சானியா மிர்சாவை லவ்விய சந்தானம்!

வாழ்க்கையில் சில கேரக்டர்கள் சுவாரஸ்யம்! எது நடந்தாலும் ஓக்கே! நான் இப்படித்தான் இருப்பேன்! என் வாழ்க்கை என்னுடையது நான் இப்படித்தான் வாழ்வேன் என்று வாழ்வது ஒருவகை! இந்த வகையினரின் நடத்தை பிறரை பாதிக்காமல் இருக்க வேண்டும்.

    இன்னொரு வகை எல்லாவற்றிற்கும் பிறரை பழி போடுவது! கடவுளை குற்றம் சொல்வது. நான் பிறந்த நேரம் சரியில்லை அதான் இப்படி அல்லாடுறேன் என்று சதா புலம்பிக் கொண்டு இருப்பவர்கள் ஒரு ரகம்!  இவர்கள் வாழ்க்கை எப்போதும் இனிப்பது இல்லை!

    நாம் பார்க்க போகும் கேரக்டர் சந்தானம்! சினிமா நடிகர் சந்தானம் போலவே ஒரு ஜாலி டைப் கேரக்டர்! கையில் காசிருந்தால் கர்ணன் தான்! கொடை வள்ளலாகி கூடியிருக்கும் தோழர்களுக்கு பாட்டில் பாட்டிலாய் சரக்கு சப்ளை செய்வார். காசு இல்லையேல் அன்று அவனுக்கு கொடுத்தோமே என்று கணக்கு பார்த்து அவனிடம் சென்று கேட்க மாட்டார். அப்படியொரு நல்ல குணம். வாழ்க்கை வாழ்வதற்கே என்று நினைக்கும் ஒரு நல்ல மனிதர் இந்த சந்தானம்.

     இவருக்கு ஒரு வித்தியாசமான பழக்கம் ஏற்பட்டு விட்டது. சானியா மிர்சாவுடனான காதல் தான் அது. என்னடா சந்தானத்துக்கும் சானியா மிர்சாவுக்குமா? ஏணி வைச்சாலும் எட்டாதே என்று யோசிக்கிறீர்கள் தானே! இது ஒரு தலைக் காதல்! அப்போதுதான் சானியா டென்னிஸ் அரங்கில் அடிபதித்த காலம் பத்திரிக்கைகள் ஆகா ஓகோ என்று புகழ சந்தானம் அவளை லவ் பண்ணத் துவங்கி விட்டான்.

     என்னயா! அப்துல் காதருக்கும் அமாவாசைக்கும் என்ன சம்பந்தம் என்பது போல பண்றீர்! இதெல்லாம் சரிபட்டு வருமா? என்றால்  உனக்கென்னடா! அவ என்னை லவ் பண்றாலோ இல்லையோ நான் அவளை லவ் பண்றேன்!  என்றூ சிம்பிளாக கூறிவிட்டு செய்தி தாள்களில் சானியாவின் படங்களை சேகரிக்க ஆரம்பித்து விட்டான்

      ஒரு 192 பக்க லாங் சைஸ் நோட்டு வாங்கி அது முழுக்க சானியாவின் படங்களை ஒட்டி வைத்திருந்தார். யோவ் இது உம்ம வயசுக்கு நல்லா இல்ல! தகுதியும் இல்ல சின்ன பசங்க மாதிரி இந்த சின்ன பொண்ணை சைட் அடிச்சிகிட்டு திரியாதேயும் என்றால் போடா  இதுக்கெல்லாம் வயசு காரணம் இல்லை மனசுதான் காரணம் அவ என்னை விரும்பாவிட்டால் என்ன நான் அவளை மானசீகமா லவ் பண்ணிட்டு போறேன் என்று சினிமா டயலாக் விடுவான்.

    சில பேர் குஷ்பு சிம்ரன் என்று சினிமா நடிகைகள் மீது அதீத காதல் கொள்வர்! நிஜம் அவர்கள் கண்ணை மறைக்கும். அவர்களுக்கு திருமணச் செய்தி வந்தால் வீட்டில் சாப்பிடாது ஒரு ரெண்டு வாரங்கள் தாடி வளர்த்து திரிவர். இன்னும் சிலர் தாங்கள் மணக்க போகும் பெண்ணுக்கு அந்த நடிகையின் பெயரை சூட்டி சமாதானப் பட்டுக் கொள்வர் அது மாதிரி இவருக்கு சானியா பித்து பிடித்து விட்டது.

    அறை முழுக்க சானியா ப்ளோ அப்களை ஒட்டி வைத்து மகிழ்ந்து கொண்டிருந்த அவருக்கும் ஒரு ஆப்பு வந்தது. டென்னிஸில் கொடி கட்டி பறந்த சானியா கொஞ்சம் சறுக்க ஆரம்பித்தார். பத்திரிக்கைகள் மெல்ல ஓரம் கட்ட  ஆரம்பித்தன. என்னடா இது என் செல்லத்தை பத்தி ஒரு நியுசும் வர மாட்டேங்குது  என்று புலம்பி தீர்த்தான் ஒரு நாள்.

