ஜோக்

என்ன சொல்கிறீர் மந்திரியாரே…! ,மக்கள் தாங்களாகவே ஊரடங்கு செய்து கொண்டுள்ளார்களா? ஏன்?

  வெளிநாட்டில் இருந்து   திரும்பி வந்த தாங்கள் நகர்வலத்துக்கு வரப்போவதாக அறிவித்தது தான் காரணம் மன்னா…!

சிரி”ச்ச மூஞ்சி நூல் (Facebook) சிரிப்புகள்

”சிரி”ச்ச மூஞ்சி நூல் (Facebook) சிரிப்புகள்!

“யாருமே வெளிய வரல..எப்டி இத செய்யறதுன்னு எதிர்கேள்வி கேக்கறானே..இவன் யார்?”

” செயின் திருடன்.break the chain பத்தி கேக்கறான்”

புது வண்டி ரவீந்திரன்

“மாப்ள US ரிட்டர்ன்”

” வீட்டுக்கு வெளிய sticker ஒட்டிட்டாங்களா?”

புது வண்டி ரவீந்திரன்

” அடப்பாவத்த!! நாலு நாளா அந்தாளு டாய்லெட் போகாம இருக்கானா ஏன்?”

” ‘வெளிய’ போனா கொரோனா வந்துடுங்கிறத தப்பா புரிஞ்சிக்கிட்டாராம்”

புது வண்டி ரவீந்திரன்

இவளை ஒருத்தன்கையிலே புடுச்சிக்கொடுத்திட்டேன்னா நிம்மதியாக கண் மூடிடுவேன்..”

கையை நல்ல கழுவ சொல்லிட்டு புடுச்சி கொடுடா!”

ஆர்.ரமேஷ்பாபு,விருத்தாச்சலம்

கும்பகர்ணனுக்கு வந்த நோய் எது சொல்லு?

 “கொர்”ரானா”!

ஆர்.ரமேஷ்பாபு, விருத்தாச்சலம்.

எனக்கு வாழ பிடிக்கலே டாக்டர்…”

“பரவாயில்லை… கொஞ்சம் வயசானவங்க, வாழக் காயை தவிர்க்குறது நல்லதுதான்!

வி.சி.கிருஷ்ண ரத்தினம்.

Description: C:\Users\nice day\Downloads\fb1.jpg

” ‘வோர்க் ஃபிரம் ஹோம்’ன்றதை ‘வோர்க் டு ஹோம்’னு மாத்திட்டியே, இது நியாயமா தனம்?”

வி.சி. கிருஷ்ணரத்தினம்.

அமைச்சர்: “அந்தப் புலவர் தங்களைப் புகழ்ந்து, ‘லிரிக்ஸ் ஃபிரம் ஹோம்’ செய்வதாக பொய்ச் சொல்லிவிட்டு, வார இதழ்களில் கொரோனா ஜோக்ஸ் எழுதி சன்மானம் வாங்கிக் கொண்டிருக்கிறார் மன்னா!”

வி.சி. கிருஷ்ணரத்தினம்.

புலவரே! தாங்கள் பாடிய பாடலில் பிழை உள்ளதே!”

“இது போல் எதையாவது சொல்லி சன்மானத்தை மறுதலிப்பீர்கள் என்று தெரிந்தே, நான் காப்பி அடித்த பிரசுரமான ஒரிஜினல் பாடலையும் கையோடு கொண்டு வந்துள்ளேன் மன்னா!”

வி.சி. கிருஷ்ண ரத்தினம்.

காது கொஞ்சம் நீளம்!

சீர்காழி ( பெஸ்ட் பள்ளி எதிரில் இருவர் )

  ” இனி ஹாட்  சம்மர் ஆரம்பம் உடம்பை குளிர்ச்சியா வெச்சுக்கனும்டா ……”

   ” எண்ணெய் தேய்ச்சி குளிச்சி , நுங்கு , தர்பூசணின்னு சாப்பிட்டு கூலா இருக்கனுமா மாப்ள ….?”

   ” அப்படி இல்லடா , ஓசியில கிடைக்குதுன்னு சரக்கை வாங்கி மூக்கு முட்ட குடிக்க கூடாது , அதிக காரம் உள்ள சைடிஷ் சாப்பிடக் கூடாதுடா  …… “

   ” கையில காசு இல்லை , மாசக் கடைசின்னு   சொல்ல இவ்வளவு பெரிய அட்வைஸ் பாடம் தேவை தானா மாப்ள ….?”   ( அசடு வழிகிறார் )

– பி.கே. ராதா . சீர்காழி .

