பார்க்கிறேன்!
இந்த கொரோனா தொற்று நீடித்துக் கொண்டே போகிறது! தினசரி வாழ்க்கை ஸ்தம்பித்துப்  போய் நீண்ட நாட்கள் ஆகி விட்டன! வயசு ஆக ஆக உடம்பில் தென்பும்  குறைந்து கொண்டே போகிறது!
எழுபது வயசுக்கு மேல் நான் போகும் இடங்கள் வாரப் பத்திரிகைகள் விற்கும்   பெட்டிக் கடைகளும், டவுனில் இருக்கும் நூலகமும், விஜயா பதிப்பகமும் தான்!
இனிமேல் அங்கு எல்லாம் பழையபடி போக முடியுமா என்பதே சந்தேகமாக இருக்கிறது!
போலியாக தெம்பை வரவழைத்துக் கொண்டு வெளியில் கிளம்பினால், மகன், மகள்கள் மட்டுமல்ல, பேரன், பேத்திகளும் சேர்ந்து கொண்டு, “தாத்தாவுக்கு 80  வயசுக்கு மேல் ஆச்சு!…இன்னும் மைனர் மாதிரி வெளியே கிளம்பப் பார்க்கிறார்…பார்!…” என்று முணு முணுக்கிறார்கள்!
தர்ம சங்கடமாக இருக்கிறது!. இரவில் கூட நீண்ட நேரம் தூக்கம் வருவதில்லை! கட்டிலில் படுத்துக்க  கொண்டும், சோபாவில் உட்கார்ந்து கொண்டும்  பழைய காலத்தை நினைத்துப் பார்க்கிறேன்.
இந்தக் காலம் மாதிரி அந்தக் காலத்தில்  போன், முக நூல் வாட்ஸ் அப்,  காமிரா, ஜெராக்ஸ் போன்ற வசதிகள் எல்லாம் இல்லாத காலத்தில்  நான் வாழ்ந்து விட்டு, எந்த அடையாளத்தைப் பார்த்து  பழையதை நினைவு படுத்த முடியும்?
 நான் வாழ்ந்த காலத்தில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் கூட கிடையாது. எங்கள் கிராமத்துக்கு பக்கத்தில் துலுக்க பாளையம் என்று ஒரு கிராமம் இருக்கிறது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு வசதியான கவுண்டர் தான், தன் தோட்டத்தில் முதன் முதலில் அந்தப் பகுதியில் மின் இணைப்பு வாங்கி பம்பு செட் வைத்தார். அவர் தோட்டத்தில் கிணற்றுக்கு பக்கத்தில் மாலை வந்தவுடன் 100 வாட்ஸ் குண்டு் பல்ப் போட்டு எரிய விடுவார்! வெளிச்சம் எங்களூருக்கு வரும்!
நாங்கள் சில நண்பர்களோடு அந்த கிணற்றடிக்குப் போய் அந்த ’பல்ப்’ க்கு பக்கத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் அந்த வெளிச்சத்தை வேடிக்கை பார்த்தது   முதலில் நினைவுக்கு வருகிறது!