     என்னத்த பெரிசா ஆடி கிழிக்கறா? ஒண்ண மாதிரி ஆளுங்க தான் ஜொள்ளு விட்டுகிட்டு அவ பின்னாடி திரியறீங்க! அவளும் அவ ஆட்டமும் சுத்த வேஸ்ட் என்றதற்கு என்னிடம் கோபித்துக் கொண்டு  மூணு நாள் பேச வில்லை. சானியாவின் முகவரி தெரிந்து கொண்டு பிறந்த நாள் தெரிந்து கொண்டு வாழ்த்து அனுப்பி பார்த்தான் ஒரு லெட்டர் எழுதி அனுப்பினான் எதற்கும் பதில் இல்லை.ஆனாலும் விடாது தொடர்ந்து அவளது பிறந்தநாள் போட்டியில் வென்றதற்கு அதற்கு இதற்கு என்று வாழ்த்து அனுப்பிக் கொண்டே இருந்தான் சந்தானம்

       என்னயா சானியா! சானியான்னு புலம்பினீயே உம்மோட வாழ்த்துக்கு ஒரு தேங்ஸ்  அனுப்பினாளா அவ? என்றேன்! என் செல்லத்துக்கு ஆயிரம் வேலை இருக்கும் இதுல என்னோட லெட்டரை அவ பார்த்திருப்பாளோ என்னமோ? என்று வக்காலத்து வாங்கினார்.  இது தெரியுது இல்லை அப்புறம் ஏன் அவளையே நினைச்சிகிட்டு காலா காலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணிக்க கூடாதா? என்றேன்.

     யோவ் உமக்கு ஒண்ணும் தெரியாது. கல்யாணம் பண்ணிட்டு என்னத்த சாதித்து இருக்கீங்க நீங்கள்ளாம்!  என்று மடக்கினான் சந்தானம். திடுமென ஒரு நாள் எல்லோரையும் அழைத்து பார்ட்டி கொடுத்தான். என்னடா என்ன விஷேசம் கல்யாணம் பண்ணிக்க போறீயா என்றதற்கு என்னடா சந்தோஷமான நேரத்துல் அதை ஞாபகப்படுத்தறே என் சானியா லெட்டர் போட்டிருக்காடா? என ஒரு கடிதத்தை காண்பித்தான். அது டைப் செய்யப்பட்ட ஒரு கடிதம். அவனது வாழ்த்துக்கு நன்றி கூறியிருந்த அதில் இறுதியில் சானியா கையெழுத்து இருந்தது. சாதிச்சிட்டடா என்ற போது அவன் முகத்தில் பெருமை மிளிர்ந்தது. அந்த கடிதத்தை பிரேம் போட்டு வைத்திருந்தான் அவன்.

     திடிரென ஒருநாள் அந்த செய்தி வந்தது. நான் தான் சந்தானத்திற்கு முதலில் சொன்னேன். யோவ் உம்ம லவ்வருக்கு கல்யாணமாம்! போயி தடுக்கலை என்றேன்!

தெரியும்டா!  என்னது அப்ப உன் லவ்?

   என்னடா இது பைத்தியகாரத் தனமா கேக்குற? அவளை எல்லாம் நான் மேரேஜ் பண்ணிக்க முடியுமா? அவ எங்கே நான் எங்கே? என்றான்,. அப்ப அவ பைத்தியாமா அலைஞ்சியே அவ போட்டோவை கட் பண்ணி ஒட்டிகிட்டே? வேற பொண்ண கட்டிக்க மாட்டேன்னு  சொன்னே?

  நான் எப்ப அப்படி சொன்னேன்? இப்ப கல்யாணம் வேண்டாம்னுதான் சொன்னேன்! இதெல்லாம் நடக்காதுன்னு தெரியும் ஆனா வாழ்க்கைல ஒரு எண்டர்டெய்ன் மெண்ட் வாணாமா? என்னை பார்த்து நீங்க எல்லாம் எவ்வளவு  பொறாமை பட்டீங்க? அவகிட்ட இருந்து லெட்டர் வந்ததும் உங்களுக்கு எவ்வளவு வயித்தெரிச்சல்! என்னை இல்லை பைத்தியக்காரன்னு சொன்னீங்க  நான் தான் பைத்தியமா அலைஞ்சேன்னா அவளை பத்தி தெரிஞ்சிக்க நீங்க என் பின்னாடி அலைஞ்சீங்க! உங்களை எண்டர்டெய்ன் பண்ணேன் தட்ஸ் ஆல் என்றான்.

அப்ப உன்னோட லவ்? நான் லவ் பண்ணேலேன்னு யார் சொன்னது சானியாவுக்கு லட்ச கணக்கில் ரசிகர்கள் அதுல நானும் ஒருத்தன்! அவ மேல அன்பு செலுத்தினேன் ஆனா அது காதல்னு நீங்கதானே கோர்த்து விட்டீங்க! இதெல்லாம் வாழ்க்கையில் கடந்து போகும் மாமே என்றான்.

  ஒரு சுபயோக சுபதினத்தில் சோயப் மாலிக் கழுத்தில் தாலி கட்டினார் சானியா! அதற்கும் மறக்காமல் வாழ்த்து அனுப்பிய சந்தானம் இதுவரை கல்யாணம் கட்டிக் கொள்ளவில்லை!

      என்னப்பா சந்தானம் எப்ப கல்யாணச் சோறு? என்றால் இப்ப ஹன்சிகாவை லவ் பண்ணிகிட்டு இருக்கேன்! பார்க்கலாம் என்றான் ஜாலியாக!

கதை நிஜமல்ல! கற்பனைதான்! கதைக்கும் சந்தானத்தின் படத்திற்கும் நிச்சயமாய் எந்த சம்பந்தமும் இல்லை!தங்கள் வருகைக்கு நன்றி! பதிவு குறித்த கருத்துக்களை பகிரலாமே

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

  கூட்டமா நூறு பேர் உங்க பேச்சை கேட்க  வர்றேன்னு சொன்னாங்க தலைவரே . “

அதுக்காக என் உருவ பொம்மையை நீயே எரிய விடறது நல்லாவா இருக்கு ?”

