சு. கணேஷ் குமார் கவிதைகள்!

சு. கணேஷ் குமார் கவிதைகள்!

முகம் நடுங்கும் காதலி

சுண்டல் மடித்த காகிதத்தில்

‘ஆணவக் கொலை’ குறித்த செய்தி!

கதவுக்குப் பின்னே

கூடு கட்டுகிறது குளவி

நெருக்கத்தில் போகி!

  •  

பனிக்காலம்

கோமுகியில் துளிர்த்தெழுந்த ஆலவிதை

வெந்நீர் அபிசேகத்தில் கடவுள்!

  •  

நெய் காய்ச்சிய பாத்திரம்

ஆழ்ந்து நுகர்கிறாள்

வேலைக்காரச் சிறுமி!

 கட்சி துவக்குகிறார் நடிகர்

அடகுக்கு தயாராகிறது

ரசிகன் வீட்டுத் தாலி!

பனித்துளிகள் ருசிக்கின்றன

அதிகாலை நீ போட்டுவைத்த

மார்கழிக் கோலம்

குடிசை வீட்டில் நசுங்கிய பாத்திரங்கள்

உணர்த்திக்கொண்டிருக்கின்றன

குடிகாரன் இருப்பை!

பாரதியின் சிலைமீது

எச்சமிடும் பறவைகள்

‘காக்கை குருவி எங்கள் சாதி!’

குறும்பா கூடம்!

உறங்கா இரவுகளில்
ஜன்னலுக்கு வெளியே நிலா
காவலெனவும், காதலெனவும்…

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

எந்த மேகத்திலிருந்து
கசியுமோ
முதல் துளி…

– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்

நீரில் மிதக்கும் பூக்கள்

நதியில் கரைகிறது

இறப்பின் துயரம்

 ச.கோபிநாத் சேலம்

அமைதியான நதியில்

மெல்ல நகரும் படகு

வேடிக்கை பார்க்கிறது குருவி!

ச.கோபிநாத் சேலம்

அடித்து அடித்து எழுதியும்
கண்ணீர் சிந்திடவில்லை
காகிதம்!

அ.வேளாங்கண்ணி

தூர விலகி கலைத்துப் போட்டது
ஜன்னல் வரைந்த ஓவியத்தை
சூரியன்!

அ.வேளாங்கண்ணி

கடனெடுத்து கட்டிய வீடு,
புதிதாக குடிவந்திருக்கிறார்கள்;
நடுத்தெருவுக்கு!

அன்ஸார் எம்.எல்.எம்

நல்ல மழை,
நிரம்பி வழிகிறது குளம்;
தவளைகள் சத்தத்தால்!

கூழாங்கல்லின் அடியில் 
படபடக்கிறது
சுதந்திர தின கவிதை…

ஐ.தர்மசிங்

விவசாயியின் வறுமை
அரிசியாக மாறுகிறது
விதை நெற்கள்…

ஐ.தர்மசிங்

மவுனப்பொழுது!
முள்ளாய் குத்துகிறது!
கடிகாரத்தின் ஓசை!

தளிர் சுரேஷ்.

உருப்போட்டு முடித்ததும்
     சில்லறை விழுகிறது!
   நடைபாதை ஓவியன்!

தளிர் சுரேஷ்.

வெண்மேகம்
காளான் குடையானது
இலையுதிர்ந்த மரத்தின்மேல்

சா.கா.பாரதி ராஜா, 

தூண்டிலைக் கடித்துக் கொண்டே
கரையேறாமல் நீந்துகிறது
வானில் பட்டம்

சா.கா.பாரதி ராஜா, 

ஹைக்கூ சிறப்பிதழ்

தாயின் புதைகுழி
தொட்டுத் தொட்டுப் பார்க்கிறேன்
பூத்திருக்கும் செடி…

தமிழ் தம்பி

எறும்பு தவறி விழுந்ததும் /
ஆகாயம் கலங்குகிறது /
கிணற்றுக்குள் தவளை

எம்.ஜெகன் ஆண்டனி.

சிதிலமடைந்த சிலை/
பாதுகாப்பாக இருக்கிறது/
பறவையின் குடும்பம்

-சாண்டில்யன் விவேகானந்தன்

குறும்பா கூடம்!

தரையில் காலூன்றும்/
நம்பிக்கையில் தொங்குகின்றன/
ஆலம் விழுதுகள்

-சாண்டில்யன் விவேகானந்தன்

சுவரேறிய எறும்பு
கிணற்று நீரில் தத்தளிக்கிறது
ஒற்றை இலை.

கவி நிலா மோகன்.

குடமுழுக்கு நடக்கின்ற

கோயிலுக்கு அருகில்

கூரையில்லாப் பள்ளிக்கூடம்

ஸ்ரீநிவாஸ் பிரபு கவிதைகள்

தேநீர் குவளையில்
பூக்களைச் சேமித்தேன்
பட்டாம்பூச்சிகளின் வருகை
….

  • திடீர் மழை

ஒதுங்கி நிற்க

குடைபிடிக்கிறது கோயில் மணி

  • ஈ பறந்து போகிறது

தேனீர் கோப்பை விளிம்பில்

காலடிக் கோடு

  • கடந்து போன பிச்சைக்காரன்

கூடவே வருகிறான்

முகத்தில் பசி வரிகள்

  • தோன்றி மறையும் நேரத்துள்

பால்யம் கூட்டிச் சென்று திருப்புகிறது

                வல்லமை வாய்ந்த வானவில்

தொடர்வண்டியில்

எனை ஏற்றிவிட்டு

எதிர்காற்றை கிழித்தபடி

தொடர்ந்து ஓடிவரும்

உன் காலடித் தடங்கள்

சொல்லாமல் சொல்லிப்போகிறது

என் மீதான உன் ப்ரியங்களை!

                    – தனுஜா ஜெயராமன்.

வெள்ளம் வடிந்த
ஆற்றின் படித்துறையில்
பறவைகளில் கால்தடங்கள்!

-ஹைக்கூ உமா

ஏரியில் மீன்பிடிக்க
மணம் வீசுகிறது
கரையில் பூத்த தாழம்பூ.

Ji. அன்பழகன்.

பூ விழுந்ததால்
தலை விழுந்தது
ரவுடி சுண்டிய நாணயம்
புது வண்டி ரவீந்திரன்

இங்குமங்குமாய் ஒரு எறும்பு
பிடிபடாமல் ஆடிக் கொண்டிருக்கிறது
இலையின் நிழல்

– கி.கவியரசன்

பயமுறுத்தும்
சோளக்கொல்லை பொம்மை
வட்டமடிக்கும் பட்டாம்பூச்சி.!ஜவஹர்.ப்ரேம்குமார். பெரியகுளம்

கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி

கொண்டாடப்படவேண்டிய ஹைக்கூ கவிஞர் ஜென்ஸி

********************************************************

பெயர் : ஜென்ஸி

வசிப்பது : சென்னை

சொந்த. ஊர் : திருச்சி மாவட்டத்தில் குளித்தலை.

கவிதைகள் வெளியான. நூல்கள் : நான் நீ இந்த. உலகம்

பனி விழும் மலர் வனம்.

கால நதியெங்கும் கவிதை வாசம்.

தேரோடும் வீதி.

என்ன. சொல்லப் போகிறாய்..?

மற்றும் முண்ணனி தினசரி. மாத. வார. இதழ்கள்.

எழுதி வெளியிட்டுள்ள. நூல்கள் : சிறுகதைத் தொகுப்பு–1

கவிதைத் தொகுப்பு–2

ஹைக்கூ தொகுப்பு–1.

பெற்றுள்ள. பட்டங்கள் :

நேயச் சுடரொளி

கவிச்சிகரம்.

இலக்கியத் தென்றல்.

முகவரி : ஜென்ஸி

C/0 கே. ராஜேஸ்தமிழ்வாணி.