இன்று சுதந்திர தினம்!
எனக்கு சுதந்திரம் வாங்கிய 1947 ஆண்டு ஆகஸ்ட் மாதம்  15 ம் தேதி மிக மங்கலாக நினைவுக்கு வருகிறது!
நான் அப்பொழுது எங்கள் கிராம பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறேன்.
எங்கள் பள்ளியில் ரத்தினசாமி எனபவரும், அவர் மனைவியும்  ஆசிரியர்களாக இருந்தார்கள்.  
காலையில் பள்ளிக்குப் போனவுடன் தேசிய கொடியை பாக்கெட்டில் பின்னூசியால் குத்தி எங்களை வரிசையாக நிற்க வைத்தார்கள். பிறகு பாலக்கரை ரோட்டில் ஊர்வலமாக கூட்டிக் கொண்டு போனார்கள்!
எங்கள் ஊருக்கு கடைசியில் சானார் பாளையம் என்ற ஒரு பகுதி இருக்கிறது. அங்கு ரோட்டின்  மேலேயே இரண்டு   மிக பெரிய சிலைகள்  பயங்கரமான தோற்றத்தோடு இருக்கும். அதன் கைகளில் இருக்கும் அருவாள், குத்தீட்டி, முகத்தில் இருக்கும் மீசை எல்லாம் பார்க்க பயங்கரமாக இருக்கும்!
முனியாண்டியோ, மாயாண்டியோ  என்று எதோ பெயர்   சொல்வார்கள்..   தனியாக அதன் பக்கத்தில் போக பயந்து விடுவேன்.  அங்கு நிறைய பானைகள் அடுக்கி வைத்திருப்பார்கள்!
“மகாத்மா காந்திக்கு ஜே! ஜவகர்லால் நேருவுக்கு ஜே! சுபாஷ் சந்திர போஷூக்கு ஜே!” என்று தொண்டை கிழிய  கோஷம் போட்டுக் கொண்டே  எங்களை அங்கு கொண்டு  போய் அந்த பானைகள் அடுக்கி வைத்திருந்த இடத்திற்கு முன்னால்  நிறுத்தினார்கள்!
அது எல்லாம்  கள் இறக்கும் பானைகள், சாராயம் காய்ச்சும் பானைகள் என்று சொன்னார்கள். அது எதற்கு என்று எல்லாம் எங்களுக்குத் தெரியாது!
“நம் தேச தலைவர்கள் யாருக்குமே மது பானம் பிடிக்காது! அதை குடித்தால் அறிவு கெட்டுப் போய்,  குடும்பங்கள் அழிந்து, நாடு கெட்டுப் போய் விடும்!  அதனால் நம் தலைவர்கள் எல்லோரும் நாம் சுதந்திரம் வாங்கியவுடன் முதலில் இதைத் தான் ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்! நீங்கள் முதலில் இந்த பானைகளை உடைத்து எறியுங்கள்!..” என்று ரத்தினசாமி வாத்தியார் சொன்னார்.
கல்லால் அடித்து உடைப்பதில் இருக்கும் சந்தோஷத்தை விட வேறு பெரிய சந்தோஷம் எல்லாம் எனக்கு அந்த வயசில் இல்லை!
எனக்கு ஏற்கனவே வேலியில் போகும் ஓணான்கள் கல்லால் விரட்டி விரட்டி அடித்த அனுபவம் உண்டு!
விடுவேனா?  ஐந்தாறு பானைகளை கல்லால் அடித்து நொறுக்கி விட்டேன்.  அன்று ரத்தினசாமி வாத்தியார் எனக்கு அதற்காகவே நிறைய ஆரஞ்சு மிட்டாய்  கொடுத்தார்!
அது எல்லாம் மங்கலாக நினைவுக்கு வந்தது!
இன்று நினைத்து பார்க்கும் பொழுது ஆசிரியர்கள் எல்லாம்  எதிர் காலத்தைப் பற்றி தீர்க்கமாக சிந்திக்கும் ஆற்றல் இல்லாதவர்களாகத் தான் தெரிகிறது!
தேசத் தலைவர்களுக்கு  எல்லாம் மது பானம் பிடிக்காது! அவர்கள் நாடு விடுதலை பெற்ற பின் முதல்  வேலையாக மது அரக்கனைத் தான்  ஒழிப்பார்கள் என்று சொன்னது  இன்று ஒரு தமாஷாகத் தெரிகிறது!
இன்று நாட்டை ஆள வரும் எல்லாத் தேசத் தலைவர்களும மது பானம் தயாரிப்பதற்கும்,  விற்பனைக்கும்  தானே முதலிடம் தருகிறார்கள்?

நான்  இப்பொழுது எல்லாம் என்னுடைய அடி மனசில் இருக்கும் பழைய காலத்து நினைவுகளில்  மூழ்கிப் போய் விடுகிறேன்! எவ்வளவு நினைத்துப் பார்த்தாலும் எல்லாம் மங்கலாகத் தான் நினைவுக்கு வருகிறது!

 ஆரம்ப படிப்பை எங்கள் கிராமப்பள்ளியில் முடித்து விட்டு, பெருந்துறை உயர்நிலைப்  பள்ளியில் 1950 ல் சேர்ந்தேன்.

அந்தக் காலத்தில் எங்கள் கிராமத்தில் ஐந்தாவது வகுப்பு வரை தான் பள்ளிக் கூடம் இருந்தது. மேற் படிப்பு பெருந்துறையில் தான்!

 ஆனந்த விகடன், கல்கி  பத்திரிகைகள் எங்கள் வீட்டிற்கு நான் பிறந்த காலம் முதல்  வந்து கொண்டிருந்தது!  என் தந்தை அந்த இரண்டு பத்திரிகைகளையும் விரும்பி படிப்பார். நான் குழந்தையாக இருந்த பொழுதே  படிக்காமல் கிழித்துப் பழகியது அந்தப் புத்தகங்களைத் தான்!

ஐந்தாவது வகுப்புக்கு போகும் முன்பே எழுத்துக் கூட்டிப் படிக்கத் தெரிந்தவுடனே ஆனந்த விகடன் கல்கி தான் விரும்பி படிப்பேன்.  பாடப் புத்தகங்களை வேண்டா வெறுப்பாகத் தான் தொடுவேன்!

எங்கள் கிராமத்திலிருந்து பெருந்துறை மூன்று மைல் தொலைவு. எங்கள் கிராமத்திலிருந்து பையன்களும் சில பெண்களும் சேர்ந்து  நூற்றுக் கணக்கில் தினசரி பெருந்துறைக்கு நடந்தே போய் தான் படிப்போம். 

அந்தக் காலத்தில் எல்லாம் சைக்கிள் வைத்துக் கொள்ள பெரிய பணக்காரர் வீட்டு பையன்களால் தான் முடியும்!