 (வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் ஒரு வீட்டில் கணவன் மனைவி)     “காவ்யா என்ன பண்றே?”

     “இதோ வரேங்க!”

     “எப்பப் பாரு போன்ல என்ன பண்றே?”

     “போன்ல ‘சேட்’ பண்ணிக்கிட்டிருந்தேங்க!”

     “இதே வேலைதானா? உன்னைச் சொல்லக் கூடாது! உன்னைப் பெத்தவங்களைத்தான் சொல்லணும்!”

     “போதும் நிறுத்துங்க! எங்கப்பாதான் நம்ம ‘கல்யாணம்’ஆகும்போதே சொன்னாருல்ல!”     “என்ன சொன்னாரு?”

     “என் பொண்ணு ‘குனிஞ்ச தலை நிமிராதவன்னு’ சொன்னாரா? இல்லையா?”     “அதுக்கு இப்படி ஓர் ‘அர்த்தம்’ இருக்குன்னு உனக்கும் உன் அப்பனுக்கும்தான்டி தெரியும்!”

முத்து ஆனந்த் வேலூர்

பெரியபாளையம் கூட்டுச்சாலையில் டாஸ்மாக்கில் இரு குடிமகன்கள்

என்ன மாப்ளே… ஒரே சோகமா இருக்கே..?

பாரெல்லாம் மூடிட்டாங்க! “கட்டிங்” கிடைக்க மாட்டேங்குதே மச்சான்!

சொல்றேன்னு கோச்சுக்காதே! இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி “கட்டிங்” கேட்டு பார் வாசல்ல நின்னுகிட்டிருப்பே..குவார்ட்டர் வாங்கி அடி மாப்ளே..!

 “அதுக்கெல்லாம் வசதியில்லே மாப்ளே…! ஒரு கட்டிங்” கொடேன்..!

“உன்னையெல்லாம் “கொரானா” கொண்டுபோவ மாட்டேங்குதே… அப்படி துட்டு சேர்த்து என்னடா பண்ணப்போறே?

ஏம் பேசமாட்டே நீ கவர்மெண்ட் ஸ்டாஃபு! நான் கூலித்தொழிலாளி…

  அட அட… அப்படியே நம்ம பிரதமர் மாதிரியே பேசறியே … சரி வந்து தொலை உன்னை விசாரிச்ச பாவத்துக்கு ஒரு கட்டிங்க் கொடுத்து அழறேன்..!

இருவரும் வண்டியில் கிளம்புகின்றனர்.

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

பொன்னேரி மளிகைக் கடையில்  வியாபாரியும் வாங்கவந்தவரும்…!

  என்ன அண்ணாச்சி விலையெல்லாம் தூக்கலா இருக்கு…!

  நான் என்ன பண்ணட்டும் எல்லா கம்பெனியும் விலையை ஏத்திட்டான்லே..!

  கம்பெனிக்காரன் ஏத்தறானோ இல்லையோ மாசாமாசம் நீ ஏத்திப்புடறே இல்லாட்டி பெட்டிக்கடை வைச்சிருந்த நீ மளிகை கடை கட்ட முடியுமா?

  உழைச்சு சம்பாதிக்கற காசுவே…? உம்மை மாதிரி  தாலுக்கா ஆபீஸ்ல ஜோலி முடிக்கறேன்னு சொல்லி வாங்கற காசு இல்லே…!

  என்ன அண்ணாச்சி! பேச்சு ஒருமாதிரி போவுது…!

   ஒருமாதிரியும் இல்லே இருமாதிரியும் இல்லே உள்ளதை சொன்னேன்.

ஆமா இவருதான் “உள்ளப் புகுந்து “ பார்த்தாராக்கும்!

 “அத வேற புகுந்து பாக்கணுமா?”  எல்லோரும் பேசிக்கிட்டு திரியறாங்க வே,, பார்த்து நடந்து பொழைச்சிக்கப்பாரும் அப்புறம் பேப்பர்ல வந்து நாறிடப் போவுது…

    உம்மகிட்டே போய் வாய் கொடுத்தேன் பாரு…! சரி சரி! சாமான்களை எடுத்து வை…!