9–S 2 ஸ்ரீ லட்சுமி ஹோம்ஸ்

பிரியாநகர் 3 ஆம் பகுதி

ஆறாவது தெரு.

ஊரப்பாக்கம்–603210

சென்னை.

கைபேசி ;8838600138

மின்னஞ்சல் : Selvarasujensi @, gmail.com.

நாத்திகர் வாங்கிய.

நாட்காட்டியிலும் இருக்கிறது

இராகு காலம்

.

மரத்தை வரைகிறது.

ஹைக்கூ சிறப்பிதழ்.

தன் எச்சத்தால்

ஒரு பறவை.

மணல் வீடு கட்டி

விளையாடுகிறார்கள்

கடற்கரை காதலர்கள்

மலை உச்சியிலிருந்து

மெல்ல. நழுவுகிறது

மேகத்தின் நிழல்

இரவு நேரத்தின்

மௌன விசும்பல்

முதிர்கன்னி

தத்துவப் புத்தகம்

படித்துப் பார்க்கிறார்

விலையை

வேடனின் குறிக்குத்

தொகுப்பு: கவிஞர். கா.. கல்யாண சுந்தரம்.

தப்பிப் பறந்தது

குயில் பாட்டு

வெட்ட. வெளியில்

நடந்து முடிந்தது

மகரந்த. வேட்டை

             யார் கண் பட்டதோ..

             விற்பனை மந்தம்

            பூசணிக்காய்

           குவளை நீரில்

        தெளிவாய் தெரிகிறது

பாத்திரத்தின் அழுக்கு

என்னைப் போல் ஒருவன்

எட்டிப் பார்க்கிறான்

நீர் நிறைந்த. கிணறு

…….ஜென்ஸி

கவிதைக் காதலி!

கவிதைக் காதலி! 

   காதல் கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்.

                                நிறைவுப் பகுதி.

அன்பிற்குரிய தேன்சிட்டு ஆசிரியர் நத்தம் எஸ் சுரேஷ்பாபு இளவலுக்கும் எழுத்தாளர்கள் கவிஞர்கள் வாசக மற்றும் வாசகியருக்கும் என் வணக்கமும் நன்றியும்!

     இந்த ஜூலை 2020 தேன்சிட்டு இதழுடன் நான் எழுதி வந்த காதல் கவிதைத் தொடரான ‘கவிதைக் காதலி’ நிறைவு பெறுகிறது! இந்தத் தொடரை ஒரு வருடம் நான் எழுதிய பெருமையும் மகிழ்ச்சியும் எழுத்தாளரும் தேன்சிட்டு ஆசிரியருமான நத்தம் சுரேஷ்பாபு அவர்களையே சாரும்! காரணம் இந்தத் தொடருக்குக் ‘கவிதைக் காதலி’ என்று அவரே தலைப்பிட்டு எனக்கு எழுதும் வாய்ப்பை வழங்கினார்

     தலைப்பைப் படித்த பிறகுதான் எனக்கு ஒரு ‘பெண்’ தன் உணர்வுகளைக் கொட்டிக் ‘காதல் கவிதைகள்’ எழுதினால் எப்படியிருக்கும்?! என்ற ஆர்வமும் எண்ணமும் தோன்றியது! அதன் பிறகு இப்பொழுதுதான் எழுத ஆரம்பித்தது போல் இருந்தாலும் ஒரு வருடம் ஓடி விட்டது மிக மிக இனிமையான அனுபவம்!

     2019ம் வருடம் ஆகஸ்ட் மாதம் என் பிறந்த நாளுக்குப் பரிசாக வழங்கிய இந்தக் ‘காதல் தொடர்’ என் எழுத்துத் திறமைக்குக் கிடைத்த பேரன்பு!

     மீண்டுமொரு தொடரில் சந்திப்போம் என்று சொல்லி மகிழ்வான நன்றியுடன் உங்கள் அனைவரிடமிருந்தும் விடை பெறுகிறேன்!

என்றென்றும்ப்ரியங்களுடன்இனியவன்

முத்து ஆனந்த்    26 02 2020

மயக்கவியல் நிபுணன்!

 உன் ஒரு முத்தம்

என் ஆயிரம் முத்தங்களுக்குக்கூட

ஈடாகாது அன்பே

என்றுமெய் சிலிர்க்கிறாயே!

உன் கவிதைகளைப்

படித்துப் படித்துதானே

காதலாகிக் கசிந்துருகி

நீபடிக்க வேண்டுமென்று

நானேகவிதையாக மாறினேன்!

நீஇல்லையென்றால்

எனக்குக் காதல் ஏதடா?!

உனக்குத் தெரியாது

உன் அன்பின் அளவு

எனக்குத் தெரியும்!

ஓரிதயமல்ல

இன்னும் எத்தனை இதயங்கள் இருந்தாலும்

அத்தனையிலும்

நீஎன்னைத்தான்

அமர வைத்திருப்பாய்

ஆட்சி புரியவும்

அனுமதித்திருப்பாய்!

நினைவுகளில் மட்டுமல்ல

கனவுகளிலும் கற்பனைகளிலும்கூட

நீ மட்டும் தான்            

வருகை புரிகிறாயடா!

முழுவதுமாய்

நீ என்னை ஆட்கொண்ட பிறகுதான்

*காதல்

எத்தனை பேரழகென்று

என் உள்ளத்திலும் (கூட) உணர்ந்தேன்!

என்னைக் கண்ணாடியில் பார்த்தால்

நீதான் தெரிகிறாய்!

அப்பொழுதுதான்

ஒவ்வொரு நொடியும்

எனக்குப் புரிந்தது

நீ ஒரு மயக்கவியல் நிபுணன் என்று.

#####################################################

இனிய உயிர்க்காதல் அன்பே!

உண்மையில்

நீமிகவும் வியப்பான

ஒரு கவிஞனதான் அன்பே!

என் மௌனத்தைக்கூடக் கவிதைகளாக்க

நீவெகு அழகாகத்

தெரிந்து வைத்திருக்கிறாய்!

வீரியமான ஒரு கோபத்தைக்கூட

ஒரு முத்தத்தால்

மறைய வைக்க முடியும்

என்பதைநான்

உன்னிடமிருந்துதான்

கற்றுக் கொண்டேனடா!

நீ என்னை

உன் மனசுக்குள்

வைத்திருந்தும்கூட

உன்னை

நினைத்த போதெல்லாம் வந்து

தொட்டு விட்டுப் போகும்

அந்தக் காற்றின் மீது

பொறாமைப்படுகிறேன்!

உன் மீது எனக்கு

எவ்வளவு நேசமென்று

என்னைவிட நீதான்

அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறாய்!

இது ஒன்று போதாதா?!

காலம் முழுவதும் உன் மீது

நான் *காதல் கொள்ள!

நீ வழங்கும்

அன்பும் ஆதரவும்

உரிமையும் சுதந்திரமுமே

போதுமடா

நான் பெண் என்று

பெருமை கொள்ள!

நான்நினைத்தபோது மட்டுமல்லாமல்

நினைக்காத போதும்

அன்பை வாரி வழங்கும்

நீ  என்

*காதல் கணவன் மட்டுமல்ல

நீதான்எனக்குத் தாயுமானவன்

தந்தையுமானவனடா!

****************************************************************

ஆசை!

நான்

உனக்கு

ஆயிரம் முத்தங்கள் கொடுத்தாலும்

உன் ஒரு முத்தத்தில்தான்

என் *காதல் வாழ்கிறதடா!

ஆசையில் ஆண்கள்தான்

காதலியை வர்ணிக்க வேண்டுமா என்ன?!

என்னையே உனக்கு

அர்ப்பணிக்கச் செய்த

என் கவிதைக் காதலனடா நீ!!!!