அதனால் சைக்கிள் கனவு எல்லாம் எனக்கு அந்தக் காலத்தில்  இருந்தது இல்லை. என்  நினைப்பு எல்லாம் கல்கி எப்பொழுது வரும். அதில் பொன்னியின் செல்வன் எப்பொழுது படிப்போம்…ஆனந்த விகடன் எப்பொழுது வரும்..அதில் தேவன், லக்ஷ்மி  போட்டி போட்டு எழுதும் தொடர்கதைகளை எப்பொழுது படிப்போம் என்பதைப் பற்றித்தான் இருக்கும்!

காலையில் என் தாயார்  எட்டு மணிக்கு எல்லாம் சுடச் சுட தோசை சுட்டுக் கொடுத்து மத்தியானம் சாப்பிட புளி சாதம் அல்லது தயிர் சாதம் பித்தளை தூக்குப் போசியில் நிறையப் போட்டு, தின்பண்டம் வாங்கிச் சாப்பிட  செலவுக்கு இரண்டணா கொடுத்து அனுப்புவார்கள்!

  மூன்று  மைல் நடைப் பயணம்.  நண்பர்களோடு அரட்டை அடித்துக் கொண்டே  போக ஜாலியாகத் தான் இருக்கும்! 

  எனக்குப் பிடித்தது  வாய் சுவைக்கு இனிப்பு. மன சுவைக்கு படைப்பு. 

பெருந்துறை போனதும்  உயர் நிலைப் பள்ளிக்குப் பக்கத்தில் கே.வி.என். கவுண்டர் கடை என்ற பெரிய மளிகைக் கடை இருக்கும், அங்கு போய் ஒரு அணாவுக்கு கற்கண்டு வாங்கி  புத்தகப்  பையில்  போட்டுக் கொள்வேன். ஒரு அணாவுக்கு திருப்பதி லட்டு சைசுக்கு கற்கண்டு கொடுப்பார்கள் அடுத்து நாற்சந்திக்கு பக்கத்தில் இரு பக்கத்திலும் புத்தகக் கடைகள் இருக்கும்! அங்கு  சின்னச் சின்ன சைசில் அரையணா ஒரு அணவுக்கு  லட்டு, ஜலேபி, டில்லி சலோ,  போன்ற தலைப்புகளில்  கதைப் புத்தகங்களும் கல்கண்டு, ஜில்ஜில், அணில், டமாரம்,  பாப்பா மலர், கண்ணன் போன்ற ஏராளமான வார இதழ்களும் கயிற்றில் வரிசையாக தொங்க விட்டிருப்பார்கள்! 

அந்தக் காலத்தில் சிறுவர்களுக்கு பிடித்த பொழுது போக்கு கதைப் புத்தகங்கள் படிப்பது தான்!

அதில் ஒன்றை வாங்கிக் கொண்டு தான் பள்ளிக் கூடம் போவேன். ஆசிரியரை ஏமாற்றி விட்டு அவைகளை  வகுப்பிலேயே படிப்பது உண்டு. 

 பாடப் புத்கங்களுக்கு செலவழித்த நேரத்தை விட கதைப் புத்தகங்களுக்கு செலவழித்த நேரம் தான் அதிகம்!

அந்தக் காலத்தில் டைபாய்டு ஜூரம் கொடிய காய்ச்சலாக கருதப் பட்டது. பலர் உயிர் இழந்திருக்கிறார்கள். அந்தக் காய்ச்சல்  எனக்கு பனிரண்டு வயசில் வந்து விட்டது.  பிழைப்பதே கஷ்டம் என்ற நிலை!

பெருந்துறையில் நம்பியார் என்ற பெரிய டாக்டர் அந்தக் காலத்தில் இருந்தார். அவர் மருத்துவ மனை பவானி ரோட்டில் இருந்தது… காய்ச்சல் முற்றிய நிலையில் என்னை அவரிடம் அழைத்துப் போனார்கள்

பிற்காலத்தில் அந்தக் கட்டிடம் அஞ்சல் நிலையமாக இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.  

அங்கு மாடியில் சில ரூம்கள்  இருந்தன. ஊசியைப் போட்டு உடனே அங்கு என்னைப் படுக்க வைத்து விட்டார்கள். காய்ச்சலில் உளறிக் கொண்டு இருந்ததாக அம்மா சொன்னார்கள்.

நாலு நாட்களில்  காய்ச்சல் இறங்கி விட்டது.  எனக்கு ஆரஞ்சு, ஆப்பிள் பழம் எல்லாம் அப்பா மருத்துவ மனை மாடியில் இருந்து கீழே போய் எதிரில் இருக்கும் கடையில்  வாங்கிக் கொண்டு வருவார்.

மறு நாள் முறை  அப்பா பழக்கடைக்குப் போகும் பொழுது “ அப்படியே புத்தகக் கடைக்குப் போய் அந்த வாரக் கல்கண்டு பத்திரிகை வாங்கிக் கொண்டு வாங்க!..”.என்றேன்.

