தேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழ்

தேன்சிட்டு நவம்பர் மாத மின்னிதழை வாசிக்க இங்கே சொடுக்கவும்

https://online.fliphtml5.com/gtanu/wdag/#p=1

தேன்சிட்டு தீபாவளி மலர்

https://online.fliphtml5.com/gtanu/yizq/#p=1 ப்ளிப் புக் வடிவில் வாசிக்க இந்த லிங்கை சொடுக்கவும்.

முள்ளை முள்ளால்!

சீர்காழி. வி. வெங்கட். ஒரு பக்க கதை

நித்யா காய்கறி கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது எதிரே கவிதா தென்பட்டாள் வழக்கமான புன்முறுவலுடன்..

”பார்த்து ரொம்ப நாளாச்சி நல்லாயிருக்கியா..”

“உன்கிட்டே ஒரு விஷயம் சொல்லனும்னு இருந்தேன் அதை எப்படி சொல்றதுதான்னு தெரியலே, என்றாள் தயங்கியபடி..”

“பரவாயில்லே சொல்லு..”

” உன்னோட கணவர் ராகவன் நான் வர்ற வழியில இருக்கற ‘டாஸ்மாக்’ கடையில நின்னு மதுபாட்டில் வாங்கி அவரோட டூ வீலர் சைடு பாக்ஸ்ல வெச்சார் எனக்கு மனசு பக்குன்னுது குடிப்பழக்கம் இல்லாத மனுஷனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலையின்னு நித்யா…”

ராகவன் சோபாவில் அமர்ந்து செய்திச்சேனலை பார்த்துக் கொண்டிருந்தார் அமைதியாக..

”எதையும் வெளிக்காட்டாமல் கிச்சனில் இருக்கும் ஃபிரிட்ஜில் வாங்கி வந்த காய்கறிகளை அடுக்கினாள்.

சில நிமிடங்களில் கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மகன் விஷ்வா “அம்மா நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வர்றேன்..வர்றதுக்கு நைட் கொஞ்சம் லேட்டாகும்..” என்றான்.

இதைக்கேட்ட ராகவன் “ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுப்பா..” இதோ வந்துடறேன் எனக்கூறி விட்டு வாசலில் நின்றிருந்த டூவீலர் பாக்ஸை திறந்து ஒரு குவார்ட்டர்,சிகரெட் பாக்கெட்டை எடுத்து வந்து அவனிடம் நீட்டினார் அதிர்ந்தாள் மனைவி நித்யா.

“என்ன நித்யா பார்க்கறே,உம்பையன் அவனோட ஃபிரெண்ட் வீட்டுக்கு போறேன்னு சொல்லிட்டு பாருக்கு போயி தினமும் குடிக்கறது எனக்கு தெரியும்.. அதான் அதிகமா குடிச்சிட்டு டூவீலர்ல வந்து போலீஸ் இவனை பிடிச்சி டிரங்க் அன் டிரைவ் கேஸ்ல ஜெயில்ல போட்டு பேப்பர்ல நியூஸ் வந்து மானம்,மரியாதை காத்துல பறக்கறத நான் விரும்பலே, வீட்டு மொட்டைமாடியில போயி சாப்பிட்டுட்டு அமைதியா படுத்துட்டா ஆக்ஸிடெண்ட்,கேஸ்னு எந்த பிரச்சனையும் இருக்காது பாரு..அதான் என்னோட கெளரவத்தை விட்டு நானே கடையில போயி வாங்கிட்டு வந்தேன்” என்றார் உடைந்த குரலில் ராகவன்.

அவன் தலையை வாஞ்சையாக தடவி ஆறுதல் கூறிய ராகவனை தெய்வமாக பார்த்தாள் மனைவி நித்யா