 சின்ன சாமி, நத்தம்.

(வேலூர் டோல்கேட் உழவர் சந்தையில் தோழிகள் இரண்டு பேர்)

     “நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”

     “அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”

     “நா கூட ஒரு நிமிஷம் உன் புருஷன் புத்திசாலி,அறிவாளின்னு நினைச்சுத்தான் நீ ‘பழம்’ன்னு கூப்பிடறியோன்னு ‘தப்பா’ நினைச்சுட்டேன்!”

(அர்த்தம் புரிந்த தோழி செம கடுப்பாகிறார்!)

முத்து ஆனந்த் வேலூர்

பஞ்செட்டி பேருந்து நிறுத்தத்தில் இரு நண்பர்கள்!

டே மாப்ளே எப்படா ஊர்ல இருந்து வந்தே? கையை கொடு…

 கை நீட்டுகிறார்.

  இதைப்பார்த்துக்கொண்டிருந்த இன்னொருவர்  டேய் டேய் கையை கொடுத்திட்டியா…

 ஏண்டா என்ன ஆச்சு?   இப்படி பதற்றரே?

  முட்டாப் பசங்களா! உலகமெல்லாம் “கொரானா”ன்னு கை குலுக்க வேண்டாம்னு சொல்லிகிட்டிருக்காங்க நீங்க என்னடான்னா….!

  ஐயையோ! மறந்துருச்சு மாப்ளே…! இப்ப என்ன பண்றது? 

  முதல்லே கையை சோப்பு போட்டு கழுவு….!

இப்போது கை கொடுத்தவர்   இப்படி நடுத்தெருவுலே கை கழுவி விட்டுட்டியே மாப்ளே…! என

இருவரும் சிரித்தபடி செல்கின்றனர்.

எஸ்.எஸ்.பாபு. பஞ்செட்டி.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

மந்திரி : சீன நாட்டிலிருந்து ஓலை வந்திருக்கிறது மன்னா…!

மன்னர் : அது  எனக்கு வந்தியிருக்கும் ‘மரண வைரஸ் ஓலை’ என்று சொல்லுங்கள் மந்திரியாரே..,!

இந்து குமரப்பன், விழுப்புரம்.

திறந்த நிலைப் பல்கலைக்கழகத்துக்கு கூரை அமைத்துத் தரப்படும்னு அறிக்கை விடுறாரே!

 பி.சக்திவேல், கோவை.

சீர்காழி.ஆர்.சீதாராமன்.

” தலைவர் பார்வை நாலா பக்கமும் இருக்கா எப்படி ?” 

  ” அவருக்காக சுழலும் மேடை சிம்பாலிக்கா அமைச்சு இருக்காங்களே … ” சீர்காழி.ஆர்.சீதாராமன்.

     “அதுமட்டுமில்லங்க, படத்துக்குப் பைனான்சியரே அவன்தான்!” –முத்து ஆனந்த், வேலூர்.

இவன்ஏண்டா?

அவன்நான் சரியா சமையல் செய்யலைன்னா, என்னைலத்தி சார்ஜ்பண்றாராடா..!

இந்து குமரப்பன் விழுப்புரம்

தேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….

பி, சக்திவேல், கோவை.

*”ஓ! அவ்வளவு சமூக அக்கரையா”?*

*”அதெல்லாம் ஒண்ணுமில்லீங்க! அவர் படிக்கிற காலத்தில வந்திருந்தா அவரு ஒம்போதாவதுல ஃபெயிலாருக்க மாட்டாராம்!”*

   *உமா புருஷோத்தமன்   ஆதிச்சபுரம் 614717

“அந்த நடிகை ரொம்ப ‘நேர்மையானவங்க’ன்னு எப்படிச் சொல்றீங்க?”

     “பேட்டியில நா யாருன்னு ‘காட்டுவேன்’னு சொல்ற மாதிரியே படத்துலயும் ‘நல்லாக் காட்றாங்க’ளே!”  முத்து ஆனந்த். வேலூர்,

” போயும் போயும் மாமியார் வீட்டுக்கு போயிருக்கும் போதா 144 கொண்டு வரணும்?”

” ஏன் என்னாச்சி?”