                      – சீர்காழி ஆர்.சீதாராமன்.

 ” கட்சின்னா கட்டுப்பாடு வேணும்ய்யா . “

அப்ப கூட்டணின்னா கூப்பாடு போடனுமா தலைவரே ?” 

         – சீர்காழி .ஆர்.சீதாராமன் .

  மன்னர் ஏன் டென்ஷனாய் இருக்கிறார்

                        கஜானாவின் பாஸ்வேர்டை எதிரிநாட்டு மன்னர் திருடி விட்டானாம்

                                                                  —- கேஅசோகன். மும்பை-89

  “அந்த நடிகரை அரசியலுக்கு வரக்கூடாதுன்னு சொல்றீங்களே..ஏன் தலைவா?

   “அரசியலிலும் அவர் என்னைவிட நல்லா நடிச்சா,என்னய்யா பண்றது?

வெ.ராம்குமார், வேலூர்

இன்னாப்பாபோர்டுல மேனேஜார்“ போட்டிருக்கே திருத்த கூடாதா ?

                        திருத்துனா மேனேஜர் கோவிச்சுக்குவாருஅவரு போன ஜென்மத்துல “ ஜார்     மன்னராம்

                                                                                        –கே.அசோகன், மும்பை.

  “அரண்மனைக்கு பக்கத்தில் டாஸ்மாக் திறக்க வேண்டாம் என்றால் கேட்டால் தானே மன்னா!”

என்ன ஆயிற்று அமைச்சரே!”

டாஸ்மாக் வந்தவன் எல்லாம், புலவன் என்று சொல்லிக் கொண்டு அரண்மனைக்குள் புகுந்து விடுகின்றனர் மன்னா!”

                         –கி.ரவிக்குமார். நெய்வேலி.

மன்னர் காலை பலரும் தொட்டு வணங்கறாங்களே ஏன் ? “  

அது தான் அவர் உயிரையும் மக்களையும்  காப்பாத்துதாம்…”

    –சீர்காழி,ஆர்.சீதாராமன்.

தலைவர் இப்பல்லாம் ரொம்பவெளிப்படை யாப் பேசஆரம்பிச்சிட்டாரு!”

     “எப்படிச் சொல்றீங்க?”

     “யாரையாவதுதிட்டலைன்னாஎனக்குத்தூக்கம்வரமாட்டேங்குதுங்கறாரு!”

    –முத்துஆனந்த் வேலூர்

சிரி கண்ணா! சிரி!

ஆறுவழிச் சாலைகளில் இத்தனை டோல் கேட் அமைத்தது தப்பாக போய்விட்டது அமைச்சரே…!

     ஏன் மன்னா?

புறமுதுகிட்டு ஓடிவருகையில்ட்ராஃபிக்கில் சிக்கிக் கொள்வோம் போலிருக்கிறதே!

    எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறதா அமைச்சரே…?

   ஏன் மன்னா?

மக்கள் எல்லோரையும் பழைய குதிரையை விற்று புதிய குதிரை வாங்க வேண்டும் என்று  நிதியமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளாராமே!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

எதிரியின் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன் என்று சொல்லிவிடுங்கள் அமைச்சரே…!

   அப்படியானால் விரட்டலுக்குத்தயார்என்று ஒலை அனுப்பிவிடட்டுமா மன்னா!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

 இடைத்தேர்தல்ல ஓட்டுக்களை அள்ளிடலாம்னு தலைவர் நம்பிக்கையா பேசறாரே எப்படி?

 எல்லாம் நோட்டைவாரி இறைச்சுத்தான்…!

    சின்ன சாமி, நத்தம்.

சிறைக்குள்ள அடைச்சுதும் உங்களுக்கு தூக்கமே பிடிக்கலையாமே ஏன் தலைவரே…!

    இவ்வளோ பெரிய இடத்தை இத்தனை நாள் கவனிக்காம விட்டுட்டோமே எப்படி மடக்கிப்போடலாம்னு யோசிச்சிட்டிருந்தேன்யா…!

                       சின்னசாமி,நத்தம்

சி.பி,ஐக்கு எதிரா போராட்டம் நடத்தறது தப்பா போச்சு தலைவரே….!

ஏன் என்ன ஆச்சு?

அடுத்த கைது நீங்கதான்னு பேசிக்கிறாங்க!

     எஸ். மேகா. நத்தம்.

என்ன சொல்கிறீர் மந்திரியாரே…! ,மக்கள் தாங்களாகவே ஊரடங்கு செய்து கொண்டுள்ளார்களா? ஏன்?

  வெளிநாட்டில் இருந்து   திரும்பி வந்த தாங்கள் நகர்வலத்துக்கு வரப்போவதாக அறிவித்தது தான் காரணம் மன்னா…!

எதிரி உங்களை வென்றே தீருவேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறான் மன்னா!

  என் இரண்டு கால்களிலும் வலுவிருக்கும் வரை அது நடக்கவே நடக்காது என்று அவனுக்கு தெரியாது அமைச்சரே!

    –சின்னசாமி, நத்தம்.

    உள்ளங்கால் எல்லாம் ஒருவாரமாய் அரிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது வைத்தியரே…!

  வேறொன்றுமில்லை மன்னா! விரைவில் போர் வரப்போகிறது என்று உங்கள் உள்ளுணர்வு எச்சரிக்கிறது!