“புத்தகம் எல்லாம் வீட்டிற்குப் போன பிறகு படிக்கலாம்” என்றார்.

“நீங்கள் வாங்கி வராவிட்டால் நான் காலையில் எழுந்து போய் வாங்கி வருவேன்”என்றேன்

அப்பா அடிக்க வந்தார்.  அம்மா திட்ட கோபத்தை அடக்கிக் கொண்டு,  கீழே இருந்த புத்தகக் கடைக்குப் போய் ஒரு கல்கண்டு பத்திரிகை  வாங்கி வந்தார்

சங்கர்லால் துப்பறிகிறார் போன்ற துப்பறியும் கதைகள், மர்ம கதைகள் தான்  தமிழ்வாணன் நிறைய எழுதியிருக்கிறார். விகடன் போன்ற பத்திரிகைகளில் மணிமொழி நீ என்னை மறந்நு விடு போன்ற கதைகளும் எழுதியிருக்கிறார் என்று தான் அவரைப் பற்றிய இன்றைய தகவல்கள் சொல்கின்றன.

 ஆனால் அந்தக் காலத்தில் கண்ணம்மா, மாயக்கள்ளன் போன்ற சிறுவர்களுக்குப் பிடித்த தொடர்கதைகளும் ஆரம்பத்தில் கல்கண்டில்  எழுதியிருக்கிறார். நான் அந்த மாதிரி ஒரு கதையைத் தான் காய்ச்சலில்  படுத்திருந்த பொழுது படித்ததாக நினைவுக்கு வருகிறது! 

இப்பொழுது அவர் பதிப்பக விலைப் பட்டியலிலேயே அவர் பெயரில் அந்த மாதிரி தலைப்புள்ள புத்தகங்கள் இல்லை! வேறு எங்கும் அந்தக் கதைகள் பற்றிய குறிப்புகளும் இல்லை! எனக்கு நன்றாக நினைவுக்கு வருகிறது. மர்ம கதைகள், துப்பறியும் கதைகள் எழுதுவதற்கு முன்பு கல்கண்டில் அவர் மாயக் கள்ளன் போன்ற கதைகள் எழுதியது! 

அரை டிராயர் டவுசர் சைடு பாக்கெட்டில் மறைத்து ஸ்கூலுக்கு எல்லாம் கொண்டு போய் வகுப்பில் படித்திருக்கிறேன்!

எப்படியோ குணமாகி அடுத்த வாரம் ஊர் போய் சேர்ந்தேன்.

தொடரும்.

ஏழ்மையிலும் இல்லாதார்க்கு உதவி!

 ஏழ்மையிலும் இல்லாதார்க்கு உதவி!

 தேநீர் விற்கும் இளைஞரின் கருணை உள்ளம்!

சென்னை சோழிங்கநல்லூர், காந்தி நகர், எரிக்கரை பகுதியில் வசித்து வரும் சூரிய கலா என்ற பெண் என்னிடம் உதவி கேட்டிருந்தார்.கணவர் பிரிந்து சென்று விட்டதாகவும் இரண்டு குழந்தைகளுடன் 1200 ரூபாய் வாடகை வீட்டில் இருக்கிறேன், வீட்டு வேலை செய்து வந்தேன், இப்போது வேலை இல்லை.

ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் பிழைத்துக் கொள்வேன். ஜாக்கெட் தைக்க நன்கு தெரியும் என்று தெரிவித்தார்.

ஏற்கனவே, இந்த பெண்மணியின் பெற்றோரை அறிவேன். சிந்தாதிரிப்பேட்டையில் வசித்தவர்கள்.மிக மிக ஏழ்மையான குடும்பம்.

ஒரு தையல் மெஷின் வாங்கி கொடுத்தால் கண்டிப்பாக இக் குடும்பத்திற்கு உதவியாக இருக்கும் என்று முடிவு செய்து என் நண்பர்கள் மற்றும் தொண்டு உள்ளங்கள் நிறைந்த வாட்ஸ்அப் குழுக்களுக்கு இந்த தகவலை பகிர்ந்தேன்.

நான் பகிர்ந்தவுடன் மதுரையில் வசிக்கும் ஒரு அன்பரிடம் இருந்து போன் வந்தது .நீங்கள் குறிப்பிட்ட குடும்பம் உதவுவதற்கான தகுதி படைத்தவர்களா ?என்று அந்த தொலைபேசியில் பேசியவர் கேட்டார்.

உடனே நான் 100% தகுதியான குடும்பம் என்றதும் ,தையல் மிஷின் எவ்வளவு என்ற விவரத்தை தெரிவிக்க சொன்னார்.

நான் சம்பந்தப்பட்ட கடையில் விசாரித்து பதினெட்டாயிரம் என்று தெரிவித்தேன். உடனடியாக, என்னுடைய வங்கி கணக்கு விவரங்களை அனுப்ப சொன்னார்.