நான் உன்னைப் பற்றிப்

பேசாமலும் புகழாமலும் இருந்தாலும்

*காதல் என்  நினைவுகளுக்கு மட்டுமல்ல

என் கனவுகளுக்குமல்லவா

விடுமுறை விட்டுவிடும்!?

முழுவதுமாய் நீ

அன்பை வாரி வழங்கும்போதே

நான் கண்டுபிடித்துவிட்டேன்!

நீ

இன்பத்துப்பாலைப் படித்திருக்கிறாய் என்று!

யாருமற்ற இடத்தில்

நாம் இருவரும்

தனித்திருக்கையில்கூட

ரசித்து ருசித்து

நீ காதலைச் சொல்லித் தருவது

நான் பிறந்த பலனையே

அடைந்து விட்டது போலிருக்கிறது!

*அன்பே

எனக்கு ஒரே ஓர் ஆசைதானடா

இப்பிறவியில் கண்ட உன்னை

எப்பிறவியிலும் நான்

காதலித்துக் கொண்டேயிருக்க வேண்டும்

என்பதுதான்!           (நிறைவு)

கவிதைச்சாரல்!

மவுனப்பொழுது!
முள்ளாய் குத்துகிறது!
கடிகாரத்தின் ஓசை! தளிர் சுரேஷ்.

கவிதைச்சாரல்!

இடைவேளை நேரத்தில்

 எல்லோரும் தின்கிறார்கள்

 எனக்கும் மிட்டாய் கொடுத்தனுப்பு

பள்ளிக்கு செல்லும்போதெல்லாம்

 அடம்பிடிப்பான் மகன்

மனசுகேட்காமல் வாங்கிக்

கொடுத்தனுப்பியபிறகு மனசே சரியில்லை

என்மகன் மிட்டாய் தின்கையில்

 பக்கத்துச்சிறுவர்களிடம்

உருப்போட்டு முடித்ததும்
     சில்லறை விழுகிறது!
   நடைபாதை ஓவியன்! தளிர் சுரேஷ்.

 ஏதேனும் இருக்குமோ இருக்காதோ -பழ. புகழேந்தி

என்
கண்ணில் கொட்டுவது
கண்ணீரல்ல
நீ பேசிய
ஆசை வார்த்தைகள்

என்னை மன்னித்துவிடு!
உலகத்தில்
நான்தான்
கடைசிப் பெண் என்று
ஒன்றுமில்லை

வா, வேண்டுமானால்
காதல்
செத்துப் போகட்டும்
நாம் வாழலாம்

முனைவர் ம.ரமேஷ். வேலூர்.

அதே இசை
🎵 🎵 🎵 🎵

குழல் ஒன்றின் இசை
கூவு குயிலின் இனிமைத்தேடலின்பாற்பட்டு
குழைந்து இழைந்து
செவிப்புலன்களில்
குவிந்து விடுகிறது…

தினம் தினம் கேட்கும்
அவ்விசைக் கர்த்தாவைக்
கண்டதுமில்லை..
காணத் துடித்ததும் இல்லை..

இசையே வசமாக்கி
வசியம் செய்து கொண்டிருந்தது…

தனித்திருந்த ஒரு பொழுதில்
தட்டப்பட்ட கதவுக்கு அப்பால்
யாரென்று கேட்கிறேன்..

பசிக்கிறது என்கிறது ஒரு குரல்..

பழங்களையே சேமித்துக் கொண்டிருந்த நான்
பழத்தை நீட்டலாமென்று
தாழ் திறந்தேன்…

பயங்கரமில்லாத அருவருக்கத்தக்க
அழுக்குத் தேங்கிய
ஆளென்றே சொல்ல முடியாத ஒன்றைத்தான்
அங்கே கண்டேன்…

குமட்டலில் ஓங்காளித்தாலும்
ஒரு பழம் நீட்டினேன்..

பழமல்ல என்பசி
பச்சை மாமிசம் என்றது அது..

அது என்னிடம் கிடைக்காதே என்றேன்..

உன்னையே தின்கிறேன் என்றது..

உள்ளே நுழைய முற்பட்டதை
உதைத்துச் சாத்திய கதவினூடே
அதனின்று ஏதோ அவிழ்ந்து விழுந்தது..

அது ஒரு புல்லாங்குழல்..
ஙே… என்று நான் விழிப்பதற்குள்
அதை எடுத்துக்கொண்டது..

அடித்துச் சாத்திய
கதவின் அப்புறம்
இப்போதும் கேட்டது
அதே குழல் இசை…

– பவானி ரெகு

Top of Form

Bottom of Form

பிறகு பார்க்கலாம் என
விட்டுவைத்த ஒரு குறுஞ்செய்தி

பிறகு வாசிக்கலாம் என
மூடிவைத்த சில புத்தங்கள்

பிறகு அழைக்கலாம் என நினைத்த
ஒரு தொலைபேசி அழைப்பு

பிறகு எழுதலாம் என நினைத்துவைத்த
சில கவி வரிகள்

என்பன

பிறகு அப்படியே
நமக்குத் திரும்ப அமைவதுமில்லை…
பிறகு அவை
அவ்வளவு பிரயோசனப்படுவதுமில்லை…

ஏனெனில்

பிறகு பார்க்கலாம் என
விட்டுவைத்த
அந்தக்குறுஞ்செய்தி
மரணத்தருவாயில் இருக்கும்
ஒருவரின் கடைசி ஆசைகள்
பற்றியதாய் இருந்திருக்கலாம்…

அவ்வாறே

பிறகு பார்க்கலாம்
பிறகு எடுக்கலாம்
பிறகு கொடுக்கலாம்
பிறகு செய்யலாம் என

நினைக்கும் ‘பிறகு’ கள்
பிறகு நமக்கு
கிடைக்காமலே போகலாம்…

அல்லது

பிறகு நாமே
இல்லாமலும் போகலாம்…

பிறகு எதற்காக
உரிய நேரங்களை
ஒதுக்கி வைக்க வேண்டும்….

(பஸீனா)

ஒரு பேய்மழை நாளில்
பேனாவும் கையுமாக
அமர்ந்து எதையோ
எழுதிக் கொண்டிருக்கிறான்
அவன்..

அந்த ஏழைகவிஞனின்
மனைவி பழைய
ஓட்டுவீட்டின் சாளரங்களை
சாரலுக்கு பயந்து
சாத்திக்கொண்டிருக்கிறாள்..
இருந்தபோதும் கண்ணுக்கு
தெரியாத பலநூறு
சாளரங்களின் வழியே கவிஞனைத்தேடி
வீட்டுக்குள் நுழைகிறது
மழை…

அழையா விருந்தாளியை
தட்டுமுட்டு சாமான்கள்
கொண்டு சிறைபிடிக்கிறாள்
அவன் மனைவி..
போதாக்குறைக்கு அவனின்
பரிசுக்கோப்பைகளும்
பேழைகளும் கூட
வந்துவிடுகிறது…

நிச்சயமாய் அவை
காலிக்கோப்பைகள் அல்ல..
இதோ..அக்கோப்பைகள் தோறும்
சிலபல லைக்குகளுக்கும்
கமெண்டுகளும் நிறைந்து
வழிகின்றன…

–விஜய்ஆனந்த்

நீண்ட நாட்களுக்கு முந்தைய
ஒரு தீபாவளி நாளில்
ஐம்பது ரூபாய்க்கு
பட்டாசு வாங்கி தர சொல்லி
அழுது அடம்பிடித்து
கிடைக்காத விரக்தியில்
என் அப்பாவை பழித்தபோது
எனக்கிருந்த
அதே கோபத்தை
அதே விரக்தியை
பிரதிபலிக்கிறான் மகன்
பதினெட்டாயிரம் ரூபாய்
அலைபேசியை அவன் கேட்டு
வாங்கித் தர முயலாத
என் நிலையை கண்டு…..