           -வேதஜனனி நத்தம்.

இளவரசர் உங்கள் வாரிசு என்று நிரூபித்துவிட்டார் அரசே!

  சபாஷ்! எப்படி?

கோலி விளையாட்டில் தோற்றுவிட்டு முட்டி தேய்த்து கொண்டு வந்து நிற்கிறாரே!

                -சின்ன சாமி,நத்தம்.

டீ.சர்ட் போடமாட்டேன் போடா!.. ஜோக்ஸ்!

தலைவர் ஏன் செம காண்டுல
இருக்கார்?”
“தலைமையிலேர்ந்து மறு உத்தரவு வரும் வரையில போஸ்டர் அடிக்க வேண்டாம் சரி, தலைவரே..சரக்கடிக்கலாமான்னு ஒருத்தன் கேட்டிருக்கான்!”

சீர்காழி. வி. வெங்கட்.

“உங்களோட கடும் பொருளாதார வீழ்ச்சிக்கு யார்..காரணம் தலைவரே?”

“என்னோட பினாமிகள் வீட்ல அடிக்கடி நடந்த சிபிஐ ரெய்டுதான்யா!

சீர்காழி. வி. வெங்கட்

“தலைவர் ஏன் கோபமா இருக்காரு?”

” ‘கிசான் ‘ திட்ட முறைகேட்டில் மட்டும் ஈடுபடாத எங்கள் தலைவர் அவர்களேன்னு எவனோ ஒருத்தன் அவர் வீட்டு வாசல்ல பேனர் வெச்சிட்டு போயிட்டானாம்!”
சீர்காழி. வி.வெங்கட்
 

என்ன தலைவரே..லுங்கி பனியனோட
நிக்கறீங்க?”

” ‘ டீ ஷர்ட்’ போட மாட்டேன் போடா…!”

சீர்காழி.வி. வெங்கட்.

சிறப்பு பெயில்களுக்கான முன் பதிவு நாளை காலை தொடங்குதாமேய்யா…”

“அய்யோ தலைவரே..அது சிறப்பு ரெயில்கள்…!

சீர்காழி.வி.வெங்கட்.

 “கருப்பு பூனைப்படை பாதுகாப்பு வேண்டாம்னு சொல்லிட்டிங்களா..ஏன் தலைவரே?”
“நான் ரொம்ப ‘எலி’ மையா இருக்க விரும்புறேன்யா!” 

சீர்காழி.வி. வெங்கட்

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

மனைவி : ஏன்யா.. நான் கொடுத்த சாப்பாட்டை ‘மூடி’ வெச்சுட்டே?

கணவன் :நீ தான் கொடுக்கும் போதே, ‘ மூடிட்டு.’ சாப்பிடுன்னு சொன்னே, எப்படி சாப்பிடறது?

இந்து குமரப்பன். விழுப்புரம்.

 மந்திரி :படை எடுத்து வந்த எதிரி நாட்டு மன்னனை எப்படி விரட்டி அடித்தீர்கள் மன்னா?

மன்னர் :கொரோனோ பாதித்த அந்தப்புர அழகிகளை அவன் கிட்டே நிறுத்தினேன் மந்திரியாரே..!

இந்து குமரப்பன், விழுப்புரம்

 .

” போர்க்களத்தில் மன்னர் பசியோடு இருக்கிறார் போல! “

” ஏன்? “


” வீரர்களை வீறுகொண்டு வாருங்கள் என்பதற்கு பதிலாக ‘சோறுகொண்டு வாருங்கள்’ என்கிறாரே! “

திருப்பூர் சாரதி

” சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க, கொஞ்சம் லேட்டாயிருந்தாலும்…”

” ஐயோ டாக்டர்! “

” கிளீனிக்கை பூட்டியிருப்பேன்னு சொல்லவந்தேன்! “

திருப்பூர் சாரதி

“என்னடா…. மண்டையா இதுக்கு முன்னாடி என்ன வேலை செஞ்சிகிட்டு இருந்த…?”*

*”பழனி ,திருப்பதி திருத்தணியில ஸ்டெப் கட்டிங் வெட்டிக் கிட்டிருந்தேன் ….!”*

*”அங்க மொட்டை தான்டா…. அடிப்பாங்க ..?”*

*”இல்லண்ணே… அங்க இருக்குற ஸ்டெப்பிலே உட்கார்ந்து முடி வெட்டிகிட்டு இருந்தேன்…!”*

உமா புருஷோத்தமன், ஆதிச்ச புரம்

” ஹீரோ முதல்ல  ரொம்ப நசுங்கின தட்டோட   முகத்தை  காட்டறாரே ஏன்  ?”

   ” கதை அடி தட்டு மக்களின் சப்ஜெட்டாம்  …..”

– சீர்காழி . ஆர். சீதாராமன் .

“அந்த  டாக்டர்  ரொம்ப மோசமா எப்படி ?”

  ” புதுசா வந்த பேஷண்ட்  கிட்ட லாக் டவுன் டெஸ்ட் எடுக்க சொல்றாரே …..”

சீர்காழி.ஆர்.சீதாராமன்.

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

நீ… காதலிக்கிறப் பொண்ணு., டிராபிக் போலீஸ்காரரின் மகள் எப்படி சொல்றே?

தினமும் பச்சை, சிகப்பு, மஞ்சள் கலர் மட்டும் தான் சுடிதார் போட்டுக் கிட்டு வர்றாளே..!