” என் மாமனார் எல்லாருக்கும் போன் போட்டு ,என் மருமகன் வீட்டோட மாப்பிளையா இருக்கார்னு சொல்லி கடுப்பேத்தறார்” புதுவண்டி ரவீந்திரன்

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நம்ம தலைவரு, கும்பிட்ட கையை கீழே இறக்காம போறாரே!

தேர்தலில் மூக்கு உடைஞ்சதை மறைக்கத்தான்….

பா.சக்தி வேல், கோவை.

*பேருந்தில் பயங்கர மான கூட்டம் . ஒரே வார்த்தையில் கூட்டமே கலைஞ்சு போச்சு அப்படி என்ன வார்த்தை சொன்ன என்ன மாப்ள எப்போ சீனாவுலேர்ந்து வந்தே? வேத புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717*.

உலகத்துல இல்லாத தெய்வம் எல்லாம் தலைவருக்கு துணை நிற்குமா எப்படி ?”

” இருக்கற சிலையெல்லாம் தான் அவரு கஸ்டடியில இருக்காம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

” தூதுப் புறாவுக்கு பயிற்சி கொடுத்து அனுப்பி இருக்கிறார்கள் மன்னா …”

” போர் ஓலையை போட்டதும் கை நழுவி பறந்து விட்டதா அமைச்சரே ?”

சீர்காழி.ஆர்.சீதாராமன்

என் ஆளைச் ‘சுத்தி வளைச்சுப் பிடிக்க முடியலை’டா!”

“ஏன்டா என்னாச்சு? லவ்வுக்கு ஓக்கே சொல்லலியா?”

“அதில்லடா அவ ‘ரொம்ப குண்டா’ இருக்கா!”

முத்து ஆனந்த், வேலூர்.

“நீ உன் வீட்டுக்காரரை அடிக்கடி ‘பழம், பழம்’ன்னு சொல்றியே! உனக்கு அவர் மேல அவுவளவு அன்பா?!”

“அட அவ ஒருத்தி, அவரு ஒரு ‘பழம்’ விடாம எல்லாப் பழங்களையும் சாப்பிடுவாரு! அதனால அவருக்கு அப்படி ஒரு ‘பேரை’ வச்சேன்!”

முத்து ஆனந்த், வேலூர்.

புலவர்கள் அரசவையில் என்னைப்பற்றி புகழ்ந்து பாடவே

மாட்டேங்கிறாங்களே ஏன் அமைச்சரே..?

அரசவையில் பொய் பேசக்கூடாது என்று உத்தரவு போட்டிருக்கிறீர்களே அரசே!

எஸ்,எஸ்,பாபு, பஞ்செட்டி.

நம் மன்னருக்குப் பிடித்த உணவு எது சொல் பார்க்கலாம்?

குழிப் பணியாரம்..தான்..!

சின்னசாமி, நத்தம்.

“தலைவரை மிகப் பெரிய சக்தி ன்னு சொன்னது தப்பா போச்சா ஏன் ? “

” எரிபொருளுக்குக்கு பதில் மாற்று சக்தியா அவரை பயன்படுத்த முடியுமான்னு யாரோ கேட்டுட்டாங்களாம் …

சீர்காழி.ஆர்.சீதாராமன்

பாத்திரம் கழுவ முதலாளியம்மா வீட்டுக்கு இன்னிக்கு கொஞ்சம் லேட்டா போயிட்டேன்”

” அச்சச்சோ என்னாச்சி?”

.”முதலாளியம்மா கழுவி கழுவி ஊத்திட்டாங்க!””

புது வண்டி ரவீந்திரன்

” ஆபரேஷன் பேஷண்ட் எஸ்கேப் ஆனதும் டாக்டர் என்ன சொன்னார் ?”

” ஹி… ஹி.. ஓடுகாலின்னு தான் ….”

சீர்காழி.ஆர். சீதாராமன்.

காது கொஞ்சம் நீளம்!

வேலூர் இன்பென்ட்ரி சாலையில் ஒரு ப்ரைவேட் ஆபிசில் தோழனும் தோழியும்)

“ஏன் அவகிட்டே ‘லவ்’வை சொல்ல அவ்வளவு யோசிக்கறீங்க?”

“எல்லாம் ‘தயக்கம்’தாங்க!”

“அதைதான் ஏன்னு கேக்கறேன்!”

“வேணாம்ன்னு சொல்லிட்டான்னா?!”