நான் சொன்னேன், நீங்கள் அந்த தையல் மிஷினை விற்பனை செய்யும் கடைக்கே அனுப்பி விடுங்கள் என்று அந்த விவரத்தை கொடுத்தேன்.

அந்த கடைக்கு தொகையை அனுப்பியிருந்தார்.

நான் ஒரு குட்டி யானையை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, 45 நாட்களுக்கு தேவையான

என் கண்ணீருக்கு கவிதையின் வடிவம்.. வழிகிறது மழைநீர்..! இதழ் பட்டு தெரிக்கும் மழைநீர்.. ருசிபார்க்க துரத்தும் பட்டாம்பூச்சி..! நூற்கத்தெரிந்த மழை நனையத் துவங்கும் வண்ணக்குடை..! வெற்றுடலுடன் நனைந்து நகராமல் நிற்கிறான் சுவரொட்டியில் கதாநாயகன்..! எங்கே செல்லும் இந்தப்பாதை ஓலை டீக்கடையில் பாடல் மழையால் நிறைந்த சாலை..!   ஆர். ஜவஹர் பிரேம்குமார், பெரியகுளம்.)  

மளிகைப் பொருள்களுடன் அந்த தையல் மிஷினுக்கு உடனடியாக தேவைப்படும் நூல்கள், பட்டன்கள், கொக்கிகளையும் வாங்கிக் கொண்டு சோளிங்கநல்லூர் சென்றேன்.

இவ்வளவு விரைவான உதவியை அவர்கள் எதிர்பார்க்க இல்லை. உடனடியாக அந்த மிஷினில் அப்பெண்மணியை உட்காரச் சொல்லி தைக்கச் சொல்லிவிட்டு, மதுரையிலுள்ள அந்த நண்பருக்கு வீடியோ காலில் தொடர்பு கொண்டு காண்பிக்க முற்பட்டேன்.

வீடியோ காலில் அவரைப் பார்த்ததும் மிரண்டு போனேன். ஒரு நடுத்தர வயது கொண்ட அதிகாரியாக அல்லது தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்தேன்.

ஆனால் அந்தப் பையனுக்கு சுமார் 25 வயதுதான் இருக்கும். டீ கேனுடன் கூடிய சைக்கிளுடன் நின்றிருந்தான். தெருத்தெருவாக சென்று டீ விற்கும் இளைஞன்.

அவனுக்கு பின்னால் துளாவி பார்த்தேன். அவனுடைய எஜமானர் யாரும் இருக்கிறார்களா! என்று தேடினேன்.

உதவி செய்தது …யார்? என்றேன். நான் தான் என்றான். எனக்கு தூக்கி வாரிப்போட்டது அதன் பிறகுதான் அவனுடைய முழு விவரம் தெரிய வந்தது.

அவன் பெயர் தமிழரசன், சிறுவயதிலேயே பெற்றோரை இழந்தவன். வேலை தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு, பசியின் கொடுமையை அறிந்து மீண்டும் மதுரைக்குச் சென்று சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வருவதும், தினந்தோறும் தன் வருமானத்தில் 20, 30 ஏழை மக்களுக்கு உணவுவாங்கிக் கொடுத்து பசிப்பிணி ஆற்றி மகத்தான சேவை புரிந்து வருவதையும் அறிந்தேன்.

அவன் செயல்பாட்டை பாராட்டும் வகையில் சமீபகாலமாக நிறைய பேர் அவனுக்கு உதவிக்கரம் நீட்ட முன் வந்ததுள்ளதாகவும் அந்த உதவிகளையும் இப்படி திருப்பிவிட்டு ஏழை எளிய மக்களுக்கு மேலும் நன்மைகள் செய்து வருவதையும் அறிந்து மெய்சிலிர்த்துப் போனேன்.!

-வெங்கடேசன், உதவும் கைகள்(9840914739) ( புரசைவாக்கம்)

(முகநூல் பகிர்வு)

தோனி…! இந்தியாவின் தோணி…!

தோனி…! இந்தியாவின் தோணி…!

விஷ்வக்சேனன்

சிறந்த கேப்டன் என்றதும் எப்போதும் கங்குலிக்கும் தோனிக்குமான ஒரு போட்டியாக இந்திய சூழலில் விவாதம் நடக்கும். சிலர் அசார், கபில், கவாஸ்கர், பட்டோடி என்று தங்களது விருப்ப போட்டியாளருடன் வருவர். மேலும் சிலர் தங்கள் மேதாவித்தனத்தை காட்ட அஜித் வடேகர், டிராவிட், கும்ளே, பேடி என்று எதாவது ஒரு பெயரை போகிற போக்கில் அடித்துவிட்டு சொல்வார்கள்.