அப்பாவான பின்புதான் தெரிகிறது
பட்டாசுகளையும்
அலைபேசிகளையும் விட
அவசிய தேவைகள்
நிறைய இருக்கிறதென்று……

பிரபுசங்கர்_க

1.

அவள் 

முதன்முதலாகத் தந்த

முத்தத்தையும்

மகிழ்ச்சி நிரம்பி வழிந்த

அதன் சுவையையும்

இன்பம் கூட்டிய 

அந்த அந்திப் பொழுதையும்

காலங்கள் பல கடந்தும் 

மறக்கவே இல்லை

அவன்.

2.

என் கைகளை

இறுகப் பற்றிக் கொள்.

என்னை நான் 

தொலைத்தது போல்

உன்னையும் 

தொலைத்து விடப் போகிறேன்.

3.

உன் மீது

எனக்குள்ள மோகத்தினைக்

காதலெனக் கொள்க…!

4.

நீ என்னை 

நெருங்கி வரும் வேளையில் 

என் தனிமைக்குத் துணையாய் 

இருந்த நிலவு 

மெல்ல மெல்ல

என்னை விட்டு விலகுகிறது.

5.

உயிர் போகும் வலியை 

பொறுத்துக் கொள்கிறேன்.

ஆனால் 

உயிரே போய் விடும்  

போலிருக்கிறது பசியில்.

-பாரியன்பன் நாகராஜன் குடியாத்தம்.

என்னில்

முழுவதுமாய்

நீ

இருக்கிறாய்!

உன்னில்

முழுவதுமாய்

நான்

இருக்கிறேன்!

ஆனால் –

காண்பவர்

கண்களுக்கு

(மட்டும்தான்)

நாம் இருவரும்

தனித்தனியாக

இருப்பதைப்போல் தெரிகிறது!

          ****

ரசனை!

விடிந்த பிறகும்

விண்மீன்கள்

ஏன் செல்லவில்லை

தெரியுமா?!

நீ

வெளியில் வந்து

வாசல் கோலமிடும்போது

உன்

விழி மீன்களைப்

பார்த்து ரசிக்கத்தான்!

          ****

முத்து ஆனந்த் வேலூர்

பெண்வள்ளல்!

எப்பொழுதும்  தேனொழுகப் பேச

எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?!

என்ற  உன் கேள்விக்கான பதிலை

உன்னிடமிருந்துதான் எடுக்க வேண்டும்

அன்பே! நினைத்த மாத்திரத்தில்

நினைத்த பொழுதுகளில் எனக்கு

முத்தங்களை  வழங்கும்  

தேன்சிட்டு  நீதானே!

எந்த ஆடையாக இருந்தாலும்

அணிந்த பின் உன் அழகையெல்லாம்

அவைகளுக்குக்கொடுத்து விடும்

பெண் வள்ளல் அல்லவா நீ!

பரிசுத்தமான அன்பை

உன் இதயத்திலிருந்தும்

மிக சுத்தமான தேனை

உன் இதழ்களிலிருந்தும்

நான்பெற்ற பிறகும்

இனிக்க இனிக்கப் பேசுவதை

நான் கை விடலாமா அல்லது

மறந்துதான் போகலாமா?

பேராசை பெரு நட்டம் என்பது

உண்மையென்றாலும் (கூட)

என் மொத்த ஆசையையும்

உன்மீது மட்டுமே வைத்திருக்கிறேன்

இல்லையென்றால் – என்னிடம் இருக்கும்

உன் மனசு  என் மேல்  வழக்குத் தொடுக்குமே!

நீ எனக்குச் சொந்தமான பின்

ஒவ்வொரு நொடியிலும்

காதல் மட்டுமே தெரிகிறது!

முத்து ஆனந்த். வேலூர்

தெருவாசல் விளையாட்டுக்கு

தடைபோட்டது சாலை நெரிசல்!

வீதியில் ஓடியாட தடைபோட்டது

குப்பை கஞ்சியம்

வீட்டுத் தாழ்வாரத்தில் விளையாட

தடைபோட்டது பெருகிவரும்

குரங்குச் சட்டை.

பொறுமை இழந்த குழந்தை

எடுத்தது கைபேசி ஆயுதத்தை

இப்போதும் தடை போட்டது

உடல் ஆரோக்கியத்திற்கு

மனம் ஊனமாய்

குழந்தை ஏக்கப்பார்வையோடு

எதிர்காலத் தேடல்

தெருவாசலில்!

 சீர்காழி.ஆர்.சீதாராமன்,

நன்றி: படைப்பு முக நூல் குழுமம்.

கவிதைக் காதலி!

     காதல் கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

காதல் மனசு!

இப்பிறவியில் கண்ட உன்னை

எப்பிறவியிலும் நேசிக்க ஆசை!

உன் கவிதைகளைப் படித்துப் படித்து

உன் மீது உயிரையே வைத்த என்னை

கவிதையாக்கிப் படித்தவன் அல்லவா நீ!

ஒவ்வொரு முறை நாம் தழுவும் போதும்

முதல் முறையாகத் தோன்றும் உணர்வை

உன்னால் மட்டும் எப்படியடா வழங்க முடிகிறது?!

உன் இதழ்கள் சொல்வதற்கு முன்பே

உன் விழிகள் சொல்லும் உத்தரவை

நிறைவேற்றுகிறதே என் காதல் மனசு!

உன் கட்டளைகளுக்காகவே காத்திருக்கும்படி

அப்படி என்னடா மாயம் செய்து

என்னை மயக்கி வைத்திருக்கிறாய் நீ?!

உனக்கு எப்படி என்று தெரியவில்லையடா

ஆனால் – எனக்கு

உன்னைக் காதலிக்கவே நேரம் போதவில்லை!

என் கண்கள் பார்க்கும் திசைகள்

அத்தனையிலும் நீதான் காட்சியளிக்கிறாய்!

உன்னைப் பிரியாமல் இருக்கும்

வரம் ஒன்றை மட்டுமே

என் வாழ்க்கை கேட்கிறது!

உன் ஒரு புன்னகையில்கூட

ஊஞ்சலாட வைக்கும் அன்பு

அமுதமாய் வழிந்தோடுகிறது!

ஒவ்வொரு முறையும் நானும்

முயற்சித்துத் தோற்றுக் கொண்டுதான்

இருக்கிறேன்

உன்னைவிட அதிகமாய்

அன்பு செலுத்த முடியாமல்!

          வளர்பிறை!

ஒரு வீணையை மீட்டுவதைப்போல்

உன்னால் மட்டும் எப்படி

அவ்வளவு அழகாய் ரசித்து ரசித்து

என்னைத் தொட முடிகிறது?!

எண்ணிக்கையிலடங்கா முத்தங்களை

எனக்கு வழங்கும் நீ

வள்ளல் வம்ச வாரிசு அன்பே!

என்னிடம் மட்டும்

இந்தப் பெருமையைச் சொல்ல

உனக்கு என்ன தயக்கம்?

ஏன் தயக்கமடா?

ஒரு வீரச் சக்ரவர்த்தி

வில்லை வளைப்பதுபோல்

என்னை வளைக்க

நீ எங்கிருந்து கற்றுக் கொண்டாய்?!

உன் முத்தங்கள்தான்

எனக்குக் கவிதைகள் என்று

நான் எப்பொழுதோ சொன்னதை

நினைவில் வைத்து

இப்பொழுதும் என் இதழ்களில்

ஏராளமான கவிதைகளை

தாராளமாக எழுதுகிறாய்!

இதுவரை என்னை

எதுவுமே கேட்க விடாமல்

நீயாகவே எனக்கு

எல்லாவற்றையும் வழங்கும்

ஓர் அதிசயப் பிறவியடா நீ!