சொல்லிட்டா என்ன? வேற ஆளைப் பாருங்க!”

(கேட்ட நண்பர் அதிர்ச்சியாகிறார்!)

-முத்து ஆனந்த், வேலூர்

வேலூர் சங்கரன்பாளையம் கல்லூரிச் சாலையில் தோழிகள் இருவர்)

“என்னடி எவன் ‘லவ்’ பண்ணாலும் துரத்தி விடறே!”

“உனக்குத்தான் தெரியுமில்லேடி! நான் என் ‘மாமா’வைதான் ‘கல்யாணம்’ பண்ணிக்கப் போறேன்னு!”

“ஏன்டி, பைனல் இயர் படிக்கறே! இன்னும் படிக்கப் போறேங்கறே! அப்படியிருக்கறப்ப ‘படிக்காத ஆளை’க் ‘கல்யாணம்’ பண்ணிக்கப் போறேங்கறே!”

“அதான் அவருக்கும் சேர்த்து என்னைப் படிக்க வைக்கறாரே! அது போதாதாடி?!”

“ஆகா, ‘நன்றியின் இலக்கணமே, பேஷ் பேஷ்!”

முத்து ஆனந்த் வேலூர்

சிதம்பரம் சீர்காழி அரசு பேருந்தில் கண்டருக்டரும் பயணியும் … )

” ஓடற பஸ்ல ஏறாதேப்பா கால் சிலிப் ஆயிடும் உயிருக்கே அது ஆபத்து .. “

” உங்க பஸ் ஓடறதே அதிசயம் இதுல கமெண்ட் வேறையா..?”

” படி தடுக்கி விட்டு கீழ விழுந்து பாதியில செத்துடாதேன்னு தமிழ்ல சொல்லனுமாக்கும் ?”

” அவச் சொல்லா பேசாம போய் டிக்கெட்டை போடுய்யா ..”

” எங்க நல்ல வாய்க்கு மரியாதை கொடுக்கறீங்க நார வாய்க்கு தானே பயப்படறீங்க ?”

( பஸ்ஸில் ஒரே சிரிப்பு … )

– பி.கே .ராதா .சீர்காழி .

நத்தம் சன்னதி தெருவில் தேர்வு எழுதிவந்த மகனும் தந்தையும்!

என்னடா? இன்னிக்கு எக்ஸாம் நல்லா எழுதினியா பேப்பர் எப்படி இருந்தது…?

எக்ஸாம் நல்லாத்தான் எழுதினேன்! ஆனா பேப்பர்தான் சுத்த வேஸ்ட்…!

என்னடா சொல்றே?

ஆமாம்பா! பேப்பர்லே இங்க் ஊறுது!

அப்பா கடுப்பாகி டேய் நான் அதை கேக்கலை! கொஸ்டீன் பேப்பரை கேட்டேன்!

உடனே மகன் கொஸ்டீன் பேப்பரில் கிறுக்கி பார்த்து… அப்பா இதுலே இங்க் ஊறலை! நல்லாத்தான் இருக்கு!

அதற்குமேல் பேசமுடியாமல் அப்பா தலையில் அடித்துக்கொண்டு வெளியேற நமுட்டு சிரிப்புடன் உள்ளே நுழைகிறான் மகன்.

சின்னசாமி, நத்தம்.

பஞ்செட்டி டீக்கடை ஒன்றில் இரு இளைஞர்கள்!

மாஸ்டர் சூடா ரெண்டு டீ போடுங்க!

போடலாம்! போடலாம்! முதல்ல பேலன்ஸை செட்டில் பண்ணுங்க!

என்ன மாஸ்டர் நாங்க என்ன ஓடியா போயிரப்போறோம்! கொடுத்திடமாட்டோமா?

நீங்க ஓடிப்போக மாட்டீங்கதான்! உலகம் பூரா கொரானா வைரஸ் அது இதுன்னு அழிஞ்சிகிட்டு இருக்கு! அது உங்களை பிடிச்சுகிட்டா இன்னா பண்றது…! முதல்ல காசை கொடுத்துட்டு காபியை ஆர்டர் பண்ணுங்க!

தோ…பார்றா…! நீ போடற டீ காபியை இத்தனை நாளா குடிச்சிட்டே ஆரோக்கியமா இருக்கிறோம்னா கொரோனோ வைரஸ் எங்களை என்ன பண்ணிடும்?