ஒரு கேப்டனை எப்படி மதிப்பிடலாம் என்ற கேள்விக்கு பல பதில்கள் உண்டு, ஆனால் அடிப்படையான ஒரு விஷயம் அவர் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எத்தனை புயல்களை பார்த்தாய் என்பது பொருட்டல்ல, கப்பலை கரை சேர்த்தாயா இல்லையா என்பதுதான் அடிப்படை விஷயம். அப்படி கரை சேர்க்கத்தான் கேப்டன். இரண்டாவது விஷயம், அவர் ஆடும் காலத்தில் அவரது கேப்டன்சி உலகளவில் எப்படி மதிக்கப்பட்டது, அப்போதிருந்த சிறந்த கேப்டன்கள் வரிசையில் இவர் எந்த வரிசையில் இருந்தார் என்ற மதிப்பீடு.

இந்தியாவில் பத்து டெஸ்ட் வெற்றிக்கு மேல் பெற்றவர்கள் மொத்தமே நாலு கேப்டன்கள்தான் – அசார், கங்குலி, தோனி, கோலி. கவாஸ்கர், பட்டோடி நாற்பதுக்கும் மேல் போட்டிகளில் விளையாடி வெறும் 9 வெற்றிகள், டிராவிட் 8 வெற்றிகள், மற்றவர்கள் இன்னும் மோசம். இதில் அசாரின் 14 டெஸ்ட் வெற்றிகள் எல்லாமே துணைக்கண்டத்தில் அதுவும் உள்ளூரில் பெரும்பகுதி. அவர் காலத்து இந்திய அணியை உள்ளூர் புலி என்றுதான் அழைப்பார்கள், வெளிநாடுகளில் அவ்வளவு மோசமாக விளையாடுவார்கள். ஒருநாள் போட்டிகளில் இதைவிட பலமான அணியாக இருந்தாலும் அதிலும் வெளியூர் ஆட்டங்களில் தகிடதத்தம்தான். சச்சின் தனியாக அணியை தூக்கி சென்றதெல்லாம் இவர் காலத்தில்தான். முக்கியமாக உலகக்கோப்பை போன்ற எந்த பெரிய கோப்பையையும் வென்றதில்லை. அதிகபட்சம் நாலு நாடுகள் கலந்து கொள்ளும் தொடரில் வெற்றிபெற்றிருக்கிறார்கள், ஆனால் அதிலும் சச்சின் பெரிய பங்களிப்பு உண்டு. அசார் ஆடும் காலத்தில் ஹன்சி கிரோனியே, மார்க் டெய்லர், ஸ்டீவ் வாவ், அர்ஜூன ரனதுங்க, வாசிம் அக்ரம் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டனாக அறியப்பட்டார்கள்.

கங்குலியின் சிறப்பாக சொல்லப்படுவது அவர் சோர்ந்துக்கிடந்த இந்திய அணியில் புதுரத்தம் பாய்ச்சி ஆக்ரோஷமாக விளையாடும் இயல்பை புகுத்தினார் என்பதும் வெளிநாடுகளில் ஜெயிக்கும் வித்தையை அணிக்கு முறையாக பயிற்றுவித்தார் என்பதும்தான். 90களில் ஆஸ்திரேலியர்களும், சௌத் ஆப்ரிக்கர்களும் ஈவிரக்கமற்ற ஆக்ரோஷத்துடன் கச்சிதமான வெல்லும் மனப்பான்மையுடன் கொண்டுவந்த தொழில்முறை கிரிக்கெட் ஆட்டத்திற்குமுன், மன உறுதியும் தொழில்முறை நேர்த்தியும் இல்லாத இந்தியா போன்ற மற்ற அணிகளின் ஆட்டம் போதவில்லை. அப்படியான ஒரு காலக்கட்டத்தில் கங்குலி தனது ஆக்ரோஷமான கேப்டன்சி மூலம் இந்திய அணியின் சாதுவான முகத்தை மாற்றினார், அதற்கு ஒத்துவரக்கூடிய தீவிர மன உறுதியும் வெல்லும் மனப்பான்மையும் உடைய யுவ்ராஜ், கைஃப், தோனி, சேவாக், ஹர்பஜன், ஜாகிர் என்று பெரிய இளைஞர் கூட்டத்தை தயார் செய்தார். அவர்களுடன் இந்திய அணியின் பேட்டிங் மூவேந்தர்களான சச்சின், கங்குலி, டிராவிட் இனைய, ஒரு வலுவான அணி அமைந்தது, இதோட டெஸ்டில் லட்சுமணன் போன்ற வீரர்கள் கிடைக்க, திரும்பி வந்த கும்ப்ளேவுடன் சேர்ந்து பலமான அணியாக வெளிநாட்டிலும் ஜெயிக்க தொடங்கினர். வழக்கமாக வெளிநாடுகளில் எளிதாக முதல் டெஸ்ட் தோற்கும் கெட்ட வழக்கத்தினை அகற்றி, எப்படியாவது முதல் டெஸ்ட்டை தோற்காமல் ட்ரா செய்தாவது தப்பிவிடுவார்கள், பின் வாய்ப்பிருந்தால் அடுத்த போட்டியில் வெற்றி. அதன்மூலம் இந்திய அணியின் மோசமான கெட்டகனவாக இருந்த வெளிநாட்டு போட்டிகளை கடும்சவாலான சுவாரசியமான போட்டிகளாக மாற்றினார். இவ்வளவு செய்தும் அவர் இரண்டாம் இடத்துடன் திருப்தி பட்டுக்கொண்டார் என்பதுதான் கசப்பான உண்மை.