உன் இதழ்கள் என் மேனியில்

அடிக்கடி வலம் வருவதாலோ என்னவோ

என் தங்க அங்கத்தின்

மிணுமிணுப்பும் பளபளப்பும்

அதிகரித்துக் கொண்டே போகிறது!

நிலவு என்று நீ

என்னை அடிக்கடி அழைத்தாலும்

எனக்கு என்றுமே

வளர்பிறை (மட்டும்) தான்!

தேன்சிட்டு அடுத்த இதழுக்கான உங்கள் படைப்புக்கள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி 20-6-2020.

  மலர்ச்சி!

மௌனமாக இருந்து

உனக்கும் சேர்த்து என்னைப் பேச வைப்பதே

உனக்கு எப்பொழுதும் வேலையாகப் போயிற்று!

ஓர் ஆசையைக்கூடச் சொல்ல விடாமல்

அதற்கு முன்பாகவே என் ஆசைகளை

முழுவதுமாய் நிறைவேற்றிவிடும்

உன் காதலின் அளவை

எப்பொழுதுமே என்னால் சொல்ல முடியாதடா!

எல்லோருக்கும் வாழ்க்கையில்

வசந்தம் வரும்

எப்பொழுதும் என் வாழ்வில் வசந்தம்

நீ (மட்டும்) தான் அன்பே!

கவிதை என்றால் எனக்கு மட்டுமல்ல

உனக்கும் எவ்வளவு ஆசை என்று

எனக்கும் தெரியும்!

அதனால்தான் நீ அடிக்கடி

படிக்க வேண்டுமென்று

நான் கவிதைப் புத்தகமாகவே மாறிவிட்டேன்!

நினைத்த போதெல்லாம்

நீ என்னை எடுத்துப் படித்தால் போதும்

அதைவிட வேறென்ன சுகம் வேண்டும் எனக்கு!

நீ தொடத் தொடத்தான்

என் மலர்ச்சி அதிகரிக்கிறது!

என் வாசத்தை நீ எப்பொழுதும்

சுவாசிக்க வேண்டுமென்ற ஆசை

எனக்கும் என் காதலுக்கும்

எந்த நாளும் கொஞ்சமும் குறையாதடா!

முத்து ஆனந்த் வேலூர்

கவிதைச்சாரல்! பகுதி 2

விலங்குகள் சம்பந்தமான

சேனல் ஒன்றில்,

புலி ஒன்று மானை

விரட்டி பிடிக்க போகையில்,

தொலைகாட்சியை ஆப்

செய்து விட்டு,

அப்பா அந்த மான்

புலிகிட்ட இருந்து தப்பிச்சு

இருக்கும்,ல,

என அழுதபடி கேட்கும்

மகளிடம்

தப்பிச்சு இருக்கும்,

என்ற ஒற்றை பொய்

சொல்லி

கடந்து போக நினைக்கையில்,

ஆயிரம் புலிகளிடம் அகப்பட்ட

வேதனையைத் 

தந்து விடுகிறது…எனக்குள்,

முன்பொரு நாளில் பொய்

சொல்லக்கூடாதென

மகளுக்கு 

சொல்லித் தந்த பாடம்!

மு.முபாரக், வாளாடி.


இனியெல்லாம் வரமே!

  தேனா?   கனியா?

  அமுதமா?   கவிதையா?

  உன்முத்தங்களுக்கு

  நான் என்ன பெயர்தானடி சூட்டுவது?!

 உன் வருகையைத் தவறாமல் வரவேற்று

மகிழ்விக்கும்  என் கனவுகள்கூட

வரம் வாங்கி வந்திருக்கிறது!

 பிரிந்திருக்கிறோமே என்று நினைத்து

 பசலையில் விழாதே!

இப்படியிருந்தால் – நம் காதலுக்குத்

தென்றல் இருக்கும் திசையை

 யார் தெரிவிப்பது?!

 உன் மோகனப் புன்னகை

 என் நினைவிலிருந்து எப்பொழுதும்

 மறக்காத போதும் மறையாத போதும்

  வேறெதுதான் என்னைக்  களவாடும் ?

 கவர்ந்திழுக்கும்   உன் முகமே எனக்குக்

  கவிதையாக இருப்பதாலோ என்னவோ

 வீட்டுக்குள்ளிருந்தும் முகநூல் தரிசனத்தை

 என் மனம் விரும்பவில்லை!

  நீ    இனிக்க இனிக்கப் பேசுவதால்தான்

நினைக்கும்போதே இனிக்கிறாய்!

 இனியெல்லாம் சுகமே என்ற நாள்

 நமக்கும் வரும்!      – முத்து ஆனந்த்

உலகையே திரும்பி பார்க்க வைக்கும்

வல்லரசு நாடானால் பசிக்காதா

எனக் கேட்கிறது…

ஒரு குழந்தையின் வேதனையான முகம்,

விண்வெளியில் ஆராய்ச்சி

செய்தால் பசிக்காதா

எனக் கேட்கிறது…ஒரு குழந்தையின் வலியை சுமக்கும் முகம்,

கிரிக்கெட் போட்டியில் கோப்பையை 

வெற்றியாகப் பெற்றால்,பசிக்காதா எனக்கேட்கிறது…

ஒரு குழந்தையின் ஏமாற்றமான முகம்,

பலகோடி செலவு செய்துசிலை அமைத்தால் 

பசிக்காதா எனக் கேட்கிறது…

ஒரு குழந்தையின் சோர்ந்த முகம்,

அமெரிக்காவிற்கு மருந்துகளை

கொடுத்துவிட்டால் பசிக்காத

எனக் கேட்கிறது…

ஒரு குழந்தையின் விரக்தியான முகம்,

உலகையே திரும்பிபார்க்க

வைக்கும் விளையாட்டு மைதானத்தை 

உருவாக்கினால் பசிக்காத

எனக்கேட்கிறது…

ஒரு குழந்தையின் பரிதாப முகம்!

மக்களின் பசி தீர்க்க முடியாத

வளர்ச்சி எதற்கு என கேட்கிறது…

பல நாள் பசியோடு அழுதுவடிந்த கண்களை கொண்ட குழந்தையின் முகம்!

மு.முபாரக், வாளாடி

மாடி மாடியாகத் தாவி
குளம் தேடி அலைகிறது
மீன்கொத்தி..!

(ஆர் ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்)

குளித்து மேலேவரும்
யாத்ரீகனின் வான்னோக்கிய கைகளில்
வழியும் சூரியன்..!

(ஆர் ஜவஹர் பிரேம்குமார் …

) #1.
தூங்கும் குழந்தை
சிலிர்த்து சிரிக்கிறது
அம்மாவின் முத்தம்..!

#2.
இலையில்லா வேப்பமரத்தில்
துளிர்க்கிறது பகலில்
மரத்தடியில் நிழல்..!

#3.
மீன்சந்தையில் மீன்கள்
கண்களில் வைத்திருக்கும்
எஞ்சிய குளத்தின் தடம்..!

(ஆர் ஜவஹர் பிரேம்குமார்
பெரியகுளம்

முதல் காதல்
மறந்தும் போவதில்லை
மறைத்தும் போவதில்லை
யாருக்கும்
எப்போதும்..!

என் முதல் காதலும்
அப்படித்தான்..
நான் பெற்ற
முதல் முத்தம்போல்..!

எவ்வளவு
இனிமை அது..
ஒரு இமைப்பொழுதும்
விரும்புவதில்லை
அவளின்றி தனிமையை..

ஆனாலும்
அவளுடனான தனிமையோ
இனிமை இனிமை
இன்றும்
நினைத்தாலும் இனிமை..

சினிமா
பீச்
ஷாப்பிங்
பஸ் பிரயாணம்
அட
தனிமையில்
கரம்பற்றி நடந்தாலும்
மறக்க மனம்
கூடுதில்லையே..