மாஸ்டர் கடுப்பாகி முறைக்க இளைஞர்கள் நகர்கிறார்கள்!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

பொன்னேரி பெட்டிக்கடை ஒன்றில் கடைக்காரரும் ஓர் இளைஞரும்.

மாலைமலர் ஒண்ணு கொடுங்க!

வித்துப்போச்சுங்க! அப்ப முரசு இருந்தா கொடுங்க!

அதுவும் காலி…!

வழக்கமா ஆறுமணி வரைக்கும் விற்காம கடையில தொங்கிட்டிருக்கும் இன்னிக்கு எப்படி வித்துருச்சு?

அதான் ட்ரம்ப் வந்திருக்கார் இல்லையா?

ட்ரம்பா? …. என்னப்பா அமெரிக்க ஜனாதிபதியைக்கூட தெரியாம இருக்கியே?

அவர தெரிஞ்சுகிட்டு என்னப் பண்ணப் போறேன்!

என்ன பண்ணப் போறியா? மோடி அவரை ப்ரெண்ட் பிடிச்சிட்டாரு! இனிமே இந்தியா வல்லரசு ஆயிரும்!

அட! அப்புறம்?

பாகிஸ்தான் சீனா எல்லாம் நம்மகிட்டே இனிமே வாலாட்ட முடியாது தெரியுமா?

அப்ப தலை ஆட்டுவாங்களா?

என்னப்பா நக்கலா?

பின்னே என்ன? ட்ரம்ப் வரான்னு ஒரு பெரிய சுவரை கட்டி வைச்சிருக்கான் மோடி அதுக்கு ஆன செலவுக்கு அந்த ஏழைங்களுக்கு ஒருவேளை சாப்பாடு வாங்கி கொடுத்திருக்கலாம்! இவனுங்களை நம்பி இந்தியா வல்லரசு ஆயிரும்னு உங்களை மாதிரி ஆளுங்க நம்பிக்கிட்டிருக்காங்க பாருங்க! உங்களை சொல்லனும்!

தம்பி… நீங்க எதிர்கட்சியா?

நான் எதிர்கட்சியும் இல்லே! ஆளுங்கட்சியும் இல்லே! அன்றாடம் காய்ச்சி!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

தளிர் சுரேஷ் ஜோக்ஸ்!

1. அந்த நடிகை ஏன் திடீர்னு தேர்தல்ல போட்டியிடறதுல்ல இருந்து வாபஸ் வாங்கிட்டாங்க?
‘இடைத்தேர்தல்’னு சொன்னதை தப்பா புரிஞ்சிகிட்டாங்களாம்!

2. இன்கம்டாக்ஸ் ரெய்ட் வந்ததுலேர்ந்து தலைவர் ரொம்ப பயந்து போயிட்டார்?
அப்படியா?
ஆமாம்! ‘டிஸ்கவரி சேனல் கூட பார்க்கறதில்லேன்னா பார்த்துக்கோயேன்!

3. தலைவர் நிறைய வாக்குறுதிகளை அள்ளி வீசறாரே! எந்த தைரியத்துல வீசறார்?
ஜெயிக்கமாட்டோங்கிற தைரியத்துலதான்!

4. ஓட்டுப்போடப் போன தலைவர் ஏன் போடாமேயே திரும்பிட்டார்!
அவர் கையில கறை படறத விரும்ப மாட்டாராம்!

5. என்னது மன்னர் தனக்குத்தானே குழிப்பறித்துக் கொண்டாரா?
ஆம் தன் கையாலேயே பதுங்குகுழி தோண்டிக்கொண்டார் என்று சொன்னேன்!

6. அந்த டாக்டர் விவரமானவருன்னு எப்படி சொல்றே?
பல்ஸ் பிடிச்சு பார்க்கிறதுக்கு முன்னாடி பர்ஸை பிடிச்சு பார்க்கிறாரே!

7. மக்களின் இதயங்களில் நான் குடியிருக்கிறேன்னு தலைவர் சொன்னது தப்பா போச்சா ஏன்?
மக்கள் வாடகை கேட்டு வர ஆரம்பிச்சுட்டாங்க!

8. அந்த ஆள் முகத்துலேயே முழிக்க கூடாதுன்னு உங்க தொகுதிக்காரங்க சொன்னாங்களே என்ன பண்ணாங்க?
தொகுதி வேட்பாளரா நிக்க வைச்சு ஜெயிக்க வச்சிட்டாங்க!