இந்து குமரப்பன், விழுப்புரம்

டாக்டர் :உங்க மாமியாருக்கு மூச்சு திணறல்  அதிகமாயிடுச்சு, மூச்சு விட கஷ்டப்படுறாங்க மேடம்..!

மருமகள் :கஷ்டமான வேலையெல்லாம் செய்ய வேண்டாம் என்று அவுங்க கிட்டே சொல்லிடுங்க டாக்டர்..!

இந்து குமரப்பன், விழுப்புரம்.

*”இந்த கோரானா வந்தாலும் வந்தது லிப்ஸ்டிக்கே போட முடியவில்லை….!”* 

*”ஏன் போட்டுக்க வேண்டியது தானே…!”* 

*”போட்டு என்ன பண்றது அதுக்கு மேல மாஸ்க்கை கட்ட வேண்டி இருக்கே….!     *உமா புருஷோத்தமன் ஆதிச்சபுரம் 614717   

கட்சி தலைவர்: “வர தேர்தல்ல எல்லா தொகுதியிலும் நம்ம கட்சி சார்பா வேட்பாளர்களை நிறுத்தி தனித்து போட்டியிடலாம்னு ஆசைப்படுறேன். அதுக்கு என்ன செலவாகும்?”

உதவியாளார்: சும்மா ஆசை படுறதுக்கெல்லாம் ஒன்னும் செலவு பண்ண வேண்டியது இல்ல தலைவரே!

ப்ரணா,பெங்களூரு

“அந்த ஜோசியர் மேல ஏன் தலைவர் கோபமா இருக்காரு?”

“வருங்காலத்துல ‘கொரோனா நிவாரண நிதி ஊழல்ல’ வசமா மாட்டப்போறீங்கன்னு சொன்னாராம்”

——ப்ரணா, பெங்களூரு

” எதிரி நாட்டு மகாராணிக்கு நூல் விட்டீர்களா மன்னா …?”

    ” ஏன் அமைச்சரே ?”

  ” அவன் தங்கள் கழுத்துக்கு மாஞ்சா கயிறு அனுப்பி இருக்கிறான் ….”

சீர்காழி.ஆர்.சீதாராமன்

“அந்த டாக்டர் போலியா எப்படி சொல்றீங்க ?”

   ” குடலிறக்கம் நீங்க தலைகீழா நடக்க சொல்லிட்டாராம் ….”

சீர்காழி.ஆர்.சீதாராமன்.

 ஆளுக்கு பாதியா  சீட்டை பிரிச்சிக்கிட்டும் கட்சிக்குள்ள திரும்பவும் எதுக்குய்யா சண்டை?

 கொசுறு கேட்டு சிலர் அடம்பிடிச்சிகிட்டு இருக்காங்களாம்!

சின்ன சாமி, நத்தம்.

  அந்த சாமியார் புதுசா ரிசர்வ் பேங்க் எல்லாம் திறந்திருக்காரே…!

கூடிய சீக்கிரம் ஜெயிலுக்கு போக “ரிசர்வ்” பண்னிக்கிட்டிருக்கார்னு சொல்லு!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

” எதிரி மன்னன் சாக்ஸ் போட்டு வர காரணம் என்ன அமைச்சரே ?”

  ” தங்கள் பாத பூஜை ரகசியம் கசிந்து விட்டது போல மன்னா….”

– சீர்காழி .ஆர் . சீதாராமன் .

தலைவரை மேலிடம் கட்டம் கட்டிட்டாங்களாம் ….”

    ” தனிமை படுத்திட்டாங்கன்னு டீசன்ட்டா சொல்லுங்க ….

– சீர்காழி .ஆர் . சீதாராமன் .

உங்க பையன் பொண்ணுங்க இடுப்பையே சைட் அடிச்ட்டு இருக்கானே?

ஹிப் னாடிசம் படிக்க வெச்சேன்,ஒரே “குஷி” ஆகிட்டான்

  சி.பி. செந்தில்குமார், சென்னிமலை.

இன்னும் எத்தன நாளைக்குதான் நடந்ததையே நினச்சிட்டு இருக்கப்போற?”

வாக்கிங்க் போனது போதும், சுகர் சரி ஆகிடுச்சுன்னு டாக்டர் சொல்றவரை

சி.பி.செந்தில்குமார்.  சென்னிமலை.

டியர்! பீச்ல  லவ்வர்ஸ் எல்லாரும்  ஃபேஸ் to ஃபேஸ்  பார்த்தபடிதான்  உட்கார்ந்திருப்பாங்க.  நீ  ஏன் முதுகை  காட்டியபடி திரும்பி உட்கார்றே?


நீங்கதான்  என்னோட மறுபக்கத்தை  தெரிஞ்சுக்க ஆசைப்பட்டீங்க?

                                        சி.பி,எஸ்.

என் சம்சாரம் புரளி, வதந்திகளை உடனே நம்பிடுவா. என்னை மாதிரி ஜாலி டைப் கிடையாது.

ஓஹோ…  சென்ஸ்  ஆஃப் ஹியூமர் உனக்கு, சென்ஸ்  ஆஃப் ரூமர்  அவங்களுக்கா?

            சி.பி.எஸ்.

 கார் ரேஸ்  வீரரான நீங்க ஃபார்முலா ஒன் கார் பந்தயத்துல ஏன் கலந்துக்கலை?


சின்ன வயசுல இருந்தே கணக்கு, ஃபார்முலா இதுல எல்லாம் நான் கலந்துக்கறதில்லைங்க.