கங்குலியின் தலையிலான இந்திய அணி டெஸ்ட்டில் தொட்ட அதிகப்படியான உயரம் டெஸ்ட் ரேங்கில் இரண்டாம் இடம். அந்த காலக்கட்டத்தில் போட்டி என்பதே இரண்டாம் இடத்துக்காகத்தான் நடந்தது, அது இந்தியாவா, நியூசிலாந்தா, சௌத் ஆப்ரிக்காவா, இலங்கையா என்று. முதலிடத்தை எல்லோரும் மானசீகமாக ஆஸ்திரேலியாவுக்கு விட்டு கொடுத்துவிட்டார்கள், அவர்களை மீறி யாரும் சிந்திக்கவேயில்லை. ஒண்டே மேட்ச்களிலும் அவர் 2003ல் இரண்டாம் இடத்துடனே திருப்திபட்டுக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. பொதுவாகவே கங்குலிக்கும் ஃபைனலுக்கும் ஏழாம் பொருத்தம் என்ற நிலையே இருந்தது, அவரால் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் கூட வெற்றி பெற முடியவில்லை, எல்லாவற்றிலும் ஃபைனலில் வந்து தோற்றுவிடுவார். நாட்வெஸ்ட் தொடர் போன்றவை விதிவிலக்குகள். ஒருகட்டத்தில் இந்திய அணி ஒன்பது ஃபைனல்களில் தொடர்ச்சியாக தோற்றது. முத்தரப்பு போட்டிகளை விடுங்கள், இருதரப்பு போட்டிகளில்கூட கடைசி போட்டியில் ஜெயித்தால் தொடர் நம் கையில் கிடைக்கும் என்ற சூழல் இருந்தால் அந்த போட்டியைகூட ஃபைனல் என்ற பயத்தில் தோற்றுவிடுவார்கள். அப்படித்தான் 2002/03ல் இந்தியா வந்த இங்கிலாந்து அணியை வெல்ல கடைசி மேட்சை வென்றாக வேண்டிய கட்டத்தில் அந்த மேட்சை பரிதாபமாக தோற்றது அணி. இந்த மேட்சில்தான் ஃப்ளிண்டாஃப் சட்டையை கழற்றி சுற்றியது, அதற்கு பழிவாங்கதான் பின்னர் கங்குலி லார்ட்சில் கழட்டி சுற்றினார். கங்குலியின் காலத்தில் ஸ்டீவ் வாவ், பாண்டிங், ஃப்ளெமிங், கிரெயம் ஸ்மித் போன்றவர்கள் இவரைவிட சிறந்த கேப்டன்களாக அறியப்பட்டனர். இன்சமாம், நாசர் ஹுசைன் போன்றவர்கள் சமமான கேப்டன்களாக கருதப்பட்டனர். ஆடும் காலத்தில் இரண்டாம் இடத்தில் திருப்தியடைந்த ஒரு கேப்டன், சிறந்த கேப்டன்கள் வரிசையிலும் இரண்டாம் இடத்துடன்தான் திருப்தி அடையவேண்டும்.