முதன் முதலில்
தலை வைத்து
தூங்கிய மடியும்
முத்தங்களின்
அணிவகுப்பும்
ம்ம்.. என்றினி கிடைக்கும்
வேண்டாம் வேண்டாமென்றாலுமே..

என்னினியாள்
சுமந்த
பஞ்சினிய தோளும்
இருக்க இடமீன்ற
இடுப்பெனும் சிம்மாசனமும்..

அன்பே..
என்
இனிய அன்னையே
இப்படியோர்
மறக்கயியலா
காதலை
என்னுள்ளப் பாறையில்
சிலையென
செதுக்கிவிட்டு
எங்கே
சென்றுவிட்டாய்..

யாரிடமினி
நான்
பெறுவோம்
இப்படியோர்
காதலின் இன்பமதை..!

 ஆர்_ஜவஹர்_பிரேம்குமார்,
 பெரியகுளம்.

 வரப்பிரசாதம்

       ” மரக்கிளையில்  தூளி கட்டி   குழந்தையை

        போட்டுவிட்டு  வயிறு  பசி போக்க

         வயல்   வேலை   பார்க்கும் போது

         மரக்கிளையில் பலத்தூளிகள்     அசைந்தாட

          குருவிக்  கூட்டமும்  பறவைக்  கூட்டமும் 

           ஒலி  எழுப்ப பெண்கள் கூட்டம்

          கிராமிய ப்  பாடல் பாட   மெல்ல

           உறங்கியது   குழந்தைகள்  இயற்கை

          சொர்க்கத்தில்   இடம்   கிடைத்த     சந்தோஷத்தில்

          நிம்மதியாக ….”     

_ சீர்காழி . ஆர் .சீதாராமன் .    9842371679 .

கவிதைச்சாரல்! பகுதி 1

கவிதைச்சாரல்!

சருகு

அந்த தெருவில்
அப்படியொரு வீடு

பொன்னையா வீடு என்றால்
எல்லாரும் சொல்வார்கள்

பொங்கலுக்கு கூட புது சட்டை
போடாது

காவி நிற கதவு ..
கதவில் சின்ன சின்ன ஓட்டை..

உள்ளே சென்றால் ஓர் மனிதர்
மட்டும் தான்

அவரின் துணையாக சிலந்தி பூச்சிகளும்
குட்டி நாயும்..

கயிற்று கட்டில்
அதே பச்சை சிவப்பு கம்பளி

அடிப்பக்கம் மெலிந்த
தண்ணீர் சொம்பு

தேன்சிட்டு ஜூலை மின்னிதழ்! குறும்பா ஸ்பெஷல்!

பாதி எரிந்த மெழுகுவர்த்தி
பாதியில் இழந்த மனைவி
பார்க்க மறந்த பிள்ளைகள்
இவர்கள் புகைப்படங்களுடன்
எம்.ஜி.ஆர்

கட்டில் கீழே மருந்து சீட்டு
மருந்து வாங்க பணம் இருக்கு
வாங்க சொல்ல யார் இருக்கா

சத்தம் போடும் காத்தாடிதான்
தாத்தாக்கு தாலாட்டு

தூங்க போகும் வரைக்கும்
யாரும் வரல

இப்போ தூக்கி போக
சொந்தம் வருது

பாசமா கூட இருக்கலாம்….
பாழ் அடைஞ்ச இந்த
வீடா கூட இருக்கலாம்…

ரா.ஆனந்த்

 அஞ்சலகம்

கோயில் படம் வரைந்தால் 

கோயிலுக்கும்..

நீர் நெளிந்தோடினால்

ஆற்றங்கரைக்கும்

வயல்வெளி வரைந்தால்

களத்து மேட்டிற்கும் என்று

தகவல் சொன்ன..

முனுசாமி காலி செய்துவிட்டுப்போன 

பழுப்பேறிய வெண்சுண்ண

குட்டிச்சுவரொன்று 

மழை வெள்ளத்தில் கரைந்துபோக..

மற்றுமொரு அஞ்சலகத்திற்கான

குட்டிச்சுவர் வேண்டி

எந்த வீடு காலியாகுமென

ஏங்கித்தான்போகிறது..

ஊருக்கு தெரியாத அந்த காதல் மனது.

தேன்சிட்டு ஆகஸ்ட் மின்னிதழ் நகைச்சுவை ஸ்பெஷல்!

செம்பா மோகன்

ஏதோ ஒன்றில்லையென்று
வந்தவர்கள் …
ஒன்றுமே இல்லையென்று
உதறிப்போட்டுப் போகிறார்கள்…

வருமானம் தேடி வந்தவர்கள்
அவர்கள் கொண்டு செல்லும்
வெகுமானப் பெட்டிகளில்
வேதனையும் கண்ணீரும்…

அகலமான நான்கு வழிச்சாலைகளில்
கூனிக்குருகி நடக்கிறது
அவர்கள் எதிர்காலம்…

வயிற்றுப்பசிக்காய் இடம் மாறி வந்தவர்கள்…
வாழ்க்கைப் பசியோடு அவர்களின் பயணம்…

கைகொடுத்து தூக்கிவிட்டவர்கள்
எட்டி உதைக்கப்பட்டதில்
விழுந்த இடங்களில் வேர்கள் அறுபட்டு வேகமாக நடக்கிறார்கள்…

முகவரியை தக்கவைக்க
வந்தவர்கள்
முகங்களை தொலைத்துவிட்டுச் செல்கிறார்கள்…

வயிற்றுப்பசியை அடக்க வந்தவர்கள்…
வறுமையின் ருசியை
சுமந்து செல்கிறார்கள்…

அவர்கள் குடும்பம் குடும்பமாக பயணப்பட்டுப் போகிறார்கள்
அவர்களின் பாதச் சூட்டில்
தேசம் பல் குத்தி முகர்ந்து கொள்கிறது…

எந்தப் புலமுமில்லாமல்
எங்கே போகிறார்கள்
அவர்கள்
எங்கோ போகிறார்கள்
நம்பிக்கையை சிலுவையாய் சுமந்து

அனீஸ் அஹமத்

பப்பாளி மரத்தின்
யாரும் கவனிக்காத கனிந்த பழமொன்றை
காக்கை கொத்தி கீழே தள்ளியது
இன்னும் சில காக்கைகள் வந்தன
தின்றதுபோக மிச்சம் வைத்துவிட்டுச்சென்றன
பின் மைனாக்கள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டுப் பறந்தன
பின் கற்றாழைக்குருவிகள் வந்தன
அவையும் புசித்ததுபோக
மிச்சம் வைத்துவிட்டுப்பறந்தன
பின் சிட்டுக்குருவிகள் வந்தன
அவையும் எடுத்துபோக
மிச்சம் வைத்துவிட்டு பறந்தன
பின் வண்டுகள் வந்தன
அவையும் தின்றதுபோக
மிச்சம் வைத்துவிட்டு அகன்றன
இப்போது சாரைசாரையாய்
எறும்புகள் வந்து
கொஞ்சம் கொஞ்சமாய் எடுத்துக்கொண்டு கடக்கின்றன
மனிதனுக்கு தப்பித்த ஒரு பப்பாளிப்பழம்
பசியாற்றுகிறது எண்ணிலா உயிர்க்கு
இத்தனை எடுத்ததுபோக
இன்னும் மிச்சமிருக்கிறது
பப்பாளிப்பழம்   கவிதைத் திருடன்

அந்திச் சூரியன்
புறப்படுவதற்கு முன்
ஒருமுறை
ஒத்திகைப் பார்க்கின்றன
கூடு அடையும் பறவைகள்
அந்த
ஆலமரத்தின் கிளைகளில்
தங்கள் நிழல்களை
தரையிறக்கியும் மேலெழுப்பியும்
வட்ட வட்டமாய்
பறந்தவாறே….!!

__ஜெ.பன்னீர் செல்வம்.. _

பாரியன்பன் கவிதைகள்!