       சி.பி.எஸ்.

இவ‌ர் க‌ணி‌னி தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த் துறை‌யி‌ல் வேலை பா‌க்குறவரு போல?
இதய‌த் துடி‌ப்ப வ‌ச்சே எ‌ப்படி சொ‌ல்‌‌றீ‌ங்க டா‌க்ட‌ர்.
இதய‌ம் ல‌ப் ட‌ப்பு‌ன்னு துடி‌க்காம லே‌ப் டா‌ப் லே‌ப் டா‌ப்பு‌ன்னு துடி‌க்குதே…

அத வ‌ச்‌‌சி‌த்தா‌ன்.

  •                    பகவான் ஜி

எங்க மேனேஜர் இப்ப லஞ்சம்னு கை நீட்டறதே கிடையாது…!

     திருந்திட்டாரா?

நீ வேற கொரானா பயத்துலே எல்லாமே இ-பே பண்ணச் சொல்லிடறாரு…!

  எஸ்.எஸ்.பாபு.

 தலைவர் திடீர்னு கொள்கை பரப்பு செயலாளரா நடிகையை அறிவிச்சிட்டாரே ஏன்?

அவங்கதான் இளைஞர்களை “சுண்டி இழுக்கறாங்க”ளாம்!

எஸ்.எஸ்.பாபு,

      உங்க பையன் எங்கிருக்கான்னு கேட்டா எப்பவும் மாமியார் வீட்டுல இருக்கிறதா சொல்றீங்களே வீட்டோட மாப்பிள்ளையா இருக்காரா?

ஜெயிலோட மாப்பிள்ளையா இருக்கார்!

சின்னசாமி, நத்தம்.

            புதுப் புடவையிலே வேலைக்காரி ப்ரைட்டா இருக்கான்னு வாய்விட்டு வொய்ஃப்கிட்ட சொல்லிட்டேன்

  அப்புறம்?

அன்னிக்கு பூரா என் நேரம் டார்க்கா ஆயிருச்சு!

                         -அகரத்தான்.

       அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்றே?

  போஸ்ட் மார்ட்டம் பண்ணப் போற பாடிக்கு மயக்க மருந்து கொடுக்க சொல்றாரே!

  எஸ்.வேதா, நத்தம்.

  “எந்தப்பொருள் வாங்கனும்னாலும்,பத்து பதினைஞ்சி கடை ஏறி இறங்கி ,விலை low வா விக்கிற கடையிலதான் வாங்குவார் என் வீட்டுக்காரர்”

” உங்க வீட்டுக்காரர் ‘லோ’ ‘லோ’ ன்னு அலையறதை நானும் பார்த்திருக்கேன்டி”

புது வண்டி ரவீந்திரன்

“அந்த கலைக்டர் அம்மா விரல் நுனியில் வச்சிருக்காங்க”

” புள்ளி விவரங்களைத்தானே?

” இல்ல.மருதாணியை”

புது வண்டி ரவீந்திரன்

“நம்ம பிரேம் கண்ணாடி கடை வச்சதிலேர்ந்து தன்னோட பேரை மாத்திக்கிட்டானாம். தெரியுமா?”

” என்னான்னு மாத்திக்கிட்டான்?”

” ஃபிரேம்”

புது வண்டி ரவீந்திரன்

சிரி கண்ணா! சிரி!

சிரி கண்ணா! சிரி! 

 ” தலைவருக்கு மட்டும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா இருக்கே எப்படி ?”

  ” சிறைக் களியில வளர்ந்தது அவர் உடம்பாம் !

ஆர்.சீதாராமன், சீர்காழி.

என் பையனுக்கு இப்பெல்லாம் மாஸ்க் மேல கோவம் வர்து”

” என்னாது? மாஸ்க் மேலயா?”

” மூக்கு மேலதான் கோவம் வரும்.ஆனா இப்பதான் மூக்கு மேல மாஸ்க் போட்டிருக்கானே..அதான் அப்டி சொன்னேன்”

புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்

  தலைவர் புது வகையான விளம்பர விரும்பியா எப்படி ?   ” வாயில மாஸ்க்குக்கு பதில் ஸ்டிக்கர் ஒட்டச்  சொல்றாரே ….”

,ஆர்.சீதாராமன். சீர்காழி

தலைவர் தன் கொள்கை முடிவுலே இருந்து பின் வாங்க மாட்டாராம்!

 இருக்கட்டும் அதுக்காக கட்சி ஆபிஸுக்கு ஒரு ஸ்டாப்ளர் பின் கூட வாங்க மாட்டேன்னு சொல்றது நல்லாயில்லே..!

சின்னசாமி, நத்தம்.

   தலைவர் மேடையில்:  நாங்கள் பேசக்கூடாது என்று எதிர்கட்சிகள் ஒட்டுமொத்தமாக சேர்ந்து செய்த சதிதான் இந்த மாஸ்க் அணிதல். இதை வன்மையாக கண்டிக்கிறேன்.

எஸ்.வேதா, நத்தம்.

  மாஸ்க் போடாம வெளியே போகக் கூடாதுன்னு அரசாங்கம் சொன்னது நல்லதா போச்சு?

மாஸ்க் தானே போடறோம்! முகம் தெரியவா போகுதுன்னு என் மனைவி மேக்கப் போடற நேரம் குறைஞ்சிருச்சு!

ஏ.எஸ். மணி, மாநெல்லூர்

அவள் :ஏன் அவளோட புது மாடல் கொண்டையைப் பார்த்து எல்லாரும் பயந்து ஓடுறாங்க?