தோனி தனது கன்னி தொடரில் ஒரு உலக கோப்பையை வெல்லுவதுடன் தனது கேப்டன் ஆட்டத்தை ஆரம்பித்தார். கிரிக்கெட் வரலாற்றில் இதுவரையில் யாரும் முதல் தொடரில் ஒரு உலகக் கோப்பையையோ, சாம்பியன்ஸ் ட்ராபியையோ வென்ற சரித்திரம் இருந்ததில்லை. ஒரு டெஸ்ட் கேப்டனாக தோனி செய்த முக்கியமான செயல் ஆஸ்திரேலிய அணியில் ஒரு தசாப்த ஆதிக்கத்தை முடித்து வைத்தது. 2008, 2010, 2012 என ஆஸ்திரேலியாவை டெஸ்ட்டில் தோற்கடித்து அவர்களது கொடியை இறக்கிவைத்ததில் இவருக்கும் முக்கிய பங்குண்டு. அதன்பின் சிலவருடங்கள் உலகின் முதல் நிலை டெஸ்ட் அணியாக இந்தியா தொடர்ந்தது. அதே போல் ஒரு நாள் போட்டிகளிலும் முதலிடம், முத்தாய்ப்பாக 2011 உலகக்கோப்பை. 1983 பின் இந்திய அணிக்கு கோப்பை திரும்ப வந்தது, ஆனால் முதல் முறை போல கறுப்பு குதிரையாக தொடரை தொடங்கி ஆச்சரியபடுத்தி வெல்லவில்லை. 2011 உலக கோப்பை தொடங்கும் போதே இந்திய அணி வெல்லக்கூடிய அணியாக மதிப்பிடப்பட்டு, அதற்கேற்றார்போல ஒவ்வொரு கட்டத்திலும் தனது ஆதிக்கத்தை காட்டி கம்பீரமாக வென்ற தொடர். அதன்பின் ஒரு சரிவு. ட்ராவிட், லட்சுமண், சச்சின், ஜாகிர், ஹர்பஜன், சேவாக், கம்பீர் என்று பழைய ஆட்கள் கொஞ்சம் கொஞ்சமாக உதிரத்தொடங்க அணி முதலிடத்தை விட்டு இறங்குகிறது. அடுத்த அணியை தவான், ரோகித், விராட், அஷ்வின், ஜடேஜா, ரெய்னா, முரளி விஜய், புஜாரா, இஷாந்த், ரகானே போன்றவர்களை கொண்டு கட்டியெழுப்பி சாம்பியன்ஸ் ட்ராபி போன்ற பெரிய தொடரை வென்றார். தோனி எப்போதும் இரண்டாம் இடத்துடன் திருப்தி கொண்டதில்லை, கிடைத்த முதலிடத்தையும் தலைக்கு ஏற்றி கொண்டு ஆடியதில்லை. ஒரு நல்ல கனவானாக இந்திய அணிக்கும், கிரிக்கெட் விளையாட்டிற்கும் மதிப்பு சேர்த்திருக்கிறார். தோனியின் காலத்தில் எப்போதும் உலகின் சிறந்த கேப்டனாகவே மதிப்பிடப்பட்டு வந்திருக்கிறார். அவரது தலைமை பண்பு, வழிநடத்தும் திறன், வித்யாசமான ஆட்ட சிந்தனை, களமுடிவெடுக்கும் திறன், முன்னின்று போராடும் குணம் என அவரை பற்றி உலகெங்கிலும் பல அறிஞர்கள் காவியம் பாடாத குறையாக எழுதியிருக்கின்றனர். தோனி ஆடிய காலக்கட்டத்தில் ஆரம்பக்காலத்தில் பாண்டிங் இருந்தார், அதன் பின் கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ், மைக்கேல் கிளார்க் போன்றோர் இருந்தாலும் தோனி பல வருடங்களாக சிறந்த கேப்டனாக கருதப்பட்டார். கிரெயம் ஸ்மித், ஸ்ட்ராஸ் போன்றோர் டெஸ்ட்களில் திறம்பட வழி நடத்தியிருந்தாலும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் எந்த பெரிய கோப்பையையும் வெல்லவில்லை என்பது ஒரு பெரிய சறுக்கல். உலகின் பல நாட்டு அணிகளாலும், அதன் கேப்டன்களாலும் தோனி சிறந்த கேப்டனாக மதிக்கப்பட்டது, புகழப்பட்டது எல்லாம் கண்கூடு. கிரிக்கெட் அறிஞர்கள் தோனியை ஸ்டீவ் வாவ், பாண்டிங், கிளைவ லாய்ட் வரிசையில் வைத்து பார்க்கிறார்கள்.

விராட் கோலி இப்போதே தோனியை விடவும் அதிக டெஸ்ட் வெற்றிகளை பெற்றுவிட்டார். அணியையும் அசைக்க முடியா முதலிடத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டார். ஆனால் ஒரு நாள், மற்றும் டி20 போட்டிகள் கைகூடவில்லை. கங்குலி போல சிறப்பாக விளையாடி தொடரின் ஃபைனலுக்கு சென்ற பின் கோப்பையை கோட்டைவிடுவதை வழக்கமாக்கி கொண்டுவிட்டனர். கோலியின் அணி தோனி தயார் செய்த அணியின் தொடர்ச்சிதான், ஆனாலும் அதை கறாரான ஒரு ஜெயிக்கும் எந்திரமாக மாற்றிய பெருமை கோலிக்குதான் செல்லும். அவருக்கு இன்னும் காலம் இருக்கிறது, அதோட சில கோப்பைக்களையும் வெல்லட்டும், ஆடி முடிக்கட்டும், பின் இந்த சிறந்த கேப்டன் போட்டிக்கு இழுக்கலாம்.

கேப்டன்சியில் இந்திய அளவில் தோனியின் உயரத்தை யாரும் தொடவில்லை என்பதுதான் யதார்த்தம். உலக அளவிலும் கேப்டன்சியை பொருத்தவரையில் வாழும் போதே வரலாறானவர் தோனி. வரலாற்றின் சிறந்த கேப்டன்களின் அரியணை வரிசையில் தனது மாறாத புன்சிரிப்புடன் கேப்டன் கூல் என்ற பட்டத்துடன் தோனி அமர்ந்திருப்பார்.