    
ஒளிவு மறைவின்றி கைகளை 
விரித்தே வைத்திருக்கிறது
மரங்கள்.
 
உரியவரென்றாலும் 
அனுமதி பெற்று வரவும். 
தனிமையில் இருக்கிறது அறை.
 
எதுவும் செய்யவில்லை 
வேலி தாண்டிய காற்றை 
மரம்.
 .
தாயின் மடியிலிருந்து 
இறங்குவதில் 
குறியாய் இருக்கிறது 
நடைபழகும் குழந்தை.
 
குளத்தில் மிதக்கும் 
நிலவை
பேத்தி கேட்டாளென்று
சல்லடையோடு 
வந்திருக்கிறாள் பாட்டி.
   .
பூத்த காம்பில் 
மீண்டும் பூக்க செடிக்கு ஆசை
அதற்கு ஒருபோதும் 
அனுமதிப்பதில்லை இறைவன்.
 .
ஒளி விலகும் வானத்தில் 
முத்து முத்தாய் வேர்க்கிறது 
மின்மினிகள்.
 
நான் மரணித்தது 
தெரியாமல் 
என்னைச் சுற்றிச் சுற்றி 
வருகிறது 
என்னிறுதி மூச்சுக் காற்று.

 *பாரியன்பன் நாகராஜன் 

கவிதைக்காதலி!

கவிதைக்காதலி!

காதல்கவிஞர் வேலூர் முத்து ஆனந்த்

ஏறுமுகம்!

  என்னையும் உன்னையும்

  நெருங்க விடாமல் தடை வரும்போது

  நம்அன்பு தவிக்கலாம்!

ஆயிரம் இன்னல்கள் களம் புகலாம்!

இன்பம் விடுமுறையில் செல்லலாம்

ஈதலுக்கு வழியில்லாமல் போகலாம்

உண்மையான துடிப்பு உறைந்து விடலாம்

ஊக்கம் கோபித்து ஒதுங்கலாம்

எண்ணங்கள் மறையலாம்

ஏக்கங்கள் ஊற்றெடுக்கலாம்

ஐயம் இறுக்கமாகக் கட்டி விடலாம்

ஆனால் –

ஒற்றுமை என்றைக்கும் ஒன்று சேர்க்கும்

ஓயாமல் பாயும் நம்  *காதல் ஒவ்வொரு வினாடியும்

பலம் கொடுக்கும்

 பலன் அளிக்கும்!

அன்பு விலகியிருக்கும்போதுதான்

ஆற்றல் அதிகரிக்கும்

இன்முகம் தரிசனம் வழங்கும்

ஈகை குணம்தான்

உன் உண்மையான பேரழகு

ஊரும் உலகமும் சுதந்திரம் பெறுகையில்

ஊட்டச் சத்துகள்

நம்  *காதலுக்கும்கிடைக்கும்

எந்த வழி கிடைத்தாலும்

ஏறுமுகம்தான் நம் இருவருக்கும்!

ஐந்து விரல்களென்ன அப்பொழுது பத்து விரல்களும் இணையலாம்!

ஒன்பது கிரகங்களும்  ஒதுங்கி நின்று

ஓசையின்றி நம் அன்பைப்

பார்த்துப் பார்த்து ரசிக்கும்!

கடமை!

ஊருக்கும் உலகுக்கும்

 உபதேசங்கள் வழங்கும் முன்

நானும்நீயும்தான்

முதலில் கடைபிடித்துச் செயலாற்ற வேண்டும்!

விலகியிருந்தால்தான்

விதியை விரட்ட முடியும்

என்றால் –

அதைவிட வேறென்ன கடமை நமக்கு?!

இதென்ன சிறைக்கூடமா?!

பிணைவிடுதலைக்கு  முயற்சி செய்ய!

 நமக்கு நாமேகட்டுப்பாடுடன் இருந்தால்தானே

 நாளை  நாமும் காதலிக்கலாம்

நாட்டையும் காதலிக்கலாம்!

எங்கிருந்தாலும் வாழ்க என்றுநன்மைகளையும்

எங்கிருந்தாலும் ஒழிக என்றுதீமைகளையும்

 நாம்செயலாக்கும் கொள்கைகள்தான் நம் வாழ்க்கையின் அர்த்தம்!

நாம் ஆசை ஆசையாய்க் காதலிக்க

 வாழ்நாள் முழுவதும் போதாதுதான்!

ஆனால் -ஒரு நொடி அன்பில்கூட

உண்மை இருக்க வேண்டும்தானே!

எப்பொழுதும் இன்புற்றுரிருக்க வேண்டுமென்றால்

இப்பொழுதிருக்கும் இன்னல்களை

இனியும் தாமதியாது துரத்துவோம்!

  பரிபூரணம்

  புறத்தைத் தொட்டு விளையாடி

மகிழ்வது மட்டும்தான் *காதல்என்றில்லை!

 அகத்தில் நினைத்தபடியே

இன்புற்று வாழ்வதும்

 உண்மையான அன்புதான்

 என் இனிய உயிர்க்காதல் அன்பே!

  நீ அமைதியாக இருந்தாலும் சரி

ஆரவார அவதாரமெடுத்தாலும் சரி

   நீ ஒருத்தி மட்டுமே

வாழும் இருப்பிடம்  என்  இதயம்!

பெற்றோரும் உற்றாரும் ஊரும் உலகமும்

முழுமூச்சாய் சுதந்திரம் பெறட்டும்

பிறகு சந்தித்த பின்

ஒவ்வொரு நொடியும் பிரியாமலிருப்போம்!

 உண்மையான அன்பும்

 உன்னதமான அன்பும்

என்ன சொன்னாலும் கேட்கும்

எது சொன்னாலும் செய்யும்!

எல்லோரும் வாழ்ந்தால்தானே

 நானும்நீயும் கூட

நிம்மதியாய் சுவாசிக்க முடியும்!

உன்கன்னங்களிலும் இதழ்களிலும்

இடுகின்ற முத்தங்களுக்கு மட்டுமல்ல

 கவிதைகளுக்கும் காதலுக்கும்கூட

விடுமுறையளித்து விட்டேன்  எந்தக் கேள்வியும் கேட்காமல்

 முகம் சுழிக்காமல்  மனம் கோணாமல்

  நீயும்நிச்சயமாய் ஒத்துழைப்பாய் என்ற *பரிபூரண நம்பிக்கையில்!

கவிதைச்சாரல்!

கோபக்காரராக

குடிகாரராக

முரட்டு மனிதராக,

பொறுப்பில்லாதவராகவே

பார்த்துப் பழகிய அப்பா,

அம்மாவை உடல் நலம்

சரியில்லாமல்

மருத்துவமனையில் சேர்த்த

அன்று,

அம்மாவின் கால்களுக்கு

பக்கத்தில் அமர்ந்து கொண்டு

சிந்திய

ஒவ்வொரு துளிக்கண்ணீரிலும்

காணாமல் போயிருந்தது…

அப்பாவை பற்றிய

எல்லா அவப்பெயர்களும்!

***

                                                   சட்டென விழுந்து

உடைந்து போன 

ஒரு

கண்ணாடி 

பொம்மையாய் நான்

இருக்கிறேன்…

கல்லெறிந்த போதெல்லாம்

தப்பித்து

உன் கோப

சொல்லொன்றில் 

உடைந்த பொழுதொன்றில்!

***

மு.முபாரக், வாளாடி.

பாரியன்பன் நாகராஜன்-கவிதைகள்
********************************************
1.
கோப்பையில் இருக்கும் 
தேநீரை சுவைக்காமல் 
குறை கூறுவது போலத்தான் 
காதலில் விழாமலே 
அதை நிராகரிப்பதும்.
2.
தேனெடுக்கும் பாவனையில் 
பூக்களுக்கு முத்தம் தருகிறது 
வண்டுகள்.
3.
கேட்ட செய்திகள் 
பல இருந்தும்; 
யாரிடமும் சொல்லாத 
ரகசியங்கள் 
பல உண்டு என்னிடத்தில்.
4.
அன்றொருநாள் 
மனிதனான போது மானுடத்தின் 
பெருவலியுணர்ந்திருக்கும் 
பறவைகள்.
5. 
அம்மணங்களை 
பார்த்து பழக்கப்பட்டவை.
ஆதி இரவுகள்.
6.
சட்டி நிறைய இருந்தாலும்
தேவைக்கு உண்பதே
உத்தம்.
7.
உங்களுக்காக ஒரு கவிதை கூட 
பாடாத என்னை 
கவிஞனென்று அழைக்காதீர்கள்.
8.
தொலைத்தது நான் 
எடுத்தது நீ 
ஊரெல்லாம் தேடுகிறேன் 
என் காதலை.
9.
அழும் பிள்ளைக்கு ஆறுதலாய் 
ஜன்னல் கம்பியில் வழியும் 
மழைத்துளிகள்.
10.
மலரை 
முத்தமிட்ட வண்டுக்கு 
என் ஜாடை. 
அதை வாங்கிய மலருக்கு 
என் மகளின் ஜடை.

 பாரியன்பன் நாகராஜன்.                                                                               இலையுதிர்த்த கிளைக்கு சருகு                                                                             சொல்லும் 

செய்தி…

காற்றுக்கு அகப்பட்டுவிட்டேன்.

இனி எத்திசையோ..!!!

                                                                          இலையில் அமர்ந்திருக்கிறது நேற்றைய மழை…..!!!

 நேசிக்க சில காலங்களை 
மட்டுமே கொடுத்து விட்டு… 
அதை வாசிக்க  பல யுகங்களை தந்து செல்கிறாயே …..!!

ச. இராஜ்குமார் திருப்பத்தூர் 

கரோனா தாக்குதல்

————————————–

மூன்றாம் உலகப் போருக்கு

முதல் ஒத்திகை

கரோனா தாக்குதல்….?

வாழ்வா ? சாவா ? -என

வழி தெரியாமல்

விழி பிதுங்கிய மானுடம்..?

ஆயுதக் கிடங்குகள்

அத்தனையும்

அடக்கமாய்….?

சவக்கிடங்குகள்

திடீர் மழை
எறும்புக்குக் குடை பிடிக்கிறது
காளான் # அன்சார்.எம்.ஷியாம்  

சத்தமின்றி

அவதாரம்…..?

ஊரடங்கில்

உல்லாச வாழ்க்கை

விலங்குகள்….?

பக்தர்களின்றி

கருவறைத் தெய்வங்கள்

கவலைகிடம்….?

கரடியும்-காளையும்

ஓடி ஒளிந்தன

பங்குச்சந்தையில் சங்கு…?

இல்லாதவர்கள்

கையேந்துவது போல்

அரசுகளின் யாசகம்….?

மார் தட்டிய

வல்லரசுகள்

யாரென உணர்ந்தன….?

உலகச் சந்தைக்கு

ஆசைப்பட்டு

கலகச் சந்தையில் சீனா….?

ஆண்டி முதல் அரசன் வரை

சமூக இணைப்பில்

வைரஸ் நிவாரணம்…..?

மாமூல் வாழ்க்கையில்

போலீஸ் மட்டுமல்ல –

பொதுமக்களும் பாதிப்பு…?

ஆக்கம் :

எல்.இரவி.எம்.ஏ;எம்.காம்;எம்.ஃபில்;பி.எட்;டி.எ;

செ.புதூர்.612203.

கப்பல் விடும் சிறுமியின்
கன்னக் குழியில்
தேங்கிச் சிரிக்கிறது மழை!

-கவிஞர். தக்ஷன், தஞ்சை

                                                 சிறகுகள் இருக்கிறது
                                                பறக்க வானம்தான்
                                              போதவில்லை..!

                             #ஆர்_ஜவஹர்_பிரேம்குமார்,.

அண்ணாந்து பார்த்த
போதெல்லாம்
ஆகாயம் பார்த்ததில்லே
அம்மா முகம் தான் பார்த்திருக்கும்….!

ஆயிரம்தான் வேதனை
அலை அடிச்சு பார்த்தாலும்
அன்புதான்டி உன்னிடத்தில்
அழகாக பூத்திருக்கும்….!

வயிற்றுக்குள்ள பசித்தீ
வாட்டி எடுக்கையிலே
கண்ணுக்கு குளுர்ச்சியா
கலர் கலரா பலூனு
காட்சி தந்து என்ன லாபம் ….!

ஊரேல்லாம் திருவிழா
ஓகோன்னு நடக்குதடி
ஒருபிடி சோத்துக்குத்தா
உங் குழந்தை அழுகுதடி…..!

பலூனு வித்தாக்கா
பசியாத்த வழி கிடைக்கும்
பாவி நீ என்ன செய்வே
பத்தினி வம்சமடி….!

ஒழுக்கமும் உழைப்புமே
உசிரவிடப் பெருசன்னு
ஊருக்கு சொல்லுகிற உன்ன
தேருக்குள் வச்சு தெய்வமா கும்பிடனும்….!

மயிலாடுதுறை விமலாநாகேஷ்,

நீ விட்டுச்சென்ற
ஓரிரு மழைத்துளியில்
என்
வீட்டில் வளர்கிறது
நீ நட்டுவைத்த
மல்லிகை நாற்று

கொல்லைப்பக்கம் 
சென்றுவருகையில்
மணம்வீசி
மனமயக்குகிறது
அதில் பூத்த ஒற்றைமலர்
அதுவும்
நீ கொடுத்த ஒற்றை முத்தம்போல்
கற்றை கரும்பென

விழிப்பதற்குள்
மெல்லத்தேய்கிறததந்த
மல்லிவாசம்
எழுந்துவருவதற்குள்
வாய்நிறைய பூவும்
தழையுமென
குதித்தோடுகிறதோர்
வெள்ளை ஆட்டுக்குட்டி
உன்
அப்பனைப்போல்..!

(ஆர் ஜவஹர் பிரேம்குமார்,
பெரியகுளம்.)

இடை நீக்கம்

கொஞ்ச நாள் கொஞ்சும்  முத்தங்களுக்கு

விடுமுறையளித்துவிட்டு

கைகளைத் தட்டியும் கை கழுவிய பிறகு

கன்னங்களைத் தட்டியும்கட்டுப்பாடுகளுடன் காதலிக்கலாம்!

அஞ்சாமை பேதைமை ஆற்றாமை

கல்லாமையை விரட்டுவது போல்

கண்டபடி களம் புகும்காணாத நோய்களையும்

துரத்தியடித்துதுன்பத்திலிருந்து *மீள்வோம்!

பிறகென்ன?!  *காதல்நமக்குஎன்று (மே) ம் முடியாத

தொடர்கதையாகி விடும்!

யாருக்கும் அஞ்சாத நம் நெருக்கம்கூட

அச்சத்திற்கு அச்சமுற்று இடை வெளி விட்டுவிட்டது!

இனியென்ன  உனக்கும்  எனக்கும்வீட்டிற்குள்ளேயே நடை பயிற்சிதான்!

புன்னகையை சிரிப்பாக மாற்றநடனப் பயிற்சியையும்கூட

நாம் மேற்கொண்டுபார்த்து ரசித்துமன அழுத்தத்தை மறக்கலாம்!

கொரோனாவைக் கொன்ற பிறகு

பணியிலிருந்து நீக்கப்பட்டஅத்தனை முத்தங்களையும்

மீண்டும் வரவழைத்துஉனக் (கே) கு

வழங்குகிறேன்!  முத்து ஆனந்த்,வேலூர்