இவள் : அவ போட்டுயிருக்குறது கொரோனோ வைரஸ்மாடல் கொண்டையாம்..!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

 அவர் : குறுக்கெழுத்து போட்டி கடிதங்களை தேர்ந்தெடுக்க ஏன் கவர்ச்சி நடிகை வரச்சொல்லி இருக்காங்க…?

இவர் :அவுங்க தான் நல்லா குலுக்கி குலுக்கிஎடுப்பாப்ங்களாம்….!

இந்து குமரப்பன் விழுப்புரம். 

அந்த நடிகை சமூக இடைவெளியை அதிகமாகவே கடை பிடிக்கிறாங்களாமே…?

  பின்னே  அவங்க “கவர்ச்சி நடிகை” ஆச்சே…!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

   “எதுக்குங்க தூங்கும்போதுகூட ‘மாஸ்க்’ போட்டுக்கிட்டிருக்கீங்க?!”

     “வைரஸ் கிட்டே நெருங்கும்போது எச்சரிக்கையா இருக்கணும்னுதான்!

  முத்து ஆனந்த். வேலூர்  

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

கொஞ்சம் சிரியுங்க பாஸ்!

“என் பையன் டாக்டர்”

” டாக்டரா? எங்க படிச்சார்?”

” அவன் எல்.கே.ஜி யிலேர்ந்தே எங்க வீட்டு மொட்டை மாடியிலதான் படிப்பான்.ஏன் கேக்கறீங்க?”

                                                                                புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்.

ஏன் பங்ஷனுக்கு உன் வொய்ஃபை கூட்டிட்டு வரலை..?

மேட்சிங் மாஸ்க் இல்லேன்னு கோபிச்சிட்டு கிளம்பலைடா!

சின்ன சாமி  நத்தம்.

” என்ன இது? ஆண் சிங்கத்தை பத்தியே கிளாஸ் எடுக்கறாங்க?”

” சொன்னனே…இது ‘ஆண் லயன்’ கிளாஸ்னு”

புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்

“என் ‘பொண்டாட்டி’ முன்னல்லாம் ‘சீரியல்’ பைத்தியமாயிருந்தா!”

     “இப்ப?!”

     “கொரொனா வந்ததுலர்ந்து ‘சீரியஸ்  பைத்தியம்’ ஆயிட்டா!”

முத்துஆனந்த்,வேலூர்.

கொரானா நிவாரணம் வழங்க வந்த தலைவர் ஏன் கடுப்பாயிட்டார்?

லாக் டவுனில் வெளிவந்த லாக்-அப் சிங்கமே பேனர் வைச்சிட்டாங்களாம்!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி.

This image has an empty alt attribute; its file name is jo6.jpg

“லாக் டவுன்ல கிச்சன்லியே இருந்து கஷ்டப்படற ஒரு பெண்ணோட கதை”

” படத்துக்கு என்ன பேரு?”

” பொன் மகள் வெந்தாள்”

புது வண்டி ரவீந்திரன், சோளிங்கர்.

 “கொரானா”  விழிப்புணர்வை நம்ம தலைவர்  சிறப்பா  செஞ்சுகிட்டு வரார் தெரியுமா?
    எப்படி?

  வீட்டை விட்டு வெளியே வராம அடைஞ்சே கிடக்கிறாரே!

எஸ்.எஸ்.பாபு, பஞ்செட்டி

“கீதா ‘அலப்பரை’தாங்கலடி!”

     “ஏன்டி என்னாச்சு?!”

     “அவ ‘லவ்வர்’கிட்டேயிருந்து ‘வாட்ஸ்அப்’ர மெசேஜ் வந்தாக்கூடக் ‘கையைக் கழுவிட்டு’ப் படிக்கிறாடி!”

முத்து ஆனந்த் வேலூர்

புருஷன், பொண்டாட்டி சண்டையெல்லாம் நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும்..! 

ஏன் அப்படி

அப்பத்தான் கணவர்மார்கள் எங்கேயும் தப்பிச் போகாமல் நல்லா அடி வாங்குவாங்க..! 

கே. இந்து குமரப்பன் விழுப்புரம். 

 லாக் டவுன் பீரியடிலும் மக்கள் சந்தோஷமா இருக்காங்களாமே…?

 தினம் தினம் நீங்க விடற பேட்டி பேச்சு அறிக்கைகள் அவங்களை லாக் டவுனை மறக்கடிச்சு சந்தோஷமா இருக்க வைக்குதுங்க தலைவரே…!

எஸ். வேதா, நத்தம்.

காது கொஞ்சம் நீளம்!

 (வேலூர் தோட்டப்பாளையம் அருகந்தம்பூண்டி பெரிய தெருவில் ஒரு வீட்டில் கணவன் மனைவி)

     “காவ்யா என்ன பண்றே?”

     “இதோ வரேங்க!”

     “எப்பப் பாரு போன்ல என்ன பண்றே?”

     “போன்ல ‘சேட்’ பண்ணிக்கிட்டிருந்தேங்க!”

     “இதே வேலைதானா? உன்னைச் சொல்லக் கூடாது! உன்னைப் பெத்தவங்களைத்தான் சொல்லணும்!”

     “போதும் நிறுத்துங்க! எங்கப்பாதான் நம்ம ‘கல்யாணம்’ஆகும்போதே சொன்னாருல்ல!”

     “என்ன சொன்னாரு?”

     “என் பொண்ணு ‘குனிஞ்ச தலை நிமிராதவன்னு’ சொன்னாரா? இல்லையா?”