9. எதிரி நாட்டு மன்னன் அறைக்கூவல் விடுத்தும் மன்னர் சும்மா இருந்துவிட்டாரா ஏன்?
மன்னருக்கு எந்த ஒரு விசயமும் முழுசாய் இருக்க வேண்டுமாம்! முழுகூவல் விடட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று சும்மா இருந்துவிட்டார்!

10. ஐ.பி. எல் பார்த்ததுலே இருந்து தலைவர் அதே ஞாபகமா இருக்கார்?
ஏன்?
ப்ளேயர்களை ஏலத்தில எடுக்கிறமாதிரி தொகுதிகளையும் ஏலத்திலே எடுத்தா என்னன்னு கேட்டுக்கிட்டு இருக்கார்.

11. டீ.வி பார்க்கறதுல எனக்கும் என் ஹஸ்பெண்டுக்கும் சண்டையே வந்துருச்சு?
அப்புறம்?
அவரு சமைக்கறப்ப நான் பாக்கிறதுன்னும் நான் சாப்பிடறப்ப அவரு பாக்கிறதுன்னும் ஒரு ஒப்பந்தம் போட்டுக்கிட்டோம்!

12. ஏடிஎம் மிசின் மேலே ஏன் ஏறி நிக்கறீங்க!
அதுதாங்க பேலன்ஸ் சரியா இருக்கான்னு பாக்க சொல்லுச்சு!

13. நம்ம தலைவர் தன்மான சிங்கம்!
எப்படி சொல்ற?
எந்த கட்சியும் ஆதரவு கேட்டு வராததாலே தன்னோட ஆதரவை நோட்டாவுக்கு கொடுக்கிறதா அறிக்கை விட்டிருக்காரே!

14. அந்த நடிகைக்கும் டைரக்டருக்கும் லவ் பத்திக்கிச்சாமே!
கல்யாணம் பண்ணிக்கிறதா சொல்லி அதை அணைச்சி வச்சிருக்காங்க!

15. மகளிர் அணித்தலைவி எதுக்கு தலைவரோட கோச்சுக்கிட்டு போறாங்க?
தலைவரோட வீட்டுல 33 சதவீத இட ஒதுக்கீடு கேட்டாங்களாம்!

16. செயினை அறுத்துட்டு ஓடினவனை இன்ஸ்பெக்டர் விடாம துரத்திக்கிட்டு போய்…
மடக்கி பிடிச்சு செயினை வாங்கிட்டாரா?
ஊகும்.. மாமூலை வாங்கிட்டார்!

17. அந்த ஜெயிலிலே பணப்புழக்கம் அதிகம்னு எப்படி சொல்றீங்க!
எல்லா செல்லிலேயும் ‘செல்லு’ சுத்திவருதே!

18. தண்ணி இல்லாத காட்டுக்கு மாத்திருவேன்னு சொன்னதும் வருத்தப்படாம ஏன் சிரிக்கிறீங்க?
தமிழ்நாடு முழுக்க டாஸ்மாக் இல்லாத இடம் எது? இன்னும் எத்தனைநாளைக்கு இந்த டயலாக்கை சொல்லிக்கிட்டிருப்பீங்க!

19. அந்த பேச்சாளர் ஏன் இன்னிக்கு பேச மறுக்கிறார்?
இன்னோவா வரும்னு பேசி பேசி இன்னிக்கு வாயெல்லாம் நோவா ஆயிருச்சாம்!

20. மன்னருக்கு படை என்றாலே அலர்ஜிதான்!
ஓகோ! அதனால் அடிக்கடி முதுகை சொறிஞ்சிக்கிறாரோ!

21.மன்னர் வாரிக் வாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறாறா? யாருக்கு!
வேறு யாருக்கு ராணியாருக்குத்தான் தலைவாரிக்கொடுத்துவிட்டு இளைப்பாறுகிறார்!

22. எலக்‌ஷன் ட்ரெண்ட் மாறிப்போச்சா எப்படி?
அப்போ வாக்குறுதியை வாரி இறைப்பாங்க! இப்ப நோட்டை வாரி இறைக்கிறாங்க!

தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை கமெண்ட் செய்து ஊக்கப்படுத்துங்கள்! நன்றி!