     “அதுக்கு இப்படி ஓர் ‘அர்த்தம்’ இருக்குன்னு உனக்கும் உன் அப்பனுக்கும்தான்டி தெரியும்!”

-முத்து ஆனந்த் வேலூர்

பண்டிகாவனூர் ரேசன் கடையில் ஊழியரும் ரேசன் வாங்க வந்த பெண்ணும்.

அண்ணே…! இந்த மாசம் ஆயிரம் ரூபா கொடுக்கலையா?

”ஆயிரம் போதுமா?”

போதாதுதான்..! பத்தாயிரம் கொடுத்தாக்கூட எங்க ஊட்டுக்காரன் குடிச்சே தீர்த்துடுவான்!

ரூபா எவ்ளோ கொடுத்தாலும் போதாதுன்னுதான் சொல்வே! அதான் ஃபிரியா ரேசன்பொருள் கொடுக்கறாங்க!

ஆமா! புழுத்துப்போன அரிசியும்! முளைச்சுபோன கோதுமையும் வாங்கி என்னா பண்றது?

அப்ப எட்த்தை காலிப்பண்ணு!

தோடா! நா வாங்காம உட்டா நீ கொள்ளையடிக்கலாம்னு பாக்கிறியா!

ஆமா இதுல கொள்ளையடிச்சுதான் கோடீஸ்வரன் ஆகப்போறேன்! ஃபிரியா கொடுத்தா பெனாயிலைக் கூட வாங்கற பரம்பரையாச்சே..உங்க பரம்பரை வாங்கிட்டு போ..!

கவர்மெண்ட்டு வேலை இப்படி பேச்ச்சொல்லுது! முகத்தை நொடித்தபடி வாங்கிச்செல்கிறார் பெண்மணி.   சின்னசாமி,நத்தம்.

சீர்காழி       ( கடை வீதியில் இருவர் )

” மாப்ள நான் குடிக்கிறது சிகரெட் பிடிக்கிறது ஓசி டீ குடிக்கறது எல்லாத்தையும் விட்டுட்டேன்….”  ” ஏன் இந்த திடீர் மன மாற்றம்  மச்சான்  ….?”

” கொரானாவால உலக சந்தை  கடும் வீழ்ச்சியானதை என்னால தாங்க முடியலடா …”” அடங்கொய்யால , ஒரு ரூபாய் காசு கொடுத்து எதுவும் வாங்காம மாமனார் வீட்டு எடுபிடியா இருக்கற நாய்க்கு காரணத்தை பாரு ….”

” பொதுநல சிந்தனை இருக்க கூடாதா மாப்ள …..?”

  ” அதுக்கு அர்த்தமாவது  தெரியுமாடா உனக்கு விளங்காத வெங்காயம் ….”

      ( நைஸாக நழுவுகிறார் )

– பி.கே. ராதா. சீர்காழி .

தச்சூர்க்கூட்டுசாலை!  பேக்கரி ஒன்றில்  கடைக்காரரும் இளைஞரும்!

     என்னப்பா..! கடையை மூடிட்டு இப்படி நடுத்தெருவுலே  வியாபாரம் பண்றே?

 நானாவது நடுத்தெருவுலே வியாபாரம் பண்றேன்! நீயெல்லாம்…இப்படி நக்கல் பண்ணிட்டு வெட்டியா சுத்திக்கிட்டு இருக்கே ..!

  அண்ணே கோச்சுக்காதேண்ணே! மில்க் பிஸ்கட் இருக்கா?

   மாரி பிஸ்கெட் இருக்கு!

எண்ணே மில்க் கேட்டா மாரி இருக்குன்னு சொல்றே?

விரும்பினதை சாப்பிடற காலம் மாறி கிடைச்சதை சாப்பிடற காலம் வந்துருச்சுன்னு சொல்றேன்! வேணும்னா வாங்கு! இல்லே கிளம்பு

இளைஞர் முறைத்தபடி நகர்கிறார்.  எஸ்.எஸ்.பாபு. பஞ்செட்டி

 பொன்னேரி மளிகை கடை ஒன்றில் கடைக்கார்ரும் பொருள் வாங்க வந்தவரும்

  50 சன்ரைஸ் ஒரு சரம் கொடுங்க!  சன்ரைஸ் இல்லே! ப்ரு போட்டுடலாமா?

சரி போடுங்க! ஹமாம் சோப் ஆறு! சர்ப் எக்செல் 6 போடுங்க!

சர்ப் எக்செல் இல்லே! ரின் இருக்கு போடவா?

சரி போடுங்க!பில்ஸ்பெரி ஆட்டா அரைகிலோவுல ஒரு டசன்!

பில்ஸ்பெரி இல்லே! நாகா இருக்கு போடலாமா?

சரி போடுங்க!எவ்ளோ ஆச்சு? இந்தாங்க என்று ஒரு பை நிறைய சில்லரையை கொடுக்கிறார்!யோவ் சில்லரையை யார் எண்ணறது? நோட்டா கொடு!

நோட்டு இல்லே..! சில்லரைதான் இருக்கு! நான் கேட்ட பொருளை கொடுக்காம மாத்தி கொடுத்தா நான் வாங்கிட்டேன் இல்லே அதே போல நீங்களும் நோட்டுக்கு பதில் சில்லரை வாங்கிக்க பழகுங்க!

கடைக்காரர் பேந்த பேந்த முழிக்கிறார்.  சந்தோஷ்குமார், பொன்